ஈழத்தில் வடக்கு மாகணத்தில் மன்னார்மாவட்டத்தில் அமைத்துள்ள திருக்கேதீஸ்வரம் ஆலயம் இந்த ஆலயம் 2500ஆண்டுகள் தொன்மைவாய்ந்த மிகவும் பழம்பெரும் ஆலயம். இவ்வாலயதிற்கு சோழர்களும் பாண்டியர்களும் பல திருப்பணிகள் செய்து போற்றிபேணி வந்தனர். ஈழத்தில் அமைந்த பாடல் பெற்ற 5 சிவாலங்களில் இந்த ஆலயம் மிகவும் தொன்மையானவொன்று.இந்த ஆலயம் 274 சிவாலங்களில் இந்த ஆலயமும் ஒன்று. இங்குள்ள ஈசனை சுந்தரரும் திருஞானசம்பந்தரும் பாடிப்போற்றியுள்ளனர்
இறைவன் பெயர் : திருக்கேதீஸ்வரர் / நாகநாதர்
இறைவி பெயர் : கேதாரகௌரி / கெளரி
தலவிருட்சம் : வன்னிமரம்
தீர்த்தம்: பாலாவி தீர்த்தம்
திருவிழா: மகா சிவராத்திரி / வைகாசியில்10நாள் விழா வைகாசி விசாகத்தில் தீர்த்தவாரி
ஆலயத்தின் நுழைவு பகுதி |
ஆலய வெளிப்புறம் |
ஆலய வெளிப்புறம் |
பாலவி ஆற்றின் கரையில் உள்ள விநாயகர் |
பாலாவி தீர்த்தம் |
பாலவி தீர்த்தக்கரையில் உள்ள மேடை |
ஆலயத்தின் முகப்பில் உள்ள நந்தி |
ஆலய வாயிலில் உள்ள பசு |
ஆலய முகப்பு கிழக்கு வாயில் |
ஆலய வெளிப்புறம் |
ஆலய வெளிப்புறம் தெற்கு வாயில் |
கேதீஸ்வரம் பற்றி புராணத் தகவல்கள் :
இந்த பகுதிக்கு பல பெயர்கள் கொண்டு அழைக்கப்பட்டது. மகாதுவட்டா என்பவர் சூரபன்மனின் மனைவியான புதுமகோமளையின் பாட்டனார். சிறந்த சிற்பவல்லுனரான இவர் கேதீச்சரப்பெருமானை வழிபட்டு, கோயிலுக்குப் பல திருப்பணிகளைச் செய்தார். தேவதச்சனாகப் புராணங்களிலே கூறப்படும் மகாதுவட்டா வழிபட்டதால், திருக்கேதீச்சரம் ஆலயம் `மகாதுவட்டாபுரம்' என அழைக்கப்பட்டது எனக் கந்தப்புராணத்திலும், தட்சிணகைலாயமான்மியத்திலும் கூறப்பட்டுள்ளது. மகாதுவட்டாபுரம் என்பது மாதோட்டம் எனப்பிற்காலத்தில் மருவியது. மாகதுவட்டாவின் மகனே விஸ்வகன்மா எனப்புகழப்படும் தேவசிற்பி இவர்கள் மாந்தைக்கம்மியர் வம்சத்தைச் சேர்ந்த ஓவிய குலத்தவர்.
