Sunday 12 March 2017

கேள்வியும்___பதிலும்: 2

#கேள்வி

பட்டிணத்தார் படம் பார்த்தேன் அதில் திருவெண்காடருக்கு மருதவாணன் ஒரு ஒலையில் ஒருவாசகம் எழுதி தந்திருப்பான் காதறுந்த ஊசியும் வாராது காணும் கடை வழிக்கே. இதன் பொருள் என்ன ? 



#பதில் :
காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே....!!
இது எளிமையான விளக்கம் தான்.

ஊசி என்பது தைப்பதற்கு இன்றியமையாத ஒரு கருவி.அந்த ஊசியில் உள்ள துளை தான் அந்த ஊசியின் காது. அந்த காது முனை உடைந்துபோனால், அதில் நூல் நுழையாது, அதாவது நூலினை நுழைத்தால்தானே பின்னர் அதனைக்கொண்டு ஆடைகளையே, அல்லது கிழிசலையோ தைக்கமுடியும் ???

அப்படிப்பட்ட துளையற்ற ஊசி என்பது எதற்கும் பயன்படாது...
அதுபோலவே சேர்க்கும் பொருள் எதுவாயினும், நமது இறுதிக்கு இறுதிவழிக்கு நம்முடன், நமக்காக வரப்போவது இல்லை.
அதிலும் கூட இந்த எதற்கும் பயனற்ற காதற்ற ஊசியும் கூட வரப்போவதில்லை என்பதே உண்மை.

இதுதான் மருதவாணர் திருவெண்காடருக்கு உணர்த்தி பட்டினத்தாராக நமக்கு மாற்றித்தந்தது.

நிலையாமைத் தத்துவத்தை இறைவன் ஒற்றை வரியில் சொல்ல அதனை பட்டினத்தார் தனது இறுதிக்காலம் வரையிலும் சொல்லி வாழ்ந்தார்.

#பேய்க்கரும்பு__இனிக்கின்றது__பேரின்பம்__பிறக்கின்றது.

--- நகரத்தர் வரலாறு.
10-03-2017.

கேள்வியும்___பதிலும்: 1


#கேள்வி::
 
@Adaikkalavan chidambaram :: மீண்டும் 96 ஊர்கள் அதே இடங்களில் நகரத்தார்களாள் வீடுகள் கட்டப்பட்டு உருவாக்கபட வேண்டும், இது நம் ஒருங்கினைப்புக்கான ஆலோசனை கூட்டமாகவே கருதப்படுகிறது, நகர கோவில்கள் அனுமதி இல்லாமல் யாரும் எந்த முடிவும் எடுக்க அனுமதி இல்லை, நியாயமான முறையில் நகரத்தார்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு மட்டுமே ஆலோசிக்கப்படும், சமுதாயத்தில் என்ன மாற்றங்கள் ஏற்பட்டாலும் நகரத்தார்களை மட்டுமே ஏற்ட்டுக்கொள்ளப்படும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம், இது போன்ற பல ஆலோசனை கூட்டங்கள் நம் ஒற்றுமையான வளர்ச்சிக்கு நன்மை தரும், இது ஒரு ஆரம்பம் தான், கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன..சந்திப்போம் சாதிப்போம் பாரம்பரியம் காப்போம் வாழ்க வளமுடம் மகிழ்ச்சி


#பதில் ::

