Thursday 20 August 2015

வெள்ளைத்தோலும் ஆசையும் :


சமிபத்தில் உறவினரின் அழைப்பின் பெயரில் அவர்கள் வீட்டின் படைப்பில் கலந்துகொண்டேன் அப்போது நிகழ்ந்த ஒரு சம்பவன் ஒரு 60 வயது மதிக்க தக்க பெரியவர் தனது பேரன் ஊருக்கு போகிறேன் என்று சொல்லிக்கொண்டு கிளம்பும் பொது அவர் கூறியவார்த்தை இது “பேராண்டி அடுத்த படைப்புக்கு வரும்போது நல்ல வெள்ளவெளேருன்னு அழகனா ஒரு புள்ளைய கட்டிக்கிட்டு வந்துவிடுடா எங்களுக்கு தான் கிடைக்கலை நீயாவது கட்டுடா“ என்றார் அதற்கு அந்த பையனும் சிரித்துகொண்டு சரி சரி ஐயா கிளம்பிச்சென்றார். 



நம் சமூகத்தின் பெரும்பான்மையான ஆண்கள் மற்றும் பெண்கள் நிறம் கருப்பு தான் வேகுசிலரே வெள்ளை நிறம் கொண்டவர்களாக உள்ளனர் வெள்ளையாய் இருப்பவரை தான் மணம்முடித்துகொள்வேன் என்றால் கருப்பாக உள்ளவர்கள் கதி என்ன ??தோலின் நிறத்தை மட்டும் வைத்து இன்று எடைபோடுவதும் வெள்ளைத் தோலுக்கும் முன்மரியாதை கொடுப்பது சரியல்ல எனக்கும் தான் வெள்ளை தோல் கிடைக்கவில்லை நீயாவது பார்த்து கட்டுக்கோ என்று இளம்தலைமுறையிடம் தேடியோடச் சொல்லுவது எந்த வகையில் ஞாயம் ??? இதுபோன்று கூறுவது நம் சமூகத்தில் நிறமேலான்மையை உட்புகுத்தி மறைமுகமாக வெளியில் திருமணம் செய்து கொள்ள ஊக்குவிப்பது போல் அமையும் அன்று நம் பாட்டிஆயாக்களும் பாட்டையாகளும் இன்று எள்ளிநகையாடப்படும் கருப்பு நிறம் கொண்டவர்களையும் இப்படி நிறம் பேதம் பார்த்து திருமணம் செய்துகொள்ளவில்லை கருப்போ சிவப்போ அது செட்டிபிள்ளையா என்பதை மட்டும் தான் பார்த்து மணமுடித்து வாழ்ந்தனரே தவிர இப்படி அது தெலுங்கானோ கன்னட மலையாளியா இருந்த என்ன வெள்ளையா இருக்கு சரி என்று கட்டிக்கொண்டு வாழவில்லை இது போன்ற தவறான வித்துகள் சிலஆண்டுகள் முன்பு விதிவசத்தால் விதைக்கப்பட்டு விட்டன தற்போது இதுபோன்ற விதைகளை மீண்டும் விதைக்க சில இடங்களில் இதுபோன்ற வார்த்தைகளை அவர்களுக்கே தெரியாமல்பெரியவர்கள் விதைத்து விடுகின்றனர் ///“பேராண்டி அடுத்த படைப்புக்கு வரும்போது நல்ல வெள்ளவெளேருன்னு அழகனா ஒரு புள்ளைய கட்டிக்கிட்டு வந்துவிடுடா எங்களுக்கு தான் கிடைக்கலை நீயாவது கட்டுடா“ ///இதை இப்படி சொல்லியிருந்தால் நல்ல செய்தி விதையாக விழுந்திருக்கும் ///அடுத்த படைப்புக்கு வரும்போது ஒரு நல்ல செட்டிபுள்ளைய கட்டிக்கிட்டு புள்ளியாக வந்துசேரு பேராண்டி ///என்று கூறியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் .இதுபோன்ற நிற மேலான்மையை தவிர்ப்போம் இது தவறான பாதைக்கும் கொண்டு சென்றுவிடும் என்று கூறக் காரணம் நம் ஐயாதான் வெள்ளையா ஒரு பிள்ளயை பாத்து கலியாணம் பண்ணச்சொல்லிடாக அப்பறோம் என்ன என்று வெள்ளைய ஒருபுள்ளைய கட்டிக்கிட்டு போனா ஒன்னும் சொல்லமாட்டாக என்று ஒருவித எண்ணம் உருகொல்ல வித்தாக சென்றுவிடும் 

தற்போது நம் சமூகத்தில் 40 வயதிற்கு மேல் 70திற்குள் உள்ள நூற்றில் முப்பது பேர் இதுபோன்று இன்று இளம் தலைமுறையினரை மனதில் நஞ்சுகளை கலந்து மடைமாற்றம் செய்கின்றனர். நாம் பொண்ணோ பையனோ வரன் தேடும்போது நல்ல குணம் உண்டா பண்பாடு உண்டா என்றுபாப்போம் அதைவிடுத்து வெள்ளைத்தோல்களை தேட வேண்டாம் சட்டியில் இருப்பது தானே அகப்பையில் வரும் அதை விடுத்தது அன்று எனக்கு கிடைக்கவில்லை இன்று உனக்காவது கிடைக்கட்டும் என்று கூறுவது சற்றும் அழகல்ல.இங்கு மாடைமாற்றம் செய்கின்றனர் என்று எல்லோரையும் கூறிவில்லை வெகுசிலரே உள்ளனர் அவர்கள் தானும் கேட்டது இல்லது அடுத்து வரும் தலைமுறை மனதிலும் நஞ்சு கலக்குகின்றனர் என்பது மிகவும் வருந்தத்தக்கது. இதுபோன்ற நஞ்சுகள் கலக்கும் கூட்டத்தை இனம் கண்டு அவற்றை நெறிபடுத்த வேண்டும் அல்லது இவர்களை விட்டு நாம் விலகி நிற்க வேண்டும். நம் சமூகத்திற்ககோ அல்லது பிறருக்கோ நல்லது செய்யாவிட்டாலும் சரி அல்லது செய்யாமல் இருந்தால் போதும். 
கோழிக்கோடு நம்பூதிரி ஒருவன் அலுவலகத்தில் கேட்டான் நகரத்தார்கள் பலரை எனக்கு தெரியும் பார்த்துள்ளேன்ஆனால் நீங்கள் பலரும் ஏன் கருப்பாக உள்ளீர்கள் என்றார் ஐயா நம்பூதிரியாரே நாங்கள் என்ன தான் முகத்திற்கு இன்று விற்கும் சுண்ணாம்பு பூசினாலும் அது மாறப்போவதில்லை என் மரபு சார் பாரம்பரிய நிறம் சற்றும் கருமை கலந்த நிறம் அதை பற்றி நாங்களே கவலை கொள்ளாதபொது நீங்கள் ஏன் கவலை கொள்கிறீர்கள் என்றது பதில் இல்லை .இப்படி கேட்டபது நாகரீகம் ஆல்ல என்பது கூடதெரியாமல் கேட்கும் அழகில் தெரிகிறது உங்கள் அழகு. தோலின் நிறத்தால் வெண்மை கொண்டு என்ன புண்ணியம் ஊரை வேண்டுமானால் ஏமாற்றலாம் அங்கு அகத்தில் இருள்தானே சூழ்ந்துள்ளது இங்கு எங்களிடம் புறத்தால் கருமைநிறம் இருக்கு ஆனால் அகத்தில் இல்லை என்று கூறவே அங்கிருந்து நகர்ந்தான் அந்த நம்பூதிரியான். முதிலில் நாம் இந்த வெள்ளைதோலின் மீது கொண்டுள்ள மோகத்தை களைவோம் அது பலவித இடையூறுகளை குறைக்கும் என்பது உறுதி....

------------கரு.இராமநாதன் வேள்வணிகன்

Tuesday 18 August 2015

குறுந்தாடிகளின் கனிவான கவனத்திற்கு....!!!

#பொதுவாகவே__நாட்டுகோட்டை___நகரத்தார்களின்__வரலாற்றை, தமிழர்கள் அல்லாதவர்கள் (வடுகர் கூட்டம் + ஆரிய சனாதனம் ) தங்கள் கையில் எடுத்துகொண்டு ஆராய்ச்சி செய்கிறேன் பேர்வழி என்று நம்மவர்களை மூளைச் சலவை செய்து நகரத்தார்களை அதாவது நாட்டுகோட்டை நகரத்தார்களை தமிழர்கள் அல்ல என்பதாக கதை எழுதி, அவர்களின் வேள் வணிகர் அடையாளத்தை மடைமாற்றம் செய்து தன வைசியர் - என்று உளவியல் மோசடிக்கு ஆள்ளக்கியுள்ள நிலையில், இற்றைக் காலங்களில் வடுக ஆனந்த விகடன் நகரத்தார்களின் வணிகக் கட்டமைப்பை கொச்சைப்படுத்தி அவர்களின் கால அளவை வந்தேறிய தெலுங்குச் செட்டிகளை விடவும் குறைவான வரலாறு கொண்டவர்களாக காட்டி எழுதி உள்ளனர். இதனை அரைகுறையாகப் படித்த குறுந்தாடி நகரத்தகார் இளைஞர்கள் அதுதான் வரலாறு என்று கோலம் கொண்டு சுய அடையாளம் அழிக்கத்துவங்கி விட்டனர். இவர்களிடம் வரலாறு பேசினால் அவர்கள் நம்மிடம், நமக்கே விலை பேசும் அளவிற்கு பின் புலத்துடன் உள்ளது தெரிய வருகின்றது. நிற்க. 