மாந்தை பெயர்வரக் காரணம் :
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே மாதோட்டத் துறைமுகம், கடல்வாணிப மையமாக விளங்கியுள்ளமைக்கு இதன் அமைப்பே காரணமாகும். அரபிக்கடல் வழியாகக் கப்பற்போக்குவரத்து நடைபெற்ற காலத்தில், அவ்வழியாக வரும் கப்பல்கள், தென்மேற்குப்பருவக் காற்றிலிருந்து தப்ப, இத்துறைமுகத்தில் தங்கிச் செல்வது, அக்கால வழக்கமாயிருந்தது. இதனால் இப்பகுதி புகழ்பெற்ற வணிகச்சந்தையாக விளங்கியுள்ளது. இங்கு வணிக கப்பல்கள் வந்து செல்வதால் இங்கு பெரியளவில் சந்தை கூடி வணிகம் நிகழ்ந்தது அதன் பெயரால் மகா சந்தை என்று அழைக்கப்பட்டது பின் இந்த பெயர் மருவி மாந்தையென்று மருவியது தற்காலத்தில் திருக்கேதீச்சரம் என அழைக்கப்படும் பகுதியே மாந்தை என அழைக்கப்பட்டுள்ளது. கடல் வாணியத்தில் முக்கிய கேந்திரமாக இப்பகுதி விளங்கியுள்ளதால் இதனை, மாச்சந்தை என அழைக்க, அது பின்னர் மாந்தையாக அருகியிருக்க வேண்டும். கி.பி. முதல் மூன்று நூற்றாண்டுகளைக் கொண்ட சங்ககால இலக்கியமான அகநானூறில் '..நன்னகர் மாந்தை முற்றத்து ஒன்னார்..' என்றும், முத்தொள்ளாயிரத்தில் '...புன்னாகச்சோலை புனற்றெங்கு சூழ் மாந்தை...' என்றும் மாந்தையின் சிறப்புக் கூறப்பட்டுள்ளது.
கேதீஸ்வரமும் நாகர்களும் (நாகநாட்டாரும்) :
நகரத்தார்கள் நாகநாட்டில் இருந்து வந்தவர்கள். இந்த நாகநாடு எங்கு இருந்தது என்று பலரும் பலவிதமாக சொல்லுகின்றனர். முன்பு ஒருபகுதியின் பெயர் அந்த பகுதியில் வாழ்ந்த மக்கள் பெயர்கள் அல்லது அவர்களின் தொழில் , பிரபலமான கிடைக்கும் பொருட்கள் வைத்து பெயர் வைத்து அழைத்தனர் அதேபோல் ஈழத்தில் பழம்பெரும் குடிகளில் ஒன்றாக நாகர்கள் என்ற மக்கள் இங்கு வாழ்ந்தார்கள். இந்த நாகர்கள் பூசித்த சிவலிங்கம் என்பதால் இந்த ஈசனுக்கு நாகநாதர் என்ற ஒருபெயரும் உண்டு. அதேபோல் நாகர்கள் இலங்கையின் வடக்கு பகுதியில் வாழ்ந்தார்கள் தற்போது இவர்கள் தமிழ் மக்களுடன் கலந்து தங்கள் அடையாளங்களை மறந்து வாழ்கின்றனர். ஈழத்தில் வடக்கு பகுதில் இருந்து நகரத்தார்களை பல்லவர்கள் கொண்டுவந்திருக்க வேண்டும் .
நகரத்தார்கள் நாகநாட்டில் இருந்து வந்தவர்கள். இந்த நாகநாடு எங்கு இருந்தது என்று பலரும் பலவிதமாக சொல்லுகின்றனர். முன்பு ஒருபகுதியின் பெயர் அந்த பகுதியில் வாழ்ந்த மக்கள் பெயர்கள் அல்லது அவர்களின் தொழில் , பிரபலமான கிடைக்கும் பொருட்கள் வைத்து பெயர் வைத்து அழைத்தனர் அதேபோல் ஈழத்தில் பழம்பெரும் குடிகளில் ஒன்றாக நாகர்கள் என்ற மக்கள் இங்கு வாழ்ந்தார்கள். இந்த நாகர்கள் பூசித்த சிவலிங்கம் என்பதால் இந்த ஈசனுக்கு நாகநாதர் என்ற ஒருபெயரும் உண்டு. அதேபோல் நாகர்கள் இலங்கையின் வடக்கு பகுதியில் வாழ்ந்தார்கள் தற்போது இவர்கள் தமிழ் மக்களுடன் கலந்து தங்கள் அடையாளங்களை மறந்து வாழ்கின்றனர். ஈழத்தில் வடக்கு பகுதில் இருந்து நகரத்தார்களை பல்லவர்கள் கொண்டுவந்திருக்க வேண்டும் .
வடக்கு பகுதியில் இருந்து |
ஆலய வெளிப்புறம் |
ஆலய வெளிப்புறம் |
நந்தி கொடிமரம் பலிபீடம் |
உட்புற திருச்சுற்று |
உட்புற திருச்சுற்று |
கருவறை விமானம் |
உட்புற அமைப்பு |
ஆலய மூலவர் விமானம் |
உட்புற திருச்சுற்று |
அதிகார நந்தி |
கேதுவழிபட்ட தலம்:
கேது பகவான் இக்கோயிலுக்கு வந்து தவமியற்றி பூஜை செய்து வழிபட, இறைவன் அம்மை அப்பராக அவருக்குத் தரிசனம் அளித்தாராம். இதனால்தான் திருகேதுஈஸ்வரம் என்றாகி திருக்கேதீஸ்வரமாக ஆகியிருக்கிறது. ஜாதகத்தில் ஒருவருக்கு ராகு, கேது தோஷம் இருப்பின், பாலாவியில் நீராடி, கேதீச்வரரை வழிபட்டால் தோஷம் நீங்கும் என்று ஐதீகம். பாலாவி தீர்த்தம், பல பிறவிகளில் செய்த பாவங்களைப் போக்கும் மகா சக்தி படைத்தது. இங்கு நீராடி பித்ருபூஜை செய்தால், கயையில் பித்ரு பூஜை செய்த புண்ணியம் கிட்டும் என்பது நம்பிக்கை.
இராமபிரானுடன் தொடர்புகொண்ட கேதீஸ்வரம் :
இராம இராவண யுத்தகாலத்திலும், இக்கோயில் இருந்ததென்பதை ஒரு சம்பவம் எடுத்தியம்புகின்றது. சிவபக்தனான இராவணனைக் கொன்றதால் இராமனைப் பிரமகத்தி தோஷம் தொடர்ந்ததென்றும், அதனைப்போக்க இலங்கையிலுள்ள முனீசுவரம் என்ற சிவத்தலத்தில் பொன்லிங்கமும், திருக்கோணேசுவரத்தில் இரத்தினலிங்கமும், திருக்கேதீச்சரத்தில் வெள்ளிலிங்கமும், பிரதிஷ;டை செய்து வழிபட்டபின், தென்னகத்திலிருந்த (தமிழகம்) இராமேசுவரம் கோயிலில் மணலால் லிங்கமும் காசியில் இருந்து கொண்டுவந்த கல்லால் செய்த லிங்கமும் அமைத்து வழிபட்டுத் தன் தோஷத்தைப்போக்கிக் கொண்டார் எனப் புராண வரலாற்றிலே கூறப்பட்டுள்ளது. இராமர் வழிபட்டதாகக் கூறப்படும் இப்புராண வரலாறும் இவ்வாலயத்தின் தொன்மைக்கு ஒரு சான்றாகக் காணப்படுகின்றது.
கேதீஸ்வரமும் சோழரும் பாண்டியரும் :
ஈழத்தை சோழர்கள் 126 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளனர். இக்காலப்பகுதி இந்துமதத்தின் பொற்காலமாகக் கருதப்படுகின்றது .ஈழத்தில் சிறப்பாக ஆட்சி செய்தனர் கி.பி 1028இல் இராசேந்ரதிரசோழனால் ஈழம் கைப்பற்றப்பட்டது. இவர்கள் ஆட்சியில் ஊரின் பெயர்களும், ஆலயங்களின் பெயர்களும் மாற்றம் செய்யப்பட்டன அதோடு பல திருப்பணிகளும் செய்து ஆலயங்களை போற்றி பாதுகாத்தனர் . திருக்கேதீச்சரம் ஆலயத்தை இராஜராஜேஸ்வரம் என்றும், மாதோட்ட நகரினை இராஜராஜபுரம் என்றும் வழங்கியுள்ளனர்.சோழர்களின் பாதுகாப்பின் பொருட்டு, திருக்கேதீச்சரம் ஆலயத்தைச்சுற்றி நன்னீர், கடல்நீர் கொண்ட இரு அகழிகள் அமைக்கப்பட்டிருந்ததாக சொல்லபடுகிறது . இராசேந்திரசோழன் இலங்கையை ஆட்சி செய்த காலத்தில், இவ்வாலயத்தின் ஆண்டுதோறும். ஏழுநாள் விழாவெடுத்து, வைகாசிவிசாகத்தன்று தீர்த்தவிழா நடத்தியதாக, இராசேந்திரசோழன் கல்வெட்டுக் கூறுகின்றது. இந்த விழா இன்றும் வெகுசிறப்பாக நிகழ்ந்து வருகிறது.
