Thursday 1 October 2015

தமிழர் பண்பாட்டில் சைவமடங்களின் பங்களிப்பு.-

தமிழகத்தின் சைவ வேளாளர் சமூகம் மேற்படி திராவிடத்தை தூக்கிப் பிடிப்பதில்லை. முதலில் திரவிடியா கூட்டம் தங்களது சீர்திருத்த சீரழிப்பில் உறவாடிக் குடி கெடுத்த எண்ணற்ற தமிழர் இனக்குழுக்களில் சைவ வேளாளர், நாட்டுக் கோட்டை நகரத்தார் இரண்டு இனக்குழுக்களும் அடங்கும். இவை இரண்டும் ஒட்டு அரசியலில் சிறுபான்மை. இது தற்கால இருபதாம் நூற்றாண்டு கண்டுபிடிப்பு, சூழல்.


ஆனால், சங்கம சகோதரர்கள், மற்றும் கே.டி.ராயன் (கிருஷ்ணதேவராயலு ) உள்ளே வந்து நிலை கொண்ட போது தமிழர் பன்பாட்டில் பாரிய தாக்குதல் நடந்தது. அவர்கள் வந்ததே வேளாண் குடி, கோவிலில் இருப்பதுதா ?? சனாதனம் முழுமையாகத் தமிழ் மண்ணில் வேர் ஊன்றாமல் தோற்பதா ??? என்ற வெஞ்சினத்துடன் வந்தவர்கள்தான். இந்த வேளையில் இவர்களின் வருகைக்கு முந்தைய ஒரே சைவ மடம் மதுரை ஆதீனமே. ஆனால் கே.டி.ராயர்களின் கே.டித்தனமான ஊடுருவலை தவிர்க்க பின்னர், தமிழர் அடையாளங்களைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டதே திருவாடுதுறை, தருமை ஆதீனங்கள் - சைவ மடங்கள் . மிகப் பிற்காலத்தில் உருவானதுதான் காசிவாசி குமரகுருபர சுவாமிகள் உருவாக்கிய திருப்பனந்தாள் சைவ மடம். இந்நிலையில் தமிழர்களின் மெய்யியலான பலவற்றை தன்னகத்தே போற்றிவந்தவைகள் இந்த சைவ மடங்கள். (சைவம் என்பதாக மட்டுமே இங்கு கருத வேண்டியதில்லை - அதற்கும் முந்தைய பல நூல்கள் இந்த மடங்களில் பாதுக்காப்பட்டன – தமிழர் மெய்யியல்,காப்பியங்கள் எதையும் கேடி.ராயர்கள் பாதுக்கக்கவில்லை மாறாக மணிபிரவாள தமிழ் நடையினை அரசு அதிகாரம் கொண்டு வலிந்து புகுத்தினர். இன்றைய திரவிடியா அரசுகள் தமிழில் வலிந்து ஆங்கிலத்தை கலப்பதுபோல்). வழமையாகவே நிறுவனமயமான மடங்களுக்கு உள்ள பின்னடைவு சைவ மடங்களுக்கும் பொருந்தும். ஆனால் வடுகப் பன்பாட்டை முதலில் சைவ மடங்களில் / கோவில்களில் அதிகம் நுழையாமல் பாதுக்காக்க சைவ மடங்களின் பங்களிப்பு மறத்தல் கூடாது.
இவர்களுடன் நகரத்தார்கள் கை கோர்த்து பிற்கால பாண்டிய மன்னர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு, தமிழ்க் கோவில்களைப் பாதுக்காத்து வந்தனர்.


வழமையான வடுக-ஆரியக் கூட்டுக் களவானிகளின் நீண்ட நாள் செயல் திட்டத்தில் பார்ப்பானை எதிர்க்கின்றேன் பேர்வழி என்று பார்ப்பன எதிர்ப்பில் தமிழர் இனக்குழுவின் ஒரு குடியான சைவ வேளாளர்களையும் இணைத்து, சீரழிப்பு சீர்திருத்தம் செய்யத் துவங்கினர். திருமலை நாயுடுவின் காலத்திலேயே முற்றாக தமிழர் இனக்குழுக்கள் பிளவுபட்டது. அந்தப் பிளவை என்றுமே ஊதிப்பெருக்கி, பின்னர் இரண்டு பகுதிகளாய்ப் பிரிந்த தமிழர் இனக்குழுக்களை, எண்ணிக்கையின் அடிப்படையில் அதிகமாக இருப்பவர்களை மோதவிடுவதும், சிறுபான்மை சமூகங்களை மிகப் பிற்காலமான இருபதாம் நூற்றாண்டில் தனித் தனியாகவே கட்டுடைத்தனர். இதுவே தமிழர் இனவழிப்பின் பிற்காலத் தொடக்கமாக இருந்தது. நகரத்தார்களை நயந்து உண்டைச் சோறு நிதம் தின்ற திராவிட நாதாரிகள், அவர்களின் புலம்பெயர் கட்டமைப்பை உடைத்து பொருளாதார முதுகெலும்பை நொறுக்கியது. பின்னர் சைவ மடங்களைத் தனிமைப்படுத்தியது. இப்படி பல சிக்கல்கள் உள்ள நிலையில் என்ன நடக்கின்றது என்ற அரசியல் விழிப்பு நிலை இல்லாமல் இன்று சிதறிக் கிடக்கின்றோம். இப்போது நாம் செய்ய வேண்டியது வடுக அரசியல் விபச்சாரத்தை அம்பலப்படுத்துவதும், தமிழர் இனக்குழுக்கள் ஓர்மையுடன் சிந்தித்து செயல்பட வேண்டியதும்தான்.
வேணும் அருள்மிகு பொய்சொல்லா மெய்யர் துணை,
---- நெற்குப்பை காசிவிசுவநாதன்.

No comments:

Post a Comment