Saturday, 31 December 2016

ஆயாவின் ஆத்தா வீட்டு பிள்ளையார்நோன்பு நினைவுகள்



எங்கள் ஆயாவிடம் தன் சிறுவயது பிள்ளையார் நோன்பு அனுபங்களை கேட்ட பொது அவர் குழிபிறையில் தன் ஆத்தா விட்டு அனுபவங்களையும் தன் அம்மான் விராச்சிலை மு.பழ வீட்டின் அனுபவங்களையும் அன்று செய்த வழக்கத்தையும் சொன்னார் அவற்றின் தொகுப்பே இது.

கார்த்திகை தீபத்திருநாளில் இருந்து இருபத்தியொரு நாட்கள் நோன்பு இருந்து அதாதுவது கார்த்திகை மாதம் அமரபக்ஷம் துவங்கி மார்கழி மாதம் பூர்வபக்ஷம் சஷ்டி திதியும் சதயநட்சதிரம் கூடி வரும் நாள் வரை புல்லால் உண்ணாது காலையும் மாலையும் நீராடி மாலையில் விளக்கேற்றி வைத்து புது கொடிவேட்டியில் இருந்து தினம் ஒரு நூல்இழை எடுத்து வைத்து சேகரித்து வருவராம் . அந்த 21நாட்களில் ஒரு நல்ல நாள் பார்த்து விராசிலையில் இருந்து தன் வீட்டிற்கும் தன் ஐயா அல்லது அம்மான் மூணு படி பச்சருசி , வெள்ளம் , பசுநெய் உடன் 21ரூபாய் பணம் இவைகளை வைத்து வண்டிகட்டிக்கொண்டு அல்லது (பிளசரில் )சின்னக்காரில் வந்து கொடுத்துச் செல்வார்களாம். அன்று மதியம் மரக்காய்கறிகள் கொண்டு பிறந்த வீட்டு சீதனம் கொண்டு வந்தவர்களுக்கும் விருந்து படைபார்கலாம். 21ஆம் நாள் காலை அல்லது முதல் நாள் வீடு வாசல் எல்லாம் தூய்மைபடுத்தி .வீட்டு வாயிலில் மங்கலமாய் கோலமிட்டு மாவிலை தோரணம் கட்டி வைத்தும். முதல் நாள் இரவோ அல்லது காலையிலே பலகாரங்கள் செய்ய மாவுக்கும் ஊறவைத்து அவற்றை பக்குவமாய் அரைத்து எடுப்பார்களாம்.அவர்கள் சிறுபிள்ளையாக இருக்கும் பொது வீட்டில் நோன்பன்று சீடை , தேன்குழல் , மவோலம் ,சீப்புசீடை ,சுண்டக்கடலை , வெள்ளைப்பணியாரம்,உளுந்துவடை ,கல்கண்டு வடை , கருப்பட்டி பணியாரம் , சீயம் ,கொழுக்கட்டை ,மாவிளக்கும் , பொரியுருண்டை ,கடலையுருண்டை ,எள்ளுருண்டை இவைகளை செய்து வைப்பார்கலாம். அதிகமாக செய்தாலும் எல்லாம் ஒற்றைப்படை 3,5,7,9என்ற எண்ணிகையில் தனியாக எடுத்து வைப்பார்களாம் .இவ்வளவு பலகாரங்களையும் ஆளுக்கும் ஒருவராக ஒன்றாக கூடி வீட்டில் உள்ள அனைவரும் பகிர்ந்து செய்வார்களாம் . அதுமட்டும் இல்லாது வீட்டில் மண்பானை ஓட்டில் மண்கொட்டி வீட்டிலேயே 5வகை (நெல் ,அவள்,சோளம் ,கம்பு ,எள் )பொரிகளையும் பொரித்து எடுப்பார்கலாம்.சாமிவீட்டின் உள்ளோ அல்லது வளவிலோ பச்சருசி மாவால் நடுவீட்டுக் கோலமிட்டு அதன் மீது பூ ,பழம், பலகாரங்கள் , விளக்கு ,பிள்ளையார் இவைகளை வைத்து தயார் செய்வார்களாம் .