@Avaddayappan Kasi visvanathan ::: /// சமுதாயத்தில் என்ன மாற்றங்கள் ஏற்பட்டாலும் நகரத்தார்களை மட்டுமே ஏற்ட்டுக்கொள்ளப்படும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம், /// தங்களின் இந்த தீர்க்கமான உறுதிப்பாடு நம்பிக்கையளிக்கின்றது. அதே சமயம் காலத்தால் அகப்புறச்சூழல்களால் இடம்பெயர்ந்து அருகாமையில் உள்ள ஊர்களில் குடியேறியது காலத்தின் அவசியம். அதனை தற்போதைய நிலையில் அங்கே செல்வது என்பது ஒரு அதிகப்படியான முயற்சியே. அதைவிட இருக்கின்ற ஊர்களில் வீடுகளை பராமரிக்கும் ஆர்வத்தை மக்களிடம் விதைப்பதும், இருக்கின்ற கட்டுமானங்களை காப்பதற்கு இளம் நகரத்தார்களிடம் கருத்தியல் உருவாக்குவதும் அவசியமானது. கூடுதலாக ஓவ்வொரு ஊர்களிலும் நகரத்தகர்களில் பண பலம், அரசியல் பலம் கொண்டு ஊடுருவல் செய்யம் தமிழர் அல்லாத கலப்புகளை அதுவும் படைப்பு வீடுகளில் நடக்கும் கொடுமைகளை இந்தக் கூட்டம் கருத்தில் எடுத்து, ஏழ்மையில், சராசரி வாழ்வியலில் உள்ள எளிய உண்மை நகரத்தார்கள் படைப்பு வீடுகளில் ஒடுக்குதலுக்கும், உரிமை கோருவதற்கும் விடாமல் கைத்தடிகள் சகிதமாக பங்காளிகள் துணையுடன் நடக்கும் அக்கிரமங்களை எளிய நகரத்தார்கள் மனதில் ஊமையாய் குலதெய்வ சன்னிதானத்தில் மட்டுமே சொல்லிவிட்டு செல்கின்றனர். ஊடுருவும் அயலாரிடமிருந்து குறைந்தபட்ச பாதுகாப்பும் இல்லாமல் ஒவ்வொரு ஊரிலும் பங்காளிமுறைமைகள் உள்ளன. ஊர்க்கூட்டங்கள் கூடி நகரத்தார் முறைமைகளை மீறும் அத்துமீறிகளை கண்டித்து நேர்மையாய் வாழும் நகரத்தார்களுக்கு இனியும் பாதுகாப்பில்லை என்றால் இந்த சமூகம் தமிழர் அடையாளத்தில் இருந்து கடத்தப்பட்டு வந்தேறிகள், வந்தொட்டிகளின் கைகளில் சிக்கும். இதனை சிந்தனையுடன் கருத்தில் கொண்டு களத்தில் உள்ளவர்கள் செயல்பட வேண்டும். வீட்டு தெய்வங்களின் படைப்பில் கிஞ்சித்தும் மரபுவழி வராமல் பணம்/ அரசியல்பலம் /ஆள்பலம் என்று ஏறி மேயும் கொடுங்கோலர்கள் நித்தம் நித்தம் எத்தி விளையாடுவதற்கு விடிவில்லையென்றாலும் மூததையர் துணையுடனும், குலதெய்வங்களின் பெயர்களை உச்சரித்தும் வாழும் நகரத்தார்களுக்கு விடியல் கிடைக்குமா என்று பொறுமையுடன் காத்திருக்கின்றனர். பாப்போம்.

-- வேணும் அருள்மிகு பொய்சொல்லா மெய்யர் துணை.
-- நெற்குப்பை காசிவிசுவநாதன்.

Friday 3 March 2017

#கூட்டமும்__முடிவும் ---- #சேருவது___இனம்.

திருமதி. ஏகம்மை முத்து அவர்கள் தொடர்புகொண்டு கேட்ட கேள்விக்கு இந்த பதில் நகரத்தார் வரலாறு - Nagarathar Varalaru என்ற பக்கத்தில் பதில் கொடுத்துள்ளனர் ஆச்சியின் கேள்விக்கு விடைகிடைத்து இருக்கும் என்று நம்புகிறோம் 


/////// #கூட்டமும்__முடிவும் ---- #சேருவது___இனம்.

#கேள்வி :-

ஐயா வணக்கம் இந்த செய்தி எனக்கு வாட்சப்பில் வந்தது உங்கள் பக்கத்தில் பார்தேன் உங்களின் பல நகரத்தார் சார்ந்த செய்திகளை வெளியிடுகிறிர்கள் என் ஐயப்பாட்டையும் தீர்த்து வையுங்கள்
அது என்ன 96 ஊர் கூட்டம் ?? இந்த கூட்டம் நடத்துபவர்களின் நோக்கம் என்ன ?? இது போன்ற கூட்டங்களின் எடுக்கும் முடிவுகளுக்கு அனைவரும் கட்டுபடுவார்களா ??


