புள்ளி ஒருமுழுமையின் குறியீடு. ஆகவே தான் நமது நகரத்தார்கள் புள்ளி என்ற சொல்லாட்சியை மிக கவனமாகவும், பொருளார்ந்ததாகவும் பயன்படுத்தினர். புள்ளி என்பது நிறைவானது, குறையில்லாதது. ஆகவே புள்ளி என்ற சொல்லாட்சி - நாட்டுக் கோட்டை நகரத்தார் குடிமரபில், இன்றியமையா பொறுப்புகளை, பொருள்கொண்ட வாழ்வியலை தன்னகத்தே கொண்டுள்ளது.
ஒருவருக்கு, அதாவது - ஒரு நாட்டுக்கோட்டை நகரத்தார் ஆண் மகனுக்கும் அந்த மரபு வழி வந்த பெண் மகளுக்கும் திருமணம் உறுதி செய்யப்பட்டு, பாக்கு வைத்து, திருமணம் சொல்லி உற்றார் உறவினர் கூடி ஊரார் வாழ்த்துரைக்கநடைபெற்ற கணத்திலேயே அந்த இணையர், ஒரு முழுமை பெற்ற புள்ளியாகி விடுகின்றனர். இவர்கள் சமூக செயல்பாடுகளிலும், அதன் மரபுசார் நியமங்களிலும் தங்களின்பங்களிப்பை முறைப்படி செயவதற்கு உரிமையுடையவர்களாய் உள்ளனர். இப்படிப்பட்டவர்களே சமூகநிகழ்வுகள், கோயிற் காரியங்களில் நேரடியாய் ஈடுபட்டு பங்கெடுத்தல், சமூக உறவு முறைகளிடம் விவாதங்கள், கருத்துரைத்தல் ஆகிய பல்வேறு முக்கிய நடவடிக்கைகளில் ஈடுபட தகுதி உடையவர்களாகின்றனர்.
வரலாற்றுக்காலங்களில், பல அக - புறச் சூழல் காரணமாக திருமணம் என்பது குழந்தைப் பருவத்திலேயே முடிந்துள்ளது.பிற்பாடு பதினைந்து வயதிற்கு மேல் திருமணம் செய்துள்ளனர். இற்றைக் காலங்களில் பொருளாதாரம், கல்வி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சிலருக்கும், பலருக்கும் சுமார் இருபத்து எட்டு வயதிற்கு மேலும், இன்னும் சிலருக்கு முப்பது வயதும் ஆகிவிடுகின்றது. ஆகவே இன்று ஒரு நாட்டுகோட்டை நகரத்தார் மரபு வழி வந்த ஆண் மகனுக்கும், அதே நாட்டுக் கோட்டை நகரத்தார் மரபு வழி வந்த பெண் மகளுக்கும் இணையர் ஆவதற்கு அவர்கள் காத்திருக்க வேண்டிய காலம் நீட்சி பெறுகின்றது. இந்தக் கால கட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய சமூகம் சார்ந்த சில இன்றியமையா விவாதங்களில் கூட அவர்கள் தங்கள் கருத்துரைக்க வாய்ப்பில்லாமல்போய்விடுவதை உணரவேண்டிய காலத்தில் உள்ளோம்.
இது தவிர புள்ளி என்பது மீண்டும் சொல்கின்றேன், ஒரு முழுமையான பொருள் கொண்ட முழுமைபெற்ற சொல்லாட்சி. இந்த சொல்லாட்சியை அடைவதற்கு முழுமையான தகுதி என்பதும் நாட்டுகோட்டை நகரத்தார் குடி மரபில் வந்த ஆண்மகனுக்கும், அதே நாட்டுகோட்டை நகரத்தார் குடிமரபில் வந்த பெண் மகளுக்கும் நடை பெரும் திருமணத்திற்கு மட்டுமே உரித்தாகும்.
இந்தச் சூழலில், யாரேனும் தொழில் நிமித்தமாக ராஜமுந்திரி, விஜயவாடா சென்றோ அல்லது ஜெய்பூர், உதய்பூர், கொச்சி, மனபுரம் போன்று தமிழர் மரபு சாராத பண்பாட்டில் பெண்களின் நிறம் கருதி திருமணம் செய்து வந்து இங்கே குடும்பம் நடாத்துவதால் மட்டுமே புள்ளிகளாய் மாறுவதற்கு கிஞ்சித்தும் இடம் / உரிமை கிடையாது. அதுமட்டுமல்ல, இங்கேயே வந்தேறிய மாற்று இனம் சார்ந்த குடியேறிகளை திருமணம் செய்வதாலும் புள்ளிகளாகி விடமுடியாது.
ஆகவே நகரத்தார் ஆண்மகனுக்குப் பிறந்தவர்கள், மீண்டும் பணத்தின் அதிகாரம் கொண்டு பங்காளிகளை வைத்து புள்ளிக் கணக்கில் பேரேட்டில் தங்கள் பெயரை ஏற்றிவிடலாம் என்று பேராசை கொண்டு, அரசியல் பலம் காட்டினாலும் எதிர்த்துக் களமாட மானமுள்ளவர்கள் இன்னமும் உள்ளார்கள் என்பதை உணரவேண்டும்.
இதற்கும் மேலாக, இல்லை, இல்லை நிறத்தின்மேலாண்மை காட்டி விடலைகளாய், கைகளில் புகைப்படக் கருவி வைத்துக்கொண்டு அலையும் நகரத்தார் இளைஞர்களை கருவியாக்கி, போலியான நகரத்தகார் ஆவணப்படங்களை வெளியிட்டு, மீண்டும், மீண்டும் இனி வருகின்ற தலைமுறைகளை சீரழித்து விடலாம் என்று நினைத்தாலும் அதனை ஈடேற்ற விடமாட்டோம். இவ்வகையான உளவியல் மோசடிக்கு ஆளானவர்களை பதினேழாம் நூற்றாண்டு மேனியா என்ற வியாதியஸ்தர்களாகவே கணக்கில் இடுவோம், மாறாக புள்ளிகளாக முடியாது.
சரி, முடிவாக நமது வரலாறு தெரிந்த சமூக இளைஞர்கள் விவாதங்கள், முடிவுகளில் பங்கேற்பதற்கும் வயது வரம்பை ஒரு அளவு முறையாக வைத்தால், இவர்களின் பங்களிப்பு பயனுடையாதகவும் இருக்கும். நல்ல கருத்துக்கள் வெளிப்படும் போது, நீ புள்ளிக் கணக்கில் இல்லை என்ற நிலையம் வராது.
மேலும் வழமையாகவே இந்தக் கருத்தில் இருக்கும் சாதகம் என்பது, படித்த,வரலாறு தெரிந்த இளைஞர்களின் கருத்து புறந்தள்ளப்படக் கூடாது என்பதே, அதே சமயம் படித்து வரலாறு புரியாத, வாழ்வியல் தெரியாத நிற மேலான்மை உளவியலில் சிக்கித் தவிக்கும் இளைஞர்களை, மேற்படி வந்தேறியமாற்று இனத்தவர் - இவர்களை கருவியாகப் பயன்படுத்தவும் விட்டுவிடாமல் இருக்க வேண்டுயதையும் கருத்தில் கொள்ள வேண்டும். காரணம், புள்ளிக் கணக்கில் சேராத பதினேழாம் நூற்றாண்டு மேனியாவால் பாதிக்கப்பட்ட விடலைச்சிறுவர்-சிறுமியர் கைகளில் உள்ள புகைப்படக் கருவியை வைத்துகொண்டு தயாரித்த ஆவணப்படம் என்பதும் நமக்கு பின்னடைவத் தந்துள்ளது. வரலாற்றுத் தரவுகளுக்கு மாறானது. ஆனால் புள்ளிக் கணக்கு பார்ப்பவர்கள், புள்ளியாகாமல், இவர்கள் எப்படி இது போன்ற ஆவணப்படங்களை மனம் போன போக்கில் தயாரிக்கலாம் என்று கேள்வி எழுப்புவதில்லை. இந்த ஆவணப்படங்களை சுழற்சியில் விட்டு ஆதரிப்பதும், உண்மையில் வரலாறு தெரிந்த இளைஞர்கள் நாட்டுகோட்டை நகரத்தார் மரபுசார்ந்த விடயங்களில் பங்கெடுக்க விடாமல் தடுப்பதும், மீண்டும், மீண்டும் நமக்கு பின்னடைவத் தரும்.
ஆகவே நமக்கு இதுகாறும் கிடைத்த பட்டறிவை வைத்து, நமது குடிமரபின் தொன்மை காப்பதற்கு, விரைந்து செயல்பட வேண்டியது என்பது வயது வேறுபாடின்றி களமாட வேண்டிய காலம். நன்றி.
வேணும் அருள்மிகு பொய் சொல்லா மெய்யர் துணை,
----- நெற்குப்பை காசிவிசுவநாதன். 01-08-2015.
ஆவணப்படம் என்னவென்றே தெரியவில்லை. புள்ளியை பற்றி வெகு வாரியாக எழுதிய உங்களது கூற்றும் மற்ற விஷயங்களில் தெளிவாக இல்லை. தயவுசெய்து எல்லா விசயங்களையும் முழுமையாக கூறினால் எங்களுக்கும் புரியும். ஆவணப்படத்தை பார்க்கும் வசதியை செய்யவும் வேண்டுகிறேன்.
ReplyDeleteஆவணப்படம் என்று தற்போது பல நகரத்தார் இளம்தலைமுறையினர் விகடகவிகள் கூறும் நகரத்தார் சமுகத்தின் வரலாற்றை திரித்து கூறுகின்றனர் அதை கருதுகோளாக கொண்டு தவறான வரலாற்றை ஆவணம் படம் என்ற பெயரில் பதிவு செய்கின்றனர் யு டியுபில் பல உள்ளன இன்று வாரலாறு கூறுகிறோம் என்று பலர் முகநூலில் ஆங்கிலத்தில் நகரத்தார் சமுகத்தின் வரலாற்றை திரித்து எழுகின்றனர் கேட்டால் நாங்கள் pure நகரத்தார் என்று இறுமாப்பு பேசுக்கள் பேசிக்கொண்டு உலாவருகின்றனர்
ReplyDelete