Thursday, 2 February 2017

மலேயா மண்ணில் தமிழர் நிறுவிய கோவில்கள்



        மலேயா மண்ணில் தமிழர்கள் இரண்டு நூற்றாண்டுக்கு முன்பு வெள்ளையர் ஆட்சி காலத்தில் தோட்ட தொழிலாளர்களாகவும் கூலிகளாகவும் குடியமர்த்தப்பட்டனர். அப்படி குடியமர்த்தப்பட்ட தமிழர்கள் தாங்கள் சென்ற இடமெல்லாம் தங்கள் மரபு மாறாது முருகனையும் அம்மனையும் கொண்டு சென்று வழிபட்டு வந்தனர். அப்படி முதல் முதலில் மலேயாவின் பினாங் நகரில் உள்ள ஹல்டாப் அருவி அருகில் தமிழகத்தில் இருந்து மலேயா வந்த சாது ஒருவர் நீர்வீழ்ச்சி அருகில் வேலை நிறுவிவழிபட துவங்கினார். அதுவே பின்னாளில் அங்கு பணியாற்றிய தமிழர்களும் வேலை தண்ணீர்மலையானாக முருகனாக பாவித்து வழிபட்டு வந்தனர். இந்த கோவில் 1782களில் உருவானது என்றும் சிலர் 1800 களுக்கு பின் உருவானது என்றும் சொல்லுகின்றனர். இதற்கான முழு அதிகார சான்றுகள் கிடைக்கவில்லை. நீர்விழ்ச்சி அருகில் அமைந்த கோவிலில் அனைத்து வித பினாங்கு வாழ் தமிழர்களும் வந்து வழிபட்டு தைபூசநாளில் விழா எடுத்து வழிபட்டு வந்தனர்.


பினாங்கு செட்டியார் கோவில்  வெள்ளி இரதம் அன்றைய தோற்றமும் இன்றைய தோற்றமும்


பினாங்கில் கி.பி. 1818ஆம் ஆண்டு ஆரம்பத்தில் தொழில் துவங்கிய நகரத்தார்களும் தண்ணீர்மலையானை வழிபட்டு வந்தனர்.அதன் பின் 1850களில் நீர்விழ்ச்சி பகுதிகளில் வழிபட மக்கள் கூட்டம் அதிகரிப்பாலும் நீர்விழ்ச்சியின் இயற்கை சூழல் மாசுபடுவதை கண்ட பிரித்தானிய அரசு அருவிபகுதிக்கு செல்ல தடை விதித்து அந்த பகுதியை தாவரவியல் பூங்காவாக மாற்றியது. பின் தமிழ் மக்களில் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கும் வகையிலும் நீர்விழ்ச்சியில் இருந்து மூன்று கிலோமீட்டர் முன்பாகவே 11ஏக்கர் நிலம் தந்து கோவில் அமைத்து வழிபட வழிவகை செய்தது. அந்த இடத்தில் தான் தற்போது 511 படிகள் ஏறி முருகனை தரிசனம் செய்யும் வகையில் ஒரு சிறுகோவிலாக பாலதண்டாயுதபாணி கோவில் நிறுவப்பட்டது. அதன் பின் ஒவ்வொரு குடமுழுக்கின் போதும் ஆலயம் விரிவு படுத்தி கட்டப்பட்டத்து. கோவில் உள்ள இடம் தமிழரின் உணர்வை புரிந்தது கொண்ட பிரித்தானியர்கள் தமிழருக்கும் முருகனுக்கும் கொடையாக கொடுத்த நிலமாகும். இன்றும் அவற்றை இந்துஸ் என்று சொல்லி மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடர்கள் தமிழன் என்னும் போர்வையில் ஆட்சியும் அதிகாரம் செய்து தமிழனை மேல்எழும்பி வராதவண்ணம் பார்த்து கொள்கின்றனர்.


பினாங்கு ஹில் டாப் கோவில் அன்றைய தோற்றமும் இன்றைய தோற்றமும்

ஆங்கிலேய அரசு நீர்விழ்ச்சியில் அமைத்துள்ள முருகன் கோவிலுக்கு செல்ல தடை வித்தித்ததன் எதிரொலியாக நகரத்தார்கள் தண்ணீர்மலை தண்டாயுதபாணிக்கு , 9-8-1850ல் பினாங்கு வீதியில் 138, எண் கொண்ட கோவில் வீட்டில் தண்டாயுதபாணியின் தங்க உற்சவ மூர்த்தியை நிறுவி வழிபட்டு வந்தனர்.


