Monday, 13 July 2015

ஏழகப் பெருவீடு - நகரத்தார் குடிமரபு - வரலாற்றில் பதியப்பட்ட உண்மைகளும் இன்றைய மெய்மைகளும்

ஏழகப் பெருவீடு - நகரத்தார் குடிமரபு - வரலாற்றில் பதியப்பட்ட உண்மைகளும் இன்றைய மெய்மைகளும்

#நகரத்தார்களாகிய நாம் ஒதுங்கிப் போகின்றவர்கள் அல்ல. வரலாறு நம்மை அப்படி எழுதவும் இல்லை. பாண்டிய சகோதரர்களில் இருவருக்கு பிணக்கு ஏற்பட்டபோது, ஒரு சகோதரன் வடநாட்டு மாலிகபூர் உதவி நாடியபோது, நமது நகரத்தார்களின் #ஏழகப்__பெருவீடு கொண்டு, மாலிகபூர் படையினை கடுமையாக எதிர்த்தவர்கள் நாம்.


  பண்டு தொட்டு சோழற்குடிக்கும், பாண்டியர் குடிக்கும் படைபலம் கட்டிக்கொடுக்கும் செட்டிமக்கள், என்றும் எதற்கும் பயந்தவர்கள் அல்ல. ஆனால் வடுகர்களை நாம் ஏற்பதுதான் வரலாற்று முரண். வெள்ளையர்களுடன் மாமன்னர் மருதிருவர் போர் தொடுத்த போது #ஒக்கூரில் நடந்த மருதிருவர்-வெள்ளையர் இரண்டு அணிகளும் பொருதும் களம் ஒக்கூர். அங்கே படையினைக் கட்டி அமைத்து பொருளுதவிகளும் செய்தவர்கள், #மருதிருவருக்காய் அரசியல் நிலைபாடு கொண்டிருந்தவர்கள், போரில் தோல்வியடையும் போது #ஒக்கூர் நகரத்தார் வீடுகளும் #பீரங்கிகளுக்கு இரையானதும், நாம் என்றும் பயந்தவர்கள் அல்ல என்பதே.
  நமக்கான இன்றைய பிரச்சினை யாரை நம்புவது ?? எப்படி தமிழர் இனக்குழுக்களில் #ஒர்மைக்கும், #ஒற்றுமைக்கும் முனைப்பெடுத்து அடையாளங்களை மீட்பது ?? என்பதே. ஆனால் வரலாறு தெரியாத நகரத்தார்கள் பலர், வடுகர்களை நத்தி வாழ்ந்தால் போதும் என்பதில் தான் #நமக்கான_பின்னடைவே.


நாம் யாரை இன்று நம்புகின்றோமோ, அவர்களே நம்மைச் சல்லடையாக சலிக்கின்றனர். இதை உணரவில்லை என்றால், மீட்சி இல்லை. #ஏழகப்__பெருவீடு என்பது முடியுடை வேந்தர்களாகிய சோழர்களும், பாண்டியர்களும் வேள் வணிகர்களான நகரத்தார்களுக்கு என்று தனிக் காவற் படை அமைத்துக்கொள்ள அனுமதி கொடுத்தது. பாண்டியர் மண்டலம் வந்தபின்பு பாண்டி நாட்டில் உள்ள வில்அம்பர் எனப்பட்ட வல்லம்பர் தமிழர் இனக்குழுவினர் நமக்கான காவற்படைக்கு தலைமையும் பொறுப்பும் கொண்டிருந்தனர். கடல் கடந்த வணிகத்திற்கும் காவல், வீட்டில், ஊரில் நமது பண்பாட்டு நெறி வழுவாமல் ஊரிலும் காவல்.
 இது நம்முடன் வாழ்ந்த அனைத்து தமிழர் இனக்குழுக்களும் ஒருவொருக்கொருவர் உதவி வாழ்ந்த வரலாறு. வடுகர் வரும்போதும், நமக்கு அண்டி உள்ள தமிழர் மரபுவழி இனக்குழுக்கள் பலர் நம்மக்கு கேடயமாக இருந்தனர். ஆகவேதான் அன்று நமக்கு வடுகர்களால் பண்பாட்டு வாழ்வியலில் பாதகம் இல்லை. நாம் யாரை நம்புகின்றோம், யாருடன் இருக்கின்றோம் என்பது மிக இன்றியமையாத ஒன்று. 
கன்னட-வடுகர் வந்த போது சைவ ஆகமங்கள் வன்மையாக புறக்கணிக்கப்படும்போது, சைவ மடங்கள் பிறந்தன. அதற்கும் நகரத்தார்கள் தொன்றுதொட்டு உதவியும், வளர்ச்சியில் பங்கெடுத்தும் வந்தனர். அயலார் ஆட்சிகாலங்களில் தமிழர் கட்டிடக் கலைக்கு பங்கம் வந்த போதும், உடன் நமது ஐயாக்கள் #தமிழ்ப்_பெருந்தச்சர்களை உடன் அழைத்து, தமிழகத்தில் உள்ள பாளையங்கள் தோறும் பாண்டிய- சோழ மன்னர்களின் கோவில்களை #திருப்பணி செய்வதில் முனைப்பெடுத்தனர். காரணம் #தமிழர்__கலை என்பது #தமிழர்__குடியான#கம்மாளர்ர்களிடம் மரபு வழியாக இருந்தது.
  அந்தக்கலையினை #ஆன்மிகம், #நம்பிக்கை, #மரபு என்ற #கேடயத்தில் அவர்களை தங்களது பாதுகாப்பில் கொண்டுவந்து, #சைவ மடங்களுடன் தொடர்பில் இருந்து, நமக்கான அடையாளம் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதிவரை கொண்டுவந்தனர். 
ஆகவே தான் #மாமன்னர் மருதிருவர் பல #கோவில்களை நகரத்தார் பரிபாலனம் செய்ய #சாசனம் செய்தனர்.இதைச் சகிக்காத வடுகர்கள்தான், நமக்கான பொருளாதாரத்தைக் கட்டம் கட்டி ஒடுக்கினர். நாம் #தவறவிட்டது தமிழர் தலைமை உள்ள அரசியல் களத்தை. அதுவே நமக்கும் முடிவுரை எழுதியது. மேலும்#நகரத்தார் கைகளில் பொருளாதாரம் இருக்கும்வரை ஒட்டுமொத்த தமிழ் இனமும், பண்பாடும் வீழ்ச்சியடையாது என்பதை உணர்ந்தனர். #ஏழகப்__பெருவீடு பாண்டியர் காலம் தொட்டு நகரத்தார்களின் வயிரவன் கோவில் பிரிவினரால் மாலிகபூர் படையுடன் உக்கிரமாய் போரிட்டு, தொல்வியடையுவரை ஒட்டுமொத்த நகரத்தார்களுக்காகவும் பரிபாலனம் செய்யப்பட்டு வந்தது. 
அதன் பின்னர் வடுகர்கள் தனிப்படை அமைக்க உரிமை தரவில்லை. ஆயினும் நகரத்தார்களின் தொன்றுதொட்ட மரபுவழித் தமிழர்களின் ஒற்றுமையே நமக்கு இன்றுவரை நமது அடையாளம் பாதுக்காக்க வழிவகை செய்தது. இந்த உண்மையினை இன்றைய பரிவட்டதாரிகள் பலர் மறந்துவிடுகின்றனர். நகரத்தார் சங்கங்களில் வடுகர்களுக்கு ரத்தினக் கம்பளமும் மாலை மரியாதையும்.
 விளங்கிடும்.......!!!!!!!!!! 

