Saturday, 6 December 2014

பிள்ளையார் நோன்பு இன்றைய நிலையில் மாற்றம் தேவை

அனைத்து நகரத்தார்களுக்கும் வணக்கம் .


இன்னும் சில  நாட்களில் பிள்ளையார் நோன்பு வரவுள்ளது . பிள்ளையார் நோன்பு நமது கலாச்சாரத்தின் பாரம்பரியத்தின் ஒரு இன்றியமையாத முக்கியமான அடையலாம் .அப்போது வீடுகளில் உள்ளஅனைவரும் ஒன்றிணைந்து தம்தம் வீடுகளில் எளிமையாக உற்சாகத்துடன் கொண்டாடும் விதம் தற்போது கால மாற்றத்தால் மறைந்து வருகின்றது....நமது வீட்டு பெரியவர்களிடம் கேட்டு பாருங்கள் அவர்கள் கொண்டாடும் விதத்தை கதை கதையாக சொல்லுவார்கள்....கருப்பட்டி பணியாரம் , கல்கண்டு வடை , வெள்ளை பணியாரம் என்று பலகாரங்களை தேவைக்கு அதிகமாவே செய்யும் விதம் .... கோலம் இடுதல் முதல் இலை எடுக்கும் வரை உள்ள அந்த சிறு சிறு சந்தோசங்களை இப்போது உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அவர்களிடம் தற்போது அந்த மகிழ்ச்சியை காண முடிவதில்லை இவை மறைந்து வருகின்றது என்பது மறுக்க முடியாத உண்மை ...



ஒரு விழாவாக நாம் கொண்டாடியது இன்றைய தலைமுறையில் ஒரு நிகழ்வாக வெறும் சாமி குமிடும் தினமாக கொண்டடுகிறனர்.இது எதோ ஒரு கெட் டுகெதர் நிகழ்வு போல் நடைபெறுகிறது. நீளமாக வருசையில் குடும்பம் குடும்பமாக கூடம்மாக நிற்கின்றனர் இழையை பெறுவதற்காக காத்து கொண்டு நிற்கின்றனர் ..இது எல்லாத்துக்கும் காரணம் நமது இயந்திர வாழ்க்கை என்று மட்டும் சொல்லி விட முடியாது... இது அனைத்தையும் எடுத்து செய்ய வீடுகளில் தயங்குகிறனர் ...ஒரு கோவிலிலோ அல்லது ஒரு சங்கத்திலோ போய் எடுத்தால் சரி என்ற ஒரு எண்ணம் மட்டுமே மேலூங்கி உள்ளது . நம்ம ஆயா அப்பாதா செய்யும் கை பக்குவம் நமது இளைய தலைமுறைகளிடம் இல்லை. நம் ஆயாள் , அப்பத்தாகள் எல்லாம் ஒரே நாளில் கற்றுக்கொள்ளவில்லை சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்பது போல் பழக பழக பக்குவமும் பதமும் சரியாக வந்துவிடும் என்பதை நாம் மனதில் கொண்டு இனி வரும் வருடங்களிலாவது வீடுகளில் எடுக்க வேண்டும்.


பிள்ளையார் நோன்பு இழை எடுப்பதை நாம் நம் வீட்டிலேயே எளிய முறையில் எடுக்கலாமே .இந்த வழிபாடு மிகவும் எளிய வழிபாடு . நம் வீட்டை சுத்தம்செய்து பூசையறையில் நடுவீட்டுக்கோலமிட்டு பூசைக்கு பூ , பழம் , வெள்ளைப்பணியாரம் , கருப்பட்டிபணியாரம் (இதில் செய்ய பயன்படுத்தும் மூலப்பொருள் ஒன்று தான் ) உளுந்துவடை , மாவிளக்கில் சிறிது நெய்சேர்த்து பிசைந்து நூல்இழைகள் வைத்து சிறுபிள்ளையார் பிடித்து இழையை செய்யவேண்டியதும். ஐந்து வகை பொரி(நெல்லுப்பொரி , அவல்பொரி , கம்புபோரி,எள்ளுப்பொரி ,சோளப்பொரி)கிடைப்பதை வைத்து வழிபடலாம் , எள்ளுருண்டை ,கடலை உருண்டை மற்றும் ஆவாரம்பூ (இன்றைய சுழலில் அருகில் கிடைத்தால் பயன்படுத்தலாம் .) இவைகளே நம் பிள்ளையார் நோன்புக்கும் தேவயானை இவற்றை செய்து வழிபட நம்மில் பலர் ஏன் தயங்குகிறார்கள் என்று தெரியவில்லை .


வெளி நாடுகளில் இப்போது ஒரு GET TO GATHER நிகழ்ச்சியாகவும்
பண்பாடு பேணும் நிகழ்ச்சியாகவும் ஒருவரை ஒருவர் அறிமுகம் கொண்டு உறவுமற்றும் நட்பு பேணும் நிகழ்ச்சியாகவும் அமைந்துள்ளது . வெளிநாடுகளில் நம் தொன்மை மாறமால் குழுவாக சேர்ந்து விழாவை செய்கிறார்கள் .இது பாராட்டுதற்குரியது முடிந்தவரை நாம் எங்கு சென்றாலும் நம் காலசாரத்தையும் நம் தமிழ் மொழியையும் விட்டுகொடுக்காமல் இருப்போம் தமிழில் உரையாடுவோம் . பிள்ளைகளுக்கும் ஏன் பிள்ளையார் நோன்பு எடுக்கிறோம் . பிள்ளையார் நோன்பு எடுக்கும் முறை பிள்ளையார் நோன்புன் வரலாறு இவற்றை எல்லாம் எடுத்து சொல்லுங்கள் . ஒரு விழா என்பது ஏன் கொண்டாப்படுகிறது அதன் வராலாறு தொன்மை இவைகளை எடுத்து சொல்லுங்கள் அப்போது அந்த விழா இன்னும் சிறப்பாகவும் பிள்ளைகள் வரலாறு அறிந்து அந்த விழாவில் முழு ஈடுபாடு கொள்வர் அப்போது அந்த விழா முழுமைபெரும்.


தமிழத்தில் உள்ள நகரத்தார்ககளும் பிற பகுதிகளில் உள்ள நகரத்தார்களும் முடிந்த வரை வீட்டில் இழை எடுப்போம் . இளைய தலைமுறைக்கும் சொல்லுங்கள் நம் இல்லத்தில் எடுக்க வேண்டிய நோன்பு தற்போது நாம் வெளிநாட்டில் பணிநிமித்தமாக உள்ளோம் அதனால் நாம் இங்கு விடுதியில் சங்கத்தில் வந்து இழை எடுக்கிறோம் என்று சொலுங்கள். நம் இல்லத்தில் வைத்து ஒரு விழா செய்வது என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது .முடிந்த வரை வீட்டில் இழையை எடுப்போம் .வீட்டில் எடுத்த பின் கோயிலில் அல்லது விடுதியில் (சங்கத்தில் ) சென்றும் எடுத்துக்கொள்வோம் . இன்று நாம் நம் வீடுகளில் எடுக்க தவறினால் நாளை நம் பிள்ளைகள் மத்தியில் பிள்ளையார் நோன்பு என்றால் நகர விடுதியில் (சங்கத்தில் ), கோயில்களில் சென்று வழிபட்டு இழையை பெற்று வரவேண்டும் என்று ஒரு எண்ணம் விதைகாப்படும். இது இந்த தலைமுறையில் இல்லையில் என்றாலும் வரும் தலைமுறையில் அவர்கள் மத்தியில் அரங்கேறிவிடும் .

புரட்டாசியில் நவராத்திரி 9 நாளும் கும்பம் வைத்தும் படிக்கட்டு கட்டிவைத்து கொலு வைத்து வழிபட தற்போது பலரும் விரும்பி செய்கின்றோம் ஆடியில் வரலெட்சுமி பூசை என்று நமக்கு தொடர்பற்ற பல வித பூசைகளும் நோன்புகளையும் நம்மால் வீட்டில் எடுக்க முடிகிறது ஆனால் தொன்மை மிகு நம் பண்பாட்டு அடயாலமான பிள்ளையார் நோன்பை நம்மால் வீட்டில்    எடுக்க மன்மில்லாது இன்று நொண்டி சாக்கு சொல்கிறோம்.

முடிந்தளவு பிள்ளையார் நோன்பை வீடுகளில் எடுப்போம் நம் பண்பாடு காப்போம்.

இந்த கூற்று சரி எனில் சிந்தியுங்கள் .
தவறு என்றால் மன்னியுங்கள்.

- ஆ.தெக்கூர் கரு.கண.இராம.நா.இராமு

5 comments:

  1. திருச்சி நகரத்தார் சங்கத்தின் சார்பாக நகரத்தார்கலைஅறிவியல்கல்லூரியில் பெரிய விழாவாக நடைபெறவுள்ளது......... கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கவேண்டுகிறேன்....................................

    ReplyDelete
  2. நல்ல தொரு பகிர்வு . நாம் நம் வீடுகளில் இழை எடுப்போம் . முடியாத பட்சத்தில் விடுதிகளுக்கும் சென்று இழை எடுப்போம் .

    ReplyDelete
  3. நம் வீட்டில் பிள்ளையார்நோன்பு கொண்ண்டாட வேண்டும். இதர விழாக்கள் சேர்ந்து கொண்டாட வேண்டும். நம் கலாசாரத்தை நம் வாரிசுகளுக்கு தெரியப்படுத்துதல் அவசியம்.

    ReplyDelete
  4. some nagarathar people ask what is mean by PILLAIYAR NONBU?!....

    ReplyDelete
  5. இந்தப் பதிவில் நகரத்தாருக்கும் பிள்ளையாருக்கும் உள்ள தொடர்போடு விளக்கியிருக்கலாம்.

    ReplyDelete