Friday, 7 November 2014

நகரத்தார்களும் சாயமும் (தாய்லாந்து )

நகரத்தார்களும் தாய்லாந்தும் :

நம் நகரத்தார்கள் மலயா , சிங்கப்பூர், பர்மா , செய்கோன் போன்ற நாடுகளில் மட்டுமா நகரத்தார்கள் கொண்டுவிற்க சென்றனர் , இல்லை நாம் சென்ற நாடுகளில் சாயம் நாட்டிலும் வணிகம் செய்தனர் . சாயம் தான் தற்போதைய தாய்லாந்து அங்கு 1860 முதல் சாயம் (தாய்லாந்து ) நாட்டிற்கும் தொடர்பு இருக்கிறது .. ஆம் சாயம் நாட்டின் தலைநகர் பாங்காக் .

பாங்காக் நகரின் தற்போதைய மையப்பகுதியில் உள்ள சீலம் சாலையில் ஒரு மாரியம்மன் கோயிலை நகரத்தார்கள் நிர்மானித்தார் .இந்தகோயில் 1890களில் இந்த கோயிலை நிர்மாணித்தனர்.

நகரத்தார்கள் கொண்டு விற்க சென்றபோது தங்கள் வழிபாடிற்காக ஒரு ஆலயம் நிர்மாணிக்க நினைத்தனர் அப்போது இந்த கோயிலை கட்டுவதற்காக அப்போதைய தாய்லாந்து நாட்டின் மன்னரான சவுலங்க்கானை வேண்டினர் . அந்த மன்னர் நகர்தர்களின் வேண்டுகோளை ஏற்றும் தற்போது கோயில் உள்ள இடத்தை வழங்கினார் .அதோடு நிறுத்திக்கொள்ளாமல் கட்டப்படும் கோயிலுக்கும் வரி செலுத்த வேண்டியதில்லை என்ற ஒரு சிறப்பான சலுகையை வழங்கினார் என்பது சிறப்புக்குரிய செய்தி .

இங்கு நம் நகரத்தார்கள் முருகன் , விநாயகர் மற்றும் மாரியம்மன் , நடராஜர் சிவகாமி அம்மன் ஆகிய தெய்வங்களுக்கும் சிறியதாக ஆலயத்தை நிர்மாணித்தார் . இங்கு திருகார்த்திகையின் போது வேலுக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபட்டு வந்தனர் . இங்கு இரண்டு காலபூசையுடன் வாணிபம் செய்துவந்தனர் . பின் சில ஆண்டுகளுக்கு பின் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களாளும் அதிகம் பொருள் ஈட்ட வேண்டி நகரத்தார்கள் அனைவரும் இந்த நாட்டை விட்டு வெளியேறி பர்மா , மலையா , சிங்கை போன்ற பகுதிகளில் வாணிபத்திற்கும் சென்றனர் . இந்த கோயிலை நகரத்தார்கள் வெளியேறும்போது இந்த கோயில் நிர்வாகத்தை அங்கு வாழ்ந்த தமிழர்களிடம் தந்து விட்டு வெளியேறினர் .

அன்று இந்த கோயிலுக்கும் அரண்மைகும் சற்று தொலைவில் உள்ளதால் இந்த ஆலயத்துக்கும் வரிவிலக்கு செய்யப்பட்டது .நாளடைவில் பாங்காக் நகரம் விரிவடையத் துவங்கியதும் இந்த பகுதி தற்போது பாங்காக் நகரின் மையமான இதையப் பகுதியாக விளங்குகிறது .

தற்போது இந்த ஆலயம் மிகவும் சிறப்பான நிர்வகிக்கப் பட்டு வருகிறது . இந்த ஆலயத்தில் மகார்நோன்பு விழா பத்து நாட்கள் சிறப்பான நிகழ்கிறது . இந்த ஆலயம் தமிழ் முறைப்படி தமிழக அந்தணர்களை கொண்டு வேத மந்திரங்கள் ஓதப்பட்டு விழாக்களை நடத்துகின்றனர் இங்கு தமிழகர்கள் மட்டுமல்லாது தாய்லாந்து மக்களும் வந்து வழிபடுகின்றனர் . இங்கு விழாவின் தமிழகத்தில் இருந்து 6 அல்லது 7 நாதஸ்வரக் குழுக்கள் , பம்பை , உடுக்கை , பறை , கொம்பு போன்ற தமிழரின் பாரம்பரிய இசைக்கருவிகள் வாசிக்கும் 6 அல்லது 7 குழுக்கள் வரவழைக்கப்பட்டும் இந்த விழாவை சிறப்பாக நிகழுத்து கின்றனர் .அது மட்டும் இல்லது இங்கு நவராத்திரியின் ஒன்பது நாளும் சிறப்பு வழிபாடு நிகழ்கிறது . முதல் மூன்று நாட்கள் மாலை பார்வதி தேவியாக சிம்ஹா வாகனத்திலும் அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமியாக தாமரை மலரிலும் இருபுறம் யானையுடனும், அடுத்த மூன்று நாட்கள் ஒரு நாள் சரஸ்வதியாக , எட்டாம் நாள் சிம்ஹா வாஹினியாக , ஒன்பதாம் நாள் சிவபூசை செய்யும் கோலத்திலும் 1௦ ஆம் நாள் தேர் திருவிழா இரவு மிகவும் சிறப்பாக நிகழகிறது .அப்போது ஊர்வலத்தில் முன்பு தமிழக பாரம்பரிய வண்ணவண்ண கொடிகள் , குடைகள் , தீவட்டி இசைக்கருவிகள் , காவடி , கருபரின் அம்ம்சமான அரிவாள்கள் , சூலம் , கரகம் முதலியவை முன்செல்ல தேரில் பரிவார மூர்த்திகளுடன் அம்மன் பவனிவந்து அம்பு போட்டு செல்கிறாள் .

