Sunday, 16 April 2017

அத்தா மிக்காய் -- #திருவாசகம்


"ஆற்றின்ப வெள்ளமே #அத்தா மிக்காய் நின்ற தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்  உணர்வாய்....."

-- #திருவாசகம்





பித்தா! பிறைசூடீ! பெருமானே! அருளாளா!
எத்தால் மறவாதே நினைக்கின்றேன்? மனத்து உன்னை
வைத்தாய்; பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
#அத்தா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? 

-- #சுந்தரர்__தேவாரம்.










இங்கே #அத்தா... என்ற  சொலாட்சி பழந்தமிழில் தந்தை என்றபொருளுடன் மக்கள்வழக்கில் இருந்துள்ளது. இறைவனை தந்தைஎன்று அழைப்பது வழக்கு. மாணிக்கவாசகர் திருவாசகத்தில் தந்தைக்கும் மேலானவனாய் இறைவனைக்காண்கின்றார். சுந்தரர் தன்னை ஆட்கொண்ட இறைவனை தந்தையே என்று சரணாகதி அடைகின்றார். இந்தசொல்லாட்சி வழக்கு இன்றளவும் தமிழர் வழக்கில் தமிழ் இசுலாமியர்கள் கொண்டிருக்கின்றனர். அவர்கள் தன்களின் தந்தையை #அத்தா என்றே இன்றளவும் அழைக்கின்றனர். தமிழ் சொல்லாட்சிகள், வழக்காடல் என்பதெல்லாம் வந்தேறிகளிடம் இல்லை. அதை அவர்கள் சிறுமையாகவும் நினைத்தார்கள். தமிழர் வாழ்வும் வளமும்மொழியில் உள்ளன, நமது பண்பாட்டைக் காப்பதற்கு மொழியே முதன்மை. நம்மிடம் இருக்கும் சடங்குகள், சொல்லாட்சிகள் இவைகளை நாம் கவனிக்க வேண்டும்.

 --- வேணும் அருள்மிகு பொய்சொல்லா மெய்யர் துணை.
--- நெற்குப்பை காசிவிசுவநாதன். 15-04-2016





Friday, 14 April 2017

செய்தி

பேராசிரியர் முத்துராமன் செட்டியார் அவர்கள் -- மதகுப்பட்டி.
அனுப்பியுள்ள செய்தி.


நகரத்தார் மலர், மார்ச் தலையங்கத்தில் நாம் வெளியே பெண் எடுக்க வேண்டும் அதை முறைப்படுத்த 96 ஊர் கூட்டம் நடத்த வேண்டும் என்ற கருத்து கூறப்பட்டுள்ளது.



30 ஆண்டுகள் முன்பு பெண்களின் திருமணம் சிரமமாக இருந்து, பிரச்சனை தானே தீர்ந்தது போல் இப்போதும் தீர்ந்துவிடும்.
அவசரப்பட்டு வெளியில் பெண் எடுக்க வேண்டாம்.



முன்னோர்கள் ஒரு முறை வெளியே பெண் எடுத்தார்கள் என்று கூறி மறுபடியும் கலப்படம் பற்றி சிந்திக்க வேண்டாம்.
நகரத்தார் பெருமையும் பாரம்பரியமும் காக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் நம் குழந்தைகளுக்கான 4 நாள் Residential Camp Dr.அழகப்ப செட்டியார் இல்லத்தில் ஒன்றும் சோழபுரத்தில் ஒன்றும் நடத்தினோம்.
உள் நாடு, மற்றும் வெளி நாட்டுக் குழந்தைகள் பெற்றோர்கள் மிக ஆர்வமாகப் பங்கேற்றனர். யாரும் கலப்படத்தை விரும்பவில்லை.
 மேலும் முகாம்கள் நடக்க இருக்கிறது.


பேராசிரியர் MSமுத்துராமன் செட்டியார்,
மதகுபட்டி.

மொழியியல்

அரபு மொழியும் பாரசீக மொழியும் இந்தியாவில் ஆட்சி மொழியாகவும், அதிகார மொழியாகவும் இருந்துள்ளன. இது வரலாற்று உண்மை.

முகலாயர்கள் அராபியர்கள் அல்ல. ஆனால் அவர்கள் உஸ்பெக் என்ற தேசிய இனத்தைச் சார்ந்தவர்கள். இது தவிர முகலாயர்களின் காலத்தில் மெல்ல உருப்பெற்றதே உருது.








உருது மொழி என்பது ஏறக்குறைய இந்திதான். ஆனால் எழுத்துரு வேறு. பற்பல அரபு / பாரசீக மொழிகளின் கலப்பும் கொண்டிருக்கும்.





ஆகவே தான் தற்போதைய பாகிஸ்தான் என்பது தாங்கள் பேசுவது உருது என்றும், உத்திரப் பிரதேசத்தவர்கள் போஜ்பூரி என்றும், பாலிவுட்டில் சேர்த்து வித்தை திரைப்படங்கள் எடுப்பவர்கள் இந்தி என்றும் வேறு வேறு நாமகரணம் சூட்டுகின்றனர்.

எதுவாயினும் ஆற்காட்டு நவாபின் ஆட்சியிலும் கூட பாரசீகம் முன்னிலைப்படுத்தப்பட்டது. ஆட்சி மொழியாகவும் இருந்தது.

