Saturday 31 December 2016

மூதாதையர் வழிபாட்டில் உள்ளே வரும் நந்திகள்

 


 



we had  saw thi sletter pad content came in circulation in facebook . we got feel that something worth  to show this content here . we had typed content also here

மூதாதையர் படைப்பு என்பது, மரபு வழியில் வந்த குழந்தைகள், குடும்பத்தினர்கள் மட்டுமே கலந்துகொள்வது. பிறர் யாரேயாயினும் - நாட்டின் மன்னரே ஆயினும் அனுமதியில்லை. மூதாதையர் படைப்பு வீட்டு உரிமைகள், முறைப்படி மரபு வழி வந்த வாரிசுகள் மட்டுமே முடிவு செய்ய முடியும். அதற்கு கோயில் மாலை வாங்கி வந்த மரபு வழி மணமக்களும், அவர்தம் குழந்தைகளுமே உரிமைகொள்ள முடியும், உரிமையம் உண்டு.


படைப்பு வீடு என்பது அசையாத சொத்து, அதனை உரிமைகொள்ள வாரிசுதாரர் என்பதாக மட்டுமே அடையாளம் காட்டி உரிமை கோர முடியாது. காரணம் மரபுவழி பண்பாட்டு நெறிமுறைகளுக்கும் அதன் உரிமைகளுக்கும் உகந்த சட்ட நியாயம் உண்டு. அது சிறுபான்மை / பெரும்பான்மை என்று விகிதாச்சாரம் பார்ப்பதில்லை. மாறாக தொன்று தொட்ட நெடிய மரபுவழிப் பழக்க வழக்கங்கள் / பண்பாட்டுப் பதிவுகள் ஆகியவற்றிற்கு அந்த அந்த மரபு சார் நெறிகளை பேணிக் காத்திட ஏழையேயாயினும்.....!!!! அவர்களுக்கான சட்டப் பாதுகாப்பு உண்டு. இன்றளவும் உள்ளது.
ஆகவே நானும் மகன்தான் / நானும் மகள்தான் என்று இந்திய அரசியல் சட்டம் / இந்திய அரசியல் சாசனம் என்று பிதற்றி / கைத்தடி வைத்து மிரட்டி வரும், நகரத்தார் மரபு சாராத -- யாரேயாயினும், மன்னரேயாயினும், கோவிலில் கொலு கொண்ட கடவுளேயாயினும், மரபு வழி மூதாதையர் வழிபாட்டில் தலையிட / உரிமைகொண்டாட / பட்டயம் பங்கு வைக்க, பூசனைப் பொருட்களை தொடுவதற்கும் கூட அருகதையோ / உரிமைகளோ அற்றவர்களே. இத்தனை பாதுகாப்பு இருந்தும், பங்காளிகள் பெரும்பான்மையானவர்கள் தங்களின் முப்பாட்டன் / முப்பாட்டி என்ற வகையில் மரபு மீறி நகரத்தார் அல்லாதவர்களை அழைத்து வந்து , வீட்டில் பிறந்தவர்களை ஒதுக்கி -- பூசனை செய்வதோ ?? அல்லது பூசைகள் செய்வதோ ?? எந்த வகையிலும் முறைமையற்றது.

இதனைத் தட்டிக் கேட்க தனியொரு மரபுவழி வாரிசு ஒருவர் இருந்தாலும் மறுப்புத் தெரிவிக்கலாம். அவர்களை ஏனைய பெரும்பான்மை நகரத்தார்கள், வெளியுலகத்திற்கு தெரியாமலே ஒடுக்குவதும் / இணங்க முனைவிப்பதும் மனித உரிமை மீறலும், மரபு வழிப் பண்பாட்டு உரிமை ஒடுக்கலும் ஆகும். இது குறித்து பங்காளிகள் நகரத்தார் அல்லாதவர்களுடன் சரிக்கட்டி செல்லும் எண்ணத்தாலும், உள்ளூர் பங்காளிகள் பணம் / அரசியல் / கைத்தடி / செல்வாக்கு என்பதற்கு பயந்தது ஒதுங்குவதாலும், பாதிக்கப்பட்ட முறையான மரபுவழி வாரிசுகள் தங்கள் உரிமைகளை நிலை நாட்ட ஒன்பது கோயில் நாட்டுக்கோட்டை நகரத்தார் நிர்வாகிகளுக்கும் முறையாக சொல்லி உரிமைகