Sunday 8 April 2018

ஊடுருவலும்__காரணங்களும்

#ஊடுருவலும்__காரணங்களும்:

நாட்டுகோட்டை நகரத்தார் சமூகத்துடன் நாங்களும் இணைய விரும்புகின்றோம் என்று கடந்த இருபது ஆண்டுகளாகவே நடந்து வரும் விவாதங்கள், மெல்ல இப்போது அடுத்த கட்டத்தை அடைந்துள்ளது. அதாவது தனிப்பட்ட கோவில் பிரிவுகளை அதன் உயர்மட்ட மனிதர்களின் துணையுடன் அல்லது அவர்களின் அனுசரணையுடன் அணுகி இந்த இணைப்பை உறுதி செய்யலாம் என்ற எண்ணத்தில் காய்கள் நகரத்தப்படுகின்றன.

இதன் பின்னணியில் வெளிச்சத்தில் தெரியாத செல்வாக்கு கொண்ட நபர்களின் பின்புலம் இருப்பதையும் உணர முடிகின்றது.

இப்போது கடந்த இருபது ஆண்டுகளாக உறுதிக்கோட்டை வட்டகை என்ற பெயரில் இல்லாத வட்டகையினை இருப்பதாகக் காட்டி, சொல்லாத கதைகளை வரலாறாக பதித்து, ஒரு நீண்ட கால திட்டத்தில் சம்பந்தமில்லாத ஒரு இனக்குழுவை இன்றைய நகரத்தார் சமூகத்துடன் இணைக்க முயற்சிப்பது வரலாற்றுப் பிழையாகும்.



பிரிந்துவிட்டதாகச் சொல்லப்படுவதும், மீண்டும் இணைக்க வேண்டும் என்று வற்புறுத்துவதும் நாட்டுக் கோட்டை நகரத்தார் அடையாளங்களை அருகிருந்து போலச் செய்து, அதன் பின்னர் அவற்றையே பண்பாடாக்கி உரிமை கோருவது என்பது எப்படி உள்ளது என்றால், #ஷெர்வானி அணிந்து மாப்பிளை அழைப்பு நடத்துவதால், #மார்வாரி ஆகிவிடலாம் என்பது போலத்தான்.

போலச் செய்வது போலியாகும். போலிகளை உண்மையான இருத்தல், ஒரு போதும் ஏற்காது.

#நாம்__நாமாகவே இருப்போம்:

நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகம், நீண்ட நெடிய பண்பாட்டுப் பதிவுகளை தங்கள் வாழ்வியலுடன் தக்க வைத்திருப்பதும், அதனை இனறளவும் பின்பற்றும் ஒரு இனக்குழுவாகவும் இருந்துவருவது தமிழர் மரபில் மாறாத சுவடுகளையும் பதியவைத்துள்ளதையும் யாவரும் அறிவர்.

#வட்டகையும் பிரிவிவுகளும் :

வட்டகை என்பது குன்றக்குடி மலையினை நடுவாக வைத்து  திசைவாரியாகப் பிரிக்கப்பட்டதே. இந்த வட்டகை என்பது, பொதுவில் பெயர்கள் எல்லாம் திசையின் அடிப்படையிலும், நிலம் சார்ந்த புவியியல் அடிப்படையிலும் அமையப்பெற்றது. நாட்டுக் கோட்டை நகரத்தார்களின் பாரிய பண்பாட்டின் தனித்துவத்தின் அடையாளமாகவும் உள்ளது. எந்த ஒரு வட்டகையும் ஊரின் அடிப்படையில் இருந்ததில்லை. அப்படியிருக்க உறுதிக் கோட்டை என்று ஊரின் பெயரில் வட்டகை பிரிப்பது மேற்சொன்னபடி போலியானதே. போலிகள் ஒரு போதும் உண்மையாகா. நிற்க.



உறுதிக் கோட்டை வட்டகைக்கு ஒரு கதையினைச் சொல்லி அதனை வரலாறாக்கி படிப்படியாகவே ஒவ்வொரு கோவில் பிரிவினரையும் அணுகுதல் என்ற அட்டவணைப்படி செய்து வரும் முயற்சிகள் இன்று தீவிரம் அடைகின்றது.

இன்று இவர்கள் சொல்லும் குதிரைக் கதையுடன், நாளையே இன்னொரு இனக் குழுவினர் #மாட்டுவண்டிக்_கதையுடன் மனுப்போட முயல்வார்கள்.

அப்போது நம்மவர்கள், இவர்களிடம் விவாதித்தது போல எந்த விவாதமும் இன்றி ( இனி வரும் காலத்தில் அதற்கான நேரம் இருக்காது ) ஏற்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துவதே தற்போதைய முயற்சியின் முழுமையான நோக்கம் என்பது தெட்டத் தெளிவாகின்றது.