 பினாங்கு கூயின் வீதி முத்துமாரியம்மன் கோவில் இன்றைய தோற்றம் பெரிய லிங்கப்ப செட்டி என்னும் தமிழர் நிறுவிய கோவில்

அதன் பின் பினாங்கு வாட்டர்பால் ரோட்டில் 5 ஏக்கர் பரப்பளவு உள்ள நிலம் ஒன்றை நகரத்தார்கள் 1854ல் வாங்கி 12-12-1857ல் தண்ணீர்மலை தண்டாயுதபாணி ஆலயம் அமைத்து குடமுழுக்கு செய்ததாக வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.தென் கிழக்கு ஆசியாவில் பினாங்கில் தான் முதல் தண்டாயுதபாணி கோவில் அமைந்ததாக சிறப்பித்துச் சொல்லப்படுகிறது.

1894ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழ் நாட்டின், செட்டிநாட்டுப் பகுதியின் காரைக்குடி நகரிலிருந்து இந்த வெள்ளி இரதம் செய்யப்பட்டு "எஸ். எஸ். ரோனா" என்ற கப்பலில் அனுப்பிவைக்கப்பட்டு பினாங்கு நகர் வந்து இரதம் பூட்டப்பெற்று இன்று வரை எந்தப் பழுதுமில்லாமல் சிறப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த இரதத்தோடு உபரிப் பாகங்களாக வந்தது, 4 சக்கரங்களும்,மூக்கணைப் பகுதியும் 1994ல் புதுச் சக்கரங்களை மாற்றினார்கள். பழைய சக்கரங்கள் 99 ஆண்டுகள் உபயோகப் படுத்தப்பட்டுள்ளன. இந்த இரதமே மலேயா மண்ணில் பவனிவந்த முதல் வெள்ளிரதமாகும்.

இந்த இரதத்தின் உயரம் 25 அடி, அகலம், அதாவது சுவாமி பீடமுள்ள பகுதி 10 1/2 அடி. சக்கரம் தவிர இரதத்தின் முழுப் பகுதியும் மிக கனமான வெள்ளிக் கவசத்தால் (தகடுகளால்) பூட்டப்பெற்றது.
நூற்றாண்டுக்கு மேலாகியும் எந்தவிதப் பெரிய பழுதுபார்ப்பும் செய்யப்படவில்லை. அது அவ்வளவு உறுதியானதாகும்.ஒவ்வொரு வருடமும் இந்த இரதம் மெருகு மட்டும் போட்டு துடைத்து ஒளி பெறுகின்றது.

சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்பு தண்டாயுதபாணிக்கு 5 நாட்கள் வரை தைப்பூசத் திருவிழா பெருங் கோலாகலமாக நடைபெற்றது . பிறகு அது 3 நாட்களாகக் குறைக்கப் பெற்றுத் தற்போதைய முறைப்படி சிறப்பாக நகரத்தார்கள் நடத்திவருகிறனர் .

மலேசிய அரசாங்கமும் தைப்பூச திருநாளைப் பொது விடுமுறையாக அறிவித்து தமிழர்களை கவுரவித்துள்ளனர்.

பினாங்கு நகரின் மையப்பகுதியில் குயின் வீதியில் ஆங்கிலேயர் காலத்தில் 1800களில் பெரிய லிங்கம் செட்டி என்ற தமிழர் தான் கொண்டு வந்த அம்மன் சிலையை நிறுவி முத்துமாரியம்மன் என்று பெயரிட்டு தமிழர்கள் அனைவரும் வழிபட்டு வந்தனர். அதன் பின் 1833 வாக்கில் தமிழர்களால் மிக சிறிய அளவில் ஒரு கோவில் நிறுவப்பட்டு குடமுழுக்கும் காணப்பட்டது. அதன் பின் தமிழர்கள் ஒருங்கினைந்து குழுவமைத்து 1904வரை கோவில் நிர்வாகத்தை செவ்வனே செய்துவந்தனர். அதன் பின் கோவில் நிர்வாகம் ஹிந்து எண்டவன் போர்ட் என்னும் அரசு அமைப்பு கோவில் நிர்வாகத்தை செய்துவருகிறது. இந்தகோவில் 1980களில் கோவிலின் பெயர் மாரியம்மன் கோவில் என்று மாற்றப்பட்டது. இன்று வரை இந்த கோவிலும் பினாங்கு ஹில் டாப் தண்டாயுதபாணி கோவிலும் ஹிந்து எண்டவன் போர்ட் கட்டுபாட்டில் இருக்கிறது. இந்த போர்டில் பொறுப்பில் வருபவர்கள் ஹிந்துஸ் என்னும் அடிப்படையில் கூறிக்கொண்டும் தமிழர் என்னும் போர்வையில் நிர்வாகத்தை தங்கள் கைகளுக்குள் வைத்துள்ளனர்.

