Saturday, 25 April 2015

நம்பர் கணக்கும், நம்மவர் கணக்கும்...!!!




       நகரத்தார்களில் சென்ற நூற்றாண்டின் இடைப் பகுதிகளில் நம்பர் என்ற  ஆங்கிலச் சொல் மிகவும் நுட்பமாகவே புழக்கத்தி வந்தது. காரணம்,    அதற்கும் முந்தைய 19 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலமான 1823 ஆம் ஆண்டு நகரத்தார்களின் இனக்குழு ஒருங்கிணைப்புக் கூட்டம் நடந்தது.   அதில் தாமதமாக வந்த திரு. காக்கா வீரய்யன் செட்டியார் கூட்டத்தினரிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்பதே. அவர் அதற்கு மறுத்தார். ஆகவே அவரையும் அவரது குடும்பத்தினரையும் தள்ளி வைப்பதாக தீர்மானம் போடப்பட்டது. அப்போது அவர் தனிமைப்படக் கூடாது என்பதற்காக அவரது மகன், பெண் வழி கொள்வினை, மணவினை செய்து கொண்டோர் அவருடன் சென்றனர். இவர்களுக்கு கோவில் மாலை தருவதில்லை என்ற முடிவும் செய்யப்பட்டது. ஆகவே பிரிந்து சென்ற 150 புள்ளிகள் ஒன்பது கோவில்களிலும் இருந்தமையால் அவர்கள் தங்களுக்கென்று தனிக் கோவில் கட்டி நகரத்தார்களின் ஆகம முறைகளையும், ஈழத்திலிருந்து வந்த பின்பும் நகரத்தார்கள் தொடரும் இழை எடுத்தல் என்ற பிள்ளையார் நோன்பினையும் சரிவரச் செய்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்களை தங்களுக்கு அடுத்த ரெண்டாம் நம்பர் நகரத்தார் என்று அழைக்கும் சொல்லாடல் இருந்து வருகின்றது. அது போக நகரத்தார் சமூகத்தில் ஆண் அல்லது பெண் தங்கள் வாழ்வில் முதல் விருப்பமாக வேற்று சமூகத்தில் ( தமிழ் இனக் குழுக்களிலேயே உள்ள வேறு சமுதாயங்களில் ) மணமுடித்தால் அவர்களையும் ஒதுக்கி ரெண்டாம் நம்பர் கொடுக்கப்பட்டுவிடும். நிற்க. 

                     இப்போது சிலர் நகரத்தார் சமூகத்தில் மக்கட் தொகை குறைவதைக் கண்டு இனப்பெருக்கம் ஆவதற்கு Inter Caste Marriage செய்தால் சமூகம் தழைக்கும் என்ற நல்ல நோக்கத்துடன் பேசியும், எழுதியும் வருகின்றனர். அவர்களின் புரிதல் குறித்தும் அவர்கள் எதனை வைத்து யாரை நம் நகரத்தார் சமூகத்தில் அழைக்க விரும்புகின்றனர் என்பது எனக்கு சரிவரத் தெரியவில்லையென்றாலும், என்னிடம் சிலர் பேசிய உரையாடல்கள், ஐய வினாக்கள் ஆகியவற்றின் அடிப்படையிலும், இதுகாறும் நடந்த Inter Caste Marriage என்பது நம் நகரத்தார் சமூகங்களில் யார் யாரை அங்கீகரித்துள்ளோம், யார் யாரைப் புறக்கணித்துள்ளோம் என்பதனையும் மனதில் வைத்து இந்தக் கட்டுரை எழுத வேண்டிய அவசியம் வந்துள்ளது. இது முழுமையானது அல்ல.விவாத்தித்து புரிந்துகொண்டு, சீர்மை செய்து சீர்தூக்கி ஏற்கவேண்டியவை என்ன , முற்று முழுதாகத தள்ள வேண்டியவை என்ன என்ற நிலைப் பாட்டிற்கு வரவேண்டிய காலம் வந்துள்ளது.நிற்க. வலைதளத்தில் ஐயா வினைதீர்த்தான் என்பர் எழுதிய கருத்துரைக்கு பதிலுரையாக இதனை - சொல்வனம் - என்ற இணையத்தில் கீழ் வருமாறு பதிவு செய்துள்ளேன்...