#பதில் :-

தொண்ணூற்றாறு ஊர் என்று சொல்வது, இதில் யாரை சேர்க்கப்பயன்படுவது என்று புரியவில்லை. காரணம் சொல்லாடலில் உள்ளது அரசியல். கி.பி 1800 களில் மருதிருவர் வீழ்ச்சிக்குப் பின்னர் நிகழ்ந்த வடுகக் கலகத்தை அடுத்து, நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் தங்களின் வாழ்விடங்களை விட்டு பாதுகாப்பான பகுதியாக உள்ள ஊர்களுக்கு ஒன்று கூடிப் புலம்பெயர்ந்தனர். சென்ற ஊர்களில் வந்த ஊர்களின் பெயர் அடையாளங்களையும் கொண்டிருந்தனர். இன்றைய காலங்களில் இதனைப் பலர் மறந்திருக்கலாம்.
தற்போது வாழ்விட ஊர்களின் எண்ணிக்கையும் மாறியுள்ளது. ஆனால் மீண்டும் தொண்ணூற்றாறு ஊர் என்ற சொல்லாடல் நமக்கு வேறு பாதையினைக் காட்டிவிடும். இதன் அரசியலை நகரத்தார்கள் நன்கு உணர வேண்டும்.

பெண் பிள்ளைகள் குறைவு என்பதையும், தொழில் முனைதல் இல்லாமல் போய்விட்டதே என்பதாக காரணங்களையும் முன்வைக்கப்பட்டு, பின்னர் தொண்ணூற்று ஆறு ஊர்களில் என்ன செய்யப்போகின்றனர் என்பது தெரியவில்லை. நல்லது.



முன்னர் சென்னையில் பொதுப்படைப்பு செய்யப்போகின்றோம் என்று நகரத்தார் மலர் வெளியிட்டது. படைப்பின் அடிப்படைக் கூறுகளின் தன்மை புரிந்தவர்கள் பொதுப்படைப்பு என்பதனை கார்ப்பரேட் படைப்பாக மாற்றும் துணிவினைப் பெற மாட்டார்கள்.

எனினும் தொடர்ச்சியான விவாதம், கடிதங்கள் வாயிலாக அது நடக்கவில்லை, நடத்தவிடாமல் பண்பாட்டில் உறுதிகொண்டவர்கள் பாதுகாத்தனர். மேலும் நகரத்தார் சமூகப் பத்திரிகைகள் என்பதில் பெரும்பாலானவை நகரத்தார் ஒன்பதுகோவில் முறைமைகளுக்கு மாறான செயல்பாடுகளையும், அதில் நகரத்தார்கள் அல்லாதவர்களை முன்னிலைப்படுத்தி நகரத்தர்கள் குடும்பத்திற்கு தவறான முன்னுதாரணமும், நகரத்தார்களின் கட்டுக்கோப்பு கட்டுடைவதற்கும் காரணமானவர்களே ஆவார்கள்.வெறும் பத்திரிகை என்பதிலேயே நம்மை அந்நிய சக்திகள் மெல்ல மெல்ல ஊடுருவின. ஊடுருவிகின்றன.

இவைகள்தான் இன்றைய படித்த பிள்ளைகள், அதுவும் தமிழினம் சாராத வேற்று இனத்தில் திருமணம் செய்வதும், அதனைப் பக்கம் பக்கமாக புகைப்படம் போட்டு, நகரத்தார்கள் புள்ளிகள் / பெண் பிள்ளைகள் குறைவதற்கு காரணமாகவும் இருந்தார்கள். இது மறுக்கமுடியாத உண்மை.
மேலும் குடும்பக் கட்டுப்பாடு, சீர் முறைகளால், பிள்ளைகள் பெற்றுக்கொள்வதை குறைத்தது பெருங்கேடு.



நமது இனக்குழுவிற்கு அதிகமாக் குழந்தைகள் வேண்டும். ஆகவே மூன்று குளந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதைக் கருத்தியலாக ஒவ்வொருவரும் உணர வேண்டும். அதை விடுத்து பிள்ளைகள் இல்லை என்பது தவறு. கூடவே பெண்பிள்ளைகள் பற்றா குறை இந்தியாமுழுமையும் உள்ளது என்பதை அறிக. எல்லா மொழி இனங்களிலும், இனக்குழுக்களிலும் ( சாதிகளிலும் ) இந்த இடர்பாடு உள்ளன.

இன்று கடந்த 60 ஆண்டுகளாக முறைமைகளை மாற்றி, வெறும் பரிவட்டம் கட்டும் நகரத்தார் சங்கங்கள், விளம்பரத்திற்கு நெல்லிகளையோ, அல்லது வடுகர்களையோ புகைபடம்போட்டு விற்பனை செய்யும் பத்திரிகையினரும்தான் நகரத்தார்கள் ஏகபோகப் பிரதிநிதிகளாக முன்னிலைப்படுத்தப்படுகின்றனர்.

