Saturday, 21 March 2015

பனையபட்டி

பனையபட்டி சிவன்கோவில் 

பரமசிவன் கோயில் கொண்ட 
பனையப்பட்டி எங்கள் ஊராம் 
பாலகனாய் இருந்த போது 
பலதடவை திரிந்த ஊராம். 
ஊருக்குள்ளே இறங்கியதும் 
உயர்கோபுரத்தைக் கும்பிட்டு
ஊரணியில் கால் நனைத்துச்
செல்வோம் சீரு நடை போட்டு.
போடுவோம் நடை மெதுவாக
ஆலமரத்தின் அருகாக போகும்
பாதை சரிவாக அதில் ஆனந்தமாய்
நடந்த வாறு. ஆறுகால பூசையும்
இடையறாது ஆனந்த கூத்தனுக்கு
நடக்குது ஐயமில்லா அவன்தாளை
நாம் பற்ற அனுக்கிரகம் உனக்குண்டு.
உண்டு ஐந்து பங்களாக்கள்
வரிசையாகவலது பக்கம் கண்டு
சொல்வீர் பிரம்மாண்டம் அந்த
பெரிய வீடு இடது பக்கம்.
பக்கம்பக்கமாய் கட்டியதால்
பார்த்துப் பேச ஆதரவாய் பக்க
பலமாய் இருந்தனரே நம்
பாச மிகு ஐயாக்கள். 


ஐயாவை நான் பார்த்ததில்லை
அப்பத்தாவையும் பார்த்ததில்லை
ஆயா வீட்டு அய்யாவிடம் நான்
அதிக நாள் இருந்ததாலோ?
இருந்தேன் குழிபிறையில்
சிலகாலம் அறிந்தேன் ஐயாவின்
இசைஞானம் தெரிந்தேனோ
அது கை வர அதற்குள்
மரிந்தாய் ஐயா இங்கிருந்து.
இருந்தாலும் மனக்குறையில்லை
நடராச ஐயாவையும் சொக்கலிங்க
ஐயாவையும் என் இரு கண்கள்
கண்டதற்கு என் புண்ணியம்தான் என்னே.
என்னே என் சொந்த ஊரும்!
என்னே என் உறவுகளும்!
அ ஃதனை பொன்னே என்றறிய
வைத்தாய் இறைவா
உன் பொற்பாதம் போற்றி.
-தீனாரூனா.

No comments:

Post a Comment