Wednesday 28 September 2016

கற்புக்கரசி " கண்ணகி " --- நகரத்தார் குலக்கொழுந்தே...!!! [ ஆய்வுக்கட்டுரை ]

கற்புக்கரசி " கண்ணகி " --- நகரத்தார் குலக்கொழுந்தே...!!! 

ஆய்வுக்கட்டுரை


சமீப காலங்களில் தூய தமிழ் இனக்கூறுகளில் ஒன்றான, "நகரத்தார் " அல்லது நாட்டுக்கோட்டை நகரத்தார்களை சிறுமைப்படுத்த அல்லது அவர்களின் சிறப்பியல்புகளில், தாங்களும் பங்குபெற வேண்டும் என்ற உள் நோக்கில் - தங்களையும் தூய தமிழர்கள் எனக் கூறிக்கொள்ளும் ( தமிழை வீட்டில் பேசும் தாய்மொழியாகக் கொண்டிராத / தமிழினம் சாராத ) சிலர் , நகரத்தார்களின் தூய தமிழ் கூறுகளை கேள்விக்குறியாக்கி சிதைக்கும் கேடுள்ளத்துடன் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு முயற்சியே வலைத்தளங்களில், சிலப்பதிகார நாயகியும் , நகரத்தார்கள் குலக்கொழுந்து -  காவல் தெய்வம் -- கண்ணகி நல்லாள் நகரத்தார் சமூகத்தை சார்ந்தவரில்லை எனும் பரப்புரைகள்.

இப்பரப்புரைகளில் அவர்கள் குறிப்பிடுவது ஐயா சிலம்புச் செல்வர் ம.பொ.சி அவர்களின் கட்டுரைகளில் இருந்து ஒரு பகுதியை வெளியிட்டு 

 " நகரத்தார்களை நோக்கி ம.பொ.சி எழுப்பும் வினா " எனும் தலைப்பிட்ட செய்திக்குறிப்பு.

இக்கட்டுரையை ஊடாய்ந்து தகுந்த தரவுகளைக் கொண்டு  " கண்ணகி நல்லாள் -- நகரத்தார் குலக்கொழுந்தே " என நிறுவுவதே எம் நோக்கம். அதுவல்லாது,  ஐயா சிலம்புச் செல்வரை குறைத்து மதிப்பிடுவது அல்ல எம் குறிக்கோள்.

முதற்கண் இக்கட்டுரை எந்த ஆண்டு எழுதப்பெற்றது என அறிய வேண்டும். ஏனெனில் ஆய்வுகள் என்பவை ஒருவரின் / ஆய்வாளரின் காலத்துக்கு காலம் ஆழமாக மாறக்கூடியவை. இக்கட்டுரையை எழுதும் போழ்து,  ஐயா ம.பொ.சி.அவர்கள் நகரத்தார் சமூகத்துடனோ அல்லது சிவகங்கை-புதுக்கோட்டை மாவட்டங்களில் வாழும் ஏனைய தூய தமிழ்ச் சமூகங்களுடனோ அத்துணை அறிமுகம் கொண்டிருக்கவில்லை எனத்  தோன்றுகின்றது.

ஏனெனில் ஐயா ம.பொ.சி அவர்கள் சிவகங்கை மாவட்டத்தில் அவர்களின் "தமிழரசுக்கழகத்தை"  பரப்பிய அக்கட்சியின் முக்கிய பிரமுகரான நகரத்தார் சமூகத்தைச் சார்ந்த காரைக்குடி "முத்து விலாஸ்"  திருமிகு. மா.முத்தையா,  அவர்களின் தங்கை திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திய போது , நகரத்தார் திருமணச் சடங்குகளை, சிலப்பதிகாரத்தில் நடந்த கண்ணகியின் சடங்குகளோடு  ஒப்பிட்டு , கண்ணகி நகரத்தார் குலப்பெண் எனப் பேசியதை அடியவன் சிறியவனாக இருந்த போது கேட்டிருக்கின்றேன்.

 

சரி, கட்டுரைக்கு வருவோம்.

" நகரத்தார்களை நோக்கி ம.பொ.சி எழுப்பும் வினா " வெளியிடப்பட்டுள்ள கட்டுரையின் முதல் பத்தியிலேயே ....

" பூம்புகாரில் வணிக சாதியினர் மிகுந்த செல்வாக்குடன் வாழ்ந்தனர் என்பது சிலப்பதிகாரத்தில் அறியக்கிடைக்கின்றது. அவர்கள் பிற்காலத்தில் கடற்கோளுக்கு அஞ்சி , இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாலைவனப்பிரதேசத்தில் குடியேறியிருக்க கூடும் என்று கருத வேண்டியிருக்கின்றது. அவர்கள் தாங்கள் வாழும் பகுதிக்குச் " செட்டி நாடு " என்று பெயர் வைத்துக்கொண்டுள்ளனர். "நாட்டார்",  "  நகரத்தார்" எனும் சிறப்பு பெயர்களையும் பெற்றுள்ளனர்.

 
இந்த முதல் பத்தியிலேயே சிலம்புச் செல்வர், கண்ணகி ஆத்தாளை நகரத்தாரிலிருந்து பிரிக்க விரும்பும் கேடர்களுக்கு, வேறு எந்த சமூகத்தையே, இடத்தையோ குறிப்பிடாமல், இங்கு குடியேறியிருக்க கூடும் என்று கருதவேண்டியுள்ளது என்று குறிப்பிட்டு அப்பகுதிக்கு " செட்டி நாடு " என்று பெயர் வைத்துக்கொண்டுள்ளனர் என ஐயந்திரிபற கூறுகின்றார். (ஆனால் நாட்டார் என்பது இப்பகுதியில் வாழ்ந்த முக்குலத்தோர் எனப்படும் சமூகப் பிரிவுகளையே குறிக்கும் சொல் என்பது கட்டுரை எழுதிய காலத்தில் ஐயாவிற்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை போலும் )  அடுத்த வரியிலேயே கண்ணகி இந்த நகரத்தார் சமூகத்தில் பிறந்தவள் என்பது ஆராய்ச்சியால் அனுமானிக்கப்படுகின்றது என முடிவும் சொல்கின்றார்.

இதனையடுத்து வருகின்ற வரிகளிலும், இப்படி நகரத்தார் தங்கள் சமூகத்தில் பிறந்த பத்தினி தெய்வத்தை கொண்டாடும் வகையில் நகரத்தார்களிடம் கூறுகள் இல்லையே எனும் ஆதங்கம்தான் தெரிகின்றதே தவிர, கண்ணகி நகரத்தார் இல்லை எனும் கூற்று ஐயாவின் கட்டுரையில் எவ்விடத்திலும் காணப்படவில்லை.

சரி ஐயா  ம.பொ.சியின் ஆதங்கம் சரிதானா ??

கண்ணகி அம்மை நகரத்தார்தான் என்பதை ஐயந்திரிபற சிலப்பதிகாரத்தைக் கொண்டே நிறுவும் தரவுகளை / சான்றுகளைக் காண்போம்.


I . புறச்சான்றுகள்


II . அகச் சான்றுகள்


I . புறச்சான்றுகள் :-

பட்டினப்பாக்கம் எனும் புகார் அந்நாளில் "நகரம்" என்றும் அழைக்கப்பட்டது. நகரத்திலிருந்து தென்பாண்டி நாட்டிற்கு குடியேறியவர்கள் "நகரத்தார்" ஆனார்கள். அதேபோல் அற்றை சோழ  மன்னர் காலத்தில் சிறப்புற வாழ்ந்த வணிகக்  குடிமக்கள் "எட்டி " எனும் சிறப்பு பட்டம், மன்னர்களால் சூட்டப்பட்டு பெருமை எய்தினர். எட்டி எனும் சொல்லே பின்னாளில் செட்டி என மருவி, செட்டியிலிருந்து வடமொழி  சேட்டு என ஆயிற்று. இதனை மொழியியல் அறிஞர்களும் ( Anthropologist ), வரலாற்று ஆய்வாளர்களும் நன்கறிவர்.



நகரமாகிய புகாரிலிருந்து புலம்பெயர்ந்த செட்டி மக்களாகிய நகரத்தார் பெருமக்கள் தென்பாண்டி நாட்டில் முதலில் தங்கி இளைப்பாறிய இடம்  " இளையாற்றங்குடி ". ஆனாலும் முதலில் ஊர் ஆக உருவாக்கி குடியேறிய இடம் " நாட்டரசன் கோட்டை" ஆகும். இவ்வூரை அவர்கள் புகார் நகரின் அமைப்பிலேயே வடிவமைத்தனர். பூம்புகாரின் " சதுக்க பூதம்" அமைந்த அமைப்பை ஒட்டியே சதுக்கம் அமைத்து நாட்டரசன் கோட்டையை வடிவமைத்தனர். இன்றைக்கும் அவ்விடம் நாட்டரசன் கோட்டையில் " சதுக்கம் " என்றே அழைக்கப்படுகின்றது. இவ்வாறு நாட்டரசன் கோட்டையில் குடியேறிய நகரத்தார் பெருமக்கள் , தாங்கள் புலம்பெயர்ந்த ஊரில் தங்களின் குலத்துதித்த பத்தினி தெய்வமாம் கண்ணகிக்கு வனப்புமிகு கோவில் எழுப்பினர். அக்கோவில் நகரத்தார்கள் பயபக்தியுடன் வணங்கும்  " கண்ணாத்தாள்" கோவிலாகும்.