விநாயகருக்கும் அருகில் இருகுச்சியில் ஆவாரம்பூ , கன்னுப்பிள்ளை பூ ,நெல்கதிர் இவைகளை ஒரு செண்டாக கட்டி விநாயகருக்கும் இருபுறமும் வைப்பார்களாம் . இதற்கும் அர்த்தம் விநாயகர் ஆவாரம் பூ காட்டுக்கும் இடையில் இருப்பதாகவும் இப்படி உள்ள உள்ள விநாயகர் வழிபடுதல் நன்மை பயக்கும் .ஆவாரை,கன்னுப்பிபிள்ளைபூ இவைகள் மருத்துவ குணம் கொண்டது .நெற்கதிர்கள் நாம் உண்ணும் உணவு பொருள் இவற்றை விநாயகருக்கும் சார்த்தி வழிபடுவது சிறப்பு ஆவாரைப் பூ 21 இதழ்கள் கொண்டது .அதன் மடல்கள் மேல் நோக்கி உள்ளதால் வாழ்வில் நாம் மேல்நோக்கி செல்ல வேண்டும் என்பதை குறிக்கும் வகையிலும் . இந்த ஆவாரை கொண்டு விநாயகரை அர்சித்து வழிபட்டால் துன்பங்கள் நீங்கு என்பதான்லும் . இந்த செண்டுகள் விநாயகரின் அங்குசம் போன்று இருப்பதால் இதை வைத்து வழிபாடுசெய்கிக்றோம் என்றார் . இந்த பூசையில் வைக்க வெள்ளிப் பிள்ளையார் திருமணத்தின் பொது பெண்வீட்டில் குடுப்பதை வைத்து எடுப்பார்கள் .சிறிது பூ , அருகம்புல் சார்த்தி வழிபடுவார்கலாம். முன்பு பொரி கிண்ணம் திருமணத்தின் பொது பெண்வீட்டார் வெள்ளைப்பித்தாளை ,வெண்கலம் ,வெள்ளி போன்றவைகளில் செய்து வைப்பது வழக்கம் அந்த பொரிகிண்ணத்தில் பொறித்த பொறிகளை விநாயகர் முன்வைபார்க்கலாம்.





மாலைப்பொழுதின் துவக்கத்தில் வீட்டில் பெரியவர்(ஐயா) ஒரு தடுக்கும் போட்டு அதன் மீது அமர்ந்து 21நாட்கள் சேகரித்து வைத்த நூல்இழைகளை எடுத்து திரட்டு பாலுடன் நெய் கலந்து கொண்டு செய்த கலவையில் நூல்இழைகளை மத்தியில் வைத்து பிள்ளையாராக வீட்டில் உள்ளவர் எண்ணிகையை கணக்கில் கொண்டு ஒற்றைபடையில் பிடித்து வைக்கப்படும். பிடித்து வைத்த சிறுபிள்ளையார்களையும் இங்கு பிள்ளையார் முன்பு வைத்து குத்துவிளக்கேற்றி வைத்து உடன் ஒரு பிள்ளையார் விளக்கேற்றி வைத்து தேங்காய் உடைத்து பின் வீட்டில் இருக்கும் பெண்கள் அங்கு அருகில் உள்ள சுவற்றில் தும்பு பிடிப்பார்கலாம். பின் எல்லோறோம் ஒன்றாக சேர்ந்து அமர்ந்து ஔவையார் இயற்றிய விநாயகர் அகவல் , கோளாறு பதிகம் , தங்களுக்கும் தெரிந்த விநாயகர் பாடலை படித்து வழிபடுவர் உப பாடல்களையும் படிப்பதும் உண்டாம். படித்து முடித்து சங்குஊத்தி தீபம் பார்ப்பார்கலாம். பின் வீட்டின் பெரிய ஐயா தலையில் விருமாப்பு கட்டி கொண்டு கிழக்கு அல்லது வடக்கு பார்த்து தடுகின் மீது அமர வீட்டில் பெரியார் முதல் சிறியவர் வரை ஒருவர் பின் ஒருவராக அவர்முன் விழுந்து வங்கி திருநீறு பெற்று தீபம் ஏற்றப்பட்ட இழையை விநாயகரை நினைத்து அணையாமல் அப்படியே வாயில் இட்டுக் கொள்வார்களாம். 



அப்படி வீட்டில் யாரேனும் கருவுற்று இருந்தால் தாய்க்கும் ஒரு இழையும் பிள்ளைக்கும் ஒரு இழையும் கொடுப்பார்களாம் . இழை எடுத்து கொடுக்கும் ஐயா முதலில் ஒரு இழையை எடுத்துகொள்வார் அதன் பெயர் பிள்ளையார் இழை .இப்படி நாம் சுடருடன் இழையை உட்கொளுவதன் தத்துவம் " ஒளி வடிவான இறைவனை நமக்குள்ளே எழுந்தருளச் செய்யும் செயல் " என்பதை நாம் செய்கிறோம் . 


இப்படி எல்லோரும் இழை எடுத்தும் கருபட்டிபணியாரம் , முதலிய நிவேதனப் பொருட்கள் பிரித்து தருவார்களாம். அதில் அந்த மாவிளக்கு ஏற்றி பகுதி கருகிஉள்ளது யாருக்கும் என்று போட்டி போட்டுக்கொள்வார்களாம் . அடுத்த நாள் மாலை வீட்டில் விநாயகர் அருகில் வைத்திருந்த ஆவாரை செண்டுகளை அருகில் உள்ள கோயிலில் உள்ள விநாயகர் முன்பு தட்டி காண்பித்து விட்டு அதை அந்த விநாயகர் கோவிலின் ஓடுக் கூரையின் மீது போட்டுவிட்டு வீடு திரும்புவராம். பிள்ளயார் நோன்புக்கும் பலகாரங்கள் சீடை , கைமுறுக்கு செய்கையில் யார் முதலில் கைமுறுக்கு சுற்றுகிறார்கள் , சீடை உருட்டுகிறார்கள் , யார் வேகமாக அழாகா பூ தொடுகிறார்கள் என்ற போட்டி எல்லாம் பிள்ளைகள் மத்தியில் அவர்கள் வீட்டில் வைத்துக்கொள்வார்களாம் .இப்படி ஆயா தன் சிறுவயது பிள்ளயார் நோன்பு பற்றிய செய்தியை பகிரையில் மிகுந்த உற்சாகத்துடன் பூரிப்புடன் சொல்லிமுடித்தார் .