" இழந்த பண்டைய பெருமை என்பது அரசியல் புறக் காரணங்களும், நமது சமுதாயக் கட்டமைப்பை நேர்த்தியாக கட்டுடைக்கும் வகையிலும் செய்யப்பட்டது. இதற்கு நாம் நம்பிய இந்திய, மாநில அரசுகளே காரணம். அந்தப் புறக் காரணத்திற்கு சில வந்தேறிய அகக் காரணங்கள் உண்டு. அதனைத் தனியாக விவாதிக்க வேண்டும். இதில் ஐயா வினைதீர்த்தான் சொல்லியது போல நமது சமூகம் மீண்டும் பண்டைய பெருமை அடைவதற்கு Inter Caste Marriage என்ற ஒரு சமூகவியல் சொற்றொடரைப் பயன்படுத்துகின்றார். இதற்கு அவர் கூறும் உண்மைப் பொருள் என்ன ?? விளக்கம் தேவை. கடந்த 1948 ஆம் ஆண்டு கட்டுடைக்கப்பட்ட நகரத்தார் சமூகம் செய்த முதல் தவறு மேற்படிதான். அதாவது, இனத்தைப் பெருக்குகின்றேன் பேர்வழி என்று சொராஷ்டிரா, நாயர், நாயுடு, குஜராத்தி என்று பெண் எடுத்து வந்து, மீண்டும் அவர்கள் குழந்தைகளை தங்களிடம் இருக்கும் பண பலத்தை வைத்து, நகரத்தார் சமூகத்தில் கலப்பது என்பது, மேற்படி Inter Caste Marriage என்ற வகையில் வராது. காரணம், நான் மேலே குறிப்பிட்ட அனைத்து சாதிகளும் உடலில் வெள்ளை நிறத் தோல் கொண்ட வேற்று இனத்துப் பெண்கள் என்பதை உணர்க. ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்னர் புகார் நகரிலிருந்து உலகம் சுற்றி முந்நீர் கடந்து ஏழு கடலையும் அளந்த நகரத்தார் பெருமக்கள் தங்கள் பெண் மக்கள் அனைவரும் தீக் குளித்தத போது ஒரு போதும் வெள்ளை நிறம் கொண்ட யாவனர்கலான கிரேக்கப் பெண்களையோ, ரோமாபுரி தேவதைகளையோ,சீனபெண்களையோ அழைத்து வந்து குடும்பம் நடத்தவில்லை. மாறாக, தமிழ் இனத்தில் உழுதுண்டு வாழும் வேளாளன் குடியில் பெண் எடுக்கினர். ஏன் ??? தாங்கள் எந்த இனம் என்று அவர்களுக்குத் தெரிந்திருந்தது என்பதைவிட அதற்கும் மேலாக இனச் சுரணை இருந்தது. இப்போது தாங்கள் கூறும் Inter Caste Marriage என்ற சொல்லாடலுக்குப் பொருள் என்பது மரபு வழித் தமிழர் இனக்குழுக்களாக இருப்பின் ஏற்கப்படும், இல்லை இனப்பெருக்கம் என்ற பெயரில் வந்தேறிகளையும், அவர்களின் புற அழகிற்கும் ஒரு சில பணம் படைத்தவர்கள் ஓடினால் அதற்கு உண்மை நகரத்தார்கள் வெண்சாமரம் வீச வரமாட்டார்கள். இதற்கான மறைமுக இனக் கலப்பு அரசியலை எதிர்த்து நகரத்தார் இளைஞர்கள் அப்படிக் கலந்துவிட்ட வேற்று இனத்து, மாநிலத்து பரிவட்டதாரிகளை எதிர் கொள்வர் என்பதில் சிறிதும் ஐயமில்லை என்பதனை உறுதிபடக் கூறுகின்றேன்." இதுதான் எனது பதிவு.
                         அதாவது சுருக்கமாகச் சொன்னால் மேலே பதிவிட்ட வந்தேறிய மாற்று மொழிவழி தேசிய இனத்தினரை திருமணம் செய்வது என்பது நகரத்தார்களின் தொன்று தொட்ட பாரிய பண்பாட்டிற்கு அழகல்ல. நகரத்தார்களின்  பெண் மக்கள் அனைவரும் தீக் குளித்த பின்னும் நகரத்தார்கள் வேற்று மொழி,வேற்று பண்பாட்டு அடையாளம் கொண்ட எவரையும் மணக்கவில்லை என்பதனையும் முழுமையாகக் கருத்தில் கொள்ள வேண்டும். இதில் நமது தமிழர் பண்பாட்டை விட்டு வேற்று இனம் தேடுபவர்கள் தமிழர்களாகவும், நகரத்தார்களாகவும் ஏற்கப்படமாட்டார்கள். கோவிலின் முன்பும், இறைவனின் முன்பும் உங்கள் நிற மென்மையும், பொருள் கொண்ட பணத்தின் மென்மையும் எடுபடாது.அன்புடன்... 

---- நெற்குப்பை காசிவிசுவநாதன்.

No comments:

Post a Comment