Monday, 2 January 2017

தாரகேஸ்வரமும் நகரத்தாரும்

தாரகேசுரம் தரகாநாதர் ஆலயம் வங்காளத்தில் உள்ள ஒரு சிவதலம் .இந்த தலம் கல்கத்தாவின் கிழக்கு ரயில் பாதையில் கல்கத்தாவில் இருந்து 53 கிமீ தொலைவில் உள்ள தலம். இந்த தலம் அளவில் சிறிது என்றாலும் இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை மிக அதிகம் .






இங்குள்ள தாரகாநாதர் ஆலயத்திற்கும் வங்காளி மக்கள் தமிழகத்தில் எப்படி பழனிக்கு காவடி கட்டிக்கொண்டு விரதம் இருந்து செல்வரோ அதுபோல் இங்கு வங்காளிகள் கடுமையாக விரதமிருந்து ஆவணி மாதத்திலும் மாசிமாதத்திலும் மக்கள் கூட்டம் கூட்டமாக தோலில் கம்புகளின் இருமுனையிலும் செப்புக் குடங்களில் கங்கையின் நீரை நிரப்பிக்கொண்டு கல்கத்தா காளிகட்டத்தில் உள்ள ஆதி கங்கை என்ற ஹுக்ளி தீர்த்தத்தை செம்புகளில் நிரப்பி காவடியாக தோலில் சுமந்தபடி செல்வர் . நீரை சுமந்து செல்பவர்கள் திரும்பி பார்க்காமல் நீர்குடங்களை கீழே வைக்ககூடாது . வழியில் ஆங்காங்கே இதற்காக வைக்கப்பட்டுள சுமைதாங்கியில் வைத்துவிட்டு நீராடி விட்டு மீண்டும் எடுத்துச் செல்வதை வழக்கமாக கொள்கின்றனர்.




இப்படி கொண்டுசெல்லும் நீரை தாரகாநாதருகும் அபிசேகம் செய்து வழிபடுவர் இதோடு மட்டுமில்லாது .ஆலயத்தில் உள்ள தீர்த்தக் குளத்தில் ஆண்களும் பெண்களும் குளத்தில் முங்கி ஆலயத்தை வலம்வந்து வழிபாடு செய்வதுடன் பயணம் நிறைவுபெறுகிறது .மேலும் இங்கு சற்று சிறப்பாக நிகழ்கிறது . பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற்றகோரி தராகாநாதரிடம் வேண்டிக்கொண்டு கோயில் பூசரியிடன் சிறிது காணிக்கையை கொடுத்து அனுமதிச்சீட்டு பெற்று மண்டபத்தில் அமர்கின்றனர் . இவர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறும்வரை பலமுறை குளத்தில் நீராடி காவியுடையில் வந்து தவம் கிடக்கின்றனர் . இவர்கள் ஆலயத்தில் தரப்படும் பால் பழங்களை மட்டும் உண்டு இங்கு தங்கள் பிரார்த்தனை ஈடேறும்வரை தவம் கிடக்கின்றனர் . சிலர் இங்கு துறைவியாகவே இருக்கின்றனர்




தாரகாநாதர் கோயில் 800ஆண்டுகள் பழமையான சிறிய ஆலயம் . இந்த ஆலயம் பல போரில் இருந்து எந்த பாதிப்பையும் பெறவில்லை காரணம் ஆலயத்தின் அளவு சிறியதாக இருந்ததால் . இந்த கோயிலுக்கும் சொந்தமாக வைத்தியசாலை , கோசாலை ,சாதுக்கள் சங்கமம் , சமஸ்கிரத வித்தியாசாலை உள்ளது . இவைகள் கோயிலின் பூசாரி தர்மகர்த்தாவாக இருந்து நடத்திவருகிறார் . இவர்கள் தங்களை ஆதிசங்கரரின் வழித்தோன்றல்கள் என்று சொல்லிக்கொண்டு உள்ளனர் . இவர்கள் ஆதிசங்கரர் வகுந்த பத்துவித சன்யாசிகள் பிரிவில் ஒன்றான கிரி சம்பர்தாயத்தை பின்பற்றுபவர்கள்.