இந்த நிலையில் தமிழர் குடி மரபு இனக்குழுவைச் சார்ந்த இன்னொரு நண்பர் சில தவறான புரிதலுடன் நாட்டுக் கோட்டை நகரத்தார் வரலாறு குறித்து பதிவிட்ட போது, அதற்கு நான் அவரிடம் அதற்கான எனது விளக்கம் கொடுத்து, பதிவிலும், வரலாற்றிலும் தவறு உள்ளது. இது தவறான புரிதலை மக்களிடம் கொண்டு செல்லும் என்று கூறினேன். அவரும் தான் படித்த சில நகரத்தார் பற்றிய வரலாறு குறித்து சொல்லி, அதன் அடிப்படையில் எழுதினேன், தவறு இருப்பின் பதிவு நீக்கம் செய்து விடுகின்றேன் என்றவர், உடனே அந்தப் பதிவினையும் நீக்கிவிட்டார். 

ஒரு இனக்குழு பற்றிய ஆய்வு முறையாகவும், அந்த இனக்குழுவின் பண்பாட்டு,வாழ்வியல் சொல் வழக்கு, சடங்குகள் சார்ந்தும் உள்ளவற்றை எடுத்து, இலக்கிய,தொல்லியல் சார்ந்த தரவுகளுடன் பொருத்தி அதன் தன்மையுடன் கூடிய உண்மையினை ஆய்ந்து அறிவிக்க வேண்டும். இதற்கு அந்த அந்த இனக்குழு சார்ந்த அறிவர்களும் பெரியவர்களும் சேர்ந்து ஆய்வு செய்யப்பட வேண்டியது. மாற்றார் அடையாளங்களை மிக எளிதாக வேற்றார், எடை போடுதல் கூடாது. இந்த நெறிப்பாடு இயல்பாகவே அனைவருக்கும் இருக்க வேண்டும். 


ஆய்வும் ஒரு நடுவு நிலையுடன் கூடியதாக, நடந்தவை, நடப்பவை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இனி வரும் காலங்களில் அந்த அந்த இனகுழுவானது, தங்களின் தேசிய இனத்தின் ( மொழி வழியே அடையாளம் கொண்டு அறி யப்படுவதே ஒரு தேசிய இனம் ) { நிறம்,மதம் ஆகியவை ஒரு தேசிய இனத்திற்கு குறியீடு அல்ல } நலனுடன் இனைந்து வாழ்வதற்கான ஒன்றாகவே அமைய வேண்டும். இடைக்கலங்களில் மாற்றார் ஆட்சிக் காலங்களில் நடந்த ஒடுக்குதலை சீர்தூக்கி, நமது தமிழர் இனக்குழுக்களை அவர்களின் தனித்துவத்தை அடையாளம் கண்டு, நம் தேசிய இன ஓர்மைக்கு வழி வகுக்க வேண்டும். 

மேற்படி நபர் இதனை நன்கு புரிந்து கொண்டதால் எனது மறுப்பினையும் கருத்துரையினையும் உடனே ஏற்று பதிவு நீக்கம் செய்துவிட்டார். இது தமிழர் நெறி, தமிழர் அறம். 

ஆனால் சொந்த அடையாளத்தை ஆனந்த விகடன் என்ற வந்தேறி சொன்னான் என்பதற்காக அதுதான் அடையாளம் என்று வல்லடியாய் சட்டம் பேசும் குறுந்தாடி பதினேழாம் நூற்றாண்டு இளைஞர்கள், வரலாற்றை விவாதித்து ஏற்கும் நிலையில் இல்லை, மாறாக நமக்கே விலை பேசும் கயவர்களாக இருப்பதை எப்படி ஏற்க முடியும் ?? 

செட்டி என்ற சொல்லே சம்ஸ்கிருதா என்ற மொழியில் இருந்து வந்ததாக கூத்தாடிகள் சொல்லியவற்றை COPY PASTE அதாவது வெட்டி ஓட்டும் வேலையினைச் செய்து,  எளிய மக்களையும், மற்றவர்களையும் ஏமாற்றுவது எதற்கு ?? 

குறிப்பாக பதினேழாம் நூற்றாண்டு அக்மார்க் PURE NAGARATHAR என்று சொல்லும், குறுந்தாடிகளின் தோளில் தொங்கும் அதி நவீன புகைப்படக் கருவியும், அவர்களுக்கு இலவசமாய் தரப்பட்ட மண் மூளையினையும், ஒரு வடுக நாயர் வாடகைக்கு கொடுத்தால், அதனை ஏற்று இவர்கள் தங்களை நெகிழியால் ( PLASTIC NAGARATHAR WE ARE ) செய்யப்பட பிளாஸ்டிக் நகரத்தகார் என்றும் கூட சொல்லிக் கொள்வார்கள். 

காரணம் சங்கம் வைத்த மதுரையில், கலைக் கல்லூரியின் தமிழ்த்துறை எந்திரத்தை வைத்துகொண்டு, நகரத்தகார் வாழ்கின்ற ஊர்களை ஆய்வு செய்கின்றேன் பேர்வழி என்று, நகரத்தார்களைப்பற்றிய ஆய்வுகளை நிழலாகச் செய்து, அதன் அடிப்படையில் நகரத்தார் சமூகத்தில் நகரத்தார் அல்லாதவர்களை ஊடுருவச் செய்வதற்கு கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நிழல் வேலைகள் நடப்பது பற்றி அறியாதவர்கள் பலர்,இப்படிப்பட்ட அழிவுப் பாதைக்கு தாங்களே பட்டுக் கம்பளம் விரிக்கவும் தொடங்கிவிட்டனர். 


இனி நாயர் வகை, நாயுடு வகைப்பிரிவும் கலந்துறவாடி,  நாட்டுக்கோட்டை நகரத்தார்களை,  தங்கள் அடையாளம் இழந்த நிலைக்கு ஆளாக்கும் முன், நாட்டுகோட்டை நகரத்தார்கள் ஒவ்வொரு ஊர்களிலும் உள்ள பங்காளிகளை அவர்களின் சுய அடையாளத்தைக் காக்க அரசியல் அதிகாரம், பண பலம் கொண்டு ஒடுக்குபவர்களை, வந்தேறிகளை எதிர்க்கவும் நம்மை நாமே பாதுகாக்கவும் முயற்சி எடுக்க வேண்டும். அதற்கு அடிப்படையாக நிற மேலாண்மை தேடும் பதினேழாம் நூற்றாண்டு நாயர் அடிமை நகரத்தார்களைப் புறக்கணிக்க வேண்டும். இல்லை என்றால் கேடாய் முடியும். 
வேணும் அருள்மிகு பொய் சொல்லா மெய்யர் துணை, 

----- நெற்குப்பை காசிவிசுவநாதன். 07-08-2015.

Saturday 15 August 2015

காரைக்குடி செட்டிநாட்டு பகுதியின் அடையாளங்களில் ஒன்று ..........


அன்பு நகரத்தார் நண்பர்களுக்கு காரைக்குடியானது நகரத்தார் 96 ஊர்களில் முக்கியமான ஊர் . மேலும் நகரத்தார்களின் அடையாளங்களில் போற்ற பட வேண்டிய பல இங்கு அமைந்து உள்ளது .
1.இந்து மாதபிமான சங்கம் . 
2.அறுபத்தி மூவர் மேடம் .
3.காசி நகர சத்திரம் .
4.தமிழ் கல்லூரி .
5.கம்பன் மணி மண்டபம் .
6.கோவிலூர் மடாலயம் .
7.அழகப்பர் பல்கலைகழகம்
8.எஸ்.எம்.எஸ்.வீ.ஆண்கள் மேல்நிலை உயர் நிலை பள்ளி மற்றும் பெண்கள் மேல் உயர் நிலை பள்ளி .
9.காரைக்குடி நகரத்தார் ஒரு கோயில் பங்காளிகளால் நிர்வகிக்கப்படும் மேல ஊரணி முனி அய்யா கோயில் . இன்னும் இது போன்ற நகரத்தார் குடும்பங்கள் மற்றும் பங்காளிகள் நிர்வகிக்கும் 100 க்கும் மேற்பட்ட படைப்பு வீடுகள் மற்றும் கோயில்கள் .
10.மகர்நோன்பு திடல் .
11.கோயில்களை சுற்றி உள்ள ஊரணிகள் , கடைகள் , போன்ற நகரத்தார் கோயிலுக்காக நிர்மாணித்த சொத்துக்கள் .
12.100 வருடங்களும் கடந்து பொழிவுடன் அழகுடன் உள்ள 2600 க்கும் மேற்பட்ட அரண்மனை அம்சம் பொருந்திய நகரத்தார் வீடுகள் .


இவை அனைத்தும் நம் காரைக்குடி அடையாளங்களில் முக்கியமானவை .
இன்று காரைக்குடி பகுதி வந்தேறி வருவோரை வாழ வைக்கும் பகுதியாகவும் இருக்கிறது . இது ஒரு பக்கம் நல்ல செயலாக இருந்தாலும் மறு பக்கம் நகரத்தார்கள் தங்கள் சொத்துக்களை மிக கவனமாக பாதுகாக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது . ஏனெனில் பிழைக்க வரும் வந்தேறிகள் மற்றும் அவர்களின் வாரிசுகள் வந்த இடம் மறந்து தங்கள் சொந்த ஊர் போன்ற சூழ்நிலை உருவாக்க முனைகிறார்கள் இது காரைக்குடி போன்ற வளர்ந்த நகரத்தார் பகுதிகளில் அவர்களுக்கு சற்று கடினமாக இருந்தாலும் அவர்கள் செட்டிநாட்டு பகுதியை அடையாளம் மாற்றும் வேலையில் ஈடு படுகின்றனர் இதை இனி ஒரு போதும் அனுமதிக்க கூடாது .
தமிழ்நாட்டில் பல இடங்கள் இப்படி அடையாளம் மாற்றத்தில் ஈடு படும் அரைகுறை கூட்டத்தால் நல்ல அடையாளங்களை இழந்து கூத்தாடி தனமாக ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது .
நகரத்தார் மக்கள் வாழும் 96 ஊரும் செல்வ செழிப்பு மற்றும் தகுதியில் உயர்ந்த ஊர்களே நாம் புதிதாக உருவாக்கம் செய்வதை விட நம்மவர்கள் உருவாக்கிய பெருமைகள் , அடையாளங்கள் , சொத்துக்கள் , மற்றும் சேவை பணிகளை பாதுகாப்பதே முக்கியம் . போனது போகட்டும் இனி காலம் உணர்ந்து செயல் படுவோம் இழந்த சில சொத்துக்களையும் மீட்க்கும் பணிகளை நகரத்தார் குடும்பங்கள் செய்து வருகின்றனர் . இது போன்ற சொத்துக்களை மீட்க்கும் பணிகளில் நகரத்தார்கள் ஈடுபடுதல் இனி முக்கியம் . அடையாளம் காப்போம் .
....வேள் வணிகர் முத்துக்கருப்பன் செட்டியார் .
( நகரத்தார் அடையாளங்கள் பற்றி தங்களுடைய கட்டுரைகள் மற்றும் கருத்துக்கள் வரவேற்க்கப்படுகிறது )

Tuesday 11 August 2015

செட்டி என்ற தமிழ் சொல் :


இன்று செட்டி என்ற சொல்லே ஆரியமொழியான சம்ஸ்கிரத்தில் இருந்து தான் வந்து என்று இந்த சொல்லில் மீது பல குழப்பங்களை கிளப்பி உள்ளனர் தற்போது வந்துள்ள ஹைப்ரிட் கலைகூத்தாடிகளும் பதர்களும் வடுக ஆரிய எடுபிடிக் கூட்டமும் இந்த சொல் சமஸ்கிரத்தில் வந்தது என்றும் கூறுவது எள்ளளவு கூட ஏற்புடையது அல்ல. செட்டி என்ற சொல் தமிழ் சொல்லே. இதற்கு பலவிதமான சான்றுகள் உள்ளன அவைகளில் சில இந்த தரவுகள் போதும் என்று நினைக்கிறன் வெள்ளைத் தோளுக்கும் அலைந்து கொண்டு தெலுங்கு கூட்டத்திற்கு சமரம் வீசுயும் ஆச்சாரம் அனுஷ்டானங்கள் பற்றி பேசும் மலையாள பகவதி கூட்டத்திற்கு விளக்கு பிடித்து திரியும் ஹப்ரிட் பத்தர்களுக்கு இந்த தரவுகளின் விளக்கம் போதுமானது என்று நினைக்கிறேன்

செட்டாக( கூட்டமாக ஓர் ஊர் விட்டு ஓர் ஊருக்கோ நாட்டிற்க்கோ ) சென்று வணிகம் செய்தனால் செட்டு செட்டாக சென்று வந்தமையால் செட்டி என்று அழைக்கப்பட்டனர். இதற்கு மேலும் சான்றாக செட்டிறை என்ற ஒருவித வணிகவரியை தமிழ் வணிகர் மரபினர் செலுத்தினர் அந்த செட்டிறை என்ற வணிகவரி வணிகர்க்குடிகளுக்கு மட்டும் செலுத்தும் வரி என்பதால் இந்த செட்டிறை என்ற சொல்லில் இருந்து செட்டி என்ற சொல் வந்து என்றும் சொல்லப்படுகிறது

