நம் செட்டிநாட்டில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விழாக்களும் விஷேசங்கள் நிகழும். அதில் இந்த மாதத்தில் சிவபெருமான் வழிபாட்டிற்கும் காவேரி வழிபாட்டிற்கும் உரிய மாதமாக வைத்துள்ளனர் நம் முன்னோர்கள் .
இந்த துலா (ஐப்பசி ) மாதத்தில் புனித நதிகளில் நீராடுதல் , சிவன் வழிபாடு செய்வதற்கும் மிகவும் உகந்த மாதம் .கந்தன் சூரனை வைத்தது இந்த மாதத்தில் தான் மற்றும் தீபாவளி கொண்டாடப்படுவது இந்த ஐப்பசியில்
இந்த மாதத்தில் நம் நகரத்தார்கள் அமைத்த சிவாலயகளில் காலையில் காவேரிப்புராணம் தினமும் இந்த ஐப்பசி மாதத்தில் படிப்பது வழக்காக கொள்வர் இந்த மாதத்தில் நகரத்தார் ஊர்களில் உள்ள எல்லா சிவன்கோயில்களிலும் இந்த மாதத்தில் காலையில் காவேரி அன்னையை போற்றி கூறும் காவேரிப் புராணம் படிப்பர் . அப்போது நம் ஆச்சிகள் வீட்டில் இருந்து அவர் அவர் தங்களால் இயன்ற அளவு கொஞ்சம் துவரம்பருப்பு ,பாசிப்பருப்பு , புளி , அருசி , கோதுமை , கடலைப்பருப்பு , சிறுதானியங்கள் , நவதானியங்கள் அல்லது காய்கறிகள் போற்றவைகளை கொஞ்சம் கொண்டும் சென்று துலா புராணம் படிக்கும் ஐயருக்கு தானமாக கொடுத்து காவேரிப் புராணக் கதையை கேட்பார்கள் . கார்த்திகை முதல் நாள் முடவன் கடைமுழுக்கு மிகவும் விசேசம் . அன்று மாயவரம் , சங்குமுகம் (பூம்புகார்) , ஸ்ரீரங்கம் போன்ற தலங்களில் நம் நகரத்தார்கள் சென்று நீராடி சிவனை வழிபடுவர் .
இதுமட்டும் இல்லது இந்த மாதத்தில் காவேரிக் கரைகளுக்கு சென்று நீராடுவர் . இந்த மாதத்தில் கங்கையே தான் ஏற்று கொண்ட எல்லா பக்தர்களுக்கு பாவத்தையும் இந்த மாதத்தில் காவேரியில் நீராடி சிவபெருமானை வழிபட்டு தன் பாவத்தை போக்கிக்கொள்கிறாள் என்பது ஐதீகம். அதனால் இந்த மாதத்தில் காவேரியில் நீராடுதல் மிகவும் நற்பலன்கள் தரக்கூடியது .
அது மட்டும் இல்லது இந்த மாதத்தில் நகரத்தார்கள் காவேரி கரைகளில் நீராடி ஆற்றில் இருந்து மண் கொண்டு கரையில் சிவலிங்கமாக பிடித்து அவற்றுக்கும் தும்பை பூ சாற்றி சிவபெருமானை வழிபடுவர் .