கி.பி 13 ஆம் நூற்றாண்டில் இலங்கையை ஆண்ட முதலாம் சுந்தரபாண்டியன், இவ்வாலயத்தில் சிற்பவேலைகள் பலவற்றைச் செய்ததோடு வேறு பல திருப்பணிகளையும் செய்துள்ளான். இலங்கையை ஆட்சிசெய்த 4வது மகிந்தனின் அநுராதபுரக் கல்வெட்டில், மாதோட்ட நகர் ஒரு புண்ணியதலம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி 13 ஆம் நூற்றாண்டில் இரண்டாம பாண்டியப் பேரரசர் காலத்திலும், பின் ஆதக்கம் பெற்ற விஜயநகரப் பேரரசர் காலத்திலும் திருக்கேதீச்சரம் ஆலயம் சிறப்போடு விளங்கியுள்ளது.
பரிவார தேவதைகள் |
பரிவார தேவதைகள் |
பரிவார தேவதைகள் |
பரிவார தேவதைகள் |
பரிவார தேவதைகள் |
பரிவார தேவதைகள் |
பரிவார தேவதைகள் உற்சவ மூர்த்தங்கள் |
உற்சவ மூர்த்தங்கள் உலகின் பெரிய சோமஸ்கந்தர் |
உற்சவ மூர்த்தி உலகின் பெரிய சோமஸ்கந்தர் |
ஆதி சிவலிங்கம் |
பஞ்சலிங்கங்கள் |
ராஜராஜசோழனுக்கு சன்னதி |
வைரவர் |
கேதீஸ்வரமும் போத்துக்கேயரும் :
கி.பி 1505ஆம் ஆண்டு இலங்கையுள் நுழைந்த அன்னியரான போத்துக்கேயரின் ஆட்சி இலங்கையெங்கும் பரவியது. இவர்கள் இந்துசமயத்தையும், இந்துக்கோயில்களையும் நிர்மூலமாக்கியதோடு இந்துக்கோயில்களிலே காணப்பட்ட பெருஞ்செல்வங்களையும் கொள்ளையடித்தனர். கி.பி 1590ஆம் ஆண்டு போத்துக்கேயர், இவ்வாலயத்தைத் தாக்கி அழிக்கத் திட்டமிட்டனர். இதனை எவ்வாறோ அறிந்த கோயிலைச் சார்ந்தோரும், மக்களும் முக்கியமான பொருட்களையும், அழகும், அருளும்மிக்க கௌரியம்மன் திருவுருவத்தையும் பெயர்த்தெடுத்துக் கொண்டு இரவோடிரவாக மூர்த்திகளையும் பூசை பொருட்களையும் கொண்டு மறைத்துவைத்தனர்.பின் கோவிலை முழுவதும் இடித்து நிர்மூலாமாக்கினர்
இந்துக்களால் வணங்கப்பட்ட ஆலயங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு, அவ்விடத்தில் கிறிஸ்தவ ஆலயங்களை எழுப்புவதும், இந்துக்களைக் கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்வதும் தமது தலையாயபணி எனப் போத்துக்கேயர் கருத்தில் கொண்டு செயற்பட்டமைனைய, இலங்கையின் வரலாற்றிலே தெளிவாகக் காணலாம். யாழ்மாவட்டத்தில் 500 இந்துக்கோயில்களை இடித்தான் என்று குறிப்பிட்டுள்ளார். திருகேதீஸ்வரம் ஆலய கற்களை கொன்டு கோட்டைகளையும் தேவாலயதின் அடித்தளத்தையும் மன்னார் துறைமுகத்தை அமைத்தனர் .மற்றும் கண்ணகிக் கோவில்கள் மாதா கோவிலாகவும் மாற்றம் பெற்றன.