சோழர்கள் காலத்தில் வணிகர்களுக்கு எட்டி என்ற பட்டம் கொடுக்கப்பட்டது அதுவே பின்னாளில் பேச்சுவழக்கில் செட்டி என்ற பெயருக்கு மாறியது என்று சொல்லப்படுகிறது இதற்கு சாட்சிகள் உண்டா என்று கேட்கும் பதர்களுக்கு மணிமேகலையும் சிலம்பும் சாட்சியாக உள்ளது எட்டிச் சாலனையும் என்று சொல்லாடல் சிலம்பில் வருகின்றது அதோடு மேகலையில் எட்டிக்குமரன் என்ற சொல்லும் பயன்படுத்தியதை காணமுடியும் எட்டி என்ற சொல்லின் மருவே இன்று செட்டி என்ற சொல் நடைநடந்து அல்லது கடல் கடக்காது பலநாடுகளுக்கு சென்று பயணம் செய்து பெருவணிகம் செய்வோரை எட்டி என்று சிலம்பு காலத்தில் பட்டம் கொடுத்து அழைத்தார்கள் அதோடு கடல் கடந்து சென்று வணிகம் செய்தவர்களை நாயகன் என்ற பட்டம் கொடுத்து அழைத்தனர். இதற்கும் நம் சிலப்பதிகாரம் வந்து சாட்சி சொல்கிறது. நம் கண்ணகி ஆத்தாள் தந்தையின் இயற்பெயரை பற்றி சிலம்பு பேசவில்லை மாநயகன் இதில் நாயகன் என்பது அவருக்கு கொடுக்கப்பட்ட பட்டம் மாநயகனுக்கு சொந்தாமாக 1௦௦௦திற்கும் அதிகமாக பெருவணிகம் செய்யும் கலன்கள் வைத்திருந்த பெருவணிகர் அதனால் அவரை மாநாயகன் என்று அழைத்தனர் நம் நகரத்தார்களுக்கும் இன்றும் வழக்கில் அவரவர் வீட்டிற்கு தனிதுவ பெயர் உண்டு என்பதை நினைவில் கொள்க
குறிப்பு : மாநாயகம் என்பது கண்ணகியின் தந்தையின் இயற்பெயர் அன்று அவரின் இயபெயர் குறித்து காப்பியத்தில் பேசப்படவில்லை அது அவரை அடையாளப்படுத்தி கூறும் அடையாளப் பெயர் கண்ணகி ஆத்தாள் வேள்வணிகர் மரபினால் என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரம் இந்த அடையாளப்பெயர் நம் வழக்கத்தில் இன்று உள்ளது செட்டிநாட்டில் ஒவ்வொரு நகரத்தார் வீட்டிற்கும் ஒரு தனித்துவமான அடையாளப்பெயர் இருக்கு அதுபோன்றே அன்று கண்ணகிஆத்தாள் தந்தையின் அடையாளப் பெயரே
இதற்கு மேலும் நாங்கள் இ(எ)தனை(யும்) ஏற்கமாட்டோம் நாங்கள் கூறுவதே சட்டம் என்று தெலுங்கனுக்கும் மலையாளிக்கும் கொடிபிடித்து அவன் சிதறிவிடும் சில்லரைத்தான் எனக்கு முக்கியம் என்று ஓடிவிழும் பத்தர்களுக்கும் ஹ்ப்ரிட் கலைகூத்தடி கூட்டத்திற்கு இது புரிந்தால் சரி தமிழின் தொன்மையும் அறியாத பதர்கள் தமிழராக சொல்லிக்கொள்ளவும் தமிழரின் அடையாளத்திற்கும் கிடைத்திருக்கு பெரும் களங்கம். நல்ல மாட்டிற்கு ஒரு சூடு சுரணை வந்து உண்மை நிலை புரிந்தால் சரி
------------கரு.ராமநாதன் வேள்வணிகன்

Saturday 8 August 2015

#புள்ளிகளும் #புள்ளிக்___கணக்கும்.


புள்ளி ஒருமுழுமையின் குறியீடு. ஆகவே  தான் நமது  நகரத்தார்கள் புள்ளி என்ற சொல்லாட்சியை மிக  கவனமாகவும், பொருளார்ந்ததாகவும் பயன்படுத்தினர்.  புள்ளி என்பது  நிறைவானது,  குறையில்லாதது. ஆகவே புள்ளி என்ற சொல்லாட்சி  - நாட்டுக் கோட்டை  நகரத்தார்  குடிமரபில்,  இன்றியமையா பொறுப்புகளை, பொருள்கொண்ட வாழ்வியலை  தன்னகத்தே  கொண்டுள்ளது.
ஒருவருக்கு, அதாவது - ஒரு நாட்டுக்கோட்டை  நகரத்தார் ஆண்  மகனுக்கும்  அந்த  மரபு வழி வந்த  பெண் மகளுக்கும் திருமணம் உறுதி  செய்யப்பட்டு,  பாக்கு  வைத்து, திருமணம் சொல்லி உற்றார்  உறவினர் கூடி ஊரார் வாழ்த்துரைக்கநடைபெற்ற கணத்திலேயே அந்த இணையர், ஒரு  முழுமை  பெற்ற புள்ளியாகி  விடுகின்றனர். இவர்கள்  சமூக செயல்பாடுகளிலும், அதன் மரபுசார் நியமங்களிலும் தங்களின்பங்களிப்பை முறைப்படி செயவதற்கு  உரிமையுடையவர்களாய்  உள்ளனர். இப்படிப்பட்டவர்களே சமூகநிகழ்வுகள், கோயிற் காரியங்களில் நேரடியாய் ஈடுபட்டு பங்கெடுத்தல், சமூக  உறவு  முறைகளிடம் விவாதங்கள், கருத்துரைத்தல் ஆகிய  பல்வேறு முக்கிய  நடவடிக்கைகளில் ஈடுபட  தகுதி  உடையவர்களாகின்றனர்.




