Monday, 20 October 2014

ஐப்பசி மாதமும் செட்டிநாட்டும் :



நம் செட்டிநாட்டில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விழாக்களும் விஷேசங்கள் நிகழும். அதில் இந்த மாதத்தில் சிவபெருமான் வழிபாட்டிற்கும் காவேரி வழிபாட்டிற்கும் உரிய மாதமாக வைத்துள்ளனர் நம் முன்னோர்கள் .

இந்த துலா (ஐப்பசி ) மாதத்தில்  புனித நதிகளில் நீராடுதல் , சிவன் வழிபாடு செய்வதற்கும் மிகவும் உகந்த மாதம் .கந்தன் சூரனை வைத்தது  இந்த மாதத்தில் தான் மற்றும்  தீபாவளி கொண்டாடப்படுவது இந்த ஐப்பசியில் 

இந்த மாதத்தில் நம் நகரத்தார்கள் அமைத்த சிவாலயகளில்  காலையில் காவேரிப்புராணம் தினமும் இந்த ஐப்பசி மாதத்தில் படிப்பது வழக்காக கொள்வர்  இந்த மாதத்தில் நகரத்தார் ஊர்களில் உள்ள எல்லா சிவன்கோயில்களிலும் இந்த மாதத்தில் காலையில் காவேரி அன்னையை போற்றி கூறும் காவேரிப் புராணம் படிப்பர் . அப்போது நம் ஆச்சிகள் வீட்டில் இருந்து அவர் அவர் தங்களால் இயன்ற அளவு கொஞ்சம் துவரம்பருப்பு ,பாசிப்பருப்பு , புளி , அருசி , கோதுமை , கடலைப்பருப்பு ,  சிறுதானியங்கள் , நவதானியங்கள் அல்லது காய்கறிகள் போற்றவைகளை  கொஞ்சம் கொண்டும் சென்று துலா புராணம் படிக்கும் ஐயருக்கு தானமாக கொடுத்து காவேரிப் புராணக் கதையை கேட்பார்கள் . கார்த்திகை முதல் நாள் முடவன் கடைமுழுக்கு மிகவும் விசேசம் . அன்று மாயவரம் , சங்குமுகம் (பூம்புகார்) , ஸ்ரீரங்கம் போன்ற தலங்களில் நம் நகரத்தார்கள் சென்று நீராடி சிவனை வழிபடுவர் .

இதுமட்டும் இல்லது இந்த மாதத்தில் காவேரிக் கரைகளுக்கு சென்று நீராடுவர் . இந்த மாதத்தில் கங்கையே தான் ஏற்று கொண்ட எல்லா பக்தர்களுக்கு பாவத்தையும் இந்த மாதத்தில் காவேரியில் நீராடி சிவபெருமானை வழிபட்டு தன் பாவத்தை போக்கிக்கொள்கிறாள் என்பது ஐதீகம். அதனால் இந்த மாதத்தில் காவேரியில் நீராடுதல் மிகவும் நற்பலன்கள் தரக்கூடியது .
அது மட்டும் இல்லது இந்த மாதத்தில் நகரத்தார்கள் காவேரி கரைகளில்  நீராடி ஆற்றில் இருந்து மண் கொண்டு கரையில் சிவலிங்கமாக பிடித்து அவற்றுக்கும் தும்பை பூ சாற்றி சிவபெருமானை வழிபடுவர் .
மேலும் இந்த மாதத்தில் அனைத்து நகர சிவாலயங்களிளும் சோமவார  சங்காபிஷேகம் சிறப்பாக நிகழும். பொதுவாக நகரத்தார்கள் முருகனையும் சிவனையுமே தம் தலையாய தெய்வாமாக கொண்டு வழிபடுகின்றனர் . அதனால் இந்த  மாதத்தில் சிவன்பெருமானை வழிபடுவோர் சோமவார விரதத்தை கடைபிடித்து வழிபடுவோர் . ஐப்பசி மாதத்தில் வரும் திங்கள்கிழமையன்று சிலர் உண்ணா நோன்பிருந்தும் ஒருவேளை உண்ணா நோன்பிருந்து சிவனை வழிபடுவர் . இந்த ஐப்பசி பௌர்ணமி நாளில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகமும் எல்லா நகரத்தார் சிவாலயங்களிலும் நிகழும் . அன்று  மாலை சோறு வடித்தும்  அதிரசம் , முறுக்கும்  போன்ற இனிப்புகள் செய்தும் , காய் கனி மாலைகள் , புடலங்காய் , காரட் , போன்ற காய்கறிகளை அவித்து வைத்து சிவனுக்கும் அன்னத்தை கொட்டி அபிசேகமாக  செய்யப்படும் அன்னம் ஒவ்வொன்றும் சிவனாககே காட்சி தருகிறார் என்பது ஐதீகம். பின் அந்த அன்னத்தை பத்தர்களுக்கு , காக்கை குருவிக்கு , மீன்கள் போன்ற ஊயிர்களுக்கும் அன்னத்தை அளிப்பது வழக்கம் .

மற்றும்  இந்த மாதத்தில் நகரத்தார்கள் தீபாவளி திருநாளை  சிலர் காசிக்கு சென்று புனித நீராடி விஸ்வந்தர் விசாலாட்சி அன்னையை வழிபட்டு இங்கு நிகழும் மிட்டாய் திருவிழா என்று அழைக்கப்படும் திருவிழாவை  காண செல்வர் . தீபாவளி யன்று காசி நகரில் அண்ணபூரணி லட்டு தேரில் பவனி வருவதைக் காணக் கண்கோடி வேண்டும் . அது மட்டுமா இந்த தீபாவளியை யொட்டி நம் காசி நாட்டுகோட்டை நகரத்தார் சத்திரத்திற்கும் தங்க அண்ணபூரணி , காசி விஸ்வநாதர்  மற்றும் விசாலட்சி அன்னை ஆகிய போர்த்திருமேனிகள் இந்த மூன்று நாட்களுக்கு மட்டும் நம் நகர விடுதிக்கும் கொண்டு வந்து சிறப்பாக பூசைகள் நிகழும் இதை கானைவும் நகரத்தார்கள் பலர் இங்கு வருவது வழக்கம் . இது சிவனை வழிபடுவோருக்கும்

தீபாவளிக்கும் முதல் நாள் இரவே அண்டாகளில் நீரி நிரப்பி அதில் ஆலிலை , அத்திஇலை , வேம்பு , மாவிலை , அரச இலை  போன்ற இலைகளை நீரில் போட்டு வைத்திருப்பர் . அதனுடன் வேம்பாகளில் நீர் நிரப்பி தயாராக வைத்து இருப்பர் . நல்லெண்ணெய்யில் சிறிது சீரகம் , வெள்ளைபூடுஓர் இரண்டு பல் போட்டு எண்ணையை காய்ச்சி முதல் நாள் இரவே தயார் செய்து வைத்திருப்பர் . இன்று நகரங்களில் குடியேறிய பின் சற்று மாறுதல்கள் ஏற்பட்டு உள்ளது ,. சிலர் இந்த முறைகளை இன்றும் செய்து வருகின்றனர் . சிலர் இருக்கும் இடத்தில இவைககள் கிடைக்கவில்லை என்பதால்  வெறும் வெந்நீரில் தலை முழுகி இந்த தீபாவளி நாளை துவங்குகின்றனர் .
மற்றும் தீபாவளி திருநாளில் நகரத்தார்கள் தங்கள் இல்லங்களில் அதிரசம், தேன்குழல் , மனலோம் , மைதா சிப்ஸ் , மாவுருண்டை , தட்டை , சீப்பு சீடை , சீடை  போன்ற பலகாரங்களை செய்தும் காலையில் வெள்ளனா எழுந்து நம் ஆச்சிகள் கவுன்அருசி அவித்து , வெள்ளப்பணியாரம் , சீயம் , உளுந்து வடை போன்ற பலாரங்கள் தங்களால் இயன்றவற்றை செய்து காலையில் குபேரன் , லக்ஷ்மிக்கும் பூசை செய்து வழிபடுவர்  சில வீடுகளில் கும்பம் வைத்து லட்சுமியை பூசை செய்வர் . பின் பெரியவர்கள் வீட்டில் விளக்கேற்றி வைத்து பிள்ளைகளுக்கும் மஞ்சள் தடவி வைத்த புத்தாடைகளை தருவர் . புத்தாடையை பெறும்போது பெரியவர்கள் காலில் விழுந்து ஆசிகள் பெற்று பெரியவர்கள் திருநீறு பூசி அவற்றை பெற்றுக்கொள்ளவர் . இந்த வழக்கம் இன்றும் நம் வீடுகளில் நடைமுறையில் உள்ளது .
அதன் பின் அருகில் உள்ள ஆலயம் சென்று வழிபட்டு வருவது வழக்கமாக உள்ளது .  தலை தீபாவளி என்றால் நம் செட்டிநாட்டில் மாப்பிள்ளை வீட்டிற்கும் தீபாவளி பலகாரங்ளுடன் கெண்ட வேட்டி , சேலை எடுத்துக் குடுத்து தீபாவளிக்கும் முன்பு வந்து பெண்வீட்டார் அழைத்து விட்டு செல்வர் . புதிதாக திருமண மாணவர்கள் தங்கள் மாமியார் வீட்டுக்கு மணமகன் சென்று அவர்களுடன் தீபாவளி கொண்டாடுவதும் அவர்கள் தங்கள் வீட்டில் அன்று காசப்பு எடுத்து விருந்து வைப்பதும் வழக்கம் .