-.தெக்கூர் கரு.கண.இராம.நா.இராமு

மூதாதையர் வழிபாட்டில் உள்ளே வரும் நந்திகள்

 


 



we had  saw thi sletter pad content came in circulation in facebook . we got feel that something worth  to show this content here . we had typed content also here

மூதாதையர் படைப்பு என்பது, மரபு வழியில் வந்த குழந்தைகள், குடும்பத்தினர்கள் மட்டுமே கலந்துகொள்வது. பிறர் யாரேயாயினும் - நாட்டின் மன்னரே ஆயினும் அனுமதியில்லை. மூதாதையர் படைப்பு வீட்டு உரிமைகள், முறைப்படி மரபு வழி வந்த வாரிசுகள் மட்டுமே முடிவு செய்ய முடியும். அதற்கு கோயில் மாலை வாங்கி வந்த மரபு வழி மணமக்களும், அவர்தம் குழந்தைகளுமே உரிமைகொள்ள முடியும், உரிமையம் உண்டு.


படைப்பு வீடு என்பது அசையாத சொத்து, அதனை உரிமைகொள்ள வாரிசுதாரர் என்பதாக மட்டுமே அடையாளம் காட்டி உரிமை கோர முடியாது. காரணம் மரபுவழி பண்பாட்டு நெறிமுறைகளுக்கும் அதன் உரிமைகளுக்கும் உகந்த சட்ட நியாயம் உண்டு. அது சிறுபான்மை / பெரும்பான்மை என்று விகிதாச்சாரம் பார்ப்பதில்லை. மாறாக தொன்று தொட்ட நெடிய மரபுவழிப் பழக்க வழக்கங்கள் / பண்பாட்டுப் பதிவுகள் ஆகியவற்றிற்கு அந்த அந்த மரபு சார் நெறிகளை பேணிக் காத்திட ஏழையேயாயினும்.....!!!! அவர்களுக்கான சட்டப் பாதுகாப்பு உண்டு. இன்றளவும் உள்ளது.
ஆகவே நானும் மகன்தான் / நானும் மகள்தான் என்று இந்திய அரசியல் சட்டம் / இந்திய அரசியல் சாசனம் என்று பிதற்றி / கைத்தடி வைத்து மிரட்டி வரும், நகரத்தார் மரபு சாராத -- யாரேயாயினும், மன்னரேயாயினும், கோவிலில் கொலு கொண்ட கடவுளேயாயினும், மரபு வழி மூதாதையர் வழிபாட்டில் தலையிட / உரிமைகொண்டாட / பட்டயம் பங்கு வைக்க, பூசனைப் பொருட்களை தொடுவதற்கும் கூட அருகதையோ / உரிமைகளோ அற்றவர்களே. இத்தனை பாதுகாப்பு இருந்தும், பங்காளிகள் பெரும்பான்மையானவர்கள் தங்களின் முப்பாட்டன் / முப்பாட்டி என்ற வகையில் மரபு மீறி நகரத்தார் அல்லாதவர்களை அழைத்து வந்து , வீட்டில் பிறந்தவர்களை ஒதுக்கி -- பூசனை செய்வதோ ?? அல்லது பூசைகள் செய்வதோ ?? எந்த வகையிலும் முறைமையற்றது.

இதனைத் தட்டிக் கேட்க தனியொரு மரபுவழி வாரிசு ஒருவர் இருந்தாலும் மறுப்புத் தெரிவிக்கலாம். அவர்களை ஏனைய பெரும்பான்மை நகரத்தார்கள், வெளியுலகத்திற்கு தெரியாமலே ஒடுக்குவதும் / இணங்க முனைவிப்பதும் மனித உரிமை மீறலும், மரபு வழிப் பண்பாட்டு உரிமை ஒடுக்கலும் ஆகும். இது குறித்து பங்காளிகள் நகரத்தார் அல்லாதவர்களுடன் சரிக்கட்டி செல்லும் எண்ணத்தாலும், உள்ளூர் பங்காளிகள் பணம் / அரசியல் / கைத்தடி / செல்வாக்கு என்பதற்கு பயந்தது ஒதுங்குவதாலும், பாதிக்கப்பட்ட முறையான மரபுவழி வாரிசுகள் தங்கள் உரிமைகளை நிலை நாட்ட ஒன்பது கோயில் நாட்டுக்கோட்டை நகரத்தார் நிர்வாகிகளுக்கும் முறையாக சொல்லி உரிமைகளை நிலை நாட்டலாம். இது குறித்து மூதாதையர் படைப்பு வீட்டில் வெளியார் - நகரத்தார் மரபு சாராத யாராவது தலையிட்டால் அவர்கள் குறித்த பயத்தினால் ஒன்பது கோவில் நகரத்தார் நிர்வாகிகளை அணுகும் பயம் உள்ள ஏழை எளிய நகரத்தார்கள் குறித்து, அந்த ஊர் அல்லது, வெளியூர் நகரத்தார்கள் பக்கத்து ஊர் நகரத்தார்கள், ஒன்பது கோயில் நகரத்தார்களுக்கு முறையீடு செய்யலாம்.
மேற்படி அனைத்தும் பற்பல நகரத்தார்கள் சில-பல வட்டகைகளில் அனுபவித்து வரும் மிக நுணுக்கமான / அரட்டல் மிகுந்த நெருக்கடிகள் ஆகும்.