கடந்த 1980 களின் தொடர்ச்சியாக, நகரத்தார்களின் புள்ளியாக சேர்க்க வேண்டும், கோவில் மாலை (சந்தனம்??!!) வேண்டும் என்பதும், அதற்கு முதல் முயற்சிகளின் தோல்விக்குப் பின், தனித் தனி கோவில் பிரிவுகளின் அமைப்புகளை அணுகுவதும் வாடிக்கையாகி, இன்று மேற்சொன்னபடி நகரத்தார் அடையாளங்களை மட்டுமல்ல, தொன்று தொட்டு நகரத்தர்களால் கட்டமைக்கப்பட்ட கோவில், அறக்கட்டளைகள் போன்றவற்றை குறிவைத்தே நகர்வுகளும், அத்தோடல்லாமல் நகரத்தார் குடிமரபு சாராத ஏனையவர்களையும் இணைக்கும், அல்லது உள்ளே நுழைக்கும், முயற்சியாகவே இன்று பரிணாமம் பெற்றுள்ளது.

முதலில் இதுபோன்ற பேரத்திற்கே அன்று தேவை எதுவும் இல்லை. அவர்கள் ( உறுதிக்கோட்டை ) டிரஸ்டி நிர்வாகம், கோவில் அறக்கட்டளைகள், தொலைதூர ஆன்மீக வழிபாட்டுத் தலங்களில் உள்ள விடுதிகள், கோவில் உரிமைகள் ஆகியவைகளையே முதன்மை நோக்கமாக இருத்தி, அதனை  நோக்கி செயல்படுவதும் வெளிப்படையாகவே உள்ளது. இந்த நிலையில் அவர்களின், அவர்கள் சொல்லும் நான்கு கோவில் பிரிவில் ஒரு கோவில் பிரிவான மாத்தூர் கோவில் டிரஸ்டில், அவர்கள் தரப்பில் இருந்து எடுக்கப்பட்ட முயற்ச்சியினை அந்த நிர்வாகக் குழுவினர், கோவிலூர் மடத்திற்கு எழுதிய கடிதத்தின் நகல் அப்படியே அவர்கள் நடத்தி வரும் அப்பச்சி மலர் என்ற உறுதிக்கோட்டை பத்திரிகையில் வெளியிட்டுள்ளது, அனைத்து கோவில் நாட்டுகோட்டை நகரத்தார்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

ஒரு மடாதிபதிக்கும், ஒரு கோவில் நிர்வாகத்திற்கும் இடையே நடந்த பரிவர்த்தனை எளிய நகரத்தார் புள்ளிகளுக்கு தெரிவதற்கு முன்னர் வேற்று சமூகத்தினர் நடத்தும் பத்திரிகையில் வெளியிடுவதும், மீண்டும் அதனை வைத்தே காரணம் காட்டி அனைத்து ஊர் நகரத்தார்களிடமும் ஆதரவு #கையெழுத்து__வேட்டையும், புகைப்படமும் எடுப்பதும், மேலும் இது அதி வேகமான நகர்வுகளுடன் ஒரு கோவிலில், முதலில் புள்ளிகளை இணைப்பது என்ற நோக்கில் நடந்து வருகின்றது. இதற்கு எளிய மக்களை, பெண்கள் குறைவாக உள்ளனர், ஆகவே உருதிக்கொட்டையினை இணைப்பது அவசியம் என்ற #பொய்யான தகவலையும் இவர்களை சேர்த்தால் பெண் பற்றாக்குறை தீர்ந்துவிடும் என்ற  #மாயையும் தோற்றுவித்து கையெழுத்து வாங்கி புகைப்படம் எடுக்கின்றனர்.



உண்மை என்னவெனில் அங்கேயும் சரி, எங்கேயும் சரி பெண் பிள்ளைகள் விகிதம் குறைவுதான். அதில் நமது நாட்டுகோட்டை நகரத்தார் சமூகம்  ஒரு செயற்கையான சிக்கலை உருவாக்கி திருமணத் தடைகளை பெருக்கி வருவதாலேயே இந்த நிகழ்வு.

ஆகவே குதிரைக் கதையினை இணைத்து, பின்னர் மாட்டுவண்டியுடன் வரும் இன்னொரு கூட்டத்தையும் இணைக்க வேண்டும் என்று வரும் போது, நம்மிடம் இன்று உள்ள கட்டுக் கோப்பும் கூட இல்லாமல்   நாமே #வெளியேற்றப்பட்ட நிலையில் தமிழர் சாராத மலையாளிகள், தெலுங்கர்கள் என்று எல்லோரும் உள்ளே இருப்பார்கள் என்பது மட்டுமே நிச்சயமாகிவிடும்.