ஐப்பசி மாதத்தில் வரும் அமாவாசைக்கு அடுத்து வரும் நாட்களில் கந்த சஷ்டி மிகவும் கோலாகலமாக நிகழும் இந்த விழாவை காணவும் பல நகரத்தார்கள் விரதம் இருந்து முருகனை வழிபட திருச்செந்தூர் நகரவிடுதிக்கும் வந்து தங்கி  சூரசம்ஹாரத்தை காண்பர் .இது மட்டும் அல்லது பரவலாக நகரத்தார்கள் பல முருகன் கோயில்களில் இந்த விழாவை நிகழ்த்தி முருகனை வழிபடுவர் . இந்த விரத நாட்களில் நகரத்தார்கள்  கந்தபுராணம் படித்தல் , சஷ்டிக்கவசம் படித்தில் போன்றவைகளை படிப்பர் . இந்த விரத நாட்களில் சிலர் ஒரு வேலை மட்டும் உணவு மாலையில் உண்டும் , சிலர் வெறும் பால் பழங்களை மட்டும் முருகனை வணங்கி அர்ச்சனை செய்த பின் உண்டு நோன்வு இருப்பர்  இந்த மாதத்தில்

நகரத்தார்கள் இந்த மாதத்தில் காவரிப்புராணம் , கந்தபுராணம் படித்து நல்ல வழியில் வாழ்வை எதிர்கொள்ளவேண்டும் என்ற நோக்கில் இத்தனை கோட்பாடுகள் கொண்டிருந்தனர் .முன்பு  இந்த காவிரிப் புராணம் படித்தல் என்பது தற்போது உள்ள தலைமுறையினர் அறியாத ஒன்றாகவும் மறந்து வரும் ஒன்றாக உள்ளது . தற்போது இந்த நிகழ்வு நம் சென்னை மயிலை காபாலீஸ்வரர் ஆலயத்திலும் இந்த நிகழ்வும் ( காவேரிப் புராணம் படித்தல் ) நடைபெறுகிறது .

-ஆ.தெக்கூர் கண. லெனா. நா. இராமநாதன்

மேலும் காவேரிப் புராணம் pdfஇல் படிக்க
 இதோ லிங்க் கீழே உள்ளது

http://tamilheritage.org/old/text/ebook/thula.pdf

Wednesday, 8 October 2014

குழந்தைக் கவிஞர்" அழ.வள்ளியப்பா

மிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் ராயவரம் என்ற சிறுகிராமத்தில் அழகப்ப செட்டியார்-திருமதி உமையாள் ஆச்சி ஆகியோருக்கு மகனாக அழ.வள்ளியப்பா 1922ம் ஆண்டு நவம்பர் 7ம்தேதி பிறந்தார்.
திரு .அழ.வள்ளியப்பா அவர்கள் (61வது வயது )சாந்தியின் போது



ராயவரத்தில் உள்ள எஸ்.கே.டி.காந்தி துவக்கப்பள்ளியில் தனது ஆரம்ப நிலைப் படிப்பைத் துவக்கினார். கட்டிடத்துக்கு எப்படி அஸ்திவாரம் முக்கியமோ அதுபோல கல்வி பயில்வதில் அரம்பக்கல்வி என்ற அஸ்திவாரத்தை ஆசிரியர்கள் இவருக்கு வசப்படுத்தினர். ராயவரத்திலிருந்து 4கி.மீ தூரத்திலுள்ள கடியபட்டி பூமீஸ்வரசுவாமி உயர்நிலைப்பள்ளியில் தனது உயர் நிலைக் கல்வியை பயின்றார். நாள்தோறும் தன் கிராமத்திலிருந்து சக மாணவர்களுடன் நடந்தே சென்று உயர்நிலை படிப்பை படித்துவந்தார்.

இவ்வாறு நடந்து செல்லும்போது ஒருநாள் அழகான பாடல் ஒன்றை சிறுவன் வள்ளியப்பா இயற்றினார். சகமாணவர்களிடம் அந்த எளிய பாடலைச் சொல்ல, அவர்களூம் உற்சாகமாக அதைப் பாட்டாகப் பாடியவாறே பள்ளிக்கு வந்தனர். இப்படி பாடிக்கொண்டே வந்ததில் தூரம் குறைந்து போனதாக உணர்ந்தனர் அனைவரும்! சகமாணவர்கள் தந்த உற்சாகம் எளிய வார்த்தைகளைக் கோர்த்து பாடல்களைப் புனைவதும் பாடும்போது பாடுவதற்கு சிரமப்பட்டால் அதனை மாற்றி அமைத்து தரப்படுத்துவதும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பாடல் இயற்றும் திறனை வளர்த்துக்கொண்டார். பாடல்களில் எளியசொற்களைப் பயன்படுத்துவது முக்கியம் என்பதை அந்தப் பிராயத்திலேயே உணர்ந்த வள்ளியப்பா தனது வாழ்நாளில் கடைசிவரை இயற்றிய பாடல்களில் இதைக் கடைப்பிடித்தார்!

பாட்டு இயற்றும் இந்தத் திறமையை வளர்த்தெடுக்க பேரா.மதுரை முதலியார், திரு.இளவழகனார் மற்றும் இராசமாணிக்கனார் போன்றோரை அணுகி தம் பாட்டெழுதும் தாகத்தை வெளிப்படுத்த இந்த ஆன்றோர்களும் அவருக்கு உறுதுணையாக இருந்து வழிகாட்டினர்!
சாதாரணக் குடும்பத்திலிருந்து சென்னை சென்று கல்லூரிப்படிப்பு என்ற எட்டாக்கனியை அடைவதில் சிரமப்பட்ட காலம் அவருடைய காலம்! அதனால் தன் படிப்புக்கு ஏற்ற ஒரு வேலையை 400 கி.மீ. பயணித்து சென்னை நகரில் வேலை கிடைக்க அவர் பெற்ற மதிப்பெண்கள் துணையாக இருந்தது!

1940ல் திரு.அழ.வள்ளியப்பா சென்னைக்கு வந்தார். சென்னை பாரிமுனைப் பகுதியில் நாட்டுக்கோட்டை நகரத்தார் வசித்த பகுதியை தற்காலிக முகவரியாக கொண்டு எதையாவது சாதிக்கவேண்டும் என்ற வெறியோடிருந்த ஏராளமான இளைஞர்களோடு கரம்கோர்த்து எதிர்காலத்திற்கான நிரந்தரத் தீர்வை அடையும் முயற்சியில் இறங்கினார்.
சக்தி காரியாலயம் என்ற நிறுவனத்தில் காசாளராக முதன்முதலில் சேர்ந்தார். வேலையில் சேர்ந்துவிட்டாலும் தனது அபிலாசையான பாடல் புனைவதையும் இணையாக வளர்த்து வந்தார். கொஞ்ச காலம் கழித்து, 1941ல் இந்தியன் வங்கியில் எழுத்தராக இணைந்துகொண்டார்!
 
திருமதி.வள்ளியம்மை ஆச்சி 1944ம் ஆண்டு பிப்.4ம்தேதி இவருடைய வாழ்க்கையில் இணைந்த பொன்னான நாளாகும்! குடும்பம் என்ற சுமை வண்டியை மூச்சுத் திணறலோடு இழுக்க விடாமல் தன் பங்குக்கு திறம்பட நடத்தியதில் திருமதி வள்ளியம்மை ஆச்சிக்கு பெரும் பங்குண்டு! ஒவ்வொரு ரூபாயாக எண்ணிப்பார்த்துச் செலவழித்தாலும் சிக்கனமாகச் செலவழித்து அதிலும் சிறுகச் சிறுகச் சேமித்து குடும்பப் பொருளாதாரத்தை சிறப்பாக நிர்வகித்தார் என்றால் மிகையாகாது!

அலமேலு, அழகப்பன், கஸ்தூரி, உமையாள் மற்றும் தெய்வானை என்று அய்ந்து குழந்தைகளோடு இல்லம் நிரம்பியிருந்த நேரத்தில் குடும்பப் பொறுப்பை தன் தோளில் ஏற்றிக்கொண்டு குழந்தைகளுக்கான இலக்கியப் பணியை தம் கணவர் மேற்கொள்ள ஏதுவாக ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளித்தார்!

1944-54 ஆண்டுகளில் தம்மை முழுமையாக குழந்தைகளுக்கான இலக்கியப் படைப்புகளில் ஈடுபடுத்திக்கொண்டார்! "பால மலர்", "டமாரம்", "சங்கு", மற்றும் "பூஞ்சோலை", ஆகிய சிறுவர் இதழ்கலுக்கான கெளரவ ஆசிரியராகப் பணியாற்றினார்.

1950களில் திரு.வள்ளியப்பா அவர்களும் ஒரு சில குழந்தை எழுத்தாள நண்பர்களுமாகச் சேர்ந்து சிறார் எழுத்தாளர் அமைப்பை 1950ல் தோற்றுவித்தார்கள்! சக்தி வை.கோவிந்தன் இந்த அமைப்பின் முதல் தலைவர் ஆவார். இந்த அமைப்பானது சிறுவர் இலக்கிய வளர்ச்சிக்கு தமிழில் பாடுபட தங்களை அர்ப்பணித்துக்கொண்டது. தமிழ் மொழியில் சிறுவர் உரைநடையும் பாடல்களும் இடம்பெற இந்த அமைப்பு வெற்றிகரமான சிறார் இலக்கிய எழுத்தாளர்களது படைப்புகளை வெளிக்கொணர்ந்தது. இந்த அமைப்பில் பொதுச் செயலாளர், தலைவர் மற்றும் ஆலோசகராகப் பல்வேறு பொறுப்புகளில் திரு.அழ.வள்ளியப்பா வெகு சிறப்பாகச் செயல்பட்டார். 650க்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கான புத்தகங்களை வெளியிட்டது இந்த அமைப்பு!
 
"தென்னிந்திய மொழிகளின் புத்தக அமைப்பு" ஒன்றை ·போர்டு அறக்கட்டளை துவக்கி தென்னிந்திய மொழிகளில் புத்தகங்களை கொண்டு செல்ல திட்டமிட்டது. இது தொடர்பாக ·போர்டு அறக்கட்டளை நிர்வாகம் திரு.அழ.வள்ளியப்பாவை தொடர்புகொண்டு இந்தப் பணியில் ஈடுபட அழைப்பு விடுத்தது! இதனைத் தொடர்ந்து இந்தியன் வங்கி இதன் திட்ட அலுவலராய் நியமித்தது. திரு.அழ.வள்ளியப்பா அவர்களின் ஓராண்டுச் சேவையால் பெரிதும் கவரப்பட்ட ·போர்டு அறக்கட்டளை இன்னும் ஒருவருடம் இன்னும் ஒருவருடம் உங்கள் சேவை எங்களுக்குத் தேவை என்று சொல்லி 5 ஆண்டுகளுக்கு இந்தப் பணியை நீடித்தது! அவருடைய சேவையை எழுத்தில் வடித்துவிட இயலாது. சிறிதும் பெரிதுமான பல்வேறு திட்ட பணிகளைக் கையாள்வதில் அவர் எடுத்துக்கொண்ட முயற்சியும் அயராத உழைப்பும் இன்றைக்கும் மதித்துப் போற்றப்படும் வகையில் அமைந்தது. சாகித்திய அகாதெமியின் டெல்லி புத்தக திருவிழாவில் தமிழ் பிரிவுக்குப் பொறுப்பாளாராக இருந்ததோடு சர்வதேச புத்தகத் திருவிழாவை கொழும்புவில் துவக்கி வைத்தார்.

யுனஸ்கோ மாநாட்டில் இந்திய எழுத்தாளர்களின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டு "தமிழ் எழுத்தாளர்கள் யார்? யார்?" என்ற வெளியீட்டிற்கு பெரும் முயற்சிகலில் தன்னை ஈடுபடுத்தி வெளிக்கொணரந்தார்! இந்தக் காலகட்டத்தில் தமிழ் எழுத்தாளர்கள் அமைப்பில் செயலர், பொதுச்செயலர், துணைத்தலைவர், தலைவர் என்ற பொறுப்புக்களையும் வகிக்க நேர்ந்தது குறிப்பிடத்தக்கது! தமிழ் எழுத்தாளர்கள் அமைப்பையும் தமிழ் எழுத்தாளர் பேரவையையும் ஒருங்கிணைத்து மாநாடுகளை நடாத்தியது அனைவராலும் பாராட்டும் செயலாக மிளிர்ந்தது.
பாரதியாரின் 81வது பிறந்த தினத்தை சிறப்பாகக் கொண்டாட தமிழக் அரசு நியமித்த குழுவில் இடம்பெற்றார். 1979ல் "வளர்ந்து வரும் குழந்தை இலக்கியம்" என்ற தலைப்பில் கல்கி நினைவு நாள் விழாவில் பேருரை நிகழ்த்தியது அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது! மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொண்டு அரசின் விழாக்குழுவின் சார்பில் "குழந்தை இலக்கியத்தில் தமிழ்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி மாநாட்டுப்பார்வையாளர்களைக் கவர்ந்தார்!
"குழந்தைகள் கவிஞர்" என்ற சிறப்புப் பட்டத்தை அளித்து தமிழ் எழுத்தாளர் தமிழ்வாணான் திரு.அழ.வள்ளியப்பாவைக் கெளரவித்தார்!



கவிஞருக்கு கெளரவமும், பட்டங்களும் தேடி வரத்துவங்கியது.1961ல் மேதகு குடியரசுத் தலைவர் டாக்டர்.ஜாகீர் உசேன், திரு.அழ.வள்ளியப்பா நடத்திய மூன்றாவது குழந்தைகள் இலக்கிய மாநாட்டைத் துவக்கிவைத்து கெளரவித்தார். திரைத்துறை வித்தகரும் வள்ளலுமானதிருஏவி.மெய்யப்பச் செட்டியார் திரு.அழ.வள்ளியப்பா அவர்களின் 25 வருட குழந்தைகள் இலக்கியச் சேவையைப்பாராட்டி விழா எடுத்து கெளரவித்தார்! 1973ல் குழதைகளுக்கான எழுத்தாளர்கள் அமைப்பு திரு.அழ.வள்ளியப்பா அவர்களின் 51வது பிறந்த தினத்தன்று பாராட்டிக் கெளரவித்தது! 1975ல் தமிழ் கவிஞர் மன்றம் பாராட்டிச் சிறப்பித்தது. 1976ல் மேதகு குடியரசுத் தலைவர் ·ப்க்ருதீன் அலி அகமது அவர்கள் குழந்தைகள் எழுத்தாளர் அமைப்பின் வெள்ளிவிழாவில் கலந்துகொண்டு திரு.அழ.வள்ளியப்பாவைகெளரவித்து விருது வழங்கிச் சிறப்பித்தார்! "பிள்ளை கவியரசு" மற்றும் "மழலை கவிச்செம்மல்" போன்ற பட்டங்கள் திரு.அழ.வள்ளியப்பா அவர்களைத் தேடி வந்தது! 1982ல் "தமிழ் பேரவைச் செம்மல்" என்ற பட்டத்தை மதுரை காமராஜ் பலகலைக்கழகம் வழங்கிச் சிறப்பித்தது. 1985ல் இந்தியக் குழந்தைகள் கல்விச் சபை நடத்திய விழாவில் திரு.அழ.வள்ளியப்பா அவர்களை நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் திரு.பல் ராம் ஜாக்கர் பாராட்டிச் சிறப்பித்தார்! 1988ல் தஞ்சாவூர் தமிழ் பலகலைக் கழகம் "தமிழ் அன்னை" என்ற சிறப்பு பரிசை வழங்கிப் பாராட்டியது!1982ல் சஷ்டியப்த பூர்த்தியை பிள்ளையார்பட்டியில் வெகு சிறப்பாக திரு.அழ.வள்ளியப்பா தம்பதியர்க்கு நடைபெற்றது. இதில் பிள்ளைகள், பேரக்குழந்தைகள், நண்பர்கள், உற்றார் உறவினர்கள், எழுத்தாளர்கள், நலம்விரும்பிகள் என்று ஏகமாய் திரண்டு தம்பதியரை வணங்கி ஆசிபெற்றும் அளித்தும் அன்பால் திளைக்கவைத்தனர்

திரு .அழ வள்ளியப்பா அவர்களும் திரு .AVMமெய்யப்ப செட்டியாரும்


.·போர்டு அறக்கட்டளைக்காக பணியாற்றிய பிறகு 1962லிருந்து மீண்டும் இந்தியன் வங்கிப் பணிக்குத் திரும்பினார். சென்னையில் ஆழ்வார்பேட்டை, ஆயிரம்விளக்கு, ஹாரீஸ் சாலை இந்தியன் வங்கி மேலாளராகப் பணியாற்றிவிட்டு காரைக்குடி இந்தியன் வங்கியின் காரைக்குடி பகுதியின் மேலாளராகப் பணியாற்றி 1982ல் பணி ஓய்வு பெற்றார்.பணி ஓய்வுக்குப் பிறகு தனது முழு நேரத்தையும் குழந்தைகளுடைய தமிழ் இலக்கியத்திற்க்காக அரும்பாடுபட்டார். அத்தோடு கோகுலம் சிறுவர் மாத இதழில் கெளரவ ஆசிரியர் பொறுப்பையும் ஏற்று திறம்படச் செய்தார்.