வரலாற்றுக்காலங்களில், பல அக - புறச்  சூழல்  காரணமாக திருமணம்  என்பது  குழந்தைப் பருவத்திலேயே முடிந்துள்ளது.பிற்பாடு பதினைந்து வயதிற்கு  மேல் திருமணம்  செய்துள்ளனர். இற்றைக்  காலங்களில் பொருளாதாரம், கல்வி ஆகியவற்றைக்  கருத்தில்  கொண்டு சிலருக்கும், பலருக்கும் சுமார்  இருபத்து  எட்டு  வயதிற்கு  மேலும், இன்னும்  சிலருக்கு முப்பது  வயதும்  ஆகிவிடுகின்றது. ஆகவே  இன்று ஒரு  நாட்டுகோட்டை  நகரத்தார்  மரபு  வழி வந்த  ஆண்  மகனுக்கும், அதே நாட்டுக்  கோட்டை நகரத்தார்  மரபு  வழி வந்த  பெண்  மகளுக்கும் இணையர் ஆவதற்கு  அவர்கள் காத்திருக்க  வேண்டிய காலம் நீட்சி பெறுகின்றது. இந்தக்  கால  கட்டத்தில் எடுக்கப்பட  வேண்டிய  சமூகம்  சார்ந்த சில இன்றியமையா விவாதங்களில்  கூட அவர்கள்  தங்கள்  கருத்துரைக்க வாய்ப்பில்லாமல்போய்விடுவதை உணரவேண்டிய  காலத்தில்  உள்ளோம்.
இது  தவிர புள்ளி என்பது மீண்டும்  சொல்கின்றேன், ஒரு  முழுமையான பொருள்  கொண்ட முழுமைபெற்ற சொல்லாட்சி. இந்த  சொல்லாட்சியை அடைவதற்கு  முழுமையான தகுதி  என்பதும் நாட்டுகோட்டை  நகரத்தார் குடி மரபில் வந்த ஆண்மகனுக்கும், அதே நாட்டுகோட்டை  நகரத்தார்  குடிமரபில்  வந்த பெண் மகளுக்கும் நடை பெரும்  திருமணத்திற்கு மட்டுமே உரித்தாகும். 

இந்தச்  சூழலில்,  யாரேனும்  தொழில்  நிமித்தமாக ராஜமுந்திரி, விஜயவாடா சென்றோ அல்லது ஜெய்பூர், உதய்பூர், கொச்சி, மனபுரம் போன்று தமிழர் மரபு  சாராத பண்பாட்டில் பெண்களின்  நிறம்  கருதி திருமணம்  செய்து  வந்து இங்கே குடும்பம்  நடாத்துவதால்  மட்டுமே புள்ளிகளாய் மாறுவதற்கு கிஞ்சித்தும் இடம் / உரிமை கிடையாது. அதுமட்டுமல்ல, இங்கேயே  வந்தேறிய மாற்று  இனம்  சார்ந்த  குடியேறிகளை திருமணம்  செய்வதாலும்  புள்ளிகளாகி விடமுடியாது. 

ஆகவே நகரத்தார்  ஆண்மகனுக்குப்  பிறந்தவர்கள்,  மீண்டும்  பணத்தின் அதிகாரம்  கொண்டு  பங்காளிகளை வைத்து புள்ளிக் கணக்கில் பேரேட்டில் தங்கள்  பெயரை  ஏற்றிவிடலாம்  என்று  பேராசை  கொண்டு, அரசியல் பலம்  காட்டினாலும் எதிர்த்துக்  களமாட மானமுள்ளவர்கள் இன்னமும்  உள்ளார்கள்  என்பதை உணரவேண்டும்.
இதற்கும்  மேலாக, இல்லை,  இல்லை நிறத்தின்மேலாண்மை  காட்டி விடலைகளாய்,  கைகளில் புகைப்படக்  கருவி  வைத்துக்கொண்டு அலையும் நகரத்தார்  இளைஞர்களை கருவியாக்கி,  போலியான நகரத்தகார்  ஆவணப்படங்களை வெளியிட்டு, மீண்டும், மீண்டும்  இனி  வருகின்ற தலைமுறைகளை சீரழித்து  விடலாம் என்று  நினைத்தாலும் அதனை ஈடேற்ற  விடமாட்டோம். இவ்வகையான உளவியல் மோசடிக்கு  ஆளானவர்களை பதினேழாம் நூற்றாண்டு மேனியா என்ற வியாதியஸ்தர்களாகவே கணக்கில் இடுவோம், மாறாக புள்ளிகளாக  முடியாது.

சரி, முடிவாக நமது வரலாறு தெரிந்த சமூக  இளைஞர்கள் விவாதங்கள், முடிவுகளில் பங்கேற்பதற்கும் வயது வரம்பை ஒரு அளவு  முறையாக  வைத்தால், இவர்களின் பங்களிப்பு பயனுடையாதகவும் இருக்கும். நல்ல  கருத்துக்கள் வெளிப்படும்  போது, நீ புள்ளிக் கணக்கில்  இல்லை  என்ற  நிலையம்  வராது.