இந்த பகுதியில் ஆலயம் தோன்றியது பற்றி ஒரு வராலாறு சொல்லப்படுகிறது. இந்த பகுதில் முகுந்த்கொஸ் என்ற சிறுவன் மாடு மெய்துகொண்டிருந்த பொது தன் பசு ஒரு பட்டுப்போன பனை மரத்தின் அடியில் தினமும் பால் சுரப்பதை கண்டு அதிசயித்து ஊருக்குள் சென்று சொல்ல ஊர் மக்கள் இந்த இடத்தை தோண்ட அப்போது ஒரு லிங்கத்தின் பாணம் தென்பட்டது . தோண்ட தோண்ட அது முற்று பெறவில்லை . அன்று இரவு தாரகநாதர் மக்களின் கனவில் தோன்றி தன்னைவெளிப்படுத்தியதை மக்கள் உணர்ந்து அருகில் உள்ள ராம்நகர் என்னும் அருகில் உள்ள குறுநில மன்னன் ராய் பார்மலிடம் சொல்ல அவர் தற்போது உள்ள ஆலயத்தை எழுப்பி வணங்கினார் மன்னர். ஆலயம் சிறிய அளவில் தான் உள்ளது கருவறையில் பத்துபேருக்கு மேல் உள்ளே இருக்கமுடியாத அளவு சிறிய ஆலயம் .
இந்த  ஆலயத்தின் அருகில் பல மார்வாரிகளின் மடங்களும் உள்ளன. 


அவற்றுன் நம் நகரத்தார் மடமும் உள்ளது . இந்த மடம் 1890 களில் 15000ரூபாய் செலவில் எழுப்பப்பட்டது. அன்று கல்கத்தாவில் வாணிபம் செய்த நகரத்தார்கள் இடம் வாங்கு இந்த மடத்தை இங்கு நிறுவினர். இங்கு தினம் அன்னதானம் செய்யப்பட்டு வந்தது . நித்தியமாக தாறகாநாதருக்கும் நித்திய பால் அபிசேகம் தினமும் விடுதியில் இருந்து 1941ஆண்டு வரை பால் கொடுக்கப்பட்டு வந்துள்ளது . 



கல்கத்தாவில் ஜப்பானியர் குண்டுவீச்சுகும் ஆலானபொது கல்கத்தாவில் இருந்த பல நகரத்தார் இந்த விடுதியில் வந்து தங்கினர் .காசிக்கு யாத்திரை வரும் நகரத்தார்கள் முன்பு இந்த தலத்தில் வந்து வழிபாடுகள் செய்து யாத்திரையை முடித்தனர் . இந்த தலம் மிகவும் புனிதமாக கருதினர். காரணம் இந்த லிங்கம் சுயம்புமூர்த்தி , இந்த தலத்தின் வராலாறு தமிழத்தில் தோன்றிய சுயம்பு மூர்த்தி வராலாற்றை ஒத்தி இருக்கிறது என்பதாலும் நகரத்தார்கள் புனித தலாமாக கருதி காசி யாத்திரையை இங்கு வந்து வங்கி நிறைவு செய்தனர்.



தாரகேஸ்வரத்தில் நகரவிடுதி ரயில் நிலையத்தின் அருகில் 2கிமீ தொலைவில் உள்ளது. ஆலயத்திற்கும் அருகிலேயே செல்லும் வழியில் கடைவீதிக்கு மத்தியில் உள்ளது .இங்கு நகரத்தார்கள் ஒரு குளத்தையும் வெட்டி திருப்பணி செய்துள்ளனர் . மடத்தின் சில பகுதிகள் இன்று கடைகளுக்கு வாடைக்கும் விடப்பட்டுள்ளது. நம் விடுதியை வங்காளிகள் செட்டிபாடி என்று குறிபிட்டு அழைகின்றனர்.

மேன்மை கொள் சைவநீதி உலகெலாம்

-- ஆ.தெக்கூர் கரு.கண.இராம.நா.இராமு

1 comment: