எல்லாவற்றிகும் மேல் சுருக்கமாக நான் சொல்ல வருவது :-
தரையில் இருந்து #முப்பதாயிரம் அடி உயரத்தில்#வானூர்தியில் ஒய்யாரமாகப் பறந்த ஒருவன்#திடீர் என கீழே வாநூர்த்தியுடன் நொறுங்கி வீழ்ந்த பின் உயிர் தப்பியவுடன்,#வானூர்தியின்______சக்கரங்களை எடுத்து நிமிர்த்தி கைகளால்#உருட்டிக் கொண்டு - நான் மீண்டும் அதே நிலைக்கு வந்துவிட்டதாக #நினைப்பது என்பது எவ்வகையோ .....??? அதுதான் இன்று சில பல இளைஞர்கள் பன்னாட்டு கார்ப்பறேட்டுகளிடம் சில ஆயிரம் டாலர்களில், தங்கள் வாழ்க்கை இனிதே பயணிப்பதாக நினைப்பதும். ஆகவே நமது உண்மை நிலையினையும், இன்றைய நிலையினையும் ஒப்பீட்டு அளவில் கூட நினைக்க முடியாதது.
காரணம் அன்று நகரத்தார்கள் சிறு வணிகக் கடன் வழங்கும் முறைகளிலும் கூட தங்களுக்கான நியமங்களை வகுத்து, அவர்கள் செல்லும் பட்டி தொட்டிகளிலும் தங்கள் வருவாயில், நீராதாரம் பெருக்கி, உள்ளூர் மக்களின் பாதுகாப்பில் வாழ்ந்தனர். இன்று நமக்கு கொடுக்கப்பட்ட அடிக்குப் பின் தமிழ் நாட்டில் அரசியல் ஆதரவுடன் களமிறங்கிய வடுக மலையாளிகளிடம் நமது தமிழக மக்கள் மனப்புரத்தில் மனசாட்சியினை தொலைத்து, முதூட்டில் முட்டி விழி பிதுங்கி நிற்கும் போது பாதுகாப்பின்றி நிற்கின்றனர். இதுகுறித்த விழிப்புணர்ச்சி என்பது சிறிதும் இல்லாத நிலையில் அரசியல் தலைமை இல்லாத இனமாக ஒட்டுமொத்த தமிழர்களும் இருக்கும் போது, நிலைமை சீர் செய்ய மீண்டும் ஓர்மையுடன் நமது மரபு வழி இனக் குழுக்களுடன் கை கோர்க்க வேண்டும். இது அனைத்து தமிழர்களுக்கும் பொருந்தும். இந்த சிந்தனை மனதில் எழாமல் வடுக நாயர்களும் நகரத்தார்கல்தான், நல்லிகளிடம் நெல்லி எலும்பைத் தேடும் பதர்களும் நகரத்தார்கள்தான் என்று நினைத்தால், சுய அடையாளம் இழந்து மாற்றார் வஞ்சத்தில் கரைந்து நீர்த்துப் போக நேரிடும் என்பதை அனைவரும் மனதில் வைக்க வேண்டும்.
---- நெற்குப்பை காசிவிசுவநாதன். 21-07-2015 .
No comments:
Post a Comment