நகரத்தார்கள் தங்கள் தாயை  " ஆத்தாள்" என்றே அழைப்பது வழக்கம்.
( நகரத்தார் குலத்துதித்த ஞானி பட்டினத்தார் எனும் பட்டினத்தடிகள் தனது தாய் மறைந்த பொழுது  " அரிசியோ நான் இடுவேன் ஆத்தாள் தனக்கு
" எனும் அவரது பாடலே பட்டினத்தார் நகரத்தார் குலத்துதித்த பெருமகனார் என்பதை நிறுவும் மறுக்க இயலாத சான்றுகளில் ஒன்றாய் இருக்கின்றது ) அவ்வண்ணமே தங்கள் குலத்துதித்த கற்புத் தெய்வத்தை  " கண்ணகி"  "ஆத்தாள் " என்று அழைத்தனர். கண்ணகி ஆத்தாள் என்பதே நாளடைவில் மருவி கண்ணாத்தாள் ஆகியது.

ஆகவே ஐயா சிலம்புச் செல்வரின் " நகரத்தார் சமூகத்தின் பழக்க வழக்கங்களில் கண்ணகி வழிபாட்டின் அடையாளத்தைக் காணமுடியவில்லை " எனும் கூற்று மேலோட்டமான, ஆதாரமற்ற ஒன்று. இன்றளவும் கண்ணாத்தாள் கோவில், நகரத்தார்களின் தலையாய கோவில் மட்டுமின்றி, அவர்கள் பயபக்தியுடன் வழிபடும் செல்வாக்கு மிக்க தலங்களில் ஒன்றாகும்.

கண்ணகி தெய்வத்தை, அம்மையாகவும், அம்பாளாகவும் (இறைவி) வழிபட்டவர்கள், வழிபடுகின்றவர்கள் நகரத்தார்கள். இக்கட்டுரை வரையும் அடியவனின் தாய்வழிப் பாட்டியின் பெயர் "கண்ணம்மை " (கண்ணகி+அம்மை) , சொந்த சகோதரியின் பெயர் (கண்ணகி+அம்பாள்) கண்ணம்பாள். பெரியத்தாளின் (பெரிய தாயார், தாயின் மூத்த சகோதரி ) மகள் பெயரும் கண்ணம்பாள்.

செட்டி நாட்டிலே "கண்ணாத்தாள்", "கண்ணம்மை", "கண்ணம்பாள் " என்கின்ற பெயர்கள் பரவலாக பெண் குழந்தைகளுக்கு சூட்டப்பட்டுள்ளன / சூட்டப்படுகின்றன.

அற்றைக் காலகட்டத்தில் வணிகக்குழுக்களுக்கு "சாத்து" என்று பெயர். பெரிய வணிகக்குழு அல்லது கூட்டம், "மா சாத்து" என்று அழைக்கப்பட்டுள்ளது.   "மாசாத்து" உடையவர் "மாசாத்துவான்". கோவலனின் தந்தை பெயர் மாசாத்துவான். மாசாத்துவான் என்பதே நாளடைவில் மருவி "சாத்தப்பன்" ஆயிற்று.

அதே போல கப்பல் கொண்டு கடல் வணிகம் செய்வோர் "நாய்க்கன்" என்றும், பெரும் கடல் வணிகம் செய்வோர் "மாநாய்க்கன்" என்றும் அழைக்கப்பட்டனர்.  சிலப்பதிகார நாயகி கண்ணகியின் தந்தை பெயர் "மாநாய்க்கன் ".

 "மாநாய்க்கன் " எனும்பெயர் காலப்போக்கில் " மாணிக்கம் " என மருவியது. இன்றைக்கும் நகரத்தார் சமூகத்தில் மாணிக்கம் - சாத்தப்பன் என்கிற பெயர்கள் ஏராளம், ஏராளம். மிகவும் பொதுப்படையான பெயர்களாகும். (சாத்தப்பன் என்கிற பெயர் வேறு சமூகத்திலே காணப்படுகின்றதா என்பது சந்தேகமே.)

மேலே சொன்ன சான்றுகளால், சிலம்புச் செல்வர் அவர்கள், " நகரத்தார்களின் குடும்ப பழக்க வழக்கங்களிலும், ஆண்களுக்கும் பெண்களுக்கும் பெயர் வைப்பதிலேயும் சிலப்பதிகாரத்தின் சாயலைக்கூட காண முடியவில்லை " எனும் அவருடைய அடுத்த கூற்று, கிஞ்சித்தும் அடிப்படையற்ற, சாரமற்ற ஒன்றாகும் என நிறுவப்படுகின்றது.

II . அகச் சான்றுகள் :-


மேலும் சற்று நுண்மான் நுழைபுலத்தோடு சிலப்பதிகாரத்தை ஆழமாக ஆராய்வோம்.

அகச்சான்று  - 1


நகரத்தார் சமூகத்தின் தனிப்பட்ட, இன்றளவும் வேறு எந்த தமிழ் குமுகத்திடமும் காணப்படாத சிறப்பு பண்பாடு, மணமுடித்து இனிய இல்வாழ்வை தொடங்கும் இளம் தம்பதிகளை, அவர்களும் வாழ்வின் இன்பத்துன்பங்களை நுகர்ந்து, எதிர் கொண்டு வேர்விட்டு வளர்ந்து வெற்றி பெற  வேண்டும் என்கிற நோக்கில் " வேறு வைத்தல் " எனும் பழக்கம்.                  ( பெற்றோரிடம் மாற்றுக்  கருத்துக்கொண்டு இன்று தம்பதிகள் போகும் ' தனிக்குடித்தனம்" இதிலிருந்து மாறுபட்டது ). இந்த வேறு வைத்தல் என்பது  பெற்றோர்களும், பிள்ளைகளும் ஒத்த கருத்துடன், பெற்றோர் தங்களுக்கு உள்ள அனைத்து வசதிகளையும் அதே போல் செய்து கொடுத்து , உற்றார், உறவினர்களை அழைத்து அனைவரும் மகிழ்வோடு கொண்டாடி பிள்ளைகளை வேறு வைப்பார்கள்.

 

இவ்வாறு கோவலன் கண்ணகியை அவர்தம் பெற்றோர் வேறு வைக்கும் வைபவம் சிலப்பதிகாரம் - புகார்க்  காண்டம்  மங்கல வாழ்த்துப்பாடல் வரிகள் 84-90 ல், கீழ்கண்ட வாறு விவரிக்கப் படுகின்றது.

"வார் ஒலி கூந்தலைப் பேர் இயல் கிழத்தி        84..
மறப்பு -- யாரும் கேண்மையொடு, அறப்பரி சாரமும்,
விருந்து புறந்தரூஉம் பெருந்தண் வாழ்க்கையும் ,
வேறுபடு திருவின் திருவின் வீறுபெறக் காண
உரிமைச்சுற்றமொடு ஒரு தணி புனற்க,
யாண்டு சில கழிந்தன , இற்பெருங் கிழமையின்
காண்தகு சிறப்பின் கண்ணகி  தனக்கு - என் 
     90.....


மேற்குறிப்பிட்ட ஒன்றே கண்ணகி நகரத்தார் குலக்கொழுந்து என்பதற்கு அசைக்க முடியாத சான்றாகும். ( ஆங்கிலத்தில் சொல்வதானால்  a concrete evidence to prove).

அகச்சான்று  - 2

மேலும் சிலப்பதிகாரத்தைக்கொண்டே கண்ணகி நகரத்தார் குலக்கொழுந்து என்பதற்கான சான்றுகள் சிலவற்றைக் காண்போம்.

நகரத்தார் குமுகத்தில் மணமகன் மணமகளுக்கு அணிவிக்கும் திருமங்கலநாணை "கழுத்துரு" என்று அழைப்பதோடு, அச்சடங்கை இன்றளவும் " திருப்பூட்டு திருமங்கலம்" என்றும் " திருப்பூட்டுதல்" என்றும் குறிப்பிடுகின்றனர். இவ்வாறு குறிப்பிடப்படும் "கழுத்துரு " என்கிற திருமங்கல நாணை நகர்வலமாகக் கொண்டுவரும் பழக்கம் இன்றளவும் நகரத்தார் பெருமக்களிடம் காணப்பெறுகின்றது.  ஆம் பெண் வீடு அமைந்துள்ள ஊரின்கண் உள்ள கோவிலில் அல்லது ஒரே ஊரில் உள்ளவர்களாக இருந்தால் மாப்பிள்ளை வீட்டிலிருந்தும் -- மாப்பிள்ளை வீட்டார் முதல் நாளே பெண் வீட்டார் கொடுத்தனுப்பிய " கழுத்துரு" அல்லது மங்கல  நாணை, நகர்வலமாக "பொன் தட்டில்"  மாப்பிள்ளை வீட்டார் மண மாலையுடன் ஏந்தி நகர்வலமாக வரும் பழக்கம் நகரத்தார்களிடம் மட்டுமே இன்றுவரை கடைபிடிக்கப்படுகின்றது.