திடீரென்று மரணம் நேர்ந்த1989 வரை தமது வாழ்நாளைக் குழந்தைகளுக்கான இலக்கியத்துக்காகவே பணியாற்றி மறைந்தார்.
58 தலைப்புகளில் பாடல்கள், சுய வரலாறு, நாவல்கள் மற்றும் நாடகம் என்று வெளியீடுகண்டது; 1000க்கும்மேற்பட்ட குழந்தைகள் பாடல்கள் படைத்து வெளியிட்ட பெருமை திரு.அழ.வள்ளியப்பா அவர்களையே சாரும்! "நதிகளினுடைய கதை" பகுதி ll என்ற புத்தகத்தை தேசிய புத்தக அறக்கட்டளை மொழிபெயர்த்து 14மொழிகளில் வெளீயிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது! "மலரும் உள்ளம்", "பாட்டிலே காந்தி கதை" மத்திய அரசின் விருதுகளைப் பெற்றுள்ளது. "நல்ல நண்பர்கள்", "பெரியோர் வாழ்விலே", "சின்னஞ்சிறு வயதில்" மற்றும் "பிள்ளைப் பருவத்திலே" தமிழக அரசின் விருதுகளைப் பெற்றது.

"வாழ்ந்தார், மறைந்தார் என்ற இயல்பைத் தாண்டி காலம்காலமாய் குழந்தைகள் வாழும் உலகில் என்றென்றும் வாழ்ந்திருக்கும் வரலாறாக இவர் நிலைத்து நிற்கிறார்; நிற்பார். வெற்றிகரமான குழந்தைகளுக்கான புதினங்களைப் படைத்த அவர் மனதளவில் குழந்தையாகவே வாழ்ந்தவர் என்பதும் இங்கே குறிப்பிட்டாகவேண்டும்! குழந்தைகள் மகிழ்ச்சிக்காக, அவர்களின் குதூகலத்துக்காக அவர்களைக் கவர்ந்திட தன் பாட்டாலும், கதையாலும் தம் இறுதி மூச்சுவரை பாடுபட்டவர்! குழந்தைகள் உலகம் உலகம் இருக்கும்வரை இவரது புகழும் இந்த உலகில் இருக்கும் என்பது அய்யமில்லை!

உலகம் சுற்றிய தமிழர் அ.கரு.செட்டியார் (எ)ஏ.கே.செட்டியார்


'உலகம் சுற்றும் தமிழர்’ என்றவுடன் நம் நினைவுக்குச் சட்டென வருபவர் - அ.கரு.செட்டியார் என்னும் பெயருடைய ஏ.கே.செட்டியார் அவர்களே. இவர் உலகத்தைச் சுற்றியது எதற்காக? பயணம் செய்து பல நாடுகளைப் பார்த்து மகிழவேண்டும் என்பதற்காகவா?


இல்லவே இல்லை; வாழ்விக்க வந்த காந்தி மகாத்மாவின் வரலாற்றுக்குரிய வாழ்க்கைச் சம்பவங்களைச் செய்திப் படமாக்கிச் சிறப்பிக்க வேண்டும் என்ற தணியாத ஆவலே இவரைத் தரணியை வலம் வரச் செய்தது.

‘உலகத்தினர் இந்தியாவை மதிப்பதற்குக் காரணமே காந்தியடிகள்தான்’ என்ற கருத்தை அவர் அறிந்து வைத்திருந்ததினாலேதான் இவர் காந்தியைப் பற்றிய செய்திப்படம் தயாரிக்க உலகம் முழுதும் சுற்றினார். ‘‘உலகம் சுற்றும் தமிழன்’’ என்ற பயண நூலையும் எழுதினார்.

மேல்நாடு என்றால் இங்கிலாந்து மட்டுமே என்றிருந்த பிரிட்டிஷ் அரசாட்சிக் காலத்தில் அமெரிக்காவிற்குப் போய்வந்த புரட்சிவீரர் இவர். கொழுத்த பணக் காரர்கள்தான் மேல்நாடு பயணம் செய்ய முடியும் என்கின்ற காலகட்டத்தில்-சராசரி வகுப்பைச் சேர்ந்த செட்டியார் வெற்றிகரமாக உலகைச் சுற்றி வந்தது ஒரு சாதனையே.

இந்திய அரசு செய்திப்படம் ஒன்று எடுப்பதற்கு முன்னரே மகாத்மா காந்தியைப் பற்றிய புகைப்படங்களை எல்லாம் பாடுபட்டுச் சேகரித்து டாக்குமெண்டரியாகத் தொகுத்த முன்னோடி.

‘குமரிமலர்’ என்ற மாத இதழை இலட்சியப் பிடிப்போடு 40 ஆண்டுகள் நடத்திய பத்திரிகையாளர். இப்படி இவர் பெருமையைச் சொல்லிக் கொண்டே போகலாம்.இவர் பிறந்தது 3.11.1911 இல் கோட்டையூரில்; இவர் மறைந்தது 10.9.1983 இல் சென்னையில். பள்ளிப் படிப்பு 8 ஆண்டுகள் (1920 - 1928) திருவண்ணாமலையில் இரங்கூனில் ‘தனவணிகன்’ என்ற இதழுக்கு ஆசிரியராகப் பொறுப்பேற்று குறைந்த காலம் பணியாற்றினார். இளமையிலேயே தமிழில் கதை,கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவராகத் திகழ்ந்தார்.

1928 இல் எஸ்.எஸ்.வாசன் நடத்திய ஆனந்த விகடனில் ‘சாரதாம்பாள்-சிறுதமாஷ்’ என ஒரு சிறுகதையை இவர் எழுதினார். இவர் எழுதிய முதல் கதையும் இதுதான்;கடைசிக் கதையும் இதுதான்.ஆங்கில வாரப் பத்திரிகை ஒன்றில் வெளிவந்த கதையைத் தழுவி அதனை எழுதினார்.

1936 ஆம் ஆண்டு, புகைப்படப் படிப்பின் பொருட்டு ‘ஜப்பான்’ சென்றார். படிப்பு முடிந்ததும் ‘பர்மா’ வந்தார். அப்போதுதான் தமது முதல் பயண நூலான ‘ஜப்பான்’ என்ற நூலை இவர் எழுதி இரங்கூனில் வெளியிட்டார். பின்னர் இந்த நூல், ஆங்கில அரசால் தடைசெய்யப்பட்டது.

இந்த நூலின் மூலம் கிடைத்த வருவாயைக் கொண்டு அமெரிக்கா சென்றார். அங்கே பகுதி நேர வேலை செய்து புகைப்படத் தொழில் பற்றிய மேல் படிப்பைத் தொடர்ந்தார். தமது ஜப்பான் பயண அனுபவத்தை நூலாக எழுதினார்.

தமது முதல் நூலான ‘ஜப்பான்’ முன்னுரையில் ‘‘ஒரு நாட்டைப் பற்றி எழுதுவது என்றால் - அந்நாட்டில் குறைந்தது இரண்டு ஆண்டுகள் தங்கி, அந்நாட்டு மொழியை நன்கு பயின்று, அந்நாட்டு மக்களோடு நெருங்கிப் பழகுதல் வேண்டும். ஆனால், நான் ஜப்பானில் தங்கி இருந்தது ஒரு மாத காலம்தான். நுனிப்புல்லை மேய்வது போன்ற இந்நிலையில், நான் அதிகம் எழுத முடியாது என்றாலும்,ஜப்பானைப் பற்றித் தமிழர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தாலேயே இந்நூலை எழுத முன் வந்தேன்!’’ என்று திறந்த மனத்தோடும் பொறுப்புணர்ச்சியோடும் இவர் எழுதினார்.

2.10.1937 இல் - நியூயார்க்கிலிருந்து டப்ளினுக்கு ‘சமரியா’ என்னும் கப்பலில் இவர் பிரயாணம் செய்தார். அப்போது, கப்பலில் பிரயாணம் செய்தவர்கள் காந்திஜியின் பிறந்த நாளைக் கொண்டாடி மகிழ்ந்தார்கள். 2.10.1937 என்பது காந்தியின் 68வது பிறந்த நாள் ஜெயந்தி அல்லவா!

இந்த காந்தி ஜெயந்தி விழாவில் கலந்து கொண்ட இவருக்கு,அப்போது ஒரு எண்ணம் உதித்தது. ‘புகைப்படத் தொழில் படிப்புப் படித்தவனாகிய நான், ஏன் காந்திஜி பற்றிய செய்திப்படம் ஒன்றைத் தயாரிக்கக் கூடாது?’ இந்த எண்ணம் இவருக்குத் தோன்றியவுடன் இவருக்கு காந்திப் பைத்தியம் பிடித்துவிட்டது.

அதே நினைவாக மூன்றாண்டுகள் உழைத்தார்.இந்தியாவைச் சுற்றிப் பல முறைகள் பயணம் செய்தார். உலகத்தின் பாதி நாடுகளுக்குக் கப்பலில் பயணம் செய்தும்,விமானத்தில் சுற்றிப்பறந்தும் வந்தார். அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் பயணம் செய்து சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட செய்திப்பட கம்பெனிகளுக்குச் சென்று வந்தார். அவர்களோடு கலந்து ஆலோசித்தார்.