ஆறுமுகநாவலரும் கேதீஸ்வரமும் :
போத்துக்கேயர் ஆலயத்தை அழித்தபின் காலவோட்டத்தில் இந்த ஆலயம் இருந்த இடம் தெரியாமல் மண் மூடி காடாகக் கிடந்தது. சுமார் மூன்று நூற்றாண்டுகளாகத் திருக்கேதீச்சரம் ஆலயமும், மாதோட்டநகரும் மக்களறியாத, மக்களால் மறக்கப்பட்ட இடமாக மாறியிருந்தது. காலநியதிப்படி, பூமிமாதாவின் மடியில் துயில்கொண்ட திருவுருவங்கள், மீண்டும் வெளிவரத் தூண்டுகோலாக இருந்தவர், யாழ்ப்பாணத்து ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்கள். இவருடைய எண்ணத்தில், இங்கு மறைந்திருந்த திருக்கோயிலின் சிந்தனைகள் எவ்வாறோ எழ ஆரம்பித்தன. மாதோட்டத்தைப் பற்றியும், திருக்கேதீச்சரம் ஆலயத்தைப் பற்றியும் தெரிவித்து, கி.பி 1872ஆம் ஆண்டு, 'யாழ்ப்பாணச் சமயநிலை' என்று நாவலர் அவர்கள் வெளியிட்ட பிரசுரம் ஈழத்தில் எங்கும் வெளியிட்டார் அதன் விளைவாக ஆலயம் உருவானது .
நகரத்தாரும் திருக்கேதீஸ்வரமும் :
ஆலயம் பற்றி ஆறுமுக நாவலர் வெளியிட்ட துண்டு பிரசுரங்களை பார்த்து இந்த ஆலயத்தை புனரமைக்க பல நகரத்தார்கள் முன்வந்தனர் அதோடு பல ஈழத் தமிழரும் முன் வந்தார்கள். கேதீஸ்வரம் ஆலயம் இருந்த இடத்தையும் அந்த இடத்தை சுற்றியுள்ள 43ஏக்கர் நிலப் பகுதியை திரு. இராம.அரு.பழனியப்ப செட்டியார் அன்றைய பிரித்தானிய அரசிடன் ரூ 3100.00 திற்கு வில்லியம் டுவானைமா துறையிடம் இந்த நிலப்பகுதியை 13/12/1893 வாங்கினார் . இதற்கு முன்பு ரூபாய் 3050ற்கு வாங்கினார் அப்போது அந்த பணத்தை அன்றைய பிரித்தானிய அரசு அந்த தொகையை கிருஸ்துவசபை வளர்சிக்கு இந்த பணத்தை கொடுத்தனர் . பின் மீண்டும் பழனியப்ப செட்டியார் பணத்தை கொடுத்து இந்த நிலப்பகுதியை விலைக்கு வாங்கினார் . இந்த நிலப்பகுதியை வாங்குவதற்கு அன்றைய காலகட்டத்தில் மொத்த செலவு 6150 ரூபாய். பின் இந்த பகுதிகளை அழவாய்வு செய்து பரிவரா மூர்த்திகள் மற்றும் சிவலிங்கம் போன்றவைகள் கண்டேடுக்கப்பட்டன. அகழ்வாராய்ச்சியில் கிடைத்த சிவலிங்கம் சற்று பின்னப்பட்ட நிலையில் இருந்ததால் இந்த மூர்த்தம் மாற்றப்பட்டது. பழங்கால சிவலிங்க சற்றுப் பிரகாரத்தில் இன்றும் உள்ளது .மற்றும் காசியில் இருந்து இங்கு சிவலிங்கம் இங்கு கொண்டுவரப்பட்டது அந்த மூர்த்தியே தற்போது மூலவராக காட்சிதருகிறார் . இவைகளை வைத்து புதியதொரு ஆலயம் அழகுற நகரத்தார்கள் நிர்மாணித்தனர் . இந்த திருப்பணியில் ஈழத்தமிழரும் மலேசிய தமிழரும் பங்குகொண்டனர் . இந்த ஆலயத்த திருப்பணியில் கொழும்புவில் வணிகம் செய்த நகரத்தார்களும் திருப்பணி செய்தனர். இந்த கேதீஸ்வரன் ஆலயத்தை 22000 ரூபாய் செலவில் திரு. இராம.அரு.