அத்துடன் திருமண நிகழ்வில் இன்றளவும்  சங்கொலி எழுப்பி  திருமண அழைப்பு, திருமணச் சடங்குகளை வழுவாது செய்து வரும் சமூகம்  நாட்டுக்கோட்டை நகரத்தார்களே. இன்றளவும் பிறப்பு, திருப்பூட்டுதல் (திருமணம்), இறப்பு எனும் மூன்று பண்பாட்டு நிகழ்வுகள் சம்பந்தப்பட்ட  அனைத்து சடங்குகளிலும் வெண் சங்கு தொட்டுத் தொடர்வது, நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் வாழ்வியல் நிகழ்வுகளில் மட்டுமே.

 
பட்டினத்தார் இதனையே :-


முதற்சங்கு அமுதூட்டும்,  
மொய்குழலார் ஆசை
நடுச்சங்க  நல்விலங்கு  பூட்டும்,

 கடைச்சங்கம் ஆம் போதது ஊதும்,
அம்மட்டோ..? இம்மட்டோ ..? 

நாம் பூமி வாழ்ந்த நலம்.  
---- பட்டினத்தார்

இதனையே சிலம்பில்  புகார்க்  காண்டம்  மங்கல வாழ்த்துப்பாடல் வரிகள் 46 மற்றும் 47 ல், கீழ்கண்ட வாறு விவரிக்கப் படுகின்றது.

"முரசு இயம்பின: முருடு அதிந்தன : முறை எழுந்தன பணிலம் : வெண்குடை
அரசு எழுந்தோர் படி எழுந்தன: அகலுள் மங்கல அணி எழுந்தது...."


------- சிலம்பு. மங்கலவாழ்த்துக் காதை.-- வரிகள் 46/47

மேற்கண்ட ஒன்றும் கண்ணகி நகரத்தார்கள் கண்மணி என்பதற்கு மற்றுமோர் அசைக்கமுடியாத சான்று.


அகச்சான்று  - 3


அடுத்து நகரத்தார் குமுகம், ஏனைய தமிழ் சமூகத்தினரை வேறுபடுத்தாமல், தங்கள் வாழ்வியலுடன் ஒத்திசைந்து அவர்களைப்  பெருமைப்படுத்தி, உதவிகள் செய்து, ஊருடன் ஒத்து வாழ்ந்து உயரும் மரபினர். அவ்வண்ணமே நகரத்தார் வாழ்வியலில் நடக்கும் அனைத்து மங்கள/அமங்கள  நிகழ்வுகளில், துணி வெளுக்கும் குடியினரான சலவைத் தொழில் செய்யும் மக்களையும், அந்நாளில் நல்ல மருத்துவராக இருந்த நாவிதர் குலத்தாரையும் அழைத்து முதல்மரியாதை செய்து, அவர்களை சில சடங்குகளை செய்யச் சொல்லும் மரபாகும்.




அதனை ஒட்டி நகரத்தார் மரபுகளில் இன்றளவும்  அவர்தம் திருமணங்களில் மணமகன் மணமகளுக்கு மங்கல நாண் அணிவிக்கும் (திருப்பூட்டும்) மணவறையின் விதானத்தில், வண்ணார் குலத்தினரைக்கொண்டு அவரிடமிருந்து பெற்ற தூய்மையான ஆடையை இடும் "நித்திலப் பூப்பந்தல்" நிகழ்வாகும்.இதனை வண்ணார் விரிப்பு எனக்குறிப்பிடுவர். இது வேறு தமிழ் சமூகங்களில் இல்லை. இப்பழக்கம் மிகத் தெளிவாக  மங்கல நாண் காதையில் இயம்பப்படுகின்றது. அவ்வரிகள் வருமாறு :

மங்கல நாண் காதை :- வரிகள் -- 47-48.

" மாலை தாழ் சென்னி வயிரமணித் தூண் அகத்து,
நீல விதானத்து நித்திலப்பூம்  பந்தர்க் கீழ்  "
 ------ வரிகள் -- 47-48.

மேற்குறிப்பிட்ட சான்றும் கண்ணகி தெய்வம் நகரத்தார் குலத்துதித்த பத்தினியே என்பதை நிரூபிக்கும் ஒன்றாகும்.

அகச்சான்று  - 4

மேலும் காண்போம், கோவலன்,  கண்ணகி - கவுந்தியடிகளுடன் மதுரை நகர் சென்றடைகின்றான். ஆயர்குலப் பெண்மணி மாதரி கவுந்தியடிகளிடம் இருந்து, கண்ணகி கோவலன் இருவரையும்  ஏற்றுக்கொண்டு பெரிதும் மகிழ்ந்து, மதுரைக்கோட்டையைக் கடந்து, மாதரி இடைக்குல மாதர் பலரும் தன்னுடன் கூடிவர,  கோவலன் கண்ணகியுடன் தன்னுடைய வீட்டிற்கு சென்று சேர்கின்றாள். கோவலன் கண்ணகி இருவருக்கும் ஒரு புது மனையில் இடம் தந்து தன்மகள் ஐயையை கண்ணகிக்கு தோழியாக்கி துணையாக்குகின்றாள். கண்ணகி மாதரியிடம் நன்றி பாராட்டி அவளை மாமி முறையாக்கி,  ஐயையின் துணையுடன்  தன் கணவனுக்கு சோறாக்கி தன் கணவனை உண்பிக்க அழைக்கின்றாள். அது கேட்ட கோவலன், பனையின் வெண்மையான குருத்தோலையில்  தடுக்கு பின்னுவதில் கைதேர்ந்தவள் ஒருத்தி அழகாகப் புனைந்திருந்த, வேலைப்பாடமைந்த தடுக்கின் மேல் அமர்ந்தான். தன் மலர்போன்ற  அங்கையினால், சுட்ட மண் பாத்திரத்தினாலே நீர் சொரிந்து, அவன் பாதங்களைத் துடைத்தாள் கண்ணகி. 




மேற்கண்ட  வர்ணனை மதுரைக் காண்டம்  - கொலைகளக் காதையில் 35 முதல் 39 வரை உள்ள  வரிகளில் இளங்கோவடிகளால் விவரிக்கப்படுகிறது. இன்றுவரை உணவருந்தும் போது  'பழமைபோற்றும் 'நகரத்தார்கள்  பனை  ஓலையில் செய்யப்பட்டு வேலைப்பாடோடு அமைந்த  'தடுக்கு'களில்  அமர்ந்துஉண்ணும்  பழக்கத்தை பின்பற்றி வரும் பெருமக்கள் ஆவர். ஏனைய பிற சமுகத்தினரிடையே உணவருந்த அமரும்போது, ஆசனப்பலகையில் அமரும் பழக்கமே காணப்படுகிறது.

"தாலப் புல்லின் வால்வெண் தோட்டுக்
கைவல் மகடூஉக்  கவின் பெறப் புனைந்த
செய்வினைத் தவிசிற்  செல்வன் இருந்தபின் ,
கடிமலர் அங்கையிற் காதலன் அடிநீர்
சுடுமண் மண்டையின் தொழுதனள் மாற்றி :

                                                                                                                                                              ------ சிலம்பு - மதுரை காண்டம்  - கொலைக்களக் காதையில்,  35 முதல் 39 வரை

பனை ஓலைத்தடுக்கில் அமர்ந்து உணவு உண்ணும் பழக்கம் நகரத்தார்களிடம் தான் செறிந்து காணப்படுகிறது என்பதாலும் கண்ணகி நல்லாள் நகரத்தார் குல நங்கையே என்பது நன்கு  புலப்படும்.

மேலும் இத்துடன்  நகரத்தார்  திருமணம்  குறித்த  ஒரு  காணொளிப்பதிவு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது https://www.youtube.com/watch?v=7A1Gcj1xfaYhttps://www.youtube.com/watch?v=7A1Gcj1xfaY

இதுகாறும் ஊடாயிந்த மேற்கூறிய பல்வேறு சான்றுகளும் தரவுகளும், கற்புத்தெய்வம் கண்ணகி நகரத்தார் குலக்கொழுந்தே என்பதனை உள்ளங்கை நெல்லிக்கனியாய் எவ்வித  சந்தேகத்திற்கும் இடமின்றி தெளிவாக்குகின்றன.

வழிபாடு, பெயர் சாயல் குறித்த  ஐயா  சிலம்பு செல்வரின் ஆதங்கம், ஆதாரமற்ற ஒன்று என்பதனையும், செட்டிநாட்டில் இன்றளவும் கண்ணகி ஆத்தாள்கோவில் உள்ளதையும், மற்றும் ஏனைய நகரத்தார்களின் சிலப்பதிகாரம் பெயர் பழக்கங்கள் ஐயந்திரிபற கண்ணகி நல்லாள் " நகரத்தார்
குலக்கொழுந்ததே" என்பதனை நிலைநிறுத்துகின்றன  என்பதனை தக்க சான்றுகளுடன் நிருபித்துள்ளேன்.