அது போக கூடவே, வாட்சப் நாட்டாமைகள் - இவர்களையும் புறந்தள்ளி பழைய நாட்டாமைகளின் தீர்ப்பை பக்குவமாய் கூடிக் கும்மியடித்து, நியாயஸ்தம் செய்வதையும் இன்று பார்க்கலாம். இவர்கள் எல்லாம் நகரத்தார்களைக் கட்டுப்படுத்தும் உரிமையுடையவர்கள் அல்ல.
நகரத்தார் மலர் ஆசிரியர் அவர்கள், இல்லாத உறுதிக்கோட்டை என்ற சொல்லாத வட்டகையினை, தரவுகளுடன் கேள்வியினை வைத்து மறுத்து எழுதியதை வரவேற்கின்றோம். இது ஒரு பத்திரிகை செய்யவேண்டிய அவசியமான, பொறுப்பான செயல்பாடு.

அதே சமயம், இல்லாத தொண்ணூற்றாறு ஊர் என்ற சொல்லாடலை தலைப்பு வைத்து, முன்பு போலவே ( கூடாத பொதுப்படைப்பு போல) , சென்னையில் தனியார் ( நகரத்தார் அல்லாத ) திருமண மண்டபம் பிடிப்பதும், ஆலோசனை செய்வதும் யாருக்கா, யாரைக் கட்டுப்படுத்த என்பதையும் கவனிக்க வேண்டும். கவனமாகவும் இருக்க வேண்டும்.

காரணம் தலைப்பிற்கு கீழே பெண்கள் குறைவு என்று அச்சாரம் போட்டு, பெண் இல்லை என்றால், நாயுடு வீட்டிலும், நாயர் வீட்டிலும், போன இடங்களில் இருந்து கொண்டு வந்ததையுமே ஏற்கலாம் என்ற உளவியல் தாக்கத்தைப் பரிகாரமாக அதாவது நகரத்தார்கள் மனதில் பொதுக் கருத்தாக உருவேற்றினால், உருவாக்க முயன்றால் அதை ஏற்க முடியாது. விழிப்புடன் இருக்க வேண்டும்.

மேலும், நகரத்தர் சங்கங்கள், நகரத்தர் பத்திரிகைகள் ( கூடவே வாட்சப் நாட்டாமைகள் ) இவர்கள் வேண்டுமானால் மக்களுக்கு செய்தி கொண்டு செல்லும் பணியினைச் செய்யட்டும்.

கூட்டங்கள் / ஆலோசனைகள் / கருத்துரைகள் நகரத்தார்களின் நகரக் கோவில்களில் தான் நடக்க வேண்டும். அதற்கு ஒன்பது கோவில் புள்ளிகளும் பங்கெடுக்க வேண்டும். அதுவல்லாமல் பலரும் தனிப்பட்ட முறையில் கூடியும், அதில் நமக்கு மாறான பொதுக் கருத்துக்களை மெல்ல, மெல்ல வலுபெறச் செய்து, பின்னர் அதனையே தீர்வாக முன்வைத்து ஒப்புதல் பெற்று, இதற்காக காத்திருப்பவர்களை உள்ளே நுழையவிடலாம் என்றால்...??? அப்படியொரு உள்ளடி நுண் அரசியல் செய்து சாதித்து விடலாம் என்றாலும், அதனை வீடாக கூடாது. இதில் நாம் விழிப்புடன் செயல்படவேண்டும்.
இதையும்அ மீறிய நுண் அரசியல் செய்து கடந்து செல்வோம், கலப்புறுவோம் என்று செய்யப்படும் வெளியார் முயற்சிகளை ஈடேறாமல் பார்த்துக்கொள்வோம்.

இதனை சிறிய அளவிலோ, அல்லது பகுதிவாரியாகவோ ஒன்பது கோவில் நகரக் கூட்டங்களை கூடச் செய்து பழைய நெறிமுறைகளை, அவர்களின் வரையறையில் நின்று சீர்தூக்கி சிந்தித்தால் நன்மை.
சேருவது இனம். அப்படியெனில் நகரத்தார்களுக்கு தற்போதைய தேவை தமிழர் யார், தமிழர் அல்லாதவர்கள் யார் என்ற புரிதலே.

-- வேணும் அருள்மிகு நித்ய கல்யாணி உடனாய கைலாசநாதர் துணை.
-- மேலவட்டகை மெய்கண்டான்.

02-03-2017. /////