ஊர் கூடித் தேர் இழுக்க வேண்டும். மரபுவழிப் பிள்ளைகளால் மட்டுமே மூதாதையர் படைப்பு நடத்தப்பட வேண்டும். இது தமிழர் மரபு / நாகரிகம் ஆகும்.



வேணும் அருள்மிகு நித்ய கல்யாணி உடனாய கைலாச நாதர் துணை,

மேல வட்டகை மெய்கண்டான்.

பிள்ளையார் நோன்பு வரலாறு

நகரத்தார்களின் மிக முக்கியமான நோன்பு பிள்ளையார் நோன்பு. இந்த நோன்பு நகரத்தார்களுக்கு மட்டுமே உரித்தான தனித்தன்மை வாய்ந்தது.இதுகுறித்து சொல்லப்படும் வய்மொழிகதைகள் மற்றும்  சில வரலாற்று வய்மொழி கதைகள்.



நோன்பு பற்றிய வாய்மொழி வரலாற்று கதை 1

நகரத்தார்கள் வாணிபத்தின் பொருட்டு கடற்பயணம் மேற்கொள்வர்.
ஒருமுறை சில நகரத்தார்கள் ஒன்று கூடி காவிரிபூம்பட்டினத்தில் இருந்து பயணத்தை மேற்கொண்டனர். அப்பொழுது கார்த்திகை தீபத் திருநாளன்று கடலில் சூறாவளி காற்று ஏற்பட்டு கப்பலின் திசை மாறி நிலப்பரப்பை அடைய முடியாமல் சிக்கித் தவித்தனர். தாங்கள் வணங்கும் மரகத பிள்ளையாரை நினைத்து தங்களைக் காக்கும்படி வேண்டினர்.


அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் நாட்களை கணக்கிடுவதற்காக தங்கள் வேஷ்டிகளில் இருந்து ஒரு நூலை எடுத்து பத்திரப்படுத்தினர் . 21 நாட்கள் கழிந்ததும் அவர்கள் ஒரு தீவின் கரையை அடைந்தனர். அன்று சஷ்டி திதி, சதய நட்சத்திரம் கூடிய சுப தினம். தாங்கள் உணவிற்காக பயணத்தில் கொண்டு வந்த அரிசி மாவு, நெய், வெல்லம், முதலியவற்றை கலந்து பிள்ளையார் போல் பிடித்து வைத்து 21 வேஷ்டி நூல்களையும் சேர்த்து திரி போல் செய்து அந்த மாவு பிள்ளையரில் ஏற்றினர். அத்தீவில் கிடைத்த ஆவாரம் பூவைக் கொண்டு பிள்ளையாருக்கு அர்ச்சித்தனர். அவர்கள் மீண்டு வந்து காவிரி பூம்பட்டினத்தை அடைந்து, தங்கள் சமூகத்தினரிடையே நடந்தவற்றை எல்லாம் விவரித்தனர். தங்கள் மக்களில் பெரும்பாலோரைக் காப்பாற்றிய மரகத பிள்ளையாரை ஒவ்வொரு வருடமும் கார்த்திகை தீபத் திருநாளில் இருந்து 21 ஆம் நாள், சஷ்டியும் சதயமும் கூடும் நாளில் ஆவாரம் பூவும் அரிசி மாவு பிள்ளையாரும் புத்தம் புது வேஷ்டியின் நூலில் செய்யப்பட்ட திரியைக் கொண்டு விளக்காக ஏற்றி தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் காக்குமாறு பிள்ளையாரை வேண்டுகின்றனர். பின்னர் அந்த மாவு பிள்ளையாரை உண்டு மகிழ்வர்.

ஆடவர்களால் முதன்முதலில் துவக்கப்பட்ட இந்த நோன்பு இன்றளவும் வீட்டின் தலைமகன் எடுத்துக் கொடுக்க மற்றவர்கள் இறைவனை வேண்டி அவ்விளக்கினை பெற்று உண்பர். வேலை நிமித்தமாகவோ வேறு காரணத்தாலோ ஆண்கள் வீட்டில் இல்லை என்றாலும் ஒரு வயது ஆண் குழந்தையாக இருந்தாலும் அந்தக் குழந்தையின் கைகளில் இருந்து பெண்கள் விளக்கினை பெற்று கொள்வர்.