இப்படியாகக் கடுமையாக உழைத்து - முதலில் 50,000 அடி காந்திப்படம் எடுத்தார். பிறகு அதிலிருந்து 12,000 அடியில் காந்தி செய்திப் படத்தை உருவாக்கினார்.

இப்படத்தைத் தயாரிக்க நான்கு கண்டங்களில் இவர் இலட்சம் மைல் பிரயாணம் செய்தார்;பற்பல செய்திப் பட கம்பெனிகளில் ஏறி இறங்கினார்; ஒரு நூறு கேமராக்காரர்கள் எடுத்த படங்களைச் சேகரித்தார்.

ரோமன்ரோலந்து, போலிக் போன்றவர்களைப் பேட்டி கண்டார். காந்தி பற்றிய உலக அறிஞர்களின் கருத்தைக் கேட்டறிந்தார். அவற்றையெல்லாம் உரிய இடத்தில் இணைத்து ‘மகாத்மா காந்தி’ செய்திப்படத்தை 24.08.1940இல் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முதலில் வெளியிட்டார். இந்தப் படத்தை 1952 இல் மீண்டும் ஆங்கிலப் பின்னை உரையுடன் தயாரித்தார். காந்தியின் புகழைப் பரப்பினார்.

மகாத்மா காந்தி உடலுடன், உயிருடன், உள்ளத்துடன் வாழ்ந்தபோது, அவருக்குச் செலுத்தப்பட்ட ஒரு தமிழனின் மகத்தான காணிக்கையாக இச்செய்திப் படம் ஏ.கே.செட்டியாரால் இந்தியாவிலேயே முதன் முதலில் உருவாக்கப்பட்டது.இதற்காக ஒவ்வொரு தமிழனும் பெருமை கொள்ளலாம்.
இத்தகு சாதனையைச் செய்த செட்டியாரின் நூற்றாண்டு விழாவினை மத்திய அரசும்,மாநில அரசும் கொண்டாட வேண்டும் என்பதை அரசியல்வாதிகளுக்கு நான்,அப்போதைக்கு இப்போதே நினைவுபடுத்துகின்றேன். 2011இல் இவருடைய நூற்றாண்டு வருகிறது அல்லவா!

மகாத்மா காந்தி பற்றிய செய்திப்படத்தை எடுப்பதற்காகவே உலகின் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்தார். அதன் விளைவே இவர் பயண நூல்கள் பலவற்றை எழுதக் காரணமாக அமைந்தது. பயண நூல்களின் முன்னோடியாக இவர் போற்றப்படுகிறார்; புகழப்படுகிறார்.

ஆம்! "இன்று எத்தனையோ விதமான பயண நூல்கள் வெளியாகின்றன. ஆனால், இலக்கியமாய் மதிக்கக் கூடிய பிரயாண நூல் வடிவெடுத்தது சந்தேகமின்றி ஏ.கே.செட்டியாரின் பேனாவில் தான் என்பதைப் பாரபட்சமில்லாத நெஞ்சங்கள் ஒப்புக்கொள்ளும்!"என்று அறிஞர் கி.சந்திரசேகரன் எழுதுகிறார்.

மாதப்பத்திரிகையான ‘குமரிமலர்’ தோன்றியது இரண்டாம் உலகப் போர்க் காலமான 1943இல். அந்நாளில் புதிதாக பத்திரிகை தொடங்க ஆங்கில அரசு அனுமதிக்காது என்பதனால் இங்கிலாந்து நாட்டில் வெளியான பெங்குவின் ரீடர் கட்டுரைக் களஞ்சியத்தைப் பின்பற்றி தமிழ்நாட்டில் ‘குமரிமலர்’ மாதம் ஒரு புத்தகமாக மலர்ந்தது.

தமிழில் முதன்முதலாக போட்டோ ஆப்செட் முறையில் படங்களையும், விளம்பரங்களையும் - அசோசியட் பிரஸ்ஸின் உதவி கொண்டு குமரிமலர் - தனது ஆண்டு மலரில் வெளியிட்டது. உலக மகாயுத்தத்தின் காரணமாக தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் திருக்கழுக்குன்றத்தில் வசித்த போது,அவருடைய அருமையான புகைப்படத்தை குமரிமலர் வெளியிட்டது. ஐயர் கடைசியாக எடுத்துக்கொண்ட புகைப்படமும் அதுவே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

‘குமரிமலர்’ 1943 ஏப்ரல் முதல் 1983 ஏப்ரல் வரை ஏறக்குறைய 40 ஆண்டுகள் நடைபெற்றது. இடையில் 1.4.1945 முதல் 1.1.1946 வரை குமரிமலர் வெளிவருவது தடைப்பட்டது.மீண்டும் 1.2.1946 இல் வரத்தொடங்கியது. ஏ.கே.செட்டியார் வெளிநாடு சென்றபோது, அறிஞர் வெ.சாமிநாத சர்மா ஆசிரியப் பொறுப்பேற்று குமரிமலரை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம் சுற்றிய தமிழரான ஏ.கே.செட்டியார் எழுதிய நூல்கள் இருபதிற்கு மேலாகும்.அவற்றில் சக்தி கோவிந்தன் பதிப்பகத்தாராலும் மற்றும் டி.வி.எஸ்.நிறுவனத்தாராலும் சில நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இனி இவர் எழுதிய நூல்களின் பட்டியலைக் காண்போம்.

1. ஜப்பான் (1936), 2. திரையும் வாழ்வும் (1943), 3. பிரயாணக் கட்டுரைகள் (1947), 4. மலேயா முதல் கானடா வரை (1955), 5. அமெரிக்க நாட்டில் (1956), 6. கரிபியன் கடலும் கயானாவும் (1957), 7. உலகம் சுற்றும் தமிழன் (1958), 8. அண்டை நாடுகள் (1958), 9. ஐரோப்பா வழியாக (1961), 10. இட்டபணி (1962), 11. குடகு (1967), 12. புண்ணியவான் காந்தி (1969).

பின்வருபவை சக்திமலர் வெளியீடுகள்.இவை சக்தி வை.கோவிந்தனால் வெளியிடப்பட்டவை ஆகும்.

1. ஜப்பான் (1940),

2. உலகம் சுற்றும் தமிழன் (1940),

3. அமெரிக்கா (1940) பின்வருபவை - இலவச வெளியீடுகளாக டி.வி.எஸ்.நிறுவன உதவியுடன் பள்ளி,கல்லூரி நிறுவனங்களுக்கு அன்பளிப்பாகத் தரப்பட்டன.

1. உணவு, 2. பண்பு, 3. கொய்தமலர்கள், 4. அவ்வையார்

பின்வருபவை - ஏ.கே.செட்டியாரால் விழாக்களின் போது தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டவை. இவைகளும் இலவச வெளியீடுகளே ஆகும்.

1. புத்தகம், 2. திருமணம்

இவற்றைத் தவிர - ஏஷியன் டிராவல்ஸ் பிரைவேட் லிமிடெட் - என்ற சென்னை நிறுவனம் இவருடைய தொகுப்பு நூலான ‘பயணக்கட்டுரைகள்’ என்ற நூலை 15.08.1968இல் வெளியிட்டுள்ளது. சென்ற 100 ஆண்டுகளில் தமிழ்நாட்டைப் பற்றி தமிழர் எழுதிய 140 பயணக் குறிப்புகளையும், கட்டுரைகளையும், பாடல்களையும் பழைய தமிழ் நூல்களிலிருந்தும், தமிழ் பத்திரிகைகளிலிருந்தும் இயன்ற அளவு திரட்டி இந்நூலில் ஏ.கே.செட்டியார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேயா முதல் கானடா வரை

இந்த நூல் ஏப்ரல் 1955 இல் வெளிவந்தது, 231 பக்கங்கள். நாற்பது மாதங்கள் வெளிநாடுகளில் பயணம் செய்த செட்டியார்,நான்கு புத்தகங்கள் வெளியிட எண்ணினார். இந்த நூலை முதலில் எழுதினார். தனது நண்பர்கள் வீட்டில் தங்கியபோது, திருப்பூரில் இந்த நூலை எழுதினார்.

உலகத்தின் பல நாடுகளில் பிரயாணம் செய்த போது ஜாதி, மதம், நிறம், மொழி என்கின்ற பேதம் இல்லாமல்,மனிதனை மனிதனாக நினைத்து, மதித்து,அன்போடு உபசரித்து,அரிய உதவிகள் புரிந்து எண்ணற்ற அன்பர்களுக்கு நன்றி.எல்லாவற்றிற்கும் மேலாக ஆண்டவனின் அருளுக்கு நன்றி என இந்த நூலின் முன்னுரையில் இவர் எழுதியுள்ளார்.

