Friday 3 March 2017

#கூட்டமும்__முடிவும் ---- #சேருவது___இனம்.

திருமதி. ஏகம்மை முத்து அவர்கள் தொடர்புகொண்டு கேட்ட கேள்விக்கு இந்த பதில் நகரத்தார் வரலாறு - Nagarathar Varalaru என்ற பக்கத்தில் பதில் கொடுத்துள்ளனர் ஆச்சியின் கேள்விக்கு விடைகிடைத்து இருக்கும் என்று நம்புகிறோம் 


/////// #கூட்டமும்__முடிவும் ---- #சேருவது___இனம்.

#கேள்வி :-

ஐயா வணக்கம் இந்த செய்தி எனக்கு வாட்சப்பில் வந்தது உங்கள் பக்கத்தில் பார்தேன் உங்களின் பல நகரத்தார் சார்ந்த செய்திகளை வெளியிடுகிறிர்கள் என் ஐயப்பாட்டையும் தீர்த்து வையுங்கள்
அது என்ன 96 ஊர் கூட்டம் ?? இந்த கூட்டம் நடத்துபவர்களின் நோக்கம் என்ன ?? இது போன்ற கூட்டங்களின் எடுக்கும் முடிவுகளுக்கு அனைவரும் கட்டுபடுவார்களா ??


#பதில் :-

தொண்ணூற்றாறு ஊர் என்று சொல்வது, இதில் யாரை சேர்க்கப்பயன்படுவது என்று புரியவில்லை. காரணம் சொல்லாடலில் உள்ளது அரசியல். கி.பி 1800 களில் மருதிருவர் வீழ்ச்சிக்குப் பின்னர் நிகழ்ந்த வடுகக் கலகத்தை அடுத்து, நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் தங்களின் வாழ்விடங்களை விட்டு பாதுகாப்பான பகுதியாக உள்ள ஊர்களுக்கு ஒன்று கூடிப் புலம்பெயர்ந்தனர். சென்ற ஊர்களில் வந்த ஊர்களின் பெயர் அடையாளங்களையும் கொண்டிருந்தனர். இன்றைய காலங்களில் இதனைப் பலர் மறந்திருக்கலாம்.
தற்போது வாழ்விட ஊர்களின் எண்ணிக்கையும் மாறியுள்ளது. ஆனால் மீண்டும் தொண்ணூற்றாறு ஊர் என்ற சொல்லாடல் நமக்கு வேறு பாதையினைக் காட்டிவிடும். இதன் அரசியலை நகரத்தார்கள் நன்கு உணர வேண்டும்.

பெண் பிள்ளைகள் குறைவு என்பதையும், தொழில் முனைதல் இல்லாமல் போய்விட்டதே என்பதாக காரணங்களையும் முன்வைக்கப்பட்டு, பின்னர் தொண்ணூற்று ஆறு ஊர்களில் என்ன செய்யப்போகின்றனர் என்பது தெரியவில்லை. நல்லது.



முன்னர் சென்னையில் பொதுப்படைப்பு செய்யப்போகின்றோம் என்று நகரத்தார் மலர் வெளியிட்டது. படைப்பின் அடிப்படைக் கூறுகளின் தன்மை புரிந்தவர்கள் பொதுப்படைப்பு என்பதனை கார்ப்பரேட் படைப்பாக மாற்றும் துணிவினைப் பெற மாட்டார்கள்.

எனினும் தொடர்ச்சியான விவாதம், கடிதங்கள் வாயிலாக அது நடக்கவில்லை, நடத்தவிடாமல் பண்பாட்டில் உறுதிகொண்டவர்கள் பாதுகாத்தனர். மேலும் நகரத்தார் சமூகப் பத்திரிகைகள் என்பதில் பெரும்பாலானவை நகரத்தார் ஒன்பதுகோவில் முறைமைகளுக்கு மாறான செயல்பாடுகளையும், அதில் நகரத்தார்கள் அல்லாதவர்களை முன்னிலைப்படுத்தி நகரத்தர்கள் குடும்பத்திற்கு தவறான முன்னுதாரணமும், நகரத்தார்களின் கட்டுக்கோப்பு கட்டுடைவதற்கும் காரணமானவர்களே ஆவார்கள்.வெறும் பத்திரிகை என்பதிலேயே நம்மை அந்நிய சக்திகள் மெல்ல மெல்ல ஊடுருவின. ஊடுருவிகின்றன.

இவைகள்தான் இன்றைய படித்த பிள்ளைகள், அதுவும் தமிழினம் சாராத வேற்று இனத்தில் திருமணம் செய்வதும், அதனைப் பக்கம் பக்கமாக புகைப்படம் போட்டு, நகரத்தார்கள் புள்ளிகள் / பெண் பிள்ளைகள் குறைவதற்கு காரணமாகவும் இருந்தார்கள். இது மறுக்கமுடியாத உண்மை.
மேலும் குடும்பக் கட்டுப்பாடு, சீர் முறைகளால், பிள்ளைகள் பெற்றுக்கொள்வதை குறைத்தது பெருங்கேடு.



நமது இனக்குழுவிற்கு அதிகமாக் குழந்தைகள் வேண்டும். ஆகவே மூன்று குளந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதைக் கருத்தியலாக ஒவ்வொருவரும் உணர வேண்டும். அதை விடுத்து பிள்ளைகள் இல்லை என்பது தவறு. கூடவே பெண்பிள்ளைகள் பற்றா குறை இந்தியாமுழுமையும் உள்ளது என்பதை அறிக. எல்லா மொழி இனங்களிலும், இனக்குழுக்களிலும் ( சாதிகளிலும் ) இந்த இடர்பாடு உள்ளன.

இன்று கடந்த 60 ஆண்டுகளாக முறைமைகளை மாற்றி, வெறும் பரிவட்டம் கட்டும் நகரத்தார் சங்கங்கள், விளம்பரத்திற்கு நெல்லிகளையோ, அல்லது வடுகர்களையோ புகைபடம்போட்டு விற்பனை செய்யும் பத்திரிகையினரும்தான் நகரத்தார்கள் ஏகபோகப் பிரதிநிதிகளாக முன்னிலைப்படுத்தப்படுகின்றனர்.

அது போக கூடவே, வாட்சப் நாட்டாமைகள் - இவர்களையும் புறந்தள்ளி பழைய நாட்டாமைகளின் தீர்ப்பை பக்குவமாய் கூடிக் கும்மியடித்து, நியாயஸ்தம் செய்வதையும் இன்று பார்க்கலாம். இவர்கள் எல்லாம் நகரத்தார்களைக் கட்டுப்படுத்தும் உரிமையுடையவர்கள் அல்ல.
நகரத்தார் மலர் ஆசிரியர் அவர்கள், இல்லாத உறுதிக்கோட்டை என்ற சொல்லாத வட்டகையினை, தரவுகளுடன் கேள்வியினை வைத்து மறுத்து எழுதியதை வரவேற்கின்றோம். இது ஒரு பத்திரிகை செய்யவேண்டிய அவசியமான, பொறுப்பான செயல்பாடு.

அதே சமயம், இல்லாத தொண்ணூற்றாறு ஊர் என்ற சொல்லாடலை தலைப்பு வைத்து, முன்பு போலவே ( கூடாத பொதுப்படைப்பு போல) , சென்னையில் தனியார் ( நகரத்தார் அல்லாத ) திருமண மண்டபம் பிடிப்பதும், ஆலோசனை செய்வதும் யாருக்கா, யாரைக் கட்டுப்படுத்த என்பதையும் கவனிக்க வேண்டும். கவனமாகவும் இருக்க வேண்டும்.

காரணம் தலைப்பிற்கு கீழே பெண்கள் குறைவு என்று அச்சாரம் போட்டு, பெண் இல்லை என்றால், நாயுடு வீட்டிலும், நாயர் வீட்டிலும், போன இடங்களில் இருந்து கொண்டு வந்ததையுமே ஏற்கலாம் என்ற உளவியல் தாக்கத்தைப் பரிகாரமாக அதாவது நகரத்தார்கள் மனதில் பொதுக் கருத்தாக உருவேற்றினால், உருவாக்க முயன்றால் அதை ஏற்க முடியாது. விழிப்புடன் இருக்க வேண்டும்.

மேலும், நகரத்தர் சங்கங்கள், நகரத்தர் பத்திரிகைகள் ( கூடவே வாட்சப் நாட்டாமைகள் ) இவர்கள் வேண்டுமானால் மக்களுக்கு செய்தி கொண்டு செல்லும் பணியினைச் செய்யட்டும்.

கூட்டங்கள் / ஆலோசனைகள் / கருத்துரைகள் நகரத்தார்களின் நகரக் கோவில்களில் தான் நடக்க வேண்டும். அதற்கு ஒன்பது கோவில் புள்ளிகளும் பங்கெடுக்க வேண்டும். அதுவல்லாமல் பலரும் தனிப்பட்ட முறையில் கூடியும், அதில் நமக்கு மாறான பொதுக் கருத்துக்களை மெல்ல, மெல்ல வலுபெறச் செய்து, பின்னர் அதனையே தீர்வாக முன்வைத்து ஒப்புதல் பெற்று, இதற்காக காத்திருப்பவர்களை உள்ளே நுழையவிடலாம் என்றால்...??? அப்படியொரு உள்ளடி நுண் அரசியல் செய்து சாதித்து விடலாம் என்றாலும், அதனை வீடாக கூடாது. இதில் நாம் விழிப்புடன் செயல்படவேண்டும்.
இதையும்அ மீறிய நுண் அரசியல் செய்து கடந்து செல்வோம், கலப்புறுவோம் என்று செய்யப்படும் வெளியார் முயற்சிகளை ஈடேறாமல் பார்த்துக்கொள்வோம்.

இதனை சிறிய அளவிலோ, அல்லது பகுதிவாரியாகவோ ஒன்பது கோவில் நகரக் கூட்டங்களை கூடச் செய்து பழைய நெறிமுறைகளை, அவர்களின் வரையறையில் நின்று சீர்தூக்கி சிந்தித்தால் நன்மை.
சேருவது இனம். அப்படியெனில் நகரத்தார்களுக்கு தற்போதைய தேவை தமிழர் யார், தமிழர் அல்லாதவர்கள் யார் என்ற புரிதலே.

-- வேணும் அருள்மிகு நித்ய கல்யாணி உடனாய கைலாசநாதர் துணை.
-- மேலவட்டகை மெய்கண்டான்.

02-03-2017. /////

No comments:

Post a Comment