Thursday 11 August 2016

பெயரும் பொருளும்


சுவடுகள் 11 :-
#சேனையற்கரசி__பெயரும்__பொருளும்

சேனையற்கரசி -- நகரத்தார் குடும்பங்களில் அண்மைக் காலங்கள் வரை இந்தப் பெயர் பல ஆச்சிமார்களுக்கு இருந்தது.

இன்று அனன்யா, ஷ்வேத்தா, அபர்ணா (!!??), சுகன்யா, பூஜா(!!??), ரேஷ்மி, சுஷ்மி என்ற பெயர்கள் வந்த பின்னர் காணாமல் போன ஒரு. ஆனால் தமிழ்ப் பெயர்களின் பெயர்கள், பொருளும் அதற்கான காரணங்களும் நிறைந்தவை.


#ஏழகப்__பெருவீடு என்ற நகரத்தார்களுக்கான #காவற் படையினை நகரத்தகர்களில் வயிரவன் கோவில் பிரிவினர் பரிபாலனம் செய்து வந்தனர்.

காவற்படை கொண்ட வயிரவன் கோவில் நகரத்தார்களே சேனைக்கு பொறுப்பாளர்கள். ஆகவே சேனையற்கரசி என்ற பெயரை தங்கள் வீட்டில் பிறந்த பெண் குழந்தைகளுக்கு சூட்டி மகிழ்ந்தனர்.

சேனையற்கரசி என்பதை வீட்டில் அழைப்பவர்கள் சேனச்சி என்றும் #சேனச்சி__ஆச்சி என்றும் அழைப்பது மரபு.


சேனையற்கரசி என்ற பெயர் கொண்ட வயிரவன் கோவில் பெண்மக்கள், திருமணத்திற்குப் பின்னர் சென்ற இடங்களில், அவர்கள் வழித் தோன்றல்கள் த்ங்கள் பிள்ளைகளுக்கு, அப்பத்தாள் பெயரோ அலல்து ஆயா பெயரோ வைப்பது வழக்கம்.

அந்த வகையில் வயிரவன் கோவில் வகையில் சூடிய / சூட்டிய சேனையற்கரசி என்ற தமிழரசியின் பெயர் நகரத்தார்கள் வீடெங்கும் நின்று விளக்கம் பெற்றது.

இன்று அந்தப் பெயரின் பொருளும், அறிந்தார் இல்லை, பெருமையும் உணர்ந்தார் இல்லை.

வரலாற்றில் பதிந்த சுவடுகள் பல. அந்தச் சுவடுகளில் நின்று நலம்பெற்றவை சில. சேனச்சி ஆச்சிகள் குறைந்து, சுகன்யா, அனன்யா, சுனன்யா, அபர்ணாக்கள் வந்து நிற்கின்றனர். என்ன செய்வது.??

காலம் போடும் புதுக்கோலம், யாரறிவார் ? யார் உணர்வார் ???

----- வேணும் அருள்மிகு பொய்சொல்லா மெய்யர் துணை.
----- நெற்குப்பை காசிவிசுவநாதன். 21-07-2016.



No comments:

Post a Comment