கரிபியன் கடலும் கயானாவும்

நாற்பது மாதங்கள் வெளிநாடுகளில் பயணம் செய்த செட்டியார் அந்த அனுபவம் பற்றி நான்கு நூல்கள் எழுதத் திட்டமிட்டார் அல்லவா? அந்த வரிசையில் மூன்றாவதாக எழுதப்பட்ட புத்தகம் இது.இதை 14.03.1957இல் வெளியிட்டார். 92 பக்கங்கள்; 16 படங்கள் தமது நூல்களில் படங்கள் இல்லாமல் செட்டியார் எந்த நூலையும் வெளியிட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நூலில் கயானாவைப் பற்றியும்,அங்கு ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்புக்குக் காரணமான பின்னணிச் சம்பவங்களையும் விளக்கமாக எழுதியுள்ளார். கண்ணுக்குத் தெரியாத தூரத்தில் வாழும் நமது மக்களைப் பற்றித் தெரிந்துகொள்ளவே இப்புத்தகங்களை எழுதியதாக ஏ.கே.செட்டியார் கூறுகிறார்.

பஹாமத்தீவுகள் - ஜமைக்கன் - பார்படோஸ் - டிரினிடாட் - பிரிட்டிஷ் கயானா - சூரிணம் - வெனிஸுவோல் ஆகிய பகுதிகளைப் பற்றி விரிவாகவும் அங்குள்ள தமிழர்கள் பற்றியும் சுவைபடக் கூறுகிறார்.

மலேயா - இந்தோனேஷ்யா - பாலித்தீவு ஜோக்ள காந்தா சுமத்ரா - ஆஸ்திரேலியா - பிஜித்தீவு - கானடா போன்ற நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்ட அனுபவங்களையும், அங்கு தாம் கண்ட காட்சிகளையும், மக்களின் நடை, உடை, பாவனை, உணவு, பழக்க வழக்கங்களையும் விரிவாக எழுதியுள்ளார்.

இந்த நூலுக்கு வேறு எந்த நூலுக்கும் எழுதாத அளவு பதினேழு பக்கங்கள் மிக நீண்ட முன்னுரையை இவர் எழுதியுள்ளார்.இந்நீண்ட முன்னுரையானது இப்பயணங்களின் முக்கியத்துவத்தையும் இவர் கொண்ட பெருமிதத்தையும் வெளிப்படுத்துகின்றன என்றே சொல்லலாம்.

‘‘இப்புத்தகத்தில் உள்ளதெல்லாம் உண்மை என்று சொல்ல வேண்டாம். என்னால் காணப்பட்ட காட்சிகளே ஆகும். ஒவ்வொருவரும் உண்மையைத் தத்தமக்குத் தெரிந்தவாறு உணருகின்றனர். உண்மையை வரையறுத்துக் கூறுவது கடினம். கடவுள் ஒருவரே உண்மை!’’ என்று இவர் கூறுகிறார்.

இந்த வையத்தில் எத்தனையோ பேர் பிறந்து மறைகிறார்கள். ஆனால் ஒரு சிலரே தாங்கள் வாழ்ந்த காலத்தின் அடிச்சுவடுகளைப் பிறருக்குப் பயன் படும்படியாக விட்டுச் செல்கிறார்கள். அப்படி எண்ணக்கூடிய சிலரில் ஒருவர் புண்ணியவான் ஏ.கே.செட்டியார் அவர்கள்.

சுய விளம்பரத்தை என்றுமே விரும்பாத இவர் தமது புகைப்படத்தைக் கூட பத்திரிகைகளுக்குத் தந்ததில்லை. புகழையும் வேண்டாத புனிதராகப் பொலிந்தார். இப்பேர்ப்பட்ட மாமனிதர் எங்கள் குடும்பத்தில் ஒருவராக இருந்து என்னுடன் பழகினார் என்பதும், எங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார் என்பதும் பெருமை தரும் செய்திகள் ஆகும்.

தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தின் தமிழியல் பண்பாட்டுப் புலத்தில் ஏ.கே.செட்டியார் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட கட்டுரை.

Tuesday, 7 October 2014

வித்வத் சிகாமணி' சிந்நயச் செட்டியார்:



பெரும்புலவர் என்று 19-ஆம் நூற்றாண்டில் புலவர்களால் புகழப்பெற்றவர் "வித்வத் சிகாமணி' சிந்நயச் செட்டியார். இவர் தேவகோட்டையில் "மேலவீடு' எனப்படும் செல்வக் குடும்பத்தில், மாற்றூர்க்கோயில் - உறையூர் பிரிவில், 1855-ஆம் ஆண்டு இலக்குமணன் செட்டியார்-லெட்சுமி ஆச்சிக்கு நான்காம் பிள்ளையாகப் பிறந்தார். இவரது அண்ணன்மார் மூன்று பேர். பிறந்த தேதியும் மாதமும் அறியக் கிடைக்கவில்லை.

சிந்நயச் செட்டியார் ஓர் ஆசுகவி. இவரது குரு, தேவகோட்டை "வன்றொண்டர்' நாராயணன் செட்டியார். இந்த வன்றொண்டர், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மாணவர். சிந்நயச் செட்டியாரின் மானசீக குரு யாழ்ப்பாணம் ஆறுமுகநாவலர். "சிலேடைப் புலி' பிச்சுவையர், காரைக்குடி சிவபூசகர் சொக்கலிங்கம், இராமநாதபுரம் ரா.ராகவையங்கார் ஆகியோர் சிந்நயச் செட்டியாரின் மாணவர்கள்.

இவருடைய உருவத் தோற்றம் யாரையும் ஈர்க்கக் கூடியது. நல்ல சிவப்பு நிறம், விபூதி, ருத்ராட்சம் அணிந்து பஞ்சகச்ச மேலாடையில் சிவப்பழமாய்க் காட்சி அளிப்பார். கையில் எப்பொழுதும் ஓலைச்சுவடி இருக்கும். ரத்தினக் கம்பளத்தில் வீற்றிருப்பார்.

இராமநாதபுரம் அரசர் பாஸ்கர சேதுபதியின் உறவினர் பாண்டித்துரைத் தேவர் மிகச் சிறந்த புலவர். அவர், சிந்நயச் செட்டியாரின் இனிய தோழர். இருவரும் அடிக்கடி சந்தித்து அளவளாவுவர். பாண்டித்துரைத் தேவர் நான்காம் தமிழ்ச் சங்கத்தை மதுரையில் நிறுவ முயன்றபோது, அவருக்கு உறுதுணையாக நின்றவர் சிந்நயச் செட்டியார்.

அவர் எழுதியுள்ள நூல்கள், மதுரை மீனாட்சி அம்மைப்பதிகம், நகரத்தார் வரலாறு, திருவொற்றியூர்ப் புராணம், குன்றக்குடி மயின்மலைப் பிள்ளைத் தமிழ், தேவகோட்டை சிலம்பைப் பதிற்றுப்பத்து அந்தாதி, இராமேசுரம் தேவைத் திரிபு அந்தாதி, திருவண்ணாமலை அருணைச் சிலேடை வெண்பா, காசி யமக அந்தாதி, வெளிமுத்திப் புராணம், கும்பாபிஷேக மகிமை, ஐம்பெரும் காப்பிய ஒப்பீடு, கண்டனூர் மீனாட்சி அம்மை பாடல் முதலியன.

ரா.ராகவையங்கார் தன் மாணவர் மு.ராகவையங்காருக்குப் பாடம் கற்பித்தபொழுது, சிந்நயச் செட்டியாரின் சில நூல்களையும் கற்பித்தது குறிப்பிடத்தக்கது.

சிந்நயச் செட்டியாரின் மனைவி பெயர் மீனாட்சி. இவர்களுக்குப் பிள்ளை இல்லாததால், இருவரும் காசிக்குச் சென்று ஓராண்டு பிள்ளைவரம் வேண்டி, தினந்தோறும் கங்கையில் நீராடி, காசி விசுவநாதரைத் தொழுது வந்தனர். குழந்தை பிறக்க வேண்டி ஒரு வாழை மரக்கன்று நட்டனர். அது வளர்ந்து, குலைதள்ளியபொழுது இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்குக் "காசி' என்று பெயரிட்டனர். பின்னாளில் தேவகோட்டைக்குத் திரும்பி, தமிழ்ப் பணியிலும், ஆன்மிகப் பணியிலும் ஈடுபட்டார். குழந்தை காசி, மூன்றாண்டுகளுக்குப் பின் காலமானது விதி வசமே!

பிறகு, சிந்நயச் செட்டியார் திருவாரூரில் சில காலம் வசித்தார். பெருமளவு தேவகோட்டையில்தான் வாழ்ந்தார். அக்காலத்தில் அங்கு யாராவது புலவர்கள் சொற்பொழிவாற்ற வந்தால், முதலில் சிந்நயச் செட்டியாரைச் சந்தித்து அவரது ஆசிபெற்றே செல்வது வழக்கம்.

சிந்நயச் செட்டியார் மிகவும் அவையடக்கம் உள்ளவர். அவர், தனது மயின்மலைப் பிள்ளைத் தமிழ் அவையடக்கப் பாடலில், "கடையடுத்த மடமையினேன்' என்று தன்னைப் பற்றிக் கூறிக்கொள்கிறார்.

