Thursday, 15 January 2015

பொங்கல் வாழ்த்துகள்

தைத்திங்கள் தசமியிலே 
தமிழ்கூறும் தரணியிலே
ஐமூனாம் தேதியிலே 
தமிழர்கள் நாம் மகிழ 
பொங்கல் விழா வந்ததையா! 
பொங்கல் முதல் நாளாம் 
போகிப் பொஙகலென்று
பழையன கழிதலென்றும்
புதியன புகுதலென்றும்
மனதையும் சுத்தமிட்டோம்!
நம்வீட்டு ஆச்சிக்குத் தாய்வீட்டு
ஞாபகமாய் பொங்கபானை
வந்துவிடும் பாசம் அதில் தெரியும்
பொங்கல் இன்னும் இனிப்பாகும்!
பத்தரையிலிருந்து பதினொன்றை
நல்லநேரம் என்றுரைத்தார்
மஞ்சகொத்து அரவணைத்த பொங்கபானை
அடுப்பிலேற்றி சங்கெடுத்து ஒலி தருவோம்!
இடைப்பட்ட நேரத்தில் சொந்தங்கள்
அனைவருக்கும் பொங்கல்
வாழ்த்து சொல்லிடவே
அலைபேசியை அவசரமாய்
அடுத்தடுத்து அழுத்திடுவோம்!
அழகான இப்பொங்கல்
அருமையாய் அமைந்ததுவாம்
அன்புள்ளங்கள் அனைவருமே
அகம் மகிழ சொல்லிடுவோம்
பொங்கலோ பொங்கலென்றே!

பாவாக்கம்: தீனாரூனா.


No comments:

Post a Comment