Friday, 9 October 2015

நாடுகள் கடந்த நகரத்தார் வீடுகள் :





கடல் கடந்து அய்யாக்கள் கட்டி காத்த பொருளினால்
கட்டி வைத்த வீடுகளை !
அப்பத்தா , ஆயாவும் அழகழகாய் பேணிக்காத்து !
தோழ்களினால் தைத்த உரை தூண்களுக்கு பாதுகாப்பு !
இரும்பு கதவென்றால் இடுக்குகளில் கலை அழகு !
மறக்கதவேன்றால் மன்னவரே திகைப்பதுண்டு !
நடக்கும்போது நிழல் என்று தரை
பார்த்தால் முகம் தெரியும் பளிங்கு கல் நடையினிலே !
உத்திரத்தில் உற்று பார்த்தால் ஒவ்வொன்றும் ஓவியங்கள் !
ஓவியங்கள் என்னவென்றால் அவை அனைத்தும் கதை
சொல்லும் காவியங்கள் !
முகப்பிநிலே இரு திண்ணை எதிர் எதிரே அமைந்திருக்க !
திருமண நேரத்திலே கலை கட்டும் அந்த இடம் !
சன்னல்கள் திறந்திருந்தால் திண்ணையிலே அமர்ந்தபடி மன மேடை
தான் தெரியும் அவ்வளவு நேர்கோடு !
முகப்பு , வளவென்று மூன்றாம் கட்டு வரை ஒவ்வொரு இடங்களிலும்

கலை அழகு காட்சி கண்டால் அய்யாக்கள் தொழில் திறமை
கண் முன்னே வந்துபோகும் !
தொழில் செய்த காரணத்தால் கண்டனரே இவ்வளவு !
அவர்கள் வழி செல்லும் போது நமக்கு என்றும் பாதுக்காப்பு !
சாதித்த காரணத்தால் தமிழ் இனத்தின் பெருங்குடியோ !
என்று எண்ணி பார்கைலே !
எந்த இடம் சென்றாலும் செய்கின்ற திருப்பனியால்
அய்யாக்கள் புண்ணியங்கள் தந்ததுவே இந்த இடம் !
சிதறாத சிந்தனையும் , சீரான யோசனையும் , அல்ல அல்ல
குறையாத ஆழ்கடலில் ஆலம்போல் அய்யாக்கள் அடிமனது !
அன்பும் பண்பும் அய்யாக்கள் பெற்றிடவே
அப்பத்தா,ஆயாவும் அகலாத காரணமே !
பெற்ற பிள்ளைகளும் , அவர் பெற்ற பேரன்களும் கூடி சேர்ந்து
வரும் வேளையிலே வீடுகளும் பெற்றிடுமே கோடி இன்பம் !
அந்த அய்யாக்கள் நினைப்புகளை தாங்கி நிற்கும் விலாசம்களை
விசாலத்தில் காட்டி வரும் அரண்மனை அம்சமாக
அமைந்த நம் வீடுகளை காத்திடவே !
செய்திடுவோம் தொழில்கலினை அய்யாக்கள் வழி சென்று !
காத்திடுவோம் குலப்பெருமை நம் சந்ததிக்கு தந்திடவே !!

------- வீர-வீரப்பன்

No comments:

Post a Comment