நகைச்சுவையாகப் பேசுவதிலும் வல்லவர்; வாக்குப் பலிதமும் உடையவர். ஒருமுறை வெளிமுத்தி என்ற ஊருக்குச் சென்றபொழுது, அவ்வூர் மக்கள் சிலர் அவரைச் சூழ்ந்துகொண்டு, ""நீங்கள் ஆசுகவியானால் இங்குள்ள ஆண் பனையைப் பழுக்க வைக்க வேண்டும்'' என்றார்கள். உடனே அவர், ""பங்குக்கு மூன்று பழம்தர வேண்டும் பனந்துண்டமே'' என்று கவிபாடினார். என்ன அதிசயம்! ஆண் பனை பெண் பனையாக மாறிப் பூத்துக் காய்த்துப் பனம்பழம் மூன்று கீழே விழுந்த காட்சியைக் கண்டு ஊரே வியந்தது.

திருவாரூரில் இவர் வாழ்ந்த காலத்தில் பதஞ்சலியும் வியாக்கிரபாதரும் பூஜை செய்த இடமான "வினமல்' என்ற திருத்தலத்தில் உள்ள சிவன் கோயிலைப் புதுப்பித்தார்.

சிந்நயச் செட்டியார் தேவகோட்டையில் இருந்தபொழுது ஒருநாள் காலையில் சிவபூஜை முடித்துக் கம்பளத்தில் அமர்ந்தபொழுது, ஜெர்மானியர் இருவர் வந்து, தமிழில் பேசி, அவரிடம் இருந்து சில சுவடிகளைப் பெற்றுச் சென்றுள்ளனர். சில தினங்களில் அவர்கள், இவருக்கு ஜெர்மனியில் இருந்து சுவடிக்கான பணம் அனுப்பி உள்ளனர். சிந்நயச் செட்டியார் காலமாகுமுன் அப்பணம் வந்திருக்கிறது.

இவரை, நகரத்தார் குருபீடமாகிய கோவிலூர் ஆதீனம் போற்றி இருக்கிறது. அக்காலத்தில் கோவிலூர் ஆதீனத்துக்குச் சொத்துகள் வாங்கியபொழுது சிந்நயச் செட்டியார் பெயரில் வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, உ.வே.சாமிநாதய்யர் போன்றோர் இவரைப் பாராட்டியுள்ளனர். "வன்றொண்டர்' நாராயணன் செட்டியார், ""தன் மாணவர்களில் ஆசுகவி பாடக்கூடியவர் சிந்நயச் செட்டியார் ஒருவரே'' என்று தன்னிடம் கூறியதாக உ.வே.சா., தமது சரித்திரத்தில் கூறியிருக்கிறார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருப்பணி செய்த "வயிநாகரம்' குடும்பத்தைச் சேர்ந்த ராமநாதன் செட்டியார், தமது "கவிதைமலர்' என்ற நூலில், சிந்நயச் செட்டியாரைப் போற்றிப் பாடல் எழுதியுள்ளார்.

ஒருமுறை அன்பர்கள் சிலர் அவரைப் பார்த்து, ""செல்வத்தின் முன் கல்வி நிற்குமா?'' என்று கேட்டனர். அதற்கு அவர், ""செல்வம் எடைக்கு நிற்கும்; கல்வி உறைக்கு நிற்கும்'' என்றார். தன் பெயருக்கு அவர் விளக்கம் கூறினாராம் இப்படி, "சித்துடனே நயம் சேர்ந்தால் - சிந்நயம்' ஆகும்.

தேவகோட்டை அருகில் "இறகுசேரி', "கண்டதேவி' என்ற இரு கிராமங்கள் உள்ளன. அவற்றை அவர், ராமாயணத்துடன் ஒப்பிட்டுக் கூறுவார். ""ஜடாயுவின் இறகு வீழ்ந்த இடம் இறகுசேரி'', அனுமன், ""கண்டேன் தேவியை என்று கூறிய இடம் கண்டதேவி. ஆகவே தேவகோட்டை என்பது தேவிகோட்டை ஆகும்'' என்பார்.

இவருடைய சாதனைகளில் மேலும் இரண்டு உள்ளன. அவை: திருவாமாத்தூர் வண்ணச்சரபம் ஸ்ரீதண்டபாணி சுவாமிகளை தேவகோட்டைக்கு அழைத்து வந்து, தேவகோட்டைச் சிவன் கோயிலில் உள்ள ஸ்ரீதண்டபாணி பேரில் பிள்ளைத்தமிழ் பாடச்செய்தார். வேலங்குடிக் கல்வெட்டில் இருந்து நகரத்தார் வரலாற்றை முதலில் எழுதி வெளியிட்டார்.

சிந்நயச் செட்டியார் 1900-ஆம் ஆண்டு காலமானார். இவர் இறந்த மாதமும் தேதியும் கூட அறியக்கிடைக்கவில்லை என்பது பெரும் குறையே! என்றாலும் அவரது தமிழ்த்தொண்டின் புகழ் என்றென்றும் குறையாது என்பது உண்மையிலும் உண்மை!
Photo: வித்வத் சிகாமணி' சிந்நயச் செட்டியார்:

பெரும்புலவர் என்று 19-ஆம் நூற்றாண்டில் புலவர்களால் புகழப்பெற்றவர் "வித்வத் சிகாமணி' சிந்நயச் செட்டியார். இவர் தேவகோட்டையில் "மேலவீடு' எனப்படும் செல்வக் குடும்பத்தில், மாற்றூர்க்கோயில் - உறையூர் பிரிவில், 1855-ஆம் ஆண்டு இலக்குமணன் செட்டியார்-லெட்சுமி ஆச்சிக்கு நான்காம் பிள்ளையாகப் பிறந்தார். இவரது அண்ணன்மார் மூன்று பேர். பிறந்த தேதியும் மாதமும் அறியக் கிடைக்கவில்லை.

  சிந்நயச் செட்டியார் ஓர் ஆசுகவி. இவரது குரு, தேவகோட்டை "வன்றொண்டர்' நாராயணன் செட்டியார். இந்த வன்றொண்டர், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மாணவர். சிந்நயச் செட்டியாரின் மானசீக குரு யாழ்ப்பாணம் ஆறுமுகநாவலர். "சிலேடைப் புலி' பிச்சுவையர், காரைக்குடி சிவபூசகர் சொக்கலிங்கம், இராமநாதபுரம் ரா.ராகவையங்கார் ஆகியோர் சிந்நயச் செட்டியாரின் மாணவர்கள்.

  இவருடைய உருவத் தோற்றம் யாரையும் ஈர்க்கக் கூடியது. நல்ல சிவப்பு நிறம், விபூதி, ருத்ராட்சம் அணிந்து பஞ்சகச்ச மேலாடையில் சிவப்பழமாய்க் காட்சி அளிப்பார். கையில் எப்பொழுதும் ஓலைச்சுவடி இருக்கும். ரத்தினக் கம்பளத்தில் வீற்றிருப்பார்.

  இராமநாதபுரம் அரசர் பாஸ்கர சேதுபதியின் உறவினர் பாண்டித்துரைத் தேவர் மிகச் சிறந்த புலவர். அவர், சிந்நயச் செட்டியாரின் இனிய தோழர். இருவரும் அடிக்கடி சந்தித்து அளவளாவுவர். பாண்டித்துரைத் தேவர் நான்காம் தமிழ்ச் சங்கத்தை மதுரையில் நிறுவ முயன்றபோது, அவருக்கு உறுதுணையாக நின்றவர் சிந்நயச் செட்டியார்.

  அவர் எழுதியுள்ள நூல்கள், மதுரை மீனாட்சி அம்மைப்பதிகம், நகரத்தார் வரலாறு, திருவொற்றியூர்ப் புராணம், குன்றக்குடி மயின்மலைப் பிள்ளைத் தமிழ், தேவகோட்டை சிலம்பைப் பதிற்றுப்பத்து அந்தாதி, இராமேசுரம் தேவைத் திரிபு அந்தாதி, திருவண்ணாமலை அருணைச் சிலேடை வெண்பா, காசி யமக அந்தாதி, வெளிமுத்திப் புராணம், கும்பாபிஷேக மகிமை, ஐம்பெரும் காப்பிய ஒப்பீடு, கண்டனூர் மீனாட்சி அம்மை பாடல் முதலியன.

  ரா.ராகவையங்கார் தன் மாணவர் மு.ராகவையங்காருக்குப் பாடம் கற்பித்தபொழுது, சிந்நயச் செட்டியாரின் சில நூல்களையும் கற்பித்தது குறிப்பிடத்தக்கது.

  சிந்நயச் செட்டியாரின் மனைவி பெயர் மீனாட்சி. இவர்களுக்குப் பிள்ளை இல்லாததால், இருவரும் காசிக்குச் சென்று ஓராண்டு பிள்ளைவரம் வேண்டி, தினந்தோறும் கங்கையில் நீராடி, காசி விசுவநாதரைத் தொழுது வந்தனர். குழந்தை பிறக்க வேண்டி ஒரு வாழை மரக்கன்று நட்டனர். அது வளர்ந்து, குலைதள்ளியபொழுது இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்குக் "காசி' என்று பெயரிட்டனர். பின்னாளில் தேவகோட்டைக்குத் திரும்பி, தமிழ்ப் பணியிலும், ஆன்மிகப் பணியிலும் ஈடுபட்டார். குழந்தை காசி, மூன்றாண்டுகளுக்குப் பின் காலமானது விதி வசமே!

  பிறகு, சிந்நயச் செட்டியார் திருவாரூரில் சில காலம் வசித்தார். பெருமளவு தேவகோட்டையில்தான் வாழ்ந்தார். அக்காலத்தில் அங்கு யாராவது புலவர்கள் சொற்பொழிவாற்ற வந்தால், முதலில் சிந்நயச் செட்டியாரைச் சந்தித்து அவரது ஆசிபெற்றே செல்வது வழக்கம்.

  சிந்நயச் செட்டியார் மிகவும் அவையடக்கம் உள்ளவர். அவர், தனது மயின்மலைப் பிள்ளைத் தமிழ் அவையடக்கப் பாடலில், "கடையடுத்த மடமையினேன்' என்று தன்னைப் பற்றிக் கூறிக்கொள்கிறார்.

  நகைச்சுவையாகப் பேசுவதிலும் வல்லவர்; வாக்குப் பலிதமும் உடையவர். ஒருமுறை வெளிமுத்தி என்ற ஊருக்குச் சென்றபொழுது, அவ்வூர் மக்கள் சிலர் அவரைச் சூழ்ந்துகொண்டு, ""நீங்கள் ஆசுகவியானால் இங்குள்ள ஆண் பனையைப் பழுக்க வைக்க வேண்டும்'' என்றார்கள். உடனே அவர், ""பங்குக்கு மூன்று பழம்தர வேண்டும் பனந்துண்டமே'' என்று கவிபாடினார். என்ன அதிசயம்! ஆண் பனை பெண் பனையாக மாறிப் பூத்துக் காய்த்துப் பனம்பழம் மூன்று கீழே விழுந்த காட்சியைக் கண்டு ஊரே வியந்தது.

  திருவாரூரில் இவர் வாழ்ந்த காலத்தில் பதஞ்சலியும் வியாக்கிரபாதரும் பூஜை செய்த இடமான "வினமல்' என்ற திருத்தலத்தில் உள்ள சிவன் கோயிலைப் புதுப்பித்தார்.

  சிந்நயச் செட்டியார் தேவகோட்டையில் இருந்தபொழுது ஒருநாள் காலையில் சிவபூஜை முடித்துக் கம்பளத்தில் அமர்ந்தபொழுது, ஜெர்மானியர் இருவர் வந்து, தமிழில் பேசி, அவரிடம் இருந்து சில சுவடிகளைப் பெற்றுச் சென்றுள்ளனர். சில தினங்களில் அவர்கள், இவருக்கு ஜெர்மனியில் இருந்து சுவடிக்கான பணம் அனுப்பி உள்ளனர். சிந்நயச் செட்டியார் காலமாகுமுன் அப்பணம் வந்திருக்கிறது.

  இவரை, நகரத்தார் குருபீடமாகிய கோவிலூர் ஆதீனம் போற்றி இருக்கிறது. அக்காலத்தில் கோவிலூர் ஆதீனத்துக்குச் சொத்துகள் வாங்கியபொழுது சிந்நயச் செட்டியார் பெயரில் வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

  மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, உ.வே.சாமிநாதய்யர் போன்றோர் இவரைப் பாராட்டியுள்ளனர். "வன்றொண்டர்' நாராயணன் செட்டியார், ""தன் மாணவர்களில் ஆசுகவி பாடக்கூடியவர் சிந்நயச் செட்டியார் ஒருவரே'' என்று தன்னிடம் கூறியதாக உ.வே.சா., தமது சரித்திரத்தில் கூறியிருக்கிறார்.

  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருப்பணி செய்த "வயிநாகரம்' குடும்பத்தைச் சேர்ந்த ராமநாதன் செட்டியார், தமது "கவிதைமலர்' என்ற நூலில், சிந்நயச் செட்டியாரைப் போற்றிப் பாடல் எழுதியுள்ளார்.

  ஒருமுறை அன்பர்கள் சிலர் அவரைப் பார்த்து, ""செல்வத்தின் முன் கல்வி நிற்குமா?'' என்று கேட்டனர். அதற்கு அவர், ""செல்வம் எடைக்கு நிற்கும்; கல்வி உறைக்கு நிற்கும்'' என்றார். தன் பெயருக்கு அவர் விளக்கம் கூறினாராம் இப்படி, "சித்துடனே நயம் சேர்ந்தால் -  சிந்நயம்' ஆகும்.

  தேவகோட்டை அருகில் "இறகுசேரி', "கண்டதேவி' என்ற இரு கிராமங்கள் உள்ளன. அவற்றை அவர், ராமாயணத்துடன் ஒப்பிட்டுக் கூறுவார். ""ஜடாயுவின் இறகு வீழ்ந்த இடம் இறகுசேரி'', அனுமன், ""கண்டேன் தேவியை என்று கூறிய இடம் கண்டதேவி. ஆகவே தேவகோட்டை என்பது தேவிகோட்டை ஆகும்'' என்பார்.

  இவருடைய சாதனைகளில் மேலும் இரண்டு உள்ளன. அவை: திருவாமாத்தூர் வண்ணச்சரபம் ஸ்ரீதண்டபாணி சுவாமிகளை தேவகோட்டைக்கு அழைத்து வந்து, தேவகோட்டைச் சிவன் கோயிலில் உள்ள ஸ்ரீதண்டபாணி பேரில் பிள்ளைத்தமிழ் பாடச்செய்தார். வேலங்குடிக் கல்வெட்டில் இருந்து நகரத்தார் வரலாற்றை முதலில் எழுதி வெளியிட்டார்.

  சிந்நயச் செட்டியார் 1900-ஆம் ஆண்டு காலமானார். இவர் இறந்த மாதமும் தேதியும் கூட அறியக்கிடைக்கவில்லை என்பது பெரும் குறையே! என்றாலும் அவரது தமிழ்த்தொண்டின் புகழ் என்றென்றும் குறையாது என்பது உண்மையிலும் உண்மை!

Thursday, 2 October 2014

சகலகலாவல்லி மாலை

 அனைவருக்கும் ஆயுத பூசை வாழ்த்துகள் .



 குமரகுருபரர் அருளிய சகலகலாவல்லி மாலை

வெண் தாமரைக்கு அன்றி நின் பதம் தாங்க என் வெள்ளை உள்ளத்
தண்டாமரைக்குத் தகாது கொலோ சகம் ஏழும் அளித்து
உண்டான் உறங்க வொழித்தான் பித்தாக உண்டாக்கும் வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே.

நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய் தர நாற்கவியும்
பாடும் பணியிற் பணித்தருள் வாய் பங்கயாசனத்திற்
கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றுமைப் பாற்
காடும் சுமக்கும் கரும்பே சகல கலாவல்லியே.

அளிக்கும் செழுந்தமிழ்த் தெள்அமுதுதார்ந்து உன் அருட் கடலில்
குளிக்கும் படிக்கென்று கூடும் கொலொ உளங் கொண்டு தெள்ளித்
தெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக் கண்டு
களிக்கும் கலாப மயிலே சகல கலாவல்லியே.

தூக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வியும் சொற் சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலும்
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவினின்று
காக்கும் கருணைக் கடலே சகல கலாவல்லியே.

பஞ்சப் பிதந்தரு செய்ய பொற்பாதம் பங்கேருகம் என்
நெஞ்சத் தடத்து அலராது என்னே நெடுந்தாட் கமலத்
தஞ்சத் துவசம் உயர்த்தோன் செந்நாவு மகமும் வெள்ளைக்
கஞ்சத்தவி சொத்திருந்தாய் சகல கலாவல்லியே.

பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்
எண்ணும் பொழுதெளிது எய்த நல் காயெழு தாமறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய் சகல கலாவல்லியே.

பாட்டும் பொருளும் பொருளால் பொருந்தும் பயனும் என்பால்
கூட்டும் படிநின் கடைக்கணல் காயுளங் கொண்டு தொண்டர்
தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம்
காட்டும் வெள்ளோதிமப் பேடே சகல கலாவல்லியே.

சொல்விற் பனமும் அவதான முங்கவி சொல்ல வல்ல
நல்வித்தையும் தந்து அடிமை கொள்வாய் நளினாசனஞ்சேர்
செல்விக்கு அரிது என்றொரு காலமும் சிதையாமை நல்கும்
கல்விப் பெரும் செல்வப் பேறே சகல கலாவல்லியே.

சொற்கும் பொருட்கும் உயிரா மெய்ஞ் ஞானத்தின் ஒற்றமென்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார் நிலந்தோய் புழைக்கை
நற்குஞ் சரத்தின் பிடியோடு அரசன்ன நாணநடை
கற்கும் பதாம்புயத் தாயே சகல கலாவல்லியே.

மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்
பண்கண்ட அளவிற் பணியச் செய்வாய் படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும் விளம்பிலும் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ சகல கலாவல்லியே.