மேலும் வழமையாகவே இந்தக்  கருத்தில் இருக்கும்  சாதகம் என்பது, படித்த,வரலாறு தெரிந்த இளைஞர்களின் கருத்து புறந்தள்ளப்படக்  கூடாது  என்பதே, அதே  சமயம் படித்து வரலாறு புரியாத, வாழ்வியல் தெரியாத நிற மேலான்மை உளவியலில் சிக்கித்  தவிக்கும் இளைஞர்களை, மேற்படி வந்தேறியமாற்று  இனத்தவர் -  இவர்களை கருவியாகப் பயன்படுத்தவும் விட்டுவிடாமல் இருக்க வேண்டுயதையும் கருத்தில் கொள்ள வேண்டும். காரணம், புள்ளிக்  கணக்கில் சேராத பதினேழாம்  நூற்றாண்டு மேனியாவால் பாதிக்கப்பட்ட விடலைச்சிறுவர்-சிறுமியர் கைகளில் உள்ள  புகைப்படக்  கருவியை வைத்துகொண்டு  தயாரித்த  ஆவணப்படம்  என்பதும் நமக்கு  பின்னடைவத் தந்துள்ளது. வரலாற்றுத்  தரவுகளுக்கு மாறானது. ஆனால் புள்ளிக்  கணக்கு  பார்ப்பவர்கள்,  புள்ளியாகாமல், இவர்கள்  எப்படி  இது போன்ற ஆவணப்படங்களை மனம்  போன போக்கில்  தயாரிக்கலாம்  என்று கேள்வி எழுப்புவதில்லை. இந்த  ஆவணப்படங்களை  சுழற்சியில்  விட்டு ஆதரிப்பதும், உண்மையில்  வரலாறு  தெரிந்த இளைஞர்கள்  நாட்டுகோட்டை  நகரத்தார் மரபுசார்ந்த  விடயங்களில் பங்கெடுக்க  விடாமல் தடுப்பதும், மீண்டும், மீண்டும் நமக்கு  பின்னடைவத்  தரும். 
ஆகவே  நமக்கு  இதுகாறும்  கிடைத்த பட்டறிவை வைத்து, நமது குடிமரபின் தொன்மை  காப்பதற்கு, விரைந்து செயல்பட வேண்டியது என்பது  வயது  வேறுபாடின்றி களமாட  வேண்டிய காலம். நன்றி.

வேணும் அருள்மிகு பொய் சொல்லா மெய்யர் துணை, 

----- நெற்குப்பை காசிவிசுவநாதன். 01-08-2015.

தர்மத்துல வியாபாரம் பார்க்ககூடாது

செட்டி நாட்டு வீதியொன்றில் கீரை
விற்றுகொண்டு செல்கிறாள் ஒரு பெண். வீட்டு
வாசலில் மகனோடு அமர்ந்திருந்த தாய், கீரை
வாங்க அவளை கூப்பிடுகிறாள்.
" ஒரு கட்டு கீரை என்ன விலை....?"
" ஓரணாம்மா"
"ஓரணாவா....? அரையணாதான் தருவேன்.
அரையணான்னு சொல்லி நாலு கட்டு
கொடுத்திட்டு போ"
"இல்லம்மா வராதும்மா".
" அதெல்லாம் முடியாது. அரையணாதான்". பேரம்
பேசுகிறாள் அந்த தாய்.
பேரத்திற்கு ஒத்துக்கொள்ளாத அந்த பெண்
கூடையை எடுத்துக்கொண்டு சிறிது தூரம்
சென்றுவிட்டு
"மேல காலணா போட்டு கொடுங்கம்மா"
என்கிறாள்
"முடியவே முடியாது. கட்டுக்கு அரையணாதான்
தருவேன்"... என்று பிடிவாதம் பிடித்தாள்.
கீரைக்காரி சிறிது யோசனைக்கு பிறகு "சரிம்மா
உன் விருப்பம்" என்று கூறிவிட்டு நாலு கட்டு
கீரையை கொடுத்துவிட்டு ரெண்டணா காசை
வாங்கி கொண்டு கூடையை தூக்கி தலையில்
வைக்க போகும் போது கீழே சரிந்தாள்.
"என்னடியம்மா காலை ஏதும் சாப்பிடல...?" என்று
அந்த தாய் கேட்க
"இல்லம்மா போய்தான் கஞ்சி காய்ச்சிணும்"
"சரி. இரு இதோ வர்றேன்." என்று கூறிவிட்டு
வீட்டுக்குள் சென்றவள், திரும்பும்போது ஒரு
தட்டில் ஆறு இட்லியும், சட்னியோடு வந்தாள். "
இந்தா சாப்ட்டு போ" என்று கீரைக்காரியிடம்
கொடுத்தாள்.
எல்லாவற்றையும் பார்த்துகொண்டிருந்த அந்த
தாயினுடைய மகன்" ஏம்மா அரையணாவுக்கு
பேரம் பேசுனிங்க.. ஒரு இட்லி அரையணான்னு
வச்சுகிட்டாக்கூட ஆறு இட்லிக்கு
ரெண்டரையணா வருதும்மா.....? என்று கேட்க
அதற்கு அந்த தாய்,
"வியாபாரத்துல தர்மம் பார்க்ககூடாது,
தர்மத்துல வியாபாரம் பார்க்ககூடாதுப்பா" என்று
கூறினாள்...!


வாட்ஸ் அப்பில் வந்த சிறுகதை