பழனியப்பா செட்டியார் , சோமசுந்தரம் செட்டியார் மற்றும் பிற கொழும்புவில் வணிகம் செய்த நகரத்தார்கள், ஈழத்து சிவனடியார்கள் இவர்களுடன் இணைந்து குடமுழுக்கு திருப்பணிகள் மேற்கொண்டனர் . இந்த ஆலயம் முதல் குடமுழுக்கை 1903லும் அதை தொடர்ந்து ,1910,1948 வரை நகரத்தார்களே முனின்று குடமுழுக்கு நிகழ்தினர் .கோவிலுக்கும் கோவிலை சுற்றியுள்ள 40ஏக்கர் விவசாய நிலத்தையும் தானமாக வழங்கினர். அத்தோடு நில்லாமல் கோவிலுக்கும் அருகில் நகரத்தார்களுக்கு ஒரு விடுதியும் அமைத்தனர் . ஆறுமுகநாவலர் ஐயா அவர்கள் வெளிகொணர்ந்த செய்தியால் இவையனைத்தும் நிகழ்ந்தது . இவாலயத்தை கொழும்பு செட்டிதெருவில் உள்ள கதிர்வேலாயுத ஆலய நாட்டுகோட்டை நகரத்தார்களே 1956 வரை சிறப்பாக ஆறுகால பூசையுடன் நிர்வகித்து வந்தனர். பின் இந்த ஆலயம் நிர்வாக பொறுப்பு 14.9.1956அன்று ஈழ சிவனடியார்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. இன்று வரை ஆறுகால பூசையுடன் சிறப்பாக ஆலயம் இயங்கிருகிறது. இன்றும் கொழும்பு செட்டிதெருவில் உள்ள கதிர்வேலாயுத ஆலய நாட்டுகோட்டை நகரத்தார் சார்பாக விசேச காலங்களில் அபிஷேக ஆராதனைகளும் சிறப்புற நிகழ்ந்து வருகிறது
உற்சவமூர்த்தி வைகாசி விசாக தேர் திருவிழாவின் பொது தேர் ஏறபவனி வந்த உலகின் மிகப்பெரியசோமஸ்கந்தர் |
வைகாசி விசாக தேர் திருவிழாவின் பொது தேர் ஏறபவனி வந்த உலகின் மிகப்பெரியசோமஸ்கந்தர் |
வைகாசி விசாக தேர் திருவிழாவின் பொது தேர் ஏறபவனி வந்த உலகின் மிகப்பெரியசோமஸ்கந்தர் |
வைகாசி விசாக தேர் திருவிழாவின் |
வைகாசி விசாக தீர்த்தவாரி கொடுக்கவரும் நடேசன் |
வைகாசி விசாக தீர்த்தவாரி |
ஆலய அமைப்பு :
இவ்வாலயம் ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி கம்பிரமாக அமைத்துள்ளது . இவ்வாலயம் 43ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் இரண்டு நுழைவாயில்கள் கிழக்கு மற்றும் தெற்கு பகுதியில் வாசல்கள் உள்ளன. மூலவர் கிழக்கு நோக்கியும் அம்மாள் தெற்கு நோக்கியும் காட்சிதருகிரார்கள் . இங்கு மொத்தம் 34 சன்னதிகள் உள்ளன. சோழர்காலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட மூர்த்தி சுற்றுபிராகரத்தில் உள்ளது இவருக்கு பூசைகள் நிகழ்ந்த பின்னே கருவறையில் உள்ள மூர்த்திக்கும் அம்மைக்கு பூசைகள் நிகழ்கின்ற . உலகில் மிகப் பெரிய சோமாஸ்கந்த மூர்த்தம் இந்தலத்தில் உள்ளது . இந்த மூர்த்தி சற்று வித்தியாசமான வடிவமைக்கப்பட்ட மூர்த்தி இந்த மூர்த்தி பஞ்சலோகத்தில் வார்க்கப்பட்டபோது 112gதங்கம் சேர்க்கப்பட்டு வடிவமைக்கப்பட்ட மூர்த்தி அதன் காரணமாக இவர் மிகவும் பலப்லாபாக காட்சிதருகிறார் . இங்கு ராசா ராச சோழனுக்கும் சன்னதி உள்ளது குறிப்பிடத்தக்கது.