இந்த விழாவில் கொண்டுவரப்படும் வெள்ளிக்கரகம் நம் காரைக்குடியில் இந்த வருடம் தமிழ் ஆசாரிகளின் கைவண்ணத்தில் உருவானது . அதுமட்டும் இல்லது இங்கு உள்ள மூர்த்திகள் தமிழகத்தில் காரைக்குடியில் இருந்து கொண்டுவரப்பட்டவை , .

பத்தாம் நாள் இரவு இச்சா கிரியா ஞான ஆகிய மூன்று சக்தியின் வடிவான மூன்று தேவியரும் ஒரே தேரில் பவனியாக வருகின்றனர் . இவர்களுக்கும் முன்பு விநாயகர் மற்றும் முருகனும் தேரில் முன் செல்லுகின்றனர் . அம்மனை பின் தொடர்ந்து கன்னன்பிறான் தேரும் மதுரை வீரனும் செல்லுகின்றனர்.

இந்த நவராத்திரி விழாவில் பாத்தாம் நாள் விழாவன்று இங்கு உள்ளூர் விடுமுறை அளிக்கபடுகிறது . அதுமட்டும் இல்லது இந்த ஆலயத்தை ஆடைய தாய்லாந்த் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சிறப்பு பேருந்து வசதியும் செய்யப்படுகிறது . இந்த விழாவை காண சும்மார் 2௦௦௦௦ இருந்து 5௦௦௦௦௦ மக்கள் கூடுகின்றனர் .

இந்த ஆலயத்தில் அமாவசை அன்று சண்டி ஹோமமும் இரவு சிறப்பு வழிபாடும் , பௌர்ணமி அன்று சிறப்பு அபிஷேகம் அலங்காரம் அம்பாள் பவனியும் ,
சித்திரை மாதம் பௌர்ணமி அன்றும் மீனாட்சி திருக்கல்யாணம் சிறாப்பாக நிகழ்கிறது .
தமிழ் புத்தாண்டு , ஆங்கிலப் புத்தாண்டு ஆகிய தினங்களில் மூன்று தேவியரும் ஆலயத்தில் இருந்து வெளியில் வந்து வெளிப்புராரம் சுற்றி வந்து உள்ளே செல்லுகின்றனர் .

தைபூசம் , கார்த்திகை போன்ற நாட்களில் இங்கு முருகனுக்கு சிறப்பு வழிபாடும் திருகார்த்திகையன்று அன்னாபிஷேகமும் சிறப்பாக நிகழ்கிறது .

மற்றபடி ஒவ்வொரு தெய்வத்திற்கும் என்ன விஷேச பூசை தமிழகத்தில் நிகழுமோ அவை இங்கும் சிறப்பாக நிகழ்கிறது .

இங்கு ஆகஹம விதிகளின் படியே பூசை நிகழ்கிறது . தமிழகத்தில் இருந்து சிவாச்சாரியார்கள் கொண்டுவரப்பட்டு பூசைகள் நிகழ்த்திவைக்கின்றனர் .

தற்போது இந்த ஆலயம் புனரமைக்கப்பட்டு இரண்டு ராஜகோபுரங்கள் மகாமண்டபம் அர்த்தமண்டபம் கொடிமரம் , போன்றவை அமைக்கப்பட்டு இங்கு தற்போது விநாயகர் , முருகன் ,கண்ணன் (விஷ்ணு ), பிரம்மா , சிவன் , அனுமன் , நவக்கிரகங்கள் ,மதுரைவீரன் , அஷ்டதிக் பாலகர்கள் , மகாலட்சுமி , சரஸ்வதி , நடராஜர் சிவகாமி அம்மன், ஸ்ரீ சக்கரம், லக்ஷ்மி சக்கரம் போன்ற சந்நிதிகள் உள்ள . இங்கு உள்ள மக்கள் இந்த கோயிலை உம்மா தேவி கோயில் என்றே அழைகின்றனர்.

ஆலயமுகப்பு
தேர்
 









இந்த அம்மன் மிகவும் சக்தி வாய்த்த அம்மனாக கருதி வழிபாடுகள் செய்கின்றனர் .இங்கு உள்ள மக்கள் அபிராமியந்தாதி , சகலகலாவல்லி மாலை , தேவாரம் , திருவாசகம் போன்றவைகளை பாடித்து வழிபடுகின்றனர் .

                                                       ஆ.தெக்கூர் கண.இராம.நா.இராமு