Thursday 11 August 2016

கோவிலில் புள்ளியாகதவர்கள் ஊர் புள்ளியாக முடியுமா ??



கோவிலில் புள்ளியாகதவர்கள் ஊர் புள்ளியாக முடியுமா ??
பணம் இருந்தால் புள்ளியாக முடியும் என்றால் நாயர் வகை / நாயுடு வகை / நெல்லிவகை / சௌராஷ்டிரா வகையெல்லாம் சேர்த்து புள்ளி என்று அறிவித்துவிட்டார்களா ??
கடிதம் சொல்ல வரும் செய்தி என்ன ??
வந்தேறிகள், முறையற்ற வகையில் புள்ளியாக முயற்சிப்பதும், அவர்களை மேடையேற்றி நகரத்தார்களாக அறிவிக்கும் நகரத்தார் சங்கங்கள் செய்யும் முறைகேட்டினை தட்டிக்கேட்க ஆள் இல்லை. ஏழ்மையிலும், எளிய வாழ்க்கை வாழும் நகரத்தார்களும் சொல்வது அம்பலத்தில் ஏறாது.

வடுகர்களுடன் கைகோர்த்த பரிவட்டதாரிகள், தற்போது உருட்டுக் கட்டகைகளுடன் புள்ளிக் கணக்கு எழுதிவருவதுதான் விந்தையிலும் விந்தை.


பர்மாவில் காலம் முழுதும் சிறைப்பட்டாலும், ஐரோப்பியர் ஒருவரை திருமணம் செய்துகொண்ட காரணத்தால் ஆங் சான் சு-கி என்ற பர்மிய பெண்மணிக்கு அந்த நாட்டின் அரசியல் தலைமைக்கு வரமுடியாது என்ற இனவழி இறையாண்மையினை, தமிழ் நாட்டில் உள்ள தமிழர்களும் - தமிழர் இனக்குழுக்களும் உணர வேண்டும்.


அப்படியிருக்க இன்று வேற்று மாநிலத்தில் / வேற்று இனத்தில் திருமணம் செய்து கொண்டுவந்துள்ள, தமிழ்நாட்டிலேயே பிறந்த வேற்று மாநிலத்தவர்களை திருமணம் செய்துகொண்டு வந்தும், பேரேட்டில் புள்ளிக் கணக்கில் பதிய வேண்டும் என்பதும், அதற்கும் வால்பிடித்துக்கொண்டு ஆமாம் என்று பரிவட்டதாரிகள் செல்வதும் கோவில் அமைப்பிற்கு முற்றிலும் எதிரானது. உருட்டுக் கட்டை அரசியல் என்பதைத் தவிர வேறுஒன்றும் இல்லை.

ஒரு கோவிலில் பிறந்தவர்கள் வேறு கோவிலுக்கு எப்படி புள்ளியாக முடியும் ??
இந்த அடிப்படையான வரைமுறையினை சிதைப்பதை, ஏற்று அவர்கள் பின் செல்வது என்ன வங்கியான நியாயம் ??

கோவில் அமைப்பையும், புள்ளிகள் என்ற அமைப்பையும் உணராமல் நகரத்தார் என்றோ, நகரத்தார் சங்கம் என்றோ சொல்வதில் எந்தப் பலனும் இல்லை.

வரலாற்றில் பிழைபட்டு, வாழ்க்கையில் வெற்றி என்பது பண்பாட்டிலும் வாழ்வியலிலும் எந்த ஒரு நண்மையும் பயக்காது.

--- வேணும் அருள்மிகு பொய்சொல்லா மெய்யர் துணை.

--- நெற்குப்பை காசி விசுவநாதன்.

" வரலாற்றில் விழிப்பு ; எதிர் காலத்தின் மீட்பு "

பெயரும் பொருளும்


சுவடுகள் 11 :-
#சேனையற்கரசி__பெயரும்__பொருளும்

சேனையற்கரசி -- நகரத்தார் குடும்பங்களில் அண்மைக் காலங்கள் வரை இந்தப் பெயர் பல ஆச்சிமார்களுக்கு இருந்தது.

இன்று அனன்யா, ஷ்வேத்தா, அபர்ணா (!!??), சுகன்யா, பூஜா(!!??), ரேஷ்மி, சுஷ்மி என்ற பெயர்கள் வந்த பின்னர் காணாமல் போன ஒரு. ஆனால் தமிழ்ப் பெயர்களின் பெயர்கள், பொருளும் அதற்கான காரணங்களும் நிறைந்தவை.


#ஏழகப்__பெருவீடு என்ற நகரத்தார்களுக்கான #காவற் படையினை நகரத்தகர்களில் வயிரவன் கோவில் பிரிவினர் பரிபாலனம் செய்து வந்தனர்.

காவற்படை கொண்ட வயிரவன் கோவில் நகரத்தார்களே சேனைக்கு பொறுப்பாளர்கள். ஆகவே சேனையற்கரசி என்ற பெயரை தங்கள் வீட்டில் பிறந்த பெண் குழந்தைகளுக்கு சூட்டி மகிழ்ந்தனர்.

சேனையற்கரசி என்பதை வீட்டில் அழைப்பவர்கள் சேனச்சி என்றும் #சேனச்சி__ஆச்சி என்றும் அழைப்பது மரபு.


சேனையற்கரசி என்ற பெயர் கொண்ட வயிரவன் கோவில் பெண்மக்கள், திருமணத்திற்குப் பின்னர் சென்ற இடங்களில், அவர்கள் வழித் தோன்றல்கள் த்ங்கள் பிள்ளைகளுக்கு, அப்பத்தாள் பெயரோ அலல்து ஆயா பெயரோ வைப்பது வழக்கம்.

அந்த வகையில் வயிரவன் கோவில் வகையில் சூடிய / சூட்டிய சேனையற்கரசி என்ற தமிழரசியின் பெயர் நகரத்தார்கள் வீடெங்கும் நின்று விளக்கம் பெற்றது.

இன்று அந்தப் பெயரின் பொருளும், அறிந்தார் இல்லை, பெருமையும் உணர்ந்தார் இல்லை.

வரலாற்றில் பதிந்த சுவடுகள் பல. அந்தச் சுவடுகளில் நின்று நலம்பெற்றவை சில. சேனச்சி ஆச்சிகள் குறைந்து, சுகன்யா, அனன்யா, சுனன்யா, அபர்ணாக்கள் வந்து நிற்கின்றனர். என்ன செய்வது.??

காலம் போடும் புதுக்கோலம், யாரறிவார் ? யார் உணர்வார் ???

----- வேணும் அருள்மிகு பொய்சொல்லா மெய்யர் துணை.
----- நெற்குப்பை காசிவிசுவநாதன். 21-07-2016.