தலத்தின் மீது பாடப்பட்டப பதிகங்கள் :
இங்குள்ள ஈசனை சம்பந்தரும் சுந்தரரும் ராமேஸ்வரதில் இருந்தவாறு ஒரு பதிகம் பாடி மனதில் நினைத்து வழிபாடுகள் செய்தனர்.
கி.பி ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர் இராமேஸ்வரத்தில் இருந்தவாறே, திருக்கேதீச்சரத்தின் பெருமையை ஒரு பதிகத்தில் பாடியுள்ளார். இப்பதிகம் இரண்டாந்திருமுறையில் உள்ளது. இவர் திருகேதீச்சரம் அமைந்துள்ள மாதோட்டத்தின் எழிலை ஒவ்வொரு பாடலிலும் கூறிச்செல்கின்றார். கடிகமழ் பொழிலணி மாதோட்டம், எழில்திகழ் மாதோட்டம், இச்சையில் உழல்பவர் உயர்தரு மாதோட்டம், மறிகடல் மாதோட்டம், இறப்பிலர் மலி கடல் மாதோட்டம், மந்திகள் களிப்புற மருவிய மாதோட்டம், மஞ்ஞை நடமிடு மாதோட்டம், முத்து மா மணிகளும் பொருந்திய மாதோட்டம், மாவும் பூகழும் கதலியும் நெருங்கு மாதோட்டம், என்றெல்லாம் ஊரின் பெருமையை, எழிலைப் புகழ்ந்து கூறிய சம்பந்தர், இங்கு எழுந்தருளியுள்ள கேதீச்சரப் பெருமானை '...பாமாலை பாடலாயின் பாடுமின் பக்தர்கள் பரகதி பெறலாமே' என்று முடிக்கின்றார்.
அப்பர்சுவாமிகளின் திருவீழிமிழலைப்பதிகத்தில் 'பொங்கரவர் சங்கரர்வெண் குழையோர் காதர் கேதீச்சர மேவினார் கேதாரத்தார்..' என்று திருக்கேதீச்சரநாதனைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இப்பாடல் ஆறாந்திருமுறையில் உள்ளது.
இங்குள்ள ஈசன் மீது பாடப்பட்ட பதிகங்கள் கீழ் வருமாறு உள்ளன:
புத்திராய்ச் சில புனைதுகில் உடையவர்
புறனுரைச் சமண்ஆதர்
எத்தர் ஆகிநின்று உண்பவர் இயம்பிய
ஏழைமை கேளேன்மின்
மத்த யானையை மறுகிட உரிசெய்து
போர்த்தவர் மாதோட்டத்து
அத்தர் மன்னுபா லாவியின் கரையிற்கே
தீச்சரம் அடைமின்னே.
-------திருஞான சம்பந்தர்
கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் சுந்தரமூர்த்தி நாயனார். இவர் சேரமான் பெருமான் நாயனாருடன் இராமேசுவரம் வந்து தங்கியிருந்தபோது, அங்கிருந்தே திருக்கேதீச்சரப்பெருமானின் சிறப்பை ஒரு பதிகத்தில் பாடியுள்ளார். ஏழாந்திருமுறையிலே இத்திருப்பதிகம் காணப்படுகின்றது. இவர் பாடிய பாடல்கள் பத்திலும், திருக்கேதீச்சரத்தானே என்று இறைவனை ஏத்தும் பண்பு காணப்படுகின்றது. இவரது இறுதிப் பாடலில் '..மறையார் புகழ் ஊரன் அடித் தொண்டனுரை செய்த குறையாத்தமிழ் பத்தும்சொலக் கூடாகொடு வினையே' என்று முடிக்கின்றார்.