எனவே கண்ணகி   --  நகரத்தார் குலமகளா  ?? எனும் குழப்பவாதிகளின் வினா - பரப்புரை ஒன்று , உள்நோக்கத்துடனோ , அல்லது அறியாமையையின் வெளிப்பாடாகவோ செய்யப்படும்
ஒன்றே.
அஃது ஆராய்ச்சியாளர்கள் ஏற்கத்தக்கதல்ல.


என்றும் அன்புடன்
காரைக்குடி சேவு.க.ராம.நாகப்பன்
முகாம் ---துபாய்.


குறிப்பு :- இக்கட்டுரையின் ஆக்கத்திலும், அதற்கு தகுந்த புகைப்படங்கள் தொகுப்பதிலும்  எனக்கு துணைபுரிந்தது, மேலும் இதனை அழகுற தமிழில், தட்டச்சு செய்து தந்த தம்பிகள், நெற்குப்பை காசிவிசுவநாதன், கருப்பையா இராமநாதன் இருவருக்கும் மனமுவந்த நன்றிகள் உரித்தாகுக.  

Sunday 25 September 2016

நகரத்தார்களும் சிரிங்கிகேரியும்

கமலாலயத்தில் உள்ள பல தலைகளும், உலைகளும் கன்னட - தெலுங்கு பிராமணர்களும் நாயுடுகளும் தான். அப்படியே பார்த்தாலும் மேற்படி கன்னட-தெலுங்கு-நாயுடு வகைகள் எல்லாம் வட வைஷ்ணவ வெறியர்கள்.

ஹசன் மாவட்டத்திலிருந்து 250 ஆண்டுகளுக்கு முன்னதாகவும் 150 ஆண்டுகளுக்கு முன்னதாகவும் குடிபெயர்ந்த வடுக கன்னட பிராமணர்கள் பெரும்பகுதி சிவகங்கை- பழைய இராமநாதபுரம் மாவட்டம் - புதுக்கோட்டை மாவட்டம் என்று குடியேறினர்.

வடவைஷ்ணவர்களே ஆயினும், ஐயர் என்ற அடைமொழியினை சூட்டிக்கொண்டு, செட்டி நாட்டில் உள்ள நாட்டுக்கோட்டை நகரத்தார்களையும் அணுகி, அவர்களை இந்துத்துவ மாயைக்குள் கொண்டு சென்று பின்னர் - வேதாந்தக் கருத்துக்களையும் உட்புகுத்தினர்.

நகரத்தார்களின் பொருள் பலத்தை வைத்து சிருங்கேரி மடம் செல்வதில் கொழித்தது, கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக.

இதனை உடைத்து ஆதி சங்கரன் நிறுவாத, ஆதி சங்கரனுக்கு தொடர்பே இல்லாத கும்பகோணம் பிராமணாள் கிளப், காஞ்சி சங்கர மடத்திற்கு கடந்த 75 ஆண்டுகளாக தெலுங்கு பிராமணர்கள் நாட்டுக்கோட்டை நகரத்தார்களை மடைமாற்றம் செய்தனர்.

நகரத்தார்கள் வீழ்ச்சிக்கு மேற்படி இரண்டு பீடையாதிபதிகளும், அந்த இரண்டு பீடையாதிபதிகளுக்கு உள்ளிடையாய் இருந்து உளவவு சொன்னவன் பலிஜா ராமசாமி நாயுடுவும்தான்.

சைவம் - வைணவம் என்ற தமிழர் ஆகம முறையினை மறந்த பின்னர், இந்துத்துவம் என்ற மாயையில் சிக்கிய தமிழ் இனக்கூறுகளில் நாட்டுக்கோட்டை நகரத்தார் இனக்குழுவும் ஒன்று.



இன்று சொந்த அடையாளங்களை விடுத்து, மாற்று அடையாளங்களில் தங்கள் சுயத்தை தொலைத்த பின்னர் -- யார், எவர், எதற்கு, யாரிடம் என்ன செய்கின்றோம் என்று உணராமல், ஒரு சுழலில் சிக்கியுள்ளனர்.

அடையாளத்தை தொலைத்த பின்னர் அடையாள அட்டைகள் மட்டுமே மிஞ்சுமோ ??!!! என்ற ஒரு நிலையில் நகரத்தார்கள் உள்ளது வருத்தமாகவே உள்ளது.

நித்ய கல்யாணி உடனாய கைலாச நாதர் துணை.
மேலவட்டகை மெய்கண்டான்.

Saturday 10 September 2016

#யார்__பத்தினி ???


நண்பர்களே, கண்ணகி வழிபாடு என்பது ஈழத்தில் உள்ள உண்மைச் சிங்களர்களால், ஒருமுகமாய், உண்மையுடன் தொடரப்பட்ட ஒன்று.
கண்டியில் குடியேறிய தெலுங்கர்கள் நிறம் மாற்றி சிங்களானாய் அரிதாரம் பூசிய பின்னர் பத்தினி தெய்வ வழிபாட்டை உண்மைச் சிங்களர்களிடமிருந்து அகற்றினர், இருட்டடிப்பு செய்தனர்.



 

அதற்கு முன்னரே தமிழகத்தில் ஆதிசங்கரன் தொடங்கி திருமலை நாயுடு வரையிலும் வழிபாட்டை கட்டம் கட்டமாக கட்டம்கட்டி ஒழித்தனர்.
இதே அரசியல் அதிகாரம் கொண்டு இலங்கையினையும் ஆளுகின்றனர்.
மேற்படி படம் முழுக்க முழுக்க தெலுங்கு-கன்னட கலப்புற்ற ஆள் மாறாட்ட போலி சிங்களர்களால் தயாரிக்கப்படுகின்றது.

தமிழத்தில் ராஜராஜன் வாரிசுகளை அகற்றிய தெலுங்கு சளுக்கர்களை முதன்மைப் படுத்தி சோழர்களின் வரலாற்றை பலிகொண்டதுதான் பாகுபலி.
அதே போல் இன்று உண்மைச் சிங்களரையும் தவிர்த்து, தமிழர்களையும் தவிர்த்து கண்டி சென்ற கொண்டித் தெலுங்கர்கள் வசமும், இங்கே தெலுங்கு யாணன் வசமும் பறிகொடுத்து அழகல்ல.
இலங்கையில் ஈழத் தமிழர்களில் தங்களை மறைத்து வாழும் பச்சோந்தி தெலுங்கர்களை அடையாளம் காணுங்கள்.
வடுகம் வக்கரித்த வருகின்றது.

கடவுளையும் கற்பழிக்கும் தினவு கொண்டவர்கள் உலகில் வடுகர்களே.
இந்த சிங்கள படத்தில் நடித்திருக்கும் அனைவருமே கொண்டித் தெலுங்கர்கள். பாகுபலி என்ற வரலாற்று திரிபு செய்தவர்கள் தான் இன்று பத்தினி தெய்வத்தை தங்கள் அடையாளமாக்குகின்றனர் என்பதை நாம் உணர வேண்டும். பூஜா என்பவர் கன்னடத்து பிராமணனுக்கு இலங்கையில் உள்ள கண்டித்த தெலுங்கருக்கும் பிறந்தவள். இன்று பத்தினியானாள்.
பாகுபலி படம் தமிழர் வரலாற்றை பலி கொண்ட படம்.
பத்தினி தெய்வத்தை நாம் பறிகொடுக்காமல் இருக்க வேண்டும். தமிழர்கள் விழிப்படைய வேண்டும்.

----- வேணும் அருள்மிகு பொய்சொல்லா மெய்யர் துணை.
----- நெற்குப்பை காசிவிசுவநாதன். 07-09-2016.

#விடிய__விடியப்__போராடி, நள்ளிரவில் நிகழ்ந்த #வித்தையும், #விதையும்



அன்புடைய தமிழ் நெஞ்சங்களே வணக்கம்.
கடந்த ஓராண்டிற்கும் மேலாகவே கண்ணகி அம்மன் என்ற பக்கத்தையும் அதன் செயற்பாட்டாளரையும் அவதானித்து வந்து கடந்த பத்து மாதங்கள் முன்னர் அவருடைய தெலுங்கு சார்பு கொண்ட அரசியல் ஆன்மீகத்தையும் எதிர்கேள்வி எழுப்பிய போது, இந்த மாயா ஜால விட்லாச்சாரியா தெலுங்கர் யாணன் என்பார் நமாமி பொருட்டாகவே எடுக்காமல் எனது பதிவுகளை தொடர்ந்து நீக்கி வந்தார்.