மேலும் இந்த மாதத்தில் அனைத்து நகர சிவாலயங்களிளும் சோமவார சங்காபிஷேகம் சிறப்பாக நிகழும். பொதுவாக நகரத்தார்கள் முருகனையும் சிவனையுமே தம் தலையாய தெய்வாமாக கொண்டு வழிபடுகின்றனர் . அதனால் இந்த மாதத்தில் சிவன்பெருமானை வழிபடுவோர் சோமவார விரதத்தை கடைபிடித்து வழிபடுவோர் . ஐப்பசி மாதத்தில் வரும் திங்கள்கிழமையன்று சிலர் உண்ணா நோன்பிருந்தும் ஒருவேளை உண்ணா நோன்பிருந்து சிவனை வழிபடுவர் . இந்த ஐப்பசி பௌர்ணமி நாளில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகமும் எல்லா நகரத்தார் சிவாலயங்களிலும் நிகழும் . அன்று மாலை சோறு வடித்தும் அதிரசம் , முறுக்கும் போன்ற இனிப்புகள் செய்தும் , காய் கனி மாலைகள் , புடலங்காய் , காரட் , போன்ற காய்கறிகளை அவித்து வைத்து சிவனுக்கும் அன்னத்தை கொட்டி அபிசேகமாக செய்யப்படும் அன்னம் ஒவ்வொன்றும் சிவனாககே காட்சி தருகிறார் என்பது ஐதீகம். பின் அந்த அன்னத்தை பத்தர்களுக்கு , காக்கை குருவிக்கு , மீன்கள் போன்ற ஊயிர்களுக்கும் அன்னத்தை அளிப்பது வழக்கம் .
மற்றும் இந்த மாதத்தில் நகரத்தார்கள் தீபாவளி திருநாளை சிலர் காசிக்கு சென்று புனித நீராடி விஸ்வந்தர் விசாலாட்சி அன்னையை வழிபட்டு இங்கு நிகழும் மிட்டாய் திருவிழா என்று அழைக்கப்படும் திருவிழாவை காண செல்வர் . தீபாவளி யன்று காசி நகரில் அண்ணபூரணி லட்டு தேரில் பவனி வருவதைக் காணக் கண்கோடி வேண்டும் . அது மட்டுமா இந்த தீபாவளியை யொட்டி நம் காசி நாட்டுகோட்டை நகரத்தார் சத்திரத்திற்கும் தங்க அண்ணபூரணி , காசி விஸ்வநாதர் மற்றும் விசாலட்சி அன்னை ஆகிய போர்த்திருமேனிகள் இந்த மூன்று நாட்களுக்கு மட்டும் நம் நகர விடுதிக்கும் கொண்டு வந்து சிறப்பாக பூசைகள் நிகழும் இதை கானைவும் நகரத்தார்கள் பலர் இங்கு வருவது வழக்கம் . இது சிவனை வழிபடுவோருக்கும்
தீபாவளிக்கும் முதல் நாள் இரவே அண்டாகளில் நீரி நிரப்பி அதில் ஆலிலை , அத்திஇலை , வேம்பு , மாவிலை , அரச இலை போன்ற இலைகளை நீரில் போட்டு வைத்திருப்பர் . அதனுடன் வேம்பாகளில் நீர் நிரப்பி தயாராக வைத்து இருப்பர் . நல்லெண்ணெய்யில் சிறிது சீரகம் , வெள்ளைபூடுஓர் இரண்டு பல் போட்டு எண்ணையை காய்ச்சி முதல் நாள் இரவே தயார் செய்து வைத்திருப்பர் . இன்று நகரங்களில் குடியேறிய பின் சற்று மாறுதல்கள் ஏற்பட்டு உள்ளது ,. சிலர் இந்த முறைகளை இன்றும் செய்து வருகின்றனர் . சிலர் இருக்கும் இடத்தில இவைககள் கிடைக்கவில்லை என்பதால் வெறும் வெந்நீரில் தலை முழுகி இந்த தீபாவளி நாளை துவங்குகின்றனர் .
