Tuesday 28 April 2015

பெயர்வெட்டுதல்மரபும் நகரத்தாரும்:






நகரத்தார்கள் மத்தியில் இந்த வழக்கம் முன்பு எல்லா வீடுகளிலும் காணமுடியும் . இந்த பெயர்வெட்டுதல் என்பது எல்லாவித பொருட்களிலும் வெட்டப்படும் (தங்கநகை /வெள்ளி /வெள்ளைப்பித்தளை / வெண்கலம் /செம்பு /அலுமினியம் / இரும்பு /மங்கு /மரம் /கல் ) என்று எல்லாவிதமான பொருட்களிலும் பெயர் வெட்டும் வழக்கம் உண்டு .முன்பு எந்த ஒரு புதிய பொருள் வாங்கினாலும் அதில் பெயர் வெட்டியபின் அதை புழங்குவர் அதுவரை அந்த பொருளை புழங்காது ஓரம்கட்டிவைப்பர் . இந்த பெயர்வேட்ட காரணம் யார் வீட்டு பொருள் என்று அடையலாம் காணவே இந்த வழக்கம் இருந்தது. முன்பு வீட்டில் பங்குதாரர்கள் பெரும்பான்மையானோர் இருந்தனர் அதற்காக இந்த வழக்கம் இருந்தது. இன்னார் வீட்டுப்பொருள் என்று தெரிந்துகொள்ள இது உதவும். சாமான்களில் பெயரை கண்ட வாக்கில் வெட்டாமல் பார்த்தால் பொருள் சரியாக அடையாளம் தெரியும் வண்ணம் பெரிய பொருள் என்றால் பொருளின் வாய்பகுதி விளும்பு பகுதி மூடிகள் போன்றவற்றில் பெயர்கள் வெட்டப்படும் . இந்த பெயர்வெட்டுதல் என்பது முன்பு வீட்டின் உள்ள பெரியவர்கள் வெட்டுவர் அல்லது இதற்கென்று ஆட்கள் வருவர் அவர்களை கொண்டு இந்த பெயர் வெட்டுவர் அல்லது பொருள்வாங்கும் பொது பெயர்வெட்டியே வாங்குவர் . இந்த பெயர் வெட்டுவது என்பது இன்று மின்சாதனம் கொண்டு வெட்டபடுகிறது. ஆனால் அன்று சிறிய கூர்மையான உளியின் உதவிகொண்டு மிகவும் பொறுமையாக பொருளுக்கும் சேதாரம் வராவண்ணம் வெட்டவேண்டும் இதற்கு மிகவும் பொருமை வேண்டும் .நேர்த்தியாக ஒரேமாதரி அழகு குன்றாது வெட்டியிருப்பர். இன்று மிஷின் மூலம் வெட்டுவதில் கூட இந்த அளவிற்கு நேர்த்தி கிடைப்பதில்லை .இன்றும் நம் வீட்டுப் பழைய பொருட்களில் விலாசங்களை காணலாம். சில பொருட்களில் இரண்டு விலாசம் மூன்று விலாசங்கள்கூட இருக்கும் இதன் மூலம் அந்த பொருளின் பழமையை நாம் அறியலாம்.

--------------கரு.இராமநாதன்

No comments:

Post a Comment