ஆங்கிலேயர்களின் ஆட்சியில் எப்படி ஆங்கிலம் அலுவல் /ஆட்சி மொழியாகி பின்னர் கல்வி மொழியாகவும் ஆகி, அதுவே அறிவு என்று நிலைபெற்றதோ அதுபோலத்தான்.

ஆட்சியில் உள்ளவர்களிடம் அவர்களின் அணுக்கத்தைப் பெறுவது மொழியின் வழியாகவேதான் என்பது இயல்பாகிவிட்டது.



இதற்கிடையில் நமது தமிழர்களுக்கு, மேலும் ஒரு சுமையாக வந்தேறி மாடுகளின் ஆட்சியில் தெலுங்கு என்பது ஆட்சி மொழியாக இருந்தது. அரசவைகளில் கீர்த்தனைகள் புனையப்பட்டது.

வடுக மராட்டியும் ஆட்சிமொழி என்பதை இன்றைய தமிழர்கள் மறந்துவிட வேண்டாம்.

அப்படியிருக்க இத்தனை சுமைகளையும் சுமந்து மூச்சுப் பிடித்து தன்னளவில் தன்னை தற்காத்துக்கொண்டது தமிழ்.

ஏனைய மொழிகள் எல்லாம் ஆட்சி / அரசியல் / அதிகாரம் என்று செழுமையான பாதுகாப்பில் வளர்ந்த போது, கேட்பாரின்றி இருந்த தமிழ், தன்னைத் தானே நிலை நிறுத்திக்கொண்டது காலத்தின் ஆகூழ்.

ஆகவே இசுலாமிய ஆட்சியாளர்கள் மொழியினை திணிக்கவில்லை என்பது பொய்.

அவர்களால் சிலபல பேச்சு மொழிகளும், நிலையான மொழிகளும் உருப்பெற்று இலக்கிய வளம் பெற்றன.



அவர்கள் இல்லை என்றால் ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் இருந்த போஜ்பூரி -- ஹிந்தி என்றும், உருது என்றும், இன்று பேய் உருவெடுத்து

சனாதன சண்டியர்களுக்கு ஒற்றை இந்தியா இன்ற கனவு மெய்ப்படுமா...???

இது தவிர மேற்படி அரசியலால் தமிழகத்தில் நாவப்புகளின் ஆட்சி அதிகாரம், தமிழ் இசுலாமியர்களுக்கு, அவர்களின் மதக் கட்டமைப்புகளின் உரிமைகளையும் கைக்கெட்டாமல் செய்துள்ளது,

அதாவது

எப்படி இந்து என்ற பெயரில் தமிழ்ச் சைவமும்,சைவர்களும், தமிழ் வைணவமும் மாலிய வழிபாட்டு தளங்களும் தெலுங்கு-கன்னட-மராட்டியர்கள் பிடியில் சென்று, தமிழர்களை தள்ளி வைத்துள்ளதோ...???? அதுபோலவே.......

தமிழ் இசுலாமியர்களின் மத ஆளுமையினையும் / கட்டமைப்புகளையும் அவர்கள் பிடித்து வைத்துள்ளனர்,

கூடவே அண்ணல் காயிதே மில்லத் என்ற தமிழர் ஆளுமை கொண்ட முஸ்லீம் லீக் மீண்டும் உருதுவாசிகளிடம் உள்ளது.

அதாவது எப்படி கமலாலயமும், அறிவாலயமும் கன்னட-தெலுங்கு-மராட்டிய-மார்வாடி இத்யாதிகள் கைகளில் உள்ளதோ அதுபோல.

ஆகவே தான் மன்னர் மானிய ஒழிப்பிற்கு பின்னரும் இந்திரா காந்தி தமிழகத்தில் வந்தேறிய நவாபிற்கு இறுதிவரை இளவரசர் பட்டம் கொடுத்து வைத்திருந்தார்.

தமிழர்களின் சுயாதீனத்தை யார் கைக்கொண்டாலும் / கெடுத்தாலும் அவர்களுக்கு இந்திரா-நேரு போன்ற முகமூடி ஆர்.எஸ்.எஸ் கூட்டம் வெஞ்சாமரம் வீசும். மகுடம் சூட்டும்.

இது வரலாற்று உண்மை.


அப்படியிருக்க நாம் இசுலாமியர்களால் நமது மொழிக்கு எந்த குந்தகமும் இல்லை என்று சொல்வது எந்த வகை நியாயம்...???

ஆகவே சனாதனிகளை எதிர்க்கின்றோம் என்று வந்தேறிய வேற்று வகையினரையும் நாம் ஏற்க முடியாது.

மண்ணின் மைந்தர்களை, அவர்களின் உரிமைகளை மதம் என்ற போர்வையில் சிக்குண்டு அடிமைகொள்வது யாராக இருந்தாலும் தவறுதான்.

இதனை எதிர்த்து களமாடுவதே உண்மையான சுயாதீன விடுதலையாகும்.

நன்றி,

அன்புடன்,
வேணும் அருள்மிகு பொய்சொல்லா மெய்யர் துணை.
நெற்குப்பை காசி விசுவநாதன்.
09-04-2017.