இந்தச் சூழ் நிலையினை உருவாக்க, இப்படியொரு நிலை உருவாக எந்த ஒரு  #தனிக்__கோவிலும் தானாக ஒரு ஒட்டுமொத்த சமூகத்தின் கருத்தறியாமல் எடுத்தல் கூடாது. காரணம், ஒரு கோவில் டிரஸ்டிகள், புள்ளிகளாய் இணைப்பதனால் மற்ற கோவில் புள்ளிகளும் பாதிக்கப்டுவார்கள். இதை சற்றும் உணராமல் அவசர முடிவுகள் எடுப்பது கூடாது என்று பொறுப்புமிக்க இடத்தில் உள்ளவர்கள் உணர வேண்டும்.

மேலும் தேவகோட்டை ஜமீன் வகையில் உள்ள ஐயா சோம.நாராயணன் செட்டியார் அவர்கள் இவ்  விடயத்தில் முனைப்பு காட்டுவது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை.?? காரணம் கானாடுகாத்தான் மு.அ.மு.இராமசாமி செட்டியார் அவர்கள் பிள்ளை கூட்டிய போது, கோவில் மாற்றி பிள்ளை கூட்ட வேண்டாம் என்று கடிதம் எழுதியவர் இன்று எந்த முகாந்திரமும் இல்லாமல் மாத்தூர் கோவிலில் புள்ளிகள் இணைப்பது என்று தனது செல்வாக்கில் நகரத்தார் சிலரிடம் முனைப்புடன் செயல்பட்டு அதற்கான ஆதரவு திரட்டுவது, மற்ற கோவில்களை அவர் கருத்தில் கொண்டுள்ளாரா ??  அல்லது ஒரு கோவிலில் இணைத்துவிட்டால், மற்ற கோவில் பிரிவினர் தானாகவே இணைக்கும் சூழல் உருவாகும் என்ற நிலைக்கு கொண்டு செல்கின்றாரா ?? என்பதை நகரத்தார்களில் உள்ள ஒவ்வொரு புள்ளிகளுக்கும், ஒவ்வொரு தனி மனதருக்கும் கேட்கும் உரிமையில் இந்தக் கேள்விகள் தானாகவே எழுந்துவிடுகின்றது.

ஆனால் பதில் எங்கிருந்து வரும் ????

ஜமீன் என்பதும், ராஜா சர் என்பதும் மரியாதைக்குரிய பட்டங்களாகும். அவைகள் ஒரு போதும் நகரத்தார்களைக் கட்டுப்படுத்தாது. அதனை மீறி இப்படி தன்னிச்சையாக செல்வாக்கினைப் பயன்படுத்தினால் எப்படி ஏற்புடையதாகும் ?? கோவில், பொது நலன், கல்வி ஆகியவற்றில் மேற்படி இரண்டு குடும்பங்களின் பங்களிப்பு போற்றுதலுக்குறியதே. ஆயினும், புள்ளிகளாய் இன்று அனுமதித்தால், அடுத்த நொடியே  #மலையாளிகளையும் கூட ஏற்பதற்கு இன்றைய நிலையில் தயக்கம் காட்ட மாட்டார்கள், பிறகு என்ன ?? நாதெள்ளா சம்பத், நெல்லி குப்புகள் என்று  வரிசையாக புள்ளி வரி ஏற்க  வேண்டியதுதான்.

ஏற்கனவே மேற்படிகளில் சில #உருப்படிகள்,  #உதிரிகளாய் வந்து போகின்றன. இன்று விட்டால் நம்மவர்களே சிலர் பாக்கு வைக்கவும் சித்தமாக இருப்பதை மறத்தல் கூடாது.

ஆகவே இணைப்பு, கனைப்பு என்று ஊடுருவலை ஊக்குவிப்பதை விடுத்து, தற்போதைய சூழலில் நம் சமூகத்தின் குடும்ப அமைப்புகளை நெறிப்படுத்தும் முறையினையும், சில பலருக்காக சங்கங்கள், டிரஸ்டுகள் என்பதை விடுத்து, நம் ஐயாக்கள் சுய நலமின்றி உருவாக்கிய அறச் செயல்களை அனைவரும் பங்கெடுத்து நல்வழிப்படுத்தும் படி நமது கட்டமைப்புகளையும் வாழ்க்கையினையும் மேம்படுத்தும் சிந்தனையில் ஈடுபடுவோம்.

நம்மைப் போல ஆவணங்களைப் படித்து கழுத்துரு கட்டுகின்றேன் என்பவர்களும், ஷெர்வானி போட்டு மாப்பிளை அழைப்பு நடத்தும் மார்வாரிகள் குறித்தும் சிந்திக்காமல், நாம்  நாமாக இருப்போம்.  நமது பண்பாட்டில் மாற்றார் ஊடுருவலை தவிர்ப்போம்,

தேவையற்ற விவாதங்களை விடுப்போம் என்று உறுதி ஏற்போம்.

அன்புடன்,
நித்ய கல்யாணி உடனாய கைலாசநாதர் துணை.

ஆக்கம் -- மேலவட்டகை மெய்கண்டான்.
28/8/16