நோன்பு பற்றிய வாய்மொழி வரலாற்று கதை 2

நகரத்தார் வணிகர்கள் என்பது எல்லாருக்கும் தெரியும் .
வணிகர்கள் சமணர்களாய் இருந்ததாக வரலாறு சொல்லுகிறது
அக்காலத்திலே சமண மதம் கொள்கைகைகளை வலியுறுத்துகிறதே தவிர சமண மத்தினாக வாழ வேண்டும் என்று சொல்லவில்லை .

சமண மத சடங்குகளில் இன்னமும் சில வற்றை நாம் கடை பிடிக்கிறோம் . உதாரணமாக மங்கள அமங்கள் நிகழ்வுகளில் தென்னை ஓலையினால் ஆனா தோரணத்தயை கட்டுதல் சாத்தப்பன் ,சாதுவன் என்ற பெயர் போன்றவை ஆகும் .






சமணம் குறைந்து சைவம் வளர்ந்த காலத்தேமுதலில் மன்னர்கள் ஏழாம் நூறாண்டுமுதல் சைவர்கள் ஆனார்கள்மன்னர் எவ்வழியோ மக்களும் அவ்வழியே என்பது நம் வழக்கம் .நாமும் சைவர்கள் ஆனோம்
நமது குரு ஆனவர் இருபத்தி ஒரு நாள் விரதம் இருந்தது தான் சைவர் ஆக வேண்டும் என கட்டளையிட்டார்.அவ்வாறு  நாமும் பெரிய கார்த்திகையிலிருந்து  இருபத்தி ஒரு நாள் விரதம் இருந்தது தான் சைவர் ஆனோம்.

இந்த இருபத்தி ஒரு நாளை கணக்கிட இருபத்தி ஒரு நூல் இழைகள் எடுத்து வைத்தோம் பின் இவற்றை ஒன்றிணைத்து திரட்டுபாலின் மத்தியில் வைத்து இழையாக்கி தீபம் ஏற்றி திருவண்ணாமலையானை உள்ளுனர்வதாக /உட்கொள்ளுவதாக கொண்டு இழைகள் எடுத்து கொள்ளுகிறோம்.

சைவத்தின் முதற் கடவுளாகக் ஏழாம் நூறாண்டுமுதல் கருத பெற்ற பிள்ளையார்க்கு நோன்பு இருந்து இழைகள் எடுத்து கொள்ளுகிறோம்.
நோன்பு ஆடம்பரம் இன்றி பெரிய கார்த்திகையிலிருந்து இருபத்தி ஒன்றாம் நாள் சஷ்டியும் சதயமும் கூடும் நாளில் அந்த சமயத்தில் கிடக்கும் எளிய மலர்கள் ஆகிய ஆவாரம் பூ போன்றவற்றை கொண்டு, நெய்யுடன் பிசைந்த மாவிளக்கில்இழை சேர்த்து

எல்லாவகை பொறி , எள்ளுருண்டை கடலை உருண்டை பணியாரம் திரட்டுப்பால் வெகுநாள்கள் கேட்டு போகாதகருப்பட்டி பணியாரம் செய்து படைத்து பிள்ளையாரை போற்றி வழிபடுவது வழக்கம் .இதை இன்றுவரை கைவிடாது நாம் செய்துவருகிறோம் .

நோன்பு பற்றிய வாய்மொழி வரலாற்று கதை 3

காவிரிப்பூம்பட்டினத்தில் நகரத்தார்கள் வசித்து வந்தபொது ஒரு செட்டியாரும் அவர் மகள் தெய்வானையும் வாழ்ந்து வந்தார் .செட்டியாரின் மனைவி சிவலோகப்பதவி அடைந்து விட்டார் .செட்டியார் தன் மகள் தெய்வானைக்கும் திருமணம் பேசத் துவங்கினார்.அவர் மகளுக்கும் சரிவர வரன் அமையவில்லை   அவருக்கும் அதுவொரு வருத்தம் . சுற்றத்தார் அவருக்கும் அறுதல் கூறினர் . தெய்வானைக்கும் வயது கம்மியாகத்தான் உள்ளது. கலங்காதே என்ற ஆறுதல் கூறினார் .உன் மகள் திருமணத்திற்கும் பின் உன்னை பார்த்துகொள்ள ஆள்வேன்டாமா அதானால் நீ ரெண்டாம் திருமணம் செய்துகொள் என்று அறிவுரைகள் கூறினர் .

சில ஆண்டுகள் மீதும் ஓடின அப்போது செட்டியார் வரண்தேடிய போதும் கிடைக்கவில்லை . அவர் காதுக்கும் அரசல்புரசலாக சில செய்திகள் வந்தன செட்டியாருக்கும் ஒரே மகள் வேறுயாரும் இல்லை செட்டியாரும் தனிக்கட்டை சரியாக திருமணத்திற்கு பின் முறைகள் செய்வாரா என்று யோசித்து பெண்ணை திருமணம் செய்துகொள்ள தயங்கினர் என்பதை தெரிந்து கொண்டார் .செட்டியார் தன் மகளிடம் உறவினர்கள் சொல்லியத்தை அழைத்து சொன்னார் அப்போது அவள் தன் வாழ்கையை மனதில் கொண்டும் தன் தந்தையின் இரண்டாம் திருமணத்திற்கு சம்மதம் சொன்னாள்.

