Sunday 25 September 2016

நகரத்தார்களும் சிரிங்கிகேரியும்

கமலாலயத்தில் உள்ள பல தலைகளும், உலைகளும் கன்னட - தெலுங்கு பிராமணர்களும் நாயுடுகளும் தான். அப்படியே பார்த்தாலும் மேற்படி கன்னட-தெலுங்கு-நாயுடு வகைகள் எல்லாம் வட வைஷ்ணவ வெறியர்கள்.

ஹசன் மாவட்டத்திலிருந்து 250 ஆண்டுகளுக்கு முன்னதாகவும் 150 ஆண்டுகளுக்கு முன்னதாகவும் குடிபெயர்ந்த வடுக கன்னட பிராமணர்கள் பெரும்பகுதி சிவகங்கை- பழைய இராமநாதபுரம் மாவட்டம் - புதுக்கோட்டை மாவட்டம் என்று குடியேறினர்.

வடவைஷ்ணவர்களே ஆயினும், ஐயர் என்ற அடைமொழியினை சூட்டிக்கொண்டு, செட்டி நாட்டில் உள்ள நாட்டுக்கோட்டை நகரத்தார்களையும் அணுகி, அவர்களை இந்துத்துவ மாயைக்குள் கொண்டு சென்று பின்னர் - வேதாந்தக் கருத்துக்களையும் உட்புகுத்தினர்.

நகரத்தார்களின் பொருள் பலத்தை வைத்து சிருங்கேரி மடம் செல்வதில் கொழித்தது, கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக.

இதனை உடைத்து ஆதி சங்கரன் நிறுவாத, ஆதி சங்கரனுக்கு தொடர்பே இல்லாத கும்பகோணம் பிராமணாள் கிளப், காஞ்சி சங்கர மடத்திற்கு கடந்த 75 ஆண்டுகளாக தெலுங்கு பிராமணர்கள் நாட்டுக்கோட்டை நகரத்தார்களை மடைமாற்றம் செய்தனர்.

நகரத்தார்கள் வீழ்ச்சிக்கு மேற்படி இரண்டு பீடையாதிபதிகளும், அந்த இரண்டு பீடையாதிபதிகளுக்கு உள்ளிடையாய் இருந்து உளவவு சொன்னவன் பலிஜா ராமசாமி நாயுடுவும்தான்.

சைவம் - வைணவம் என்ற தமிழர் ஆகம முறையினை மறந்த பின்னர், இந்துத்துவம் என்ற மாயையில் சிக்கிய தமிழ் இனக்கூறுகளில் நாட்டுக்கோட்டை நகரத்தார் இனக்குழுவும் ஒன்று.



இன்று சொந்த அடையாளங்களை விடுத்து, மாற்று அடையாளங்களில் தங்கள் சுயத்தை தொலைத்த பின்னர் -- யார், எவர், எதற்கு, யாரிடம் என்ன செய்கின்றோம் என்று உணராமல், ஒரு சுழலில் சிக்கியுள்ளனர்.

அடையாளத்தை தொலைத்த பின்னர் அடையாள அட்டைகள் மட்டுமே மிஞ்சுமோ ??!!! என்ற ஒரு நிலையில் நகரத்தார்கள் உள்ளது வருத்தமாகவே உள்ளது.

நித்ய கல்யாணி உடனாய கைலாச நாதர் துணை.
மேலவட்டகை மெய்கண்டான்.

No comments:

Post a Comment