Friday 10 July 2015

நகரத்தார் தனி சிறப்புக்களும் அதனால் பெற்ற தொழில் சிறப்புகளும் ..






காடு வெட்டி போட்டு கடிய நிலம் திருத்தி
வீடுகட்டி கொண்டிருக்கும் வேள்வணிகர் வீடுகட்கு
அன்றைக்கு வந்த எங்கள் அம்மா இலக்குமியே
என்றைக்கும் நீங்கதிரு
.. பாடுவார் முத்தப்பர் செட்டியார்


நகரத்தார்கள் இரண்டாயிரம் வருடம் பழமையான தமிழ் குடி மக்கள்
கல் தோன்றி மண் தோன்றா காலத்தில்.. முன் தோன்றிய மூத்த தமிழ் குடிகளில் தலையாய குடியாக இன்று வரை உள்ளது ..

நகரத்தார் மக்கள் தோன்றிய காலம் முதலே இறை வழிபாடு அறிந்து அதை முறையாக செய்ய ஆரம்பித்த காரணத்தால் அம்மக்களிடம் குடும்ப அமைப்பு , செயல் திறன் , கட்டு கோப்பு , ஆளுமை பண்பு , சுய கட்டுப்பாடு , ஒழுக்கம் , நாணயம் போன்றவை பிறப்பிலேய உடன் பிறந்தன ..

நகரத்தார் மேற்கூறிய அனைத்தும் ஒருங்கே அமைய பெற்று ஒரே உருவமாக இருந்த காரணத்தால் அவர்களிடம் மற்றய தமிழ் குடி மக்கள் அதிக மதிப்பும் மரியாதையும் கொண்டு இருந்தனர் .. கால ஓட்டத்தில் மற்ற இனத்தை சார்ந்தும் இடத்தை சார்ந்து இருக்கும் மக்களும் நகரத்தார் இன மக்களால் பயனுர்ரனர் ..

வாழ்வின் முன்னேற்றத்தை தொலை நோக்கு பார்வையுடன் சிந்தனை செய்து அதை செயல் உருவாக்குவதில் நகரத்தார் மக்கள் சிறந்து விளங்கினர் . எந்த ஒரு இடத்திலும் தொழில் அமைப்புக்கள் பாதிக்காத வகையில் உறவுகளை வளர்த்தனர் . உற்றார் உறவினர்கள் வைத்து எதை செய்ய வேண்டும் எதை செய்ய கூடாது என்பதில் மிக கவனமான செயல் அறிவை பெற்றிருந்தனர் . ஆச்சி மார் பங்கு , பங்காளிகள் பங்கு , தொழில் பெரும் இலாபத்தில் செலுத்த வேண்டிய இறை பங்கு என்று பங்குகளை வகை படுத்தி அதை செலுத்தி வந்தனர் .

பங்கு முதலீடுகளின் முன்னோடியாக இருக்கும் நகரத்தார் இன மக்கள் உறவுகள் இன்றி மற்ற மக்களிடம் பெரும் பங்கினை அவர் அவர்க்கென்று தனி ஒரு பெறேடினை உருவாக்கி அதில் அவர்களின் வரவு செலவுகளை முறையே பதிந்து வந்தனர் ..

ஐந்தொகை கணக்கின் சாரம்சமே எளிய பாமர மக்களும் அறியும் வண்ணம் அவர்களின் கணக்கினை உருவாக்குவதே . எந்த ஒரு செயலும் மிக சுலபமாக அதன் பயனை அடுத்தவர்க்கு கொடுத்தால் அதன் உருவாக்கத்தில் மிக அதிகமான உழைப்பு இருப்பது நிதர்சனமான உண்மை அப்படி அனைவருக்கும் புரியும் வண்ணம் எடுத்து காட்டும் வரவு செலவு கணக்குகள் நகரத்தார்கள் மதி நுட்பத்தினையும் உழைப்பையும் உலகுக்கு எடுத்து காட்டுகின்றன .

உணர்ச்சிவசம் என்பது நகரத்தார் அகராதியில் இல்லாத ஒன்றே எதற்காகவும் எந்த சூல்நிளைளும் உணர்ச்சி வச படாது இறை வழிபாட்டில் மூட நம்பிக்கை செயல் பாடுகளுக்கு இடம் இன்றி வழிபடும் முறையை கொண்டு இருந்தனர் . குடும்ப அமைப்பில் ஆன் பிள்ளைகளை தொழிலில் சிறு வயது முதலே பயிற்ச்சி பெற தகுந்த ஏற்பாடுகள் செய்தனர் . கல்வி அறிவு இறை வழிபாடு இரண்டும் ஒன்றாகவே வளர நகரத்தார் மக்கள் தங்கள் பிள்ளைகளை வளர்த்தனர் .

பெரிய இலாபத்திற்கு சில முதலீடு செய்வதும் - சிறிய இலாபத்திற்கு பல முதலீடு செய்வதும் என்று முதலீடுகளில் வகைப்பாடு செய்து முதலீடு செய்தனர் .



=> தொழிற்சாலைகல்,மலை தோட்டங்கள்,வயல் வெளிகள்,ஏற்றுமதி இறக்குமதி,என்று சில பெரிய இலாபத்திற்கு சில முதலீடுகள் என்றும்

=> விவசாய கடன் கொடுத்தல் , தொழில் செயல் அறிந்து அதற்கு தகுந்த அளவு கடன் கொடுத்தல் , சில்லறை வர்த்தகம் , போன்று சில சிறிய இலபதிர்க்கு பல முதலீடுகள் என்றும்

தொழில்களின் வகை அறிந்து செய்தது அவர்களின் முன்னேற்றத்திற்கு பெரிய காரணமாகும் . கடின உழைப்பின் பயனாய் அடையும் இலாபத்திலும் தங்களுடைய வாழ்க்கையை எளிய முறையில் வாழ்ந்தது அவர்களின் சந்ததியினர் வாழ்வுக்கும் எடுத்துக்காட்டாய் அமைந்தது ..
பொருள் ஈட்டுவதில் எந்த அளவு திறமை கொண்டு இருந்தனரோ அதே அளவு இறை வழிபாட்டிலும் பொது சேவைகளிலும் அதீத ஆர்வம் கொண்டு இருந்தனர் அதன் விளைவே இன்று நாம் காணும் நகர்த்தார்களால் நிர்மாணிக்க பட்ட திருக்கோவில்களும் , பள்ளிக்கூடங்களும்,கல்லூரிகளும்,மருத்துவ மனைகளும்,நகரத்தார் தங்களுடைய பகுதிகளான செட்டிநாட்டு தொன்னூற்றி ஆறு ஊர்கள் மட்டும் இன்றி தாங்கள் தொழில் செய்ய செல்லும் அனைத்து இடங்களிலும் இன்றளவும் பெயர் சொல்லி நிற்பதை காணலாம் ..

நம் இனம் அறிந்து அடையாளம் தெரிந்து அதை வளர்க்கும் விதமாகவே நம் இன நகரத்தார்கள் செயல் பட வேண்டும் என்று எல்லாம் வல்ல அண்ணாமலையானை வேண்டுவோம் ..

..வேள்வணிகர் முத்துக்கருப்பன் செட்டியார்

No comments:

Post a Comment