கடந்த இரண்டு நாட்கள் முன்பு நண்பர் சரவணன் சாவான்ஜி எழுப்பிய கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் சுற்றி வளைத்து கண்ணகியின் நேரடி அருள் பெற்றவன் நான் என்றும், என்னை மீறி கண்ணகி வழிபாட்டை யாராலும் தொடர முடியாது என்றும் வெஞ்சினத்துடன் எழுதினார்.
மீண்டும் இடையில் சென்று அந்தப் பதிவில் நான் நேரடியாகவே உங்கள் தாய் மொழி என்ன என்ற போது எனக்கு பிறந்தது முதல் பேசிப் பழகியது தமிழ்தான் என்கிறார். மேலும் கண்ணகி வழிபாட்டை நீ எப்படி செயகிறாய், கண்ணகியின் நேரடி அருள்பெற்றவன் என்று உதார் விட ஆரம்பித்தர் இந்த டுபாக்கூர் விட்லாச்சாரியா யாணன்.
பொறுமையுடன் அவருடன் நானும், கருப்பையா இராமநாதன், சரவணன் சவான்ஜி ஆகிய மூவரும் விவாதம் நடத்தினோம். இங்கே தான் இந்த தெலுங்கு யாணன் இலங்கையில் ஈழத்தில் தமிழர் உருக்கொண்டு வாழ்ந்து வரும் யாழ் தெலுங்கர்களை துணைக்கு அழைத்து வந்து யாழ் தமிழர் ஆறுமுக நாவலர் குறித்தும் அவரை உள் நோக்கத்துடன் தமிழர்களின் இனக்குழுக்களில் இழுத்து மோதவிடும் நோக்கில் பல பதிவுகளை யாழ்ப்பாண தெலுங்கனை விட்டு எழுத வைத்தார்.
நாங்களும் அவரிடம் கொடுக்கப்பட்ட தரவுகளின் தரம், அதில் மேலும் வேண்டிய தரவுகளையும் பட்டியலிட்டோம். அப்போதும், யாழ்ப்பாண பகுதியில் வாழும் முகமூடி தெலுங்கர்கள் இங்குள்ள டுபாகோ வைக்கோல் நாயுடுவைபோலவே இனக்குழுக்களை சந்திக்கு இழுத்து வந்து தேவையற்ற வாதங்களை கிளப்பி விட்டார். ஆனால் கடைசி வரை விவாதத்தில் நாங்கள் மூவரும் பதிந்த கேள்விகளுக்கு விடை தராமல் தெலுங்கர்களால் பதிப்பிக்கப்பட்ட நூலினை வெளியிட்டுவிட்டு நழுவினர்.
கண்ணகி தமிழச்சிதானே என்று ஓராண்டாக எழுப்பிய கேள்விகளை உடனுக்குடன் பதிவு நீக்கம் செய்த தெலுங்கு யாணன், ஒரு கட்டத்தில் டுபாகோ கோவால் நாயுடுவுடன் இருந்த புகைப்பட பதிவினிலேயே நான் எழுதிய கருத்தினை நீக்கி, டுபாகோ கோவால் நாயுடு படம் அவரது பக்கத்தில் இல்லாதது போல பார்த்துக்கொண்டார்.
எங்கே டுபாகோ கோவால் நாயுடுவுடன் உள்ள தொடர்பு அமபலத்தில் வந்தால் கண்ணகி வழிபாட்டு தலைமை தனது காய் நழுவி விடுமோ...??
எழுந்து வரும் தமிழர் உணர்ச்சிகளை இழந்துவிடுவோமோ என்று கலக்கத்தில் கோவால் நாயுடு புகைப்படங்களை நீக்கினார்.
அதே சமயம் நமது தொடர் அழுத்தத்தின் வாயிலாக கண்ணகி தமிழச்சிதான் ஆனால் ஆறுமுக நாவலர் என்ற வேளாளர் தான் எதிர்த்தார் என்று கண்ணகிக்கு முதன் முதலில் இந்த விட்டாலாச்சாரியா தமிழச்சி பட்டம் கொடுத்தார். அதிலும் கூட யாழ்ப்பண முகமூடி தெலுங்கர்கள் ஒத்துழைப்புடன்.
பின்னர் இரண்டு தினங்களாக இராமநாதன்,சரவணன், காசிவிசுவநாதன் என்றார் மும்முனை கருத்தியல் தாக்குதல் அதி தீவிரமடைவதைக் கண்டு எங்கள் பதிவுகளை நீக்கிவிட்டு மூவரையும் அவரது வட்டத்தில் இருந்து தடை செய்தார்.
உடனே எங்கள் பக்கத்தில் முதன் முறையாக தெலுங்கன் யாணன் என்ற உடுக்கடி விட்லாச்சாரியாவை அவருடன் தொடர்பில் இருக்கும் புகைப் படத்துடன்  #காந்தாரி__அம்மனும்___கண்ணகித்தாயும்__ஒன்றுதான்: என்ற செய்தி வெளியிடப்பட்டது.
இதனை அடுத்து, கண்ணகியின் வாழ்வியல் முறை பற்றிய அறிஞர், பேராசிரியர் ஜெ.ஸ்ரீசந்திரன் அவர்களின் காணொளி இணைப்பையும் ( அதில் பேராசிரியர் அவர்கள் கண்ணகி வாழ்வியல் முறையினைக் கொண்டு கண்ணகித் தாய் தமிழரே என்ற விளக்கத்தை ) அவசர அவசரமாக தெலுங்கு யாணன் நடு நிசியில் பதிவேற்றம் செய்துள்ளார்.
இதன் வாயிலாக நாங்கள் தொடர்ந்து குரல் எழுப்பிவரும் கண்ணகி தமிழச்சியே என்ற வாதத்தை, அவருக்கு எதிராக திரும்பாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாய சூழலில் நள்ளிரவில் பதிவேற்றம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானார் என்பதையும் விளக்கும் முகமாகவே இந்தப் பதிவில் உள்ள புகைப்படத்தை தரவுகளுடன் வெளியிடுகின்றோம்.
தொடர்ந்து தமிழர்களின் ஆன்மீகக் கட்டமைப்பையும், பண்பாட்டுக்கு கருவூலங்களையும் தங்கள் ஆதிக்கத்தில் நிலை நிறுத்தும் விதமாகவே தெலுங்கு-கன்னட-வடுக மலையாள திராவிட நிழற் கட்டமைப்பு செயல்படுவதை,
தற்போதுள்ள உண்மைத் தமிழர்கள் உணர்ந்து வருவதையும் மீறிய அது நுணுக்க அரசியல் செயல்பாடுகளையும், வலைப்பின்னலையும் கொண்டு தமிழ் இனத்தை தொடர்ச்சியாகவே நம்ப வைத்து கழுத்தறுக்கும் அரசியல்-ஆன்மீக உளவடிகளை அமபலத்தில் ஏற்றி முடிந்த வரை உண்மைகளை தொடர்ந்து வெளியிட்டு விழிப்புணர்வு செயகின்றோம்.
உண்மைத் தமிழர்களின் தொடர்ந்த ஆதரவிற்கு நன்றி.
#ஆன்மீகத்தில் நாம் நம்மை நிலை நிறுத்த வேண்டும்.
அதற்கு நமக்கு அரசியல் கட்டமைப்பு நிலைபெறவும் உருப்பெறவும் வேண்டும்.
அதுவரை நமக்குள் தேவையில்லாமல் மெய்யியல் வாக்குவாதங்களை விடுத்து, தமிழர்களின் வழிபாட்டுத்தலங்கள் ( அணைத்து மதத்திலும் தான் ), பண்பாட்டுத் தலைமை என்று அனைத்தையும் விழிப்புடன் #காப்பாற்ற வேண்டும்.
இதற்கு சிந்தனையாளர்கள் முதற்கட்டமாக இனைந்து செயல்பட வேண்டும். அடுத்து பொது மக்களின் பார்வைக்கும் கொண்டு செல்ல வேண்டும். நன்றி, நன்றி.
இந்தப் போராட்டத்தில் இறுதியாக தமிழர்களின் தொடர் முயற்சிகளும், தமிழர் அல்லாதவர் யார் என்ற அடையாளத் தேடலும் ஒருங்கிணைவும் அதற்கான விதையும் பதிந்துள்ளது மகிழ்ச்சியினைத் தருகின்றது.

அன்புடன்,
வேணும் அருள்மிகு பொய்சொல்லா மெய்யர் துணை.
நெற்குப்பை காசி விசுவநாதன்.
" வரலாற்றில் விழிப்பு ; எதிர் காலத்தின் மீட்பு "

போலி அடையாள தொகுப்பாளர்கள்



இன்று தமிழர் குலத் தோன்றலான கண்ணகியை வைத்து வடுக கூட்டதின் அடிவருடிகள் கண்ணகியை திராவிட உடமையாக்கி சிறுமை படுத்திடும் வகையில் சமணச்சி சைவச்சி என்றெல்லாம் ஏக வசனம் கூறி ஆறுமுகநாவலர் சமணச்சி என்று இகழ்ந்தார் என்றெல்லாம் வசனம் நடையில் பற்பல நாளேடுகளில் இதுகுறித்து பகிர்ந்து வருகிறனர். இதன் பின்னணி தமிழர்களுக்குள் அடித்துக்கொண்டு திரியட்டும் என்ற நோக்கத்தில் ஆறுமுக நாவலர் குறித்து தொடர் பரப்புரை செய்துவருகின்றனர். ஆறுமுகநாவலர் என்பவர் ஒரு வராலற்று ஆய்வறிஞர் அல்ல அவர் ஒரு சைவசமயத்துறவி அவ்வளவே . மேலும் இந்த வடுக அடிவருடிகள் கண்ணகியை மங்கலாதேவி பத்தினி தெய்வம் அவள் நெருப்பு அவளை வழிபட அவள் அனுமதி வேண்டும் என்று கூவிக்கூவி பயம்கலந்த அச்சுறுத்தல் செய்திடும் தொனியில் தானே கண்ணகியின் உதவியாளர் மற்றும் மெய்காப்பாளர் போல இன்று போலிப்பெயர் அடையாளத்துடன் தமிழர்கள் மத்தியில் உளவுசெய்து உலவிவருகின்றனர்.தன் தாயை பிள்ளை வங்க அவளின் அனுமதி வேண்டுமா என்ன ?? அல்லது அவளை தொழுதால் மட்டும் தான் அவள் தன் பிள்ளைகளை காப்பாளா என்ன ?? அவளை தோழா விட்டாலும் அவளின் பிள்ளைகளை அறத்தின் வழியில் நடத்திதுடும் தாயின் கடமைஅல்லவா ??