மற்றும் தீபாவளி திருநாளில் நகரத்தார்கள் தங்கள் இல்லங்களில் அதிரசம், தேன்குழல் , மனலோம் , மைதா சிப்ஸ் , மாவுருண்டை , தட்டை , சீப்பு சீடை , சீடை போன்ற பலகாரங்களை செய்தும் காலையில் வெள்ளனா எழுந்து நம் ஆச்சிகள் கவுன்அருசி அவித்து , வெள்ளப்பணியாரம் , சீயம் , உளுந்து வடை போன்ற பலாரங்கள் தங்களால் இயன்றவற்றை செய்து காலையில் குபேரன் , லக்ஷ்மிக்கும் பூசை செய்து வழிபடுவர் சில வீடுகளில் கும்பம் வைத்து லட்சுமியை பூசை செய்வர் . பின் பெரியவர்கள் வீட்டில் விளக்கேற்றி வைத்து பிள்ளைகளுக்கும் மஞ்சள் தடவி வைத்த புத்தாடைகளை தருவர் . புத்தாடையை பெறும்போது பெரியவர்கள் காலில் விழுந்து ஆசிகள் பெற்று பெரியவர்கள் திருநீறு பூசி அவற்றை பெற்றுக்கொள்ளவர் . இந்த வழக்கம் இன்றும் நம் வீடுகளில் நடைமுறையில் உள்ளது .
அதன் பின் அருகில் உள்ள ஆலயம் சென்று வழிபட்டு வருவது வழக்கமாக உள்ளது . தலை தீபாவளி என்றால் நம் செட்டிநாட்டில் மாப்பிள்ளை வீட்டிற்கும் தீபாவளி பலகாரங்ளுடன் கெண்ட வேட்டி , சேலை எடுத்துக் குடுத்து தீபாவளிக்கும் முன்பு வந்து பெண்வீட்டார் அழைத்து விட்டு செல்வர் . புதிதாக திருமண மாணவர்கள் தங்கள் மாமியார் வீட்டுக்கு மணமகன் சென்று அவர்களுடன் தீபாவளி கொண்டாடுவதும் அவர்கள் தங்கள் வீட்டில் அன்று காசப்பு எடுத்து விருந்து வைப்பதும் வழக்கம் .
ஐப்பசி மாதத்தில் வரும் அமாவாசைக்கு அடுத்து வரும் நாட்களில் கந்த சஷ்டி மிகவும் கோலாகலமாக நிகழும் இந்த விழாவை காணவும் பல நகரத்தார்கள் விரதம் இருந்து முருகனை வழிபட திருச்செந்தூர் நகரவிடுதிக்கும் வந்து தங்கி சூரசம்ஹாரத்தை காண்பர் .இது மட்டும் அல்லது பரவலாக நகரத்தார்கள் பல முருகன் கோயில்களில் இந்த விழாவை நிகழ்த்தி முருகனை வழிபடுவர் . இந்த விரத நாட்களில் நகரத்தார்கள் கந்தபுராணம் படித்தல் , சஷ்டிக்கவசம் படித்தில் போன்றவைகளை படிப்பர் . இந்த விரத நாட்களில் சிலர் ஒரு வேலை மட்டும் உணவு மாலையில் உண்டும் , சிலர் வெறும் பால் பழங்களை மட்டும் முருகனை வணங்கி அர்ச்சனை செய்த பின் உண்டு நோன்வு இருப்பர் இந்த மாதத்தில்
நகரத்தார்கள் இந்த மாதத்தில் காவரிப்புராணம் , கந்தபுராணம் படித்து நல்ல வழியில் வாழ்வை எதிர்கொள்ளவேண்டும் என்ற நோக்கில் இத்தனை கோட்பாடுகள் கொண்டிருந்தனர் .முன்பு இந்த காவிரிப் புராணம் படித்தல் என்பது தற்போது உள்ள தலைமுறையினர் அறியாத ஒன்றாகவும் மறந்து வரும் ஒன்றாக உள்ளது . தற்போது இந்த நிகழ்வு நம் சென்னை மயிலை காபாலீஸ்வரர் ஆலயத்திலும் இந்த நிகழ்வும் ( காவேரிப் புராணம் படித்தல் ) நடைபெறுகிறது .
-ஆ.தெக்கூர் கண. லெனா. நா. இராமநாதன்
மேலும் காவேரிப் புராணம் pdfஇல் படிக்க
இதோ லிங்க் கீழே உள்ளது
http://tamilheritage.org/old/text/ebook/thula.pdf
No comments:
Post a Comment