திருவண்ணாமலை இந்த தலத்தை நினைத்தாலே முக்தி தரக்கூடிய ஒரு தலம். திருவண்ணாமலையில் நகரத்தார் மடங்கள் 5 உள்ளன. ஓயாமடம் , சாதுக்கள் மடம் , கோட்டையூர் மடம் , காரைக்குடியார் மடம் என்று பல சிறப்பாக அமைத்து நிர்வகித்து வருகின்றார்கள். ஆங்கிலேயர் ஆட்சி வந்த 18ஆம் நூற்றாண்டு தொடங்கி மன்னர்கள் ஆட்சி ஓடுக்க துவங்கியது பின் நகரத்தார்கள் திருப்பணி செய்யத் துவங்கினர் இவற்றுள் பல ஆலயங்கள் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டு வந்தனர் .அப்படி பாரமிரித்த ஆலயங்களில் திருவண்ணாமலையில் உள்ள அண்ணமலையார் ஆலயத்திற்கும் நகரத்தார்கள் பல திருப்பணிகள் செய்துள்ளனர் . சிவபெருமான், அம்பாள் சன்னதியில் உள்ள மண்டபங்கள் , விநாயகர் சன்னதி , கொடிமர மண்டபம் ,துர்க்கையம்மன் கோயில் , அணியோட்டிகால் அமைத்த பிராகாரங்கள் ,கொலு மண்டபம் போன்றவைகள் கோட்டையூர் அ.க குடும்பத்தாராலும் , பிற நகரத்தார்கள் முயற்சியால் ரூ 12,35,00செலவில் திருப்பணிகள் செய்யப்பட்டன.
கடியாபட்டி தீ.சொ.நா.,தீ.அ.குடும்பத்தாரால் 50,000செலவில் ராஜமண்டபமும் ,கானாடுகாத்தான் ராஜ அண்ணாமலை செட்டியாரால் 75,000 செலவில் பிரம்ம தீர்த்தகுளமும் கோட்டையூர் க.வீ.அழ குடும்பத்தாரால் ரூ 1,75,000 செலவில் சிவகங்கை தீர்த்தகுளமும் மற்றும் கோட்டையூர் அ.க.அ.மெ குடும்பத்தாரால் ரூபாய் 20,000 செலவில் பிராகார தலவரிசைகளும் ,கோட்டையூர் அ.க.அ.சித.வெ.நடேசன் செட்டியாரால் ரூ 5,௦௦௦ செலவில் தலவரிசைகளும் ,கோட்டையூர் ராம.பெ. நாராயணன் செட்டியாரால் ரூ 35,௦௦௦ செலவில் தாமிரத்தகடு வெய்த கலியாணக் கொட்டகையும் ( செட்டிநாட்டுப் பாணியில் ) அமைக்கப்பெற்றன .
நகரத்தார்கள் விசுவாச ஆண்டு வைகாசி 3௦ ஆம் நாள் (12/6/19௦3)திருகுடமுழுகு சிறப்பாக நிகழ்த்தப்பட்டது .இத்தோடு மட்டும் நில்லாது கோட்டையூர் பெ.க.அ.சித.வீரப்பசெட்டியார், அவரின் சகோதரி வள்ளியம்மை ஆச்சி ,காரைக்குடி முத்து.அரு.,கோட்டையூர் அ.க.அ.மெ.வ.,ராமச்சந்திரபுரம் தீ.சொ.ராம.,தீ.நா.மு , தீஅ.சா., கானாடுகாத்தான் சா.ராம.மு.ராம , ராமசாமி செட்டியார் ,ராஜா ஸ்ர.அண்ணாமலை செட்டியார் ஆகியவர்களால் , வெள்ளி இந்திரவிமானங்கள் ,வெள்ளிக்காமதேனு வாகனம் ,வெள்ளி கற்பகவிருட்ச வாகனம் , வெள்ளிதேர்கள் , பெரிய ரிஷபவாகனங்கள் , பஞ்சமூர்த்தி வாகனங்கள் , செய்து கொடையாக தரப்பட்டன மரத்தேர்கள் பழுதுபார்த்தும் சில தேர்கள் புதுப்பிக்கவும் செய்தனர் .
ரூபாய் 2,53,000 செலவில் கோட்டையூர் க.வீ அழ.குடும்பத்தார் , பெ.க.அ.சித.வீரப்ப செட்டியார் ,அ.க.அ.மெ.வெங்கடாசலம் செட்டியார் ,ராம.அழ.சிதம்பரம் செட்டியார் ,அ.கஅ.சிதம்பரம் செட்டியார் , அ.கஅ.சித.வெ.நடேசன் செட்டியார் கானாடுகாத்தான் வெ.சா.அண்ணாமலை செட்டியார் ,சா.அ.அண்ணாமலை செட்டியார் ,வெ.வீர.வெ.அரு.நாகாப்ப செட்டியார் .கொத்தமங்கலம் ராம.அரு.வெ.பெத்தாச்சி செட்டியார் ,சி.அசி.ராம.ராமன்செட்டியார் ,சி.அசி.அரு.வள்ளியம்மை ஆச்சி ,அரிமளம் செ.சித.முத்து செல்லப்ப செட்டியார் பள்ளத்தூர் ந.பெ.பெத்தப்பெருமாள் செட்டியார்,தேவகோட்டை எ.பெரி.கரு.சித.சிதம்பர செட்டியார் ,நா.க.அ.நா.பழனியப் செட்டியார், மகன் கண்ணப் செட்டியார் ,நா.க.அ.நா.பழ.,
ராமச்சந்திரபுரம் து.நா.முத்தையா செட்டியார் ,நற்சாந்துப்பட்டி வீ.மு. வீரப்பன் செட்டியார் ஆகியவர்களால் நவரத்தினங்கள் கொண்டு இழைக்கப்பட்ட திருவாபரணங்கள் , தங்க அங்கிகள் ,மணிமுடிகள் ,வெள்ளிக்கவசங்கள், வெள்ளிச் சாமான்கள் , வெள்ளிப் பூசைபொருட்கள் , இரத்தின மகுடங்கள் , வெள்ளியால் உபசார பொருட்கள் , வெண்கல அண்டாக்கள் , வெண்கல பொருட்கள் அமைக்கப் பெற்றன.
இந்த பதிவின் நோக்கம் நகரத்தார்கள் செய்த திருப்பணியை இன்றைய நகரத்தாரின் இளைய தலைமுறை அறியும் வகையில் பதிவிட்டுள்ளோம்.
--------- ஆ.தெக்கூர் கரு.கண.இராம.நா.இராமு
No comments:
Post a Comment