இன்று உண்மை அடையாத்தை புதைத்து யாணன் என்ற பெயரில் தன்னை அடையாளப்படுத்திகொண்டு உளவு வருகின்றனர் இவர் 2014 டிசம்பர் மாதத்தில் தானே ஊர் ஊராய் சுற்றி திரிந்து ஆய்வு செய்தது போல் பெருகட்டும் கண்ணகி அம்மன் வழிபாடு என்ற நூலை வெளியிட்டார் . இது முழுக்க முழுக்க பற்பலரின் கண்ணோட்டம் கொண்ட தொகுப்பு. இதில் யாணன் என்பவரின் பெயர் தொகுப்பாசிரியர் என்று உள்ளது ஆனால் எடிட்டர் என்று S.Y நாரயணன் [யாதவ் நாராயணன் ]என்று ஆங்கிலத்தில் அதில் குறிப்பிடபட்டுள்ளது.


இந்த பெருகட்டும் கண்ணகி அம்மன் வழிபாடு என்ற நூலில் இவரின் சொந்த எழுத்தில் மொத்தம் ஒரு 40 பக்கத்திற்கு குறைவாகவே இவரின் சொந்த கருத்துக்கள் உள்ளன. மீதம் உள்ளவை எல்லாமே பற்பலரின் ஆய்வு நூலில் இருந்து அங்கொன்றும் இங்குகொன்றுமாய் செய்திகளை எடுத்து பதிவு செய்துள்ளார் அவற்றை முழுவதுமாய் தொகுக்கவில்லை . மேலும் தமிழகத்தில் உள்ள சில மாரிஅம்மன் ஆலயங்கள் மீது கண்ணகி குறித்த வரலாறு பரவலாக உண்டு அவை சில இடங்களில் வாய்மொழி கதையாகவும் சில இடங்களில் கோவில் தலவரலாறாகவும் உள்ளது. இவை பலரால் முன்பே தொகுத்து வைக்கப்பட்ட செய்திகள். இன்று இவற்றை தானே தேடி கொணர்ந்துபோல் இங்கு பதிவு செய்துள்ளார் ...

இந்தநூலில் பெருமான்மையான செய்திகள் சிலம்புசெல்வர் ஐயா ம.பொ.சிவஞானம் அவர்களின் சிலபத்திகாரம் ஆய்வுரைநூலில் இருந்து சில தொகுப்புகள் 1957களில் மற்றும் 70களில் சிலம்பு செல்வர் செங்கோல் என்ற இதழில் எழுதிய சில தொகுப்புகளில் இருந்தும் சிலவற்றை எடுத்து முழுவது சரிவர தொகுத்து பதிவுசெய்யவில்லை என்பது குறிப்பிடதக்கது.
இங்கு மிகவும் முக்கியமாக கவனிக்க வேண்டியது இந்த நூலில் ஆசிரியர்க்கு மிகவும் முக்கியமான ஆய்வாளராக ஜெயமோகனையே முதன்மைபடுத்துகின்றார் கண்ணகி எரித்த மதுரை எது ?? என்ற தலைப்பில் இதுவும் ஜெயமோகனின் வலைப்பூவில் இருந்து எடுத்து கையாளப்பட்டுள்ளது (ப.எண் 22 முதல் 25). சிலம்பின் உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் /ம.பொ.சி / சி.வரதராசனார் போன்றவர்களை காட்டிலும் இந்த ஜெயமோகன் என்பவருக்கு இதில் என்ன ஞானம் இருந்தது என்று தெரியவில்லை.

மேலும் இந்த நுலில் நம்ம தானைத் தலிவர் கலிங்கப்பட்டி கோவால் சாமி நாயிடுகாருவின் பதிவு மிகவும் முக்கியாக கொடுக்கப்பட்டுள்ளது சிலம்பு என்னும் வீரகாவியம் என்ற பெயரில் இது ஒரு 13 பக்கத்திற்கு சொல்லப்படுகிறது இதை கலிங்கபட்டி தலிவர் ம.பொ.சி அறக்கட்டளை சார்பில் சிலம்பு செல்வரின் 18ஆம் ஆண்டு நினைவு விழாவில் (1ஆம் ஆண்டு சிலப்பதிகாரம் விழாவில் ) 2013இல் பேசியதில் இருந்து எடுத்த தொகுப்பாம் (ப.எண் 54 முதல் 66 வரை ).

தமிழ்தேசியத்தின் தெய்வம் கண்ணகி என்ற தலைப்பில் திரு பழ.நெடுமாறன் அவர்கள் தினமணி தமிழ் இலக்கியவிழாவில் பேசியதில் இருந்து எடுத்த தொகுப்பு என்று 2பக்கத்திற்கு (ப.எண் 126 ,127) கொடுத்துள்ளார். இது இந்த நுலில் இறுதியில் வரும் வகையில் இது உள்ளது..
இதற்கு அடுத்த பதிவுகள் எல்லாம் ஈழத்தில் உள்ள கண்ணகி வழிபாடு குறித்து ஈழத்தமிழர்ளும் சிங்களர்களும் வலைத்தளங்களிலும் வலைபூக்களிலும் தொகுத்தசெய்திகளும் அங்கு ஒன்றும் இன்கொன்றும்மாய் எடுத்து தொகுத்து இதில் கையாளப்பட்டுள்ளன.

இதில் கண்ணகியின் பயணப்பாதையை ஆய்வு செய்து கண்டறிந்த ஐயா சி.கோவிந்தராசானார் குறித்து இந்த யாதவ் [!!??]நாராயணன் என்ற யாணன் ஒரு நாலு பக்க செய்தியாக அதிலும் பெருமான்மையாக படங்களை கொண்டு நிரப்பி முழுவது கூறாது இலைமறைகாயாகவே பதிவு செய்துள்ளனர்.
மேலும் இங்கு நாம் மிகவும் கவனிக்கப்பட வேண்டியது இதில் முதுவர் இனத்தவர் குறித்து பதிவு செய்துள்ளனர் கண்ணகி அம்மா வருவா என்ற தலைப்பில் கு.கலைச்செல்வன் என்பவர் முதுவர் ஓர் அறிமுகம் என்ற கட்டுரையில் இருந்து இவை எடுக்கப்பட்டுள்ளது என்று இதில் சொல்லபடுகிறது . இதில் இவர்கள் கூறும் முதுவர்கள் குறித்து தமிழ் ஆய்வாளர்கள் சற்று தெளிவுபடுத்த வேண்டும்.
இப்படி பலரின் தொகுப்பில் இருந்து முழுவதுமாக சரியாக எடுத்து தொகுக்காமல் ஓட்டுபோட்ட செய்திகள் எப்படி முழுதொகுப்பாகும் என்று தெரியவில்லை. ஆகமொத்தத்தில் இந்த நூல் ஒரு அரைகுறை ஓட்டுபோட்ட ஒரு கந்தல் ஆடையே. மேலும் இதில் திராவிட மலையாள பாடிசோடாக்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து புனையப்பட்ட ஒரு அரைவேகாட்டு தொகுப்பாகும். இன்று தமிழகத்தை ஆளும் ஆண்ட திராவிட அரசுகளின் அடையாளஅழிப்பு செயல்திட்டங்களிலின் வெற்றிகண்டுதன் விளைவாக தமிழர்களுக்கு தமிழ் இலக்கியம் தொன்மை போன்றவைகள் பற்றிய தெளிவுகள் மழுங்கடிக்கப்பட்டு இன்று யாதவ் (??!!)நாராயண் என்ற யாணன் / ஜெயமோகன் / விகடகவிகள் போன்றவர்கள் தொகுப்புகள் எல்லாம் சரியானவை அதுவே உண்மை தொகுப்பு என்ற நிலைபாட்டை மக்கள் மனதில் வித்திடும் வகையில் காய்நகர்த்தப்படுகின்றனர் இனியும் நாம் நம் சங்கஇலக்கியங்களை படித்து தெளிவுராவிட்டால் இதுபோன்ற போலிகள் சொல்வதை நம்பு நிலை வந்துவிடும்

இந்த நூலின் தொகுப்பாசிரியர் யார் யாணனா ?? அல்லது வேறுயாருமா ?? எடிட்டர் என்று ஆங்கிலத்தில் S.y.Narayanan [yathava narayanan] என்று கொடுக்கப்படுள்ளது இவர் யார் ?? அல்லது இந்த யாதவ் (??!!)நாராயண் என்ற யாணன் இருவரும் ஒருவரா ?? அப்படி ஒருவர் என்றால் ஏன் தனது சொந்த அடையலாத்தை புதைத்து இப்படி உலா வரவேண்டும் ?? இதுபோன்ற போலிகளில் நூல்களை கவனமாக தமிழர்கள் மிகவும் கவனமா கையாளவேண்டும்

------கரு.இராமனாதன் வேள்வணிகன்

Monday 5 September 2016

மலேயா மண்ணில் நம்பியார்களின் கரிசனம்.


