Monday 5 September 2016

#தி__இந்து___நாளேடும் -- #தமிழர்களும்



இந்து பத்திரிகை நகரத்தார்களுக்கு எதிராகவும் அதிலும் குறிப்பாக செட்டி நடராசர் குடும்பத்திற்கு எதிராகவும் செய்தி வெளியிடுவதாக சில அறிஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர். நல்லது.
தற்போது ஊடகங்கள் பற்றிய விழிப்பு உண்மையிலேயே பொது மக்களிடம் வந்துவிட்டதோ என்று நாம் நினைக்கும் போது, இவர்களின் வாதத்தில் உள்ள சாரம் சொல்வது என்னவோ மீண்டும், ஒரு பக்கச் சார்புடனும், முன் முடிவுடனும் செய்யப்பட்ட கருத்தியலாகவே உள்ளதை உணரமுடிகின்றது.
பொதுவாகவே உலக அளவில் அந்த அந்த நாடுகளில் உள்ள ஏடுகள் (பத்திரிகைகள் / நாளேடுகள் / வார இதழ்கள் ) அனைத்தும் ஒரு கொள்கை முடிவுடன் கொண்ட அரசியல் / சமூக / பொருளாதாரக் கோட்பாடுகளை அடிப்படையாக வைத்து துவங்கப்படும். அல்லது இயங்கி வரும். அதாவது அந்த அந்த ஏடுகளின் ஆசிரியர்கள் மாறலாம் ஆனால் கொள்கை மாறாது. உலக இயல்பு இப்படியிருக்க நம்ம ஊரில் மட்டும் மூடு மறையாகவும், கொள்கை / அடிப்படை அறக்கோட்பாடு என்ற எதையும் கொண்டிராத கோலம் கொள்வது தொடர் வாடிக்கை.


ஆகவே இங்கே ஏடுகளைப் பற்றிய தெளிவு குறைவுதான்.
இப்போது இந்து என்ற நாளிதழ் பற்றி சொல்லபப்டும் குற்றச்சாட்டும் விமர்சனமும் : செட்டிநாட்டரசர் குடும்பத்தைப் பற்றி யூகத்தின் அடிப்படையில் செய்தி வெளியிடுகின்றனர் என்பது. நிற்க.
அதாகப்பட்டது கத்தரிக்காய் முற்றிய நிலையில் கடைவீதிக்கு வந்தால் என்ன வராவிட்டால் என்ன ??
சரி, இதே செட்டி நாட்டரசர் குடும்பத்தைப் பற்றி விகட கவிகளும் தமிழர் குடிகளுக்கு சூனியம் வைக்கும் சூனியர் விகடர்களும் என்ன எழுதினார்கள் ??
ராஜ் தொலைக்காட்சியும் ஏனைய வெகுமக்கள் ஊடகங்களும் மேற்படி குடும்பத்தில் நடைபெற்ற குழப்பங்களை ஏன் செய்தியாக்கினார்கள். ??
இவர்களை அழைத்து நட்சத்திர விடுதியில் நேர்காணல் கொடுத்தது யார் ???
நடு நிசியில் நடந்த களேபரங்களுக்குப் பின்னர் ஐயா மு.அ. இராமசாமி செட்டியார் அவர்கள் தனது அரண்மனையில் ஊடகவியலாளர்களை அழைத்து தன்னிலை விளக்கமும், தனது விருப்ப உயில் எழுதிய சாசனத்தையும் பதிவு செய்து வெளிப்படுத்தினாரே ??
அப்போதும் ராஜ் தொலைக்காட்சி உண்மைக்கு மாறான பொய்யான செய்திகளை அரச குடும்பத்திற்கு எதிராக வரலாற்றை திரித்துரைத்தனரே ?? இது யாருடைய உந்துதலில் செய்யப்பட்டது ??
இதனை இதுவரை எந்த அறிஞர்களும் எதிர்க்கவில்லையே ஏன் ??
தற்போது இந்து நகரத்தார் குடும்ப விவகாரங்களில் தலையிடுவதாக ஆய்வு செய்வதும் ஏன் ??
That's Tamil / Tamil one / T O I போன்ற இணைய வழி ஏடுகள் ஐயா மு. அ. இராமசாமி பற்றி தரக்குறைவாகவும், புனைவான கதைகளையும் லலித் தெளித்த போது அறிஞர் பெருமக்களுக்கு கேள்விகள் எழ வில்லையே ஏன் ???
முப்பத்தாறு காமிரா / புகைப்பட கண்காணிப்பு கருவிகளை வைத்து ஒரு முதியவர் கண்காணிக்கப்பட்டது / கண்காணிக்கப்படுவது எந்த அறக்கோட்பாட்டில் நடந்தேறியது ?? இதனைப் பற்றிய செய்திகளை வெளியிடாத மேற்படி தமிழர்களுக்கு சூனியம் வைக்கும் விகட கவிகள் எதையும் சொன்னார்களா ?? இவ்வகையான சூனிய விகட பரமாத்மாக்களை கணக்கில் அறிஞர்கள் எடுத்துக்கொண்டார்களா ?? விடுபட்ட நிலையில் இந்துவை மட்டும் அறம் வைத்து உரைத்துப் பார்ப்பது ஏன் ???
எல்லாவற்றுக்கும் மேலாக ஐயா அவர்களை சி.பி.ஐ விசாரணைக்கு உட்படுத்தி அவரது உடல் நலத்தையும் கருத்தில் கொள்ளாத அரசு அதிகாரிகள் இழுத்து காரில் ஏற்றி மாலைவரை விசாரணை என்று வைத்தபோது, மாறன் & கோ குழுமத்தின் நாளேடு தினகரன் வெளியிட்ட அலங்கோல செய்தி என்ன ?? ஐயா அவர்கள் சி.பி.ஐ கட்டுப்பாட்டில் அழைத்துச் செல்லப்பட்ட விதத்தை குறை சொல்லாத மாறன் & கோ குழுமத்தின் நாளேடு தினகரன், புனைவாக ஐயா அவர்களின் கார் செய்தியாளர்களை இடிப்பது போல சீறி வந்தது என்று திரைக் கதை எழுதியது பற்றி அறிஞர் பெருமக்கள் எதுவும் எழுதவில்லையே ஏன் ??
அதாவது மாறன் & கோ குழுமத்தின் நாளேடு தினகரன்என்றால் தள்ளுபடி, வந்தேறிய ராஜ் டி .வி சொல்லும் பொய்யான பர்மா வரலாற்றை ஏற்கலாம், அதில் கொச்சைப் படுத்தப்பட்டது செட்டிநாட்டரசர் அண்ணாமலை அவர்கள் மட்டுமல்ல, ஒட்டு மொத்த தமிழர்களும் தான்.
தினகரன் என்ற பத்திரிகை உண்மையில் அதனை தோற்றுவித்த கே.பி.கே அவர்களிடம் இருந்திருந்தால் இப்படி தரக்குறைவாக செய்தி வெளியிட்டிருப்பார்களா ?? இன்று தமிழர் கைகளில் இருந்த தினகரன் வடுக மாறன் & கோ விடம் சிக்கியது நமது அரசியல் இயலாமையை.
சரி, இந்துவிற்கு வக்காலத்து வாங்குவது நமது நோக்கமல்ல, கரணம் தமிழர் குடி கெடுக்கும் சூனியர் விகடகவிகளுக்கு தமிழர் குடி மீது என்ன அக்கறை இருக்குமோ அந்த அளவில்தான் இந்துஜாக்களும் இருப்பார்கள். அவர்கள் ஒருபோதும் தமிழர்களுக்கு பரிந்து பேசிய வரலாறு இல்லை. ஆனால் அறிஞர்களுக்கு மட்டும் எங்கிருந்து திடீர் என்று இந்த இந்து எதிர்ப்புச் சக்தி வந்தது என்றுதான் நாம் ஆராய வேண்டும்.
காரணம் அங்கேதான் இந்த முடிச்சு அவிழ்ந்து உண்மை வெளிப்படும்.
ஆகவே மேற்படி கேள்விகளில் உள்ள சாரம் அறிஞர்கள் எப்படி ஏனைய ஏடுகளை விட்டு விட்டு செலக்டிவ் அம்னீசியா போல இந்துவில் மட்டும் செட்டிநாட்டரசர் குடும்பத்தை தாக்கி எழுதுகின்றனர் என்று குறை சொல்ல முடிகின்றது ??

காரணம் இன்று பணம் இருந்தால் நீங்களும் நகரத்தார் ஆகலாம்.
பற்பல கொடிகள் கையில் வைத்துக்கொண்டு, சில லகரங்களை கோவிலுக்கு செலுத்தினால் போதும் என்ற நிலையில்தான் சட்டதிட்டங்கள் உள்ள பொது இனி நாயர்களும் நாயுடுகளையும் நெல்லிகளையும் கொண்டு வந்து சேர்க்கும் வியூகம் வைக்கப்படும் வேளையில் யூகத்தின் அடைப்படையில் இந்து என்ற பத்திரிகை எழுதினால் என்ன, எழுதாவிட்டால் என்ன ??
நாம் ஊடகத்தின் செயல்பாடுகளை கவனிக்க வேண்டும். அவற்றை பணம் கொடுத்து தங்களுக்கான விளம்பரங்களை செய்பவர்கள் யார் என்று உணர வேண்டும். இவையெல்லாம் ஒரு தேசிய இனத்திற்கு இருக்க வேண்டிய கட்டாய அவசியமான இறையான்மை. இதனை உணராமல் செய்தி ஊடகங்களை தரம் பிரித்து தர நிர்ணயம் செய்ய முடியாது.
நன்றி.
அன்புடன்,
--- நித்ய கல்யாணி உடனாய கைலாச நாதர் துணை.
--- மேலவட்டகை மெய் கண்டான்.
 நகரத்தார் வரலாறு - Nagarathar Varalaru  முகநூல்  பதிவில் இருந்து

No comments:

Post a Comment