நத்தார்புடை ஞானன்பசு
ஏறிந்நனை கவிழ்வாய்
மத்தம்மத யானைஉரி
போர்த்தமழு வாளன்
பத்தாகிய தொண்டர்தொழு
பாலாவியின் கரைமேல்
செத்தார்எலும்பு அணிவான்திருக்
கேதீச்சரத் தானே.
-------சுந்தரர்
மடங்கள்:
இவ்வாலயத்தில் திருஞானசம்பந்தர் மடம், சுந்தரர்மடம், நாட்டுக்கோட்டை நகரத்தார்மடம், அம்மன்மடம், பசுமடம், பூநகரிமடம், சபாரத்தினசாமிமடம், சிவராத்திரிமடம், திருவாசகமடம், திருப்பதிமடம், கௌரீசர்மடம், நாவலர்பெருமான்மடம், விசுவகன்மடம், திருக்குறிப்புத்தொண்டர் மடம் என பல மடங்கள் 1990ஆம் ஆண்டு வரை காணப்பட்டன. பல தசாப்தங்களாக நடைபெற்ற யுத்தத்தில் அரசபடைகளின் தாக்குதல்களுக்குள்ளாகி, இந்துக்கோயில்கள் பெரிதும் பாதிப்படைந்தன.
ஆலய பூசையும் விழாக்களும் :
தற்போது திருக்கேதீச்சரம் ஆலயத்தில் நித்திய, நைமித்திக பூசைகள் சிறப்பாக நடைபெறும். நித்தியபூசையென்றால் காலை, மாலை நடைபெறும் பூசைகளையும், நைமித்திக பூசை யென்பது விசேடநாள் பூசைகளையும் குறிக்கும். ஆலய உற்சவவிழா 17 நாட்கள் வைகாசியில் நடைபெறும். கேதாரகௌரி விரத விழா 21 நாட்கள் விரதமாகக் கடைப்பிடிக்கப்பட்டு, பின் விழாவாகவும் கொண்டாடப்படும். அவ்வாறே மகாசிவராத்திரியும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும். இத்தினத்தன்று குடங்களில் பாலாவித்தீர்த்தத்தை எடுத்துச்சென்று, மகாலிங்கப் பெருமானுக்கு அபிஷகம் செய்வர்.
வைகாசி விசாகத்தின் முதல் நாள் திருத்தேர் உற்சவமும் அன்று ஐந்து பெரிய தேர்களில் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் வைகாசி விசாகத்தின் முதல்நாளில் போது இத்தேர்கள் பவனி வருவதுண்டு. 180 அடி உயரமுள்ள சிற்பவேலைப்பாடுகள் அமைந்த தேரில் எம்பெருமான் பவனிவருவர். அடுத்த நாள் பாலவி ஆற்றங்கரையில் உள்ள மண்டபத்தில் இருந்து தீர்த்தவாரி உற்சவம் சிறப்பாக அஸ்தரதேவருக்கு அபிஷேக்தோடு விழா நிறைவு பெறுகிறது.
________ ஆ.தெக்கூர் கரு.கண.இராம.நா.இராமு
I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
ReplyDeleteBreather Pipe Manufacturers
Heat sink Manufacturers
Aluminum heat sink Manufacturers
Cover Acc Drive Manufacturers in Chennai
EGR Adapter Manufacturers in Chennai
Fan Spacer Manufacturers
Lube Adapter Manufacturers
Pin Brake Manufacturers
Caliper Bolt Manufacturers
Slave Cylinder Manufacturers
Manifold Manufacturers
Twin Head Machine Manufacturer in Chennai