குறிப்பு :- #சேனையற்கரசி__பெயரும்__பொருளும்  
சேனையற்கரசி -- நகரத்தார் குடும்பங்களில் அண்மைக் காலங்கள் வரை இந்தப் பெயர் பல ஆச்சிமார்களுக்கு இருந்தது. 
இன்று அனன்யா, ஷ்வேத்தா, அபர்ணா (!!??), சுகன்யா, பூஜா(!!??), ரேஷ்மி, சுஷ்மி என்ற பெயர்கள் வந்த பின்னர் காணாமல் போன ஒரு. ஆனால் தமிழ்ப் பெயர்களின் பெயர்கள், பொருளும் அதற்கான காரணங்களும் நிறைந்தவை. 
#ஏழகப்__பெருவீடு என்ற நகரத்தார்களுக்கான #காவற்படையினை நகரத்தகர்களில் வயிரவன் கோவில் பிரிவினர் பரிபாலனம் செய்து வந்தனர்.
 காவற்படை கொண்ட வயிரவன் கோவில் நகரத்தார்களே சேனைக்கு பொறுப்பாளர்கள். ஆகவே சேனையற்கரசி என்ற பெயரை தங்கள் வீட்டில் பிறந்த பெண் குழந்தைகளுக்கு சூட்டி மகிழ்ந்தனர்.
 சேனையற்கரசி என்பதை வீட்டில் அழைப்பவர்கள் சேனச்சி என்றும்#சேனச்சி__ஆச்சி என்றும் அழைப்பது மரபு.
 சேனையற்கரசி என்ற பெயர் கொண்ட வயிரவன் கோவில் பெண்மக்கள், திருமணத்திற்குப் பின்னர் சென்ற இடங்களில், அவர்கள் வழித் தோன்றல்கள் த்ங்கள் பிள்ளைகளுக்கு, அப்பத்தாள் பெயரோ அலல்து ஆயா பெயரோ வைப்பது வழக்கம்.
 அந்த வகையில் வயிரவன் கோவில் வகையில் சூடிய / சூட்டிய சேனையற்கரசி என்ற தமிழரசியின் பெயர் நகரத்தார்கள் வீடெங்கும் நின்று விளக்கம் பெற்றது.
 இன்று அந்தப் பெயரின் பொருளும், அறிந்தார் இல்லை, பெருமையும் உணர்ந்தார் இல்லை. 
வரலாற்றில் பதிந்த சுவடுகள் பல. அந்தச் சுவடுகளில் நின்று நலம்பெற்றவை சில. சேனச்சி ஆச்சிகள் குறைந்து, சுகன்யா, அனன்யா, சுனன்யா, அபர்ணாக்கள் வந்து நிற்கின்றனர். என்ன செய்வது.?? காலம் போடும் புதுக்கோலம், யாரறிவார் ? யார் உணர்வார் ??? 
----- வேணும் அருள்மிகு பொய்சொல்லா மெய்யர் துணை.
 ----- நெற்குப்பை காசிவிசுவநாதன். 13-07-2015.

No comments:

Post a Comment