செட்டியாருக்கும் திருமணம் ஆனது .புதியதாக வந்த சின்னதாலும் வீட்டில் உள்ளவர்களை நான்றா பார்த்துக்கொண்டாள். ஓர் ஆண்டு சென்றது .பின் தனக்கு ஒரு பிள்ளை பிறக்கவில்லை என்று எண்ணி வருந்தினாள் அதற்கும் காரணம் தெய்வானையென நினைத்து அவளை படாத பாடு படுத்த துவங்கினாள் .பலமுறை அவள் தெய்வானையை கடிந்து கொண்ட போதெல்லாம் செட்டியார் சமாதானம் செய்துவைப்பார். செட்டியார் தன் புதுமனைவியை கடிந்து கொள்ளாமல் பொறுத்துக் கொண்டு இருந்தார் .தன் மகளுக்கும் திருமணம் பேசத்துவங்கினார் இப்பொது தெய்வானையின் சின்னத்தாவிற்கும் பயந்து யாரும் பெண்ணெடுத்துக் கொள்ள தயங்கினர் .
தெய்வானையை எப்படியாவது வீட்டை விட்டு வெளியேற்றிவிட வேண்டும் என்று எண்ணி எல்லா வீட்டு வேலைகளை எல்லாம் செய்யச் சொல்லி துன்புறுத்தினாள்.அவளும் எதுவும் சொல்லாமல் சரியென்று இசைந்து செய்துவந்தாள். அன்று திருக்கார்த்திகையின் முதல் நாள் தெய்வானையின் சின்னதா எண்ணெய் தேய்த்து தலைமுழுக சென்றால். அப்படி அவள் செல்லும் பொது அவள் அணிந்திருந்த வைரத்தொடையும் வைர மோதிரத்தையும் இராண்டான் கட்டில் உள்ள பட்டசாலையில் ஒரு தூணுக்கு அருகில் வைத்துச் சென்றாள்.

அவள் குளித்து விட்டு வந்து பார்த்த பொது அங்கு வைத்திருந்த வைரமோதிரம் காணமல் போனது .அது தெய்வானையின் அம்மாவுடையது .அதை சின்னாத்தாள் அணிந்து கொண்டிருந்தார். இப்பொது இந்த வைரமோதிரம் காணாமல்போனதும் இதை தெய்வானைதான் திருடிவிட்டால் என அவளை திட்டித்தீர்த்தாள்.இதை பொறுக்காமல் அவளும் அலுதுபுலம்பினால் .மறுநாளும் சின்னதா விடவில்லை பெரியனாலும் அதுவுமாக இவர் வாயிலா விழுவது என்று மாலை பூசை முடிந்துதும் அழுதுகொண்டே வீட்டை விட்டு வெளியேறினாள் தெய்வானை .



தான் செய்யாத தவறுக்கா இப்படி துன்பத்தை அனுபவிப்பதை விட உயிரவிட்டுவிடலாம் என்று எண்ணி விட்டை விட்டு வெளியில் வந்தவள் வழியில் மரகதவிநாயகரை கண்டு வழிபட்டு தனது குறைகளை அழுது கொட்டி முறையிட்டால் பின் இங்கு விநாயகர் சன்னதியில் உண்ணா நோன்பிருந்து தன் உயிரை விட முடிவெடுத்தால் .அப்படி அவள் செய்ய முற்படும் பொது தெய்வானையின் தந்தை செய்தி அறிந்து தன் மகளை சமாதானம் செய்து அழைத்து செல்ல முற்பட்டார் .கோயில் குருக்களும் சேர்ந்து சமாதானம் செய்து பார்த்தார் . தெய்வானை தொலைந்த மோதிரம் கிடைக்கும் வரை நன் உண்ணாமல் நோன்பு இருப்பேன் இங்கிருந்து வரமாட்டேன் என்று அழுத்தமாக இருந்தால் . சரி நான் தினமும் விநாயகருக்கும் பூசை வைக்க வரும்போது வீட்டில் இருந்து சிறிது தினையும் தேனும் உடன் நெய்யும் கொண்டுவருகிறேன் அதை மட்டுமாவது உண் என்றார் குருக்கள்.சரியென்று சம்மதித்தால் தெய்வானை .
குருக்கள் தேன் ,திணை ,நெய் கொண்டுவந்து கொடுத்தார் தினமும் பூசைக்கு வரும்போது காலையில் தெய்வானையிடம் தருவார் .தெய்வானை தினமும் விநாயகரின் வேட்டியில் இருந்து தினம் ஒரு நூலாக எடுத்து திரியாக திரித்து விளக்கேற்றிவைத்து குருக்கள் கொடுத்த நெய் ,தினையும் தேனையும் கலந்து விநாயகருக்கும் படைத்தது வழிபட்டு பின் உண்டால் இப்படியே 21நாட்கள் சென்றன அன்று மாலை விநாயகர் சன்னதியில் இருந்து கருப்பு எறும்பு (பிள்ளையார் எறும்பு ) சாரைசாரையாக வெளியில் வந்தன .