மலேயாவின் தை பூசவிழா என்றவுடன் பலரின் நினைவுக்கு வருவது பத்துமலை முருகன் கோவில். சுண்ணாம்பு பாறைகளால் இயற்கையாக அமைந்த மிகப் பழமையான மலையில் இயற்கையாவே உருவான குகையமைப்புகள் பல கொண்டது. 1890களில் பத்துமலை பகுதிக்கு வணிகத்திற்காக வந்த தம்புசாமிபிள்ளை பத்துமலை உள்ள வேல் போன்ற குகையின் அமைப்பைக் கண்டு குகையில் வேலை ஒன்றை உன்றி வழிபட துவங்கினார். மற்றும் மலாயாவின் கோலாலம்பூர் நகரில் தம்புசாமிபிள்ளை 1873களில் நிர்மாணித்து சிறப்புற வழிபாடுகள் செய்து வந்தார். அதோடு 1892களில் இருந்து தை பூச விழாவும் கோலாகலமாக துவங்கியது தரைமட்டத்திலிருந்து 100மீட்டர் உரமான மலையில் உள்ள’ கோவிலுக்கு 272 மரப்படிக்கட்டுகள் அமைத்தார். அதன் பின் 1920களில் மரப்படிக்கட்டுகளை கான்கிர்ட் படிகட்டாக மாற்றப்பட்டது.

கோலாலம்பூர் பத்துமலை முருகன் கோவில் அன்றைய
தோற்றமும் இன்றைய தோற்றம் தம்பிப்பிள்ளை என்னும் தமிழர் நிறுவிய கோவில்

இக் கோவிலுக்கு 1893களில் தம்புசாமிப்பிள்ளையின் முயற்சியால் மரத்தேர் உருவாகப்பட்டு கோலாலம்பூர் மாரியம்மன் கோவிலில் இருந்து பத்துமலை வரை ரதத்தில் முருகனை எழுந்தருள செய்து தமிழர்கள் விழாயெடுத்து வழிபடுகின்றனர். 1930வாக்கில் மரத்தேர் வெள்ளித்தேராக மாற்றப்பட்டு தைபூச விழாவை மிகவும் சிறப்புற செய்துவருகின்றனர். இன்றளவும் பத்துமலையில் வேல் வழிபாடு நிகழ்கிறது. 1920களில் கோலாலம்பூர் மாரியம்மன் கோவில் நிர்வாகத்தை தம்புசாமிப்பிள்ளை குடும்பத்தார் அரசின் வசம் கொடுக்கப்பட்டது. மலேயா அரசின் நேரடி நிர்வாகத்தில் இந்த கோவில் உள்ளது .பத்துமலை முருகன் கோவில் இவர்கள் கட்டுபாட்டில் தான் உள்ளது.

கோலாலம்பூர் மகாமாரியம்மன் கோவில் இன்றைய தோற்றம் தம்பிப்பிள்ளை என்னும் தமிழர் நிறுவிய கோவில்

இப்படி மலேயா மண்ணில் தமிழன் நிர்மாணித்த புரனதமான கோவில்கள் அனைத்தின் நிர்வாகமும் தமிழர்கள் தலைமை பொறுப்பில் இல்லாமல் ஹிந்துஸ் எனும் போர்வையில் தமிழர் அல்லாதோரே தமிழர் எனும் போர்வையில் பதவிவகித்து அதிகாரத்தில் உள்ளனர். இவர்கள் வீதியில் தமிழ் பேசியும் வீட்டின் உள்ளே தெலுங்கு மலையாளம் கன்னடம் என்று பிற மொழிபேசியும் தங்கள் திராவிட திருகுதாள வேலையை சிரியாக செய்து தமிழனை தன் கை பாவையாக வைத்துக்கொண்டு கொள்ள இந்த ஹிந்துஸ் முயற்சிகள் செய்துவருகின்றனர். அரசியல் , போதுஊடங்கள் , அரசுசார் நிர்வாகத்துறைகளில் இந்தியர்கள் தென்னிந்தியர்கள் என்றும் இந்துஸ் என்னும் போர்வையில் தமிழருக்கும் சேர வேண்டிய பதவிகளையும் அதிகாரங்கள் அனைத்தும் தமிழர் அல்லாதவர்கள் கையில் உள்ளது வருந்ததக்கது. தமிழ் பேசுபவர் எல்லாம் தமிழர்கள் அல்ல என்பதை தமிழர்களாகிய நாம் உணரவேண்டிய கட்டாய சுழலில் உள்ளோம் நாம்.

தமிழர்வாழ்வும் வளமும் சிறக்க எல்லாம் வல்ல தண்ணீர்மலையான் வழிவகை செய்யட்டும்!!!

----கரு.இராமநாதன் வேள்வணிகன்

No comments:

Post a Comment