என்ன ஒரு அக்கறை பாருங்கள். புலம் பெயர்ந்தாலும் தமிழர்கள் தங்கள் சாதி பெயரைப் போடாதீர்கள் என்று சீர் திருத்தம் செய்து திரும்பிய ராமசாமி நாயுடு அப்படியே நம்பியார்களையும் கோவிந்த ராஜு நாயுடுகளையும் அங்கேயே விட்டு விட்டு வந்துவிட்டார். காரணம் நூறு ஆண்டுகள் கழித்து இங்கே எவனும் தமிழன் அடையாளத்துடன் இருத்தல் கூடாது, அதற்கு ஆகா வேண்டிய காரியங்களை செய்யுங்கள் என்பதற்கே.


அங்கே பினாங்கில் ராமசாமிகளும், நம்பியார்களும் தங்கள் சாதி அடையாளத்துடன், இல்லை... இல்லை.... தங்கள் வடுக இன அடையாளத்துடன் சதிராட்டமும், சதியாட்டமும் ஆடி வருகின்றனர். தமிழன் முதுகுப் புறத்தையும், புட்டத்தையும் பற்றிக்கொண்டு மலேயா, சாவகம் போன்ற தீவுகளுக்கு சென்றவர்கள், அந்தத் தமிழன் முதுகில் ஏறிக்கொண்டே அரசியல் அதிகாரத்தையும் கைக்கொண்டனர்.

இன்று இந்த மேற்படி வடுக சாத்தான்கள் தமிழர்களுக்கு வேதம் ஒத்துகின்றது.
நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் கட்டிய ஆலயங்களில் அவர்களே நிர்வாகம் செயகின்றனர், நிர்வாகத்தில் என்ன நடக்கின்றது என்று தமிழர்களுக்கு தெரிவதில்லை. --- மலேயா நம்பியார்.

நம்பியார் எங்கே பிறந்தாலும், எங்கே இருந்தாலும் வடுகன்தானே. இந்த வடுகனுக்கு தமிழர்கள் பற்றிய கவலை என்ன ??
ஆகம வழிபாடு என்பது தமிழர்களுக்கு தனித்துவமானது. அதில் ஆலயங்கள் சிறப்புற நடத்த என்ன செய்ய வேண்டும் என்பதை தமிழர்கள் அறிவர்.
அப்படியிருக்க குடும்ப அமைப்பு, பாரம்பரியம் என்ற எதுவுமற்ற வடுக நம்பியவர்களுக்கு, தமிழர் - நாட்டுக்கோட்டை நகரத்தார் கட்டிய ஆலயங்கள் குறித்த கவலை வேண்டாம்.

நம்பியாரின் பின்னே நிற்கும் மலேசிய ராமசாமி திராவிடமும் சரி, அந்த ராமசாமிக்கு இங்கே கொம்பு சீவும் தமிழகத்து திராவிடவாதிகளும், தொடர் அரசியல் செய்வது நன்றாகவே தெரிகின்றது.
தமிழகத்தில் உள்ள நாயுடுகள் உருவாக்கிய அண்மைக்கால பெருமாள் கோவில்களில் நீக்கமற தீண்டாமையும், முழுக்க முழுக்க அவர்களின் நிர்வாகமும் நடந்து வருகின்றது. நம்பியார்களும் நம்ம ஊரு நாயுடுகளும் ஒரு முறை கூட வாய் திறக்கவேயில்லை.


அவ்வளவு ஏன் ?? உயிர்மை என்ற போலி புரட்டு ஊடகம் நடத்தி வரும் முத்துகிருஷ்ண தேவராயன் என்ற தெலுங்கு எழுத்தாளன், ( தமிழில் எழுதி சேவை செய்யும் தெலுங்கர் ), முன்னர் வடுக நாயுடுகளால் நடந்த சாதி வன்கொடுமையினை, சிறுபான்மையினர் இனக்குழுவின் தனிப்பட்ட நியதிகளில் பெரும்பான்மை மக்கள் தலையிடக் கூடாது என்று அறிக்கையும் வாசித்தார்.

இவர்தான் ஊர் ஊறாகச் சென்று சாதி எதிர்ப்பு மாநாடுகள் நடத்துபவர். இவருடன் கைகோர்த்த நம்பியாரும், பினாங்கு திராவிட ராமசாமியும் தற்போது தமிழர் கைகளில் ஒரு கோவில் நிர்வாகமும் இருக்கக் கூடாது என்பதை கால அட்டவணையிட்டு காரியமாற்றுகின்றனர். நிற்க.
மலேசியாவில் முதலீட்டு வணிகத்திற்கு சென்ற நகரத்தார்கள், வழிபாட்டிற்கான கோவில்களை வழமையாகவே கட்டி, திருப்பணி செய்து பரிபாலனம் செய்தும் வருகின்றனர். தாங்கள் கட்டிய கோவில்களை நிர்வாகம் செய்வதில் கேரளத்தவருக்கோ, மலேசிய வாழ் நாயுடுகளுக்கோ என்ன வகையான பொச்சரிப்பு என்றுதான் தெரியவில்லை.

எப்பவுமே தமிழர்கள் உருவாக்கிய எந்த ஒரு அமைப்பையும் காத்திருந்து கொத்திச் செல்வது வடுக வந்தேறிகளின் இயல்பு. அவர்கள் நிலைப்பாடு இப்படியிருக்க, தமிழர்களான நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் தங்களின் தமிழ் அடையாளத்தை விடுத்து, தன வைசியர் என்று மலேசியாவில் கோலம் கொள்வதும் எந்தவகை நியாயம் என்று புரியவில்லை.
அதே வேளையில் தன வைசிய என்ற அடையாளத்தை விடுத்து, ஏனைய தமிழர் இனக்குழுக்களுடன் தொடர்ந்து பண்பாட்டு ஒருங்கிணைப்பை பேணிவரவேண்டியது அங்கே உள்ள நகரத்தகர்களின் தலையாய கடமையாகும்.

இன்றைய தலைமுறையினருக்கு மலேசிய மண் சார்ந்த புலம்பெயர் இனக்குழுக்களில் யார் தமிழர் ?? யார் தமிழர் அல்லாதவர் ?? என்பதை நன்கு கண்டுணர வேண்டும்.
இல்லை என்றால் தொடர்ச்சியாக நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் செய்த பல அறிய பண்பாட்டுத் தடையங்களை, தடம் இல்லாமல் கபளீகரம் செய்துவிடுவார்கள் இந்த வடுகர்கள்.
காலம் காத்திருப்பதில்லை. ஆனால் நாம் விழிப்படையாமல் இருந்தால் கடவுளாலும் உதவ முடியாத சூழல் வந்தடையும்.
நாம் யாருடன் இருக்க வேண்டும்; நம்முடன் யார் இருக்க வேண்டும் என்பதில் ஒவ்வொரு தேசிய இனமும் விழிப்பாய் இருக்க வேண்டும். மாற்றானை உறவென்று நம்பாமல், தமிழர் இனக்குழுக்களின் ஓர்மையினை நோக்கிய பயணத்தை தொடங்க வேண்டும்.

ஏரகத்து முருகன் துணை நிற்பான்.

கட்டுரை ஆக்கம் :
வேணும் நித்ய கல்யாணி உடனாய கைலாசநாதர் துணை.
--- மேலவட்டகை மெய்கண்டான் .