இவற்றை கண்டு குருக்கள் பின் தொடர்ந்தார் .அப்போது அவை தெய்வானையின் வீட்டுக்குள் சென்ற இவற்றை செட்டியாரும் பார்த்து பின் சென்றார் . எறும்புகள் இரண்டாம் கட்டுக்குள் தெய்வானையின் சின்னதா நகைகள் கழற்றி வைத் தூண் அருகே துளையிட்டு உள்ளே சென்ற இதை கண்ட செட்டியார் .அங்கு வேலையாளை விட்டு தோண்டச்சொன்னார் அப்போது அங்கிருந்து சில எலிகள் ஓடின பின் சற்று தொண்டிபார்தல் அங்கு காணாமல் போன மோதிரம் இருந்தது .

இதை கண்ட செட்டியார் , தெய்வானையின் சின்னதா , குருக்கள் மூவரும் அதிசயித்து மெய்மரந்தனர். சின்னதா தான் செய்த தவறை நினைத்து மனம்திருந்தி கண் கலங்கி அழுதால் . பின் வீட்டில் இருந்த மூவரும் கோவிலை நோக்கி சென்றனர் . உடன் இந்த செய்து அங்கிருந்த மக்கள் மத்தியில் பரவி அவர்களும் அந்த பெண்ணை பார்க்க சென்றனர் . தெய்வானையை பார்த்தது அவளுது சின்னதா ஓடி வந்து கட்டிக்கொண்டு அழுதால் தான் செய்த தவறை மன்னிக்கசொல்லி கேட்டால் தெய்வானையை தன் மகளாகா நினைத்து தனக்கு பிள்ளை இல்லை என்ற குறையில் இருந்து விடுப்பது தெய்வானையை சொந்தமகளாகவே நினைத்து வீட்டுக் அழைத்து சென்றால் . இதை கண்ட மக்களும் சாதாரண ஒரு பெண் இப்படி நோன்பிருந்து இதை நாட்கள வழிபட்டு இத்தகைய பலனை பெற்றதை பார்த்து அவர்களும் தங்கள் இல்லங்களில் இந்த நோன்பை அனுசரித்து வழிபட்டனர்.இப்படி அவர்கள் வழிபட அவர்களுக்கும் தாங்கள் எண்ணியது ஈடேறி குடும்ப ஒற்றுமை மேலோங்கியது . தெய்வானை அனுசரித்த அந்த 21 நாட்கள் திருக்கார்த்திகையில் இருந்து 21 அதாவது சஷ்டியும் சதயமும் கூடும் நாளில் தொலைந்த வைரமோதிரம் கிடைத்தது. இதையே இன்று நாம் கொண்டாடும் பிள்ளயார் நோன்பு.


இங்கு சில நாட்கள் முன்பு பிள்ளையார் நோன்பு பற்றி இளையதலை முறைகும் கூறுவோம் என்று எழுதிய பதிவு , 6௦ ஆண்டுகள் முன்பு பிள்ளயார் நோன்பு கொண்டாடிய விதம் பற்றிய பதிவுகள் செய்திருந்தோம் அதன் தொடர்சியாக சிலர் பிள்ளயார் நோன்பு உருவான காரணம் பற்றி வினவினர் . பிள்ளையார் நோன்பு குறித்து கூறப்படுகிற மூன்று விதமான வாய்மொழியாக சொல்லப்படும் வராலாற்று கதைகள் இவையே .

---------------ஆ.தெக்கூர்.இராம.நா.இராமு

Sunday, 11 December 2016

கார்த்திகை புதுமை :


நகரத்தார்கள் அனைவரும் சைவர்கள் . சிவனையும் முருகனையும் இருகண்கள் எனப் போற்றி வழிபடுகிறவர்கள் . அதிரை நட்சத்திரம் சிவனனுக்கு உரிய நட்சத்திரம் என்பதால் சிவனைக் கண்டவுடன் உமையாளையும் காணவேண்டும் என்ற காரணத்தாலும் மார்கழி மாதத்தில் பெண்களுக்கு திருவாதிரை என்ற சடங்கு கொண்டாடப் படுகிறது .




கார்த்திகை நட்சத்திரம் முருகனுக் உரியது .முருகன் தமிழ்க் கடவுள் என்பதாலும் வீரத்தில் சிறந்தவன் என்பதாலும் அவனைப் போற்றி கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் கார்த்திகைப் புதுமை என்னும் விழா நம் நகரத்தார் குலத்துதித்த ஆண்மக்களுக்கு செய்தனர் . 



இளமையிலேயே ஆண்குழந்தைகளுக்கு வீர உணர்வை ஊட்டவும் முருகனைப் போன்ற அழகும் ,வீரமும் உடைய தங்கள் ஆண் மகனை ஊராருக்கு அறிமுகப்படுத்தவும் திருமணத்திற்கு வயது வந்த  ஆண் மகன்  எங்கள் இல்லத்தில் உள்ளான் என்பதை இந்த நிகழ்வு மூலம் அறிமுகபடுத்தப்பட்டதாகவும் கொள்ளலாம் . இப்போது இந்த விழா மிக அரிதாகவே நிகழ்கிறது .இது  தற்போது வழக்கொழிந்துவரும்  ஒரு தொன்மையான நகரத்தாரின்  தனித்துவ வாழ்வியல் சடங்குகள் ஆகும்


 

நகரத்தார்கள் தங்கள் வீட்டில் திருமண வயதில் ஆண்மகன் இருக்கிறான் என்பதை சுற்றத்தாருக்கு தெரிவிக்கும் நிகழ்வே இந்த கர்திகைப் புதுமை . இதை சூப்பிடி அல்லது சூழ்பிடி என்று அழைக்கப்படும்.






கார்த்திகைப் புதுமை நாளன்று தங்கள் இல்லத்தில் வாழைமரம் ஒன்றை நாட்டி அதன்மேல் பெரிய அகல் வைத்து பெரிதாக திரி போட்டு வைத்து வாழைமரத்தின் நடுவில் சதுரமாக இரண்டு அடுக்கு அமைத்து  அதில் அநேக தீபம் ஏற்றி வைத்து அந்த வாழைமரத்தை சுற்றிலும் மாக்கோலம் இட்டுவைப்பர் .



  புதுமையின் நாயகனான ஆண்மகனுக்கு  திருமணம் விழாவுக்கும்  அணியும்  நவகண்டி மாலை மற்றும் திருமார்பை அலங்கரிக்கும் மகரி ( மயில் பதக்கம்  )அணிவித்து வைரக்கடுக்கன்போன்ற அணிமணிகள் சூடி தலைப்பாகை தரித்து
பின் அலங்கரிக்கபட்ட குதிரையின் மீது ஆடவனை ஏற்றி மங்கல வாத்தியங்கள் முழங்க குலம்போல் எண்ணெய் விட்டு ஏற்றாத பெரிய அகல் விளக்குடன் தேங்காய் பழங்கள் முதலியவையுடன் சங்கநாதம் முழங்க பிள்ளையார் ஆலயத்திற்கு அல்லது சிவாலயம் சென்று சங்கநாதம் முழங்க செய்து கொண்டுவந்த பெரிய அகல் விளக்கை ஏற்றச் செய்து ஆண் பிள்ளையின் கையில் கொடுத்துப் பிடிகச்செய்து அதில் தீவட்டியை ஏற்றி மணக்கோலத்தில் உள்ள ஆடவன் கையில் கொடுத்து சொக்கப் பனையை கொளுத்திய பின் அது முழுவதுமாக ஏறிந்து முடிக்கும் தருவாயில் அந்த காட்சியை மணக்கோலம் பூண்ட ஆடவனை  தரிசிக்கசெய்வர்.

அதன்பின் ஆலயத்தில் உள்ள விநாயகரை வழிபட்டு பின் நகர சிவன்கோயில்சென்று பரிவார தெய்வங்களுக்கும் அம்மையப்பனுக்கும் அர்ச்சனை செய்து முன் ஆலயம் வந்தது போல் மேளதாளம் சங்கநாதம் முழங்க மணக் கோலத்தில் உள்ள ஆடவன் குதிரையின் மீது அமரச்செய்து வீடு திரும்புவர். வீடு வந்து அடைந்ததும் ஆலம் கரைத்து  சிலேட்டு விளக்கு பிடித்து திருஷ்டி கழித்து மணக்கோல ஆடவனை உள்ளே அழைத்து சென்று படைகின்றன சாமி வீட்டில் அந்த வீட்டுப் பெண் பிள்ளை விளக்கை ஏற்ற செய்து வழிபடுவர் . பின் கோலம் இட்டு அமைத்த ஒற்றை மனையில்  விழாநாயகனை நிறுத்தி பெண்களாக ஒரு சடங்கு நடத்தி புதுமையை நிறைவு செய்து மரபு .



புதுமை என்பது  ஆணுக்கும் பெண்ணுக்கும்  செய்யும்  ஒரு இன்றியமையாத ஒரு  முக்கியமான  சடங்கு ஆகும் புதுமைகள் செய்த  பின் தான்  திருமணம்  நிகழ்த்தப்படும். புதுமை  என்பது அரைக்கலியாணம்  என்று  சொல்லப்படும்

சிலப்பதிகாரத்தில் கண்டேத்தும் செல்வேள் என்ற தொடரும் மாதரார் தொழுதேத்த வயங்கும் புகழ் கண்ணகி என்ற தொடரும் இடம்பெறுகின்றன. இவற்றுள் நகரத்தார் மேற்கொண்ட கர்திகைப் புதுமை திருவாதிரைப் புதுமை விழாக்களின் குறிப்புகள் அடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது .

------------ஆ.தெக்கூர் கண.இராம.நா.இராமு