கொஞ்சுதமிழ் மொழியில் இல்லாத வளமையா இந்த சமஸ்கிரதத்தில் உள்ளது . நம் பிள்ளைக்கும் அழகுமிகு கொஞ்சு தமிழ் பெயர் சூட்டுவோம் அண்மையில் நம் செட்டிநாட்டில் ஒரு திருமணத்திற்கு சென்றபோது அங்கு சிறு பிள்ளைகளின் பெயர்களை கேள்விப்பட்டபொது மிகவும் வருத்தமாகவே உள்ளது. இன்றைய பிள்ளைகள் பெயர்களோ#ஸ்வஸ்திகா / #விஸ்வேஸ்வரன் / #ஸ்வஷாகா / ஸ்வப்னா /நகுலேஸ் என்று பிள்ளைகளை அழைத்தனர்.இப்படி சமஸ்கிரத உச்சரிப்பு பெயர்களே அதிகம் வைப்பது சற்றும் அழகாக இல்லை.
தமிழ் வளர்த்த சமூகமானவும் தமிழ் மொழியை கண்ணாக பார்த்த நம் ஐயாக்கள் வழித்தொன்றாலான நாம் நம் சமூகத்த்தில் தமிழ் தாய்க்கு தொண்டு செய்தவர்கள் பலர் உள்ளனர் பாடுவார் முத்தப்பர் / பண்டிதமணி கதிரேசன் செட்டியார் /வியினாகரம் ராமநாதன் செட்டியார் /பழ.முல்லை முத்தையா /அழ.வள்ளியப்பா /பதிப்பாளர் திலகம் வை.கோவிந்தன் / தமிழ் கடல் ராய.சொ /வ.சு.ப மாணிக்கம் /அழகப்பசெட்டியார்/ ச.மெய்யப்பன் / ராஜா சர் அண்ணமலை செட்டியார் /மெ.நா.சித.சிதம்பரம் செட்டியார் /எ.கே செட்டியார் / வீர.லெ.சிந்தயச் செட்டியார் /பாரிநிலைய செல்லப்பன் /திருக்குறளுக்கு தொண்டாற்றிய அறு.அழகப்பன் / கவிஞர் கண்ணதாசன் / சோம.லெ என்று பட்டியல் நீண்டுகொண்டே போகும்
இப்படிப்பட்ட தமிழ் தொண்டு புரிந்த சமூகத்தில் இன்று சமஸ்கிரத மோகத்திலும் நவீனபெயர் இடுமுறை மோகத்திலும் நம் சுய தமிழர் அடையாத்தை நாம் இழக்கிறோம். நம் மரபு வழக்கம் ஐயாவின் பெயரையும் அப்பத்தா/ஆயாளின் பெயரை இடுவதே வழக்கம் கொண்டநாம் உடன் வீட்டில் அழைக்க ஒரு பெயர் சேர்த்து நம்மில் இடும் வழக்கம் உண்டு. ஐயா/அப்பத்தாள் பெயர்கள் அரசு ஆவணங்கள் ஏடுகளில் இடம்பெறும். இந்த இருபெயரும் தமிழ் பெயராகவே இருந்தது. ஆனால் இன்றோ பலர் நாகரிக மோகத்தில் ஐயாவின் பெயரை வைக்க தயங்குகின்றனர்.அப்படி வைத்தாலும் அது அலுவல் பெயராக இல்லை.ஏடுகளில் எழுதப்படாத வகையில் தான் தற்போது உள்ளது. நாம் நம் பிள்ளைகளுக்கு நம் மரபு வழி நம் ஐயாக்கள் /அப்பத்தா/ஆயாளின் பெயர்களை பிள்ளைகளுக்கு சூட்டி அலுவல் பெயராக மீண்டும் வழக்கில் கொள்வோம் . அப்படி இல்லையேல் நல்ல தமிழ் பெயரை எளிய பெயரையாவது சூட்டுவோம். நம் குழந்தைகளுக்கும்#மங்கை / #செல்வி / #வள்ளி / #அதிரை / #அழகன் / #நடேசன் / #செழியன்என்று எளிய அழகு தமிழ் பெயரை அலுவல் பெயராக வைப்போம்.இப்படி தமிழ் பெயரை பிள்ளைகளுக்கு சூட்டுவதும் ஒருவகை தமிழ் மொழி வளர்ப்பு தான்.இன்று தமிழகத்தில் குடியேறிய கலப்பினர்கள் தங்கள் பெயரின் அடையாளத்தை தற்போது தமிழர் போல் தங்கள் பெயர்களை நெடுமாறன் / வந்தியத்தேவன்/ இளங்கோ என்று வைத்து கொள்கின்றனர் ஆனால் நாமோ நமக்கும் நம் தாய்மொழிக்கும் கொள்ளிவைக்கும் வகையில் தமிழ் பெயரை சூடிக்கொள்ளாமல் நவநாகரீகம் என்று கருதி சமஸ்கிரத்த்தில் வாயில் உச்சரிக்க முடியாத பெயர்களை சூடிக்கொண்டு மகிழ்கிறோம் . நமக்கே தெரியாமல் நம் தமிழை அழிக்கிறோம்.இனியாது மொழியில் மீது அக்கறை கொண்டு நம் ஐயாக்கள் வழியில் நடப்போம் பிள்ளைகளும் எளிய கொஞ்சு தமிழ் பெயரை சூட்டுவோம் .அயல் மொழிப்பெயரை வைத்துகொண்டு சுய அடையாளம் இழப்பதையும் தெரியாது களிப்புறுவதில் என்ன வரப்போகிறது. கொஞ்சுதமிழ் மொழியில் பெயர்வைப்போம்.முடிந்தவரை நம் ஐயாக்கள் /அப்பத்தா/ஆயாளின் பெயர்களை பிள்ளைகளுக்கு சூட்டி அலுவல் பெயராக கொள்வோம் . மரபு வழிப்பெயர்கள் வைத்து நம் மரபை காப்போம் .நம் பாரம்பரிய அடையாளம் காப்போம்
------கரு.இராமநாதன் வேள்வணிகன்
No comments:
Post a Comment