#தி__இந்து___நாளேடும் -- #தமிழர்களும்



இந்து பத்திரிகை நகரத்தார்களுக்கு எதிராகவும் அதிலும் குறிப்பாக செட்டி நடராசர் குடும்பத்திற்கு எதிராகவும் செய்தி வெளியிடுவதாக சில அறிஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர். நல்லது.
தற்போது ஊடகங்கள் பற்றிய விழிப்பு உண்மையிலேயே பொது மக்களிடம் வந்துவிட்டதோ என்று நாம் நினைக்கும் போது, இவர்களின் வாதத்தில் உள்ள சாரம் சொல்வது என்னவோ மீண்டும், ஒரு பக்கச் சார்புடனும், முன் முடிவுடனும் செய்யப்பட்ட கருத்தியலாகவே உள்ளதை உணரமுடிகின்றது.
பொதுவாகவே உலக அளவில் அந்த அந்த நாடுகளில் உள்ள ஏடுகள் (பத்திரிகைகள் / நாளேடுகள் / வார இதழ்கள் ) அனைத்தும் ஒரு கொள்கை முடிவுடன் கொண்ட அரசியல் / சமூக / பொருளாதாரக் கோட்பாடுகளை அடிப்படையாக வைத்து துவங்கப்படும். அல்லது இயங்கி வரும். அதாவது அந்த அந்த ஏடுகளின் ஆசிரியர்கள் மாறலாம் ஆனால் கொள்கை மாறாது. உலக இயல்பு இப்படியிருக்க நம்ம ஊரில் மட்டும் மூடு மறையாகவும், கொள்கை / அடிப்படை அறக்கோட்பாடு என்ற எதையும் கொண்டிராத கோலம் கொள்வது தொடர் வாடிக்கை.


ஆகவே இங்கே ஏடுகளைப் பற்றிய தெளிவு குறைவுதான்.
இப்போது இந்து என்ற நாளிதழ் பற்றி சொல்லபப்டும் குற்றச்சாட்டும் விமர்சனமும் : செட்டிநாட்டரசர் குடும்பத்தைப் பற்றி யூகத்தின் அடிப்படையில் செய்தி வெளியிடுகின்றனர் என்பது. நிற்க.
அதாகப்பட்டது கத்தரிக்காய் முற்றிய நிலையில் கடைவீதிக்கு வந்தால் என்ன வராவிட்டால் என்ன ??
சரி, இதே செட்டி நாட்டரசர் குடும்பத்தைப் பற்றி விகட கவிகளும் தமிழர் குடிகளுக்கு சூனியம் வைக்கும் சூனியர் விகடர்களும் என்ன எழுதினார்கள் ??
ராஜ் தொலைக்காட்சியும் ஏனைய வெகுமக்கள் ஊடகங்களும் மேற்படி குடும்பத்தில் நடைபெற்ற குழப்பங்களை ஏன் செய்தியாக்கினார்கள். ??
இவர்களை அழைத்து நட்சத்திர விடுதியில் நேர்காணல் கொடுத்தது யார் ???
நடு நிசியில் நடந்த களேபரங்களுக்குப் பின்னர் ஐயா மு.அ. இராமசாமி செட்டியார் அவர்கள் தனது அரண்மனையில் ஊடகவியலாளர்களை அழைத்து தன்னிலை விளக்கமும், தனது விருப்ப உயில் எழுதிய சாசனத்தையும் பதிவு செய்து வெளிப்படுத்தினாரே ??
அப்போதும் ராஜ் தொலைக்காட்சி உண்மைக்கு மாறான பொய்யான செய்திகளை அரச குடும்பத்திற்கு எதிராக வரலாற்றை திரித்துரைத்தனரே ?? இது யாருடைய உந்துதலில் செய்யப்பட்டது ??
இதனை இதுவரை எந்த அறிஞர்களும் எதிர்க்கவில்லையே ஏன் ??
தற்போது இந்து நகரத்தார் குடும்ப விவகாரங்களில் தலையிடுவதாக ஆய்வு செய்வதும் ஏன் ??
That's Tamil / Tamil one / T O I போன்ற இணைய வழி ஏடுகள் ஐயா மு. அ. இராமசாமி பற்றி தரக்குறைவாகவும், புனைவான கதைகளையும் லலித் தெளித்த போது அறிஞர் பெருமக்களுக்கு கேள்விகள் எழ வில்லையே ஏன் ???
முப்பத்தாறு காமிரா / புகைப்பட கண்காணிப்பு கருவிகளை வைத்து ஒரு முதியவர் கண்காணிக்கப்பட்டது / கண்காணிக்கப்படுவது எந்த அறக்கோட்பாட்டில் நடந்தேறியது ?? இதனைப் பற்றிய செய்திகளை வெளியிடாத மேற்படி தமிழர்களுக்கு சூனியம் வைக்கும் விகட கவிகள் எதையும் சொன்னார்களா ?? இவ்வகையான சூனிய விகட பரமாத்மாக்களை கணக்கில் அறிஞர்கள் எடுத்துக்கொண்டார்களா ?? விடுபட்ட நிலையில் இந்துவை மட்டும் அறம் வைத்து உரைத்துப் பார்ப்பது ஏன் ???
எல்லாவற்றுக்கும் மேலாக ஐயா அவர்களை சி.பி.ஐ விசாரணைக்கு உட்படுத்தி அவரது உடல் நலத்தையும் கருத்தில் கொள்ளாத அரசு அதிகாரிகள் இழுத்து காரில் ஏற்றி மாலைவரை விசாரணை என்று வைத்தபோது, மாறன் & கோ குழுமத்தின் நாளேடு தினகரன் வெளியிட்ட அலங்கோல செய்தி என்ன ?? ஐயா அவர்கள் சி.பி.ஐ கட்டுப்பாட்டில் அழைத்துச் செல்லப்பட்ட விதத்தை குறை சொல்லாத மாறன் & கோ குழுமத்தின் நாளேடு தினகரன், புனைவாக ஐயா அவர்களின் கார் செய்தியாளர்களை இடிப்பது போல சீறி வந்தது என்று திரைக் கதை எழுதியது பற்றி அறிஞர் பெருமக்கள் எதுவும் எழுதவில்லையே ஏன் ??
அதாவது மாறன் & கோ குழுமத்தின் நாளேடு தினகரன்என்றால் தள்ளுபடி, வந்தேறிய ராஜ் டி .வி சொல்லும் பொய்யான பர்மா வரலாற்றை ஏற்கலாம், அதில் கொச்சைப் படுத்தப்பட்டது செட்டிநாட்டரசர் அண்ணாமலை அவர்கள் மட்டுமல்ல, ஒட்டு மொத்த தமிழர்களும் தான்.
தினகரன் என்ற பத்திரிகை உண்மையில் அதனை தோற்றுவித்த கே.பி.கே அவர்களிடம் இருந்திருந்தால் இப்படி தரக்குறைவாக செய்தி வெளியிட்டிருப்பார்களா ?? இன்று தமிழர் கைகளில் இருந்த தினகரன் வடுக மாறன் & கோ விடம் சிக்கியது நமது அரசியல் இயலாமையை.
சரி, இந்துவிற்கு வக்காலத்து வாங்குவது நமது நோக்கமல்ல, கரணம் தமிழர் குடி கெடுக்கும் சூனியர் விகடகவிகளுக்கு தமிழர் குடி மீது என்ன அக்கறை இருக்குமோ அந்த அளவில்தான் இந்துஜாக்களும் இருப்பார்கள். அவர்கள் ஒருபோதும் தமிழர்களுக்கு பரிந்து பேசிய வரலாறு இல்லை. ஆனால் அறிஞர்களுக்கு மட்டும் எங்கிருந்து திடீர் என்று இந்த இந்து எதிர்ப்புச் சக்தி வந்தது என்றுதான் நாம் ஆராய வேண்டும்.
காரணம் அங்கேதான் இந்த முடிச்சு அவிழ்ந்து உண்மை வெளிப்படும்.
ஆகவே மேற்படி கேள்விகளில் உள்ள சாரம் அறிஞர்கள் எப்படி ஏனைய ஏடுகளை விட்டு விட்டு செலக்டிவ் அம்னீசியா போல இந்துவில் மட்டும் செட்டிநாட்டரசர் குடும்பத்தை தாக்கி எழுதுகின்றனர் என்று குறை சொல்ல முடிகின்றது ??

காரணம் இன்று பணம் இருந்தால் நீங்களும் நகரத்தார் ஆகலாம்.
பற்பல கொடிகள் கையில் வைத்துக்கொண்டு, சில லகரங்களை கோவிலுக்கு செலுத்தினால் போதும் என்ற நிலையில்தான் சட்டதிட்டங்கள் உள்ள பொது இனி நாயர்களும் நாயுடுகளையும் நெல்லிகளையும் கொண்டு வந்து சேர்க்கும் வியூகம் வைக்கப்படும் வேளையில் யூகத்தின் அடைப்படையில் இந்து என்ற பத்திரிகை எழுதினால் என்ன, எழுதாவிட்டால் என்ன ??
நாம் ஊடகத்தின் செயல்பாடுகளை கவனிக்க வேண்டும். அவற்றை பணம் கொடுத்து தங்களுக்கான விளம்பரங்களை செய்பவர்கள் யார் என்று உணர வேண்டும். இவையெல்லாம் ஒரு தேசிய இனத்திற்கு இருக்க வேண்டிய கட்டாய அவசியமான இறையான்மை. இதனை உணராமல் செய்தி ஊடகங்களை தரம் பிரித்து தர நிர்ணயம் செய்ய முடியாது.
நன்றி.
அன்புடன்,
--- நித்ய கல்யாணி உடனாய கைலாச நாதர் துணை.
--- மேலவட்டகை மெய் கண்டான்.
 நகரத்தார் வரலாறு - Nagarathar Varalaru  முகநூல்  பதிவில் இருந்து