Saturday 10 September 2016

போலி அடையாள தொகுப்பாளர்கள்



இன்று தமிழர் குலத் தோன்றலான கண்ணகியை வைத்து வடுக கூட்டதின் அடிவருடிகள் கண்ணகியை திராவிட உடமையாக்கி சிறுமை படுத்திடும் வகையில் சமணச்சி சைவச்சி என்றெல்லாம் ஏக வசனம் கூறி ஆறுமுகநாவலர் சமணச்சி என்று இகழ்ந்தார் என்றெல்லாம் வசனம் நடையில் பற்பல நாளேடுகளில் இதுகுறித்து பகிர்ந்து வருகிறனர். இதன் பின்னணி தமிழர்களுக்குள் அடித்துக்கொண்டு திரியட்டும் என்ற நோக்கத்தில் ஆறுமுக நாவலர் குறித்து தொடர் பரப்புரை செய்துவருகின்றனர். ஆறுமுகநாவலர் என்பவர் ஒரு வராலற்று ஆய்வறிஞர் அல்ல அவர் ஒரு சைவசமயத்துறவி அவ்வளவே . மேலும் இந்த வடுக அடிவருடிகள் கண்ணகியை மங்கலாதேவி பத்தினி தெய்வம் அவள் நெருப்பு அவளை வழிபட அவள் அனுமதி வேண்டும் என்று கூவிக்கூவி பயம்கலந்த அச்சுறுத்தல் செய்திடும் தொனியில் தானே கண்ணகியின் உதவியாளர் மற்றும் மெய்காப்பாளர் போல இன்று போலிப்பெயர் அடையாளத்துடன் தமிழர்கள் மத்தியில் உளவுசெய்து உலவிவருகின்றனர்.தன் தாயை பிள்ளை வங்க அவளின் அனுமதி வேண்டுமா என்ன ?? அல்லது அவளை தொழுதால் மட்டும் தான் அவள் தன் பிள்ளைகளை காப்பாளா என்ன ?? அவளை தோழா விட்டாலும் அவளின் பிள்ளைகளை அறத்தின் வழியில் நடத்திதுடும் தாயின் கடமைஅல்லவா ??

இன்று உண்மை அடையாத்தை புதைத்து யாணன் என்ற பெயரில் தன்னை அடையாளப்படுத்திகொண்டு உளவு வருகின்றனர் இவர் 2014 டிசம்பர் மாதத்தில் தானே ஊர் ஊராய் சுற்றி திரிந்து ஆய்வு செய்தது போல் பெருகட்டும் கண்ணகி அம்மன் வழிபாடு என்ற நூலை வெளியிட்டார் . இது முழுக்க முழுக்க பற்பலரின் கண்ணோட்டம் கொண்ட தொகுப்பு. இதில் யாணன் என்பவரின் பெயர் தொகுப்பாசிரியர் என்று உள்ளது ஆனால் எடிட்டர் என்று S.Y நாரயணன் [யாதவ் நாராயணன் ]என்று ஆங்கிலத்தில் அதில் குறிப்பிடபட்டுள்ளது.


இந்த பெருகட்டும் கண்ணகி அம்மன் வழிபாடு என்ற நூலில் இவரின் சொந்த எழுத்தில் மொத்தம் ஒரு 40 பக்கத்திற்கு குறைவாகவே இவரின் சொந்த கருத்துக்கள் உள்ளன. மீதம் உள்ளவை எல்லாமே பற்பலரின் ஆய்வு நூலில் இருந்து அங்கொன்றும் இங்குகொன்றுமாய் செய்திகளை எடுத்து பதிவு செய்துள்ளார் அவற்றை முழுவதுமாய் தொகுக்கவில்லை . மேலும் தமிழகத்தில் உள்ள சில மாரிஅம்மன் ஆலயங்கள் மீது கண்ணகி குறித்த வரலாறு பரவலாக உண்டு அவை சில இடங்களில் வாய்மொழி கதையாகவும் சில இடங்களில் கோவில் தலவரலாறாகவும் உள்ளது. இவை பலரால் முன்பே தொகுத்து வைக்கப்பட்ட செய்திகள். இன்று இவற்றை தானே தேடி கொணர்ந்துபோல் இங்கு பதிவு செய்துள்ளார் ...

இந்தநூலில் பெருமான்மையான செய்திகள் சிலம்புசெல்வர் ஐயா ம.பொ.சிவஞானம் அவர்களின் சிலபத்திகாரம் ஆய்வுரைநூலில் இருந்து சில தொகுப்புகள் 1957களில் மற்றும் 70களில் சிலம்பு செல்வர் செங்கோல் என்ற இதழில் எழுதிய சில தொகுப்புகளில் இருந்தும் சிலவற்றை எடுத்து முழுவது சரிவர தொகுத்து பதிவுசெய்யவில்லை என்பது குறிப்பிடதக்கது.
இங்கு மிகவும் முக்கியமாக கவனிக்க வேண்டியது இந்த நூலில் ஆசிரியர்க்கு மிகவும் முக்கியமான ஆய்வாளராக ஜெயமோகனையே முதன்மைபடுத்துகின்றார் கண்ணகி எரித்த மதுரை எது ?? என்ற தலைப்பில் இதுவும் ஜெயமோகனின் வலைப்பூவில் இருந்து எடுத்து கையாளப்பட்டுள்ளது (ப.எண் 22 முதல் 25). சிலம்பின் உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் /ம.பொ.சி / சி.வரதராசனார் போன்றவர்களை காட்டிலும் இந்த ஜெயமோகன் என்பவருக்கு இதில் என்ன ஞானம் இருந்தது என்று தெரியவில்லை.

மேலும் இந்த நுலில் நம்ம தானைத் தலிவர் கலிங்கப்பட்டி கோவால் சாமி நாயிடுகாருவின் பதிவு மிகவும் முக்கியாக கொடுக்கப்பட்டுள்ளது சிலம்பு என்னும் வீரகாவியம் என்ற பெயரில் இது ஒரு 13 பக்கத்திற்கு சொல்லப்படுகிறது இதை கலிங்கபட்டி தலிவர் ம.பொ.சி அறக்கட்டளை சார்பில் சிலம்பு செல்வரின் 18ஆம் ஆண்டு நினைவு விழாவில் (1ஆம் ஆண்டு சிலப்பதிகாரம் விழாவில் ) 2013இல் பேசியதில் இருந்து எடுத்த தொகுப்பாம் (ப.எண் 54 முதல் 66 வரை ).

தமிழ்தேசியத்தின் தெய்வம் கண்ணகி என்ற தலைப்பில் திரு பழ.நெடுமாறன் அவர்கள் தினமணி தமிழ் இலக்கியவிழாவில் பேசியதில் இருந்து எடுத்த தொகுப்பு என்று 2பக்கத்திற்கு (ப.எண் 126 ,127) கொடுத்துள்ளார். இது இந்த நுலில் இறுதியில் வரும் வகையில் இது உள்ளது..
இதற்கு அடுத்த பதிவுகள் எல்லாம் ஈழத்தில் உள்ள கண்ணகி வழிபாடு குறித்து ஈழத்தமிழர்ளும் சிங்களர்களும் வலைத்தளங்களிலும் வலைபூக்களிலும் தொகுத்தசெய்திகளும் அங்கு ஒன்றும் இன்கொன்றும்மாய் எடுத்து தொகுத்து இதில் கையாளப்பட்டுள்ளன.

இதில் கண்ணகியின் பயணப்பாதையை ஆய்வு செய்து கண்டறிந்த ஐயா சி.கோவிந்தராசானார் குறித்து இந்த யாதவ் [!!??]நாராயணன் என்ற யாணன் ஒரு நாலு பக்க செய்தியாக அதிலும் பெருமான்மையாக படங்களை கொண்டு நிரப்பி முழுவது கூறாது இலைமறைகாயாகவே பதிவு செய்துள்ளனர்.
மேலும் இங்கு நாம் மிகவும் கவனிக்கப்பட வேண்டியது இதில் முதுவர் இனத்தவர் குறித்து பதிவு செய்துள்ளனர் கண்ணகி அம்மா வருவா என்ற தலைப்பில் கு.கலைச்செல்வன் என்பவர் முதுவர் ஓர் அறிமுகம் என்ற கட்டுரையில் இருந்து இவை எடுக்கப்பட்டுள்ளது என்று இதில் சொல்லபடுகிறது . இதில் இவர்கள் கூறும் முதுவர்கள் குறித்து தமிழ் ஆய்வாளர்கள் சற்று தெளிவுபடுத்த வேண்டும்.
இப்படி பலரின் தொகுப்பில் இருந்து முழுவதுமாக சரியாக எடுத்து தொகுக்காமல் ஓட்டுபோட்ட செய்திகள் எப்படி முழுதொகுப்பாகும் என்று தெரியவில்லை. ஆகமொத்தத்தில் இந்த நூல் ஒரு அரைகுறை ஓட்டுபோட்ட ஒரு கந்தல் ஆடையே. மேலும் இதில் திராவிட மலையாள பாடிசோடாக்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து புனையப்பட்ட ஒரு அரைவேகாட்டு தொகுப்பாகும். இன்று தமிழகத்தை ஆளும் ஆண்ட திராவிட அரசுகளின் அடையாளஅழிப்பு செயல்திட்டங்களிலின் வெற்றிகண்டுதன் விளைவாக தமிழர்களுக்கு தமிழ் இலக்கியம் தொன்மை போன்றவைகள் பற்றிய தெளிவுகள் மழுங்கடிக்கப்பட்டு இன்று யாதவ் (??!!)நாராயண் என்ற யாணன் / ஜெயமோகன் / விகடகவிகள் போன்றவர்கள் தொகுப்புகள் எல்லாம் சரியானவை அதுவே உண்மை தொகுப்பு என்ற நிலைபாட்டை மக்கள் மனதில் வித்திடும் வகையில் காய்நகர்த்தப்படுகின்றனர் இனியும் நாம் நம் சங்கஇலக்கியங்களை படித்து தெளிவுராவிட்டால் இதுபோன்ற போலிகள் சொல்வதை நம்பு நிலை வந்துவிடும்

இந்த நூலின் தொகுப்பாசிரியர் யார் யாணனா ?? அல்லது வேறுயாருமா ?? எடிட்டர் என்று ஆங்கிலத்தில் S.y.Narayanan [yathava narayanan] என்று கொடுக்கப்படுள்ளது இவர் யார் ?? அல்லது இந்த யாதவ் (??!!)நாராயண் என்ற யாணன் இருவரும் ஒருவரா ?? அப்படி ஒருவர் என்றால் ஏன் தனது சொந்த அடையலாத்தை புதைத்து இப்படி உலா வரவேண்டும் ?? இதுபோன்ற போலிகளில் நூல்களை கவனமாக தமிழர்கள் மிகவும் கவனமா கையாளவேண்டும்

------கரு.இராமனாதன் வேள்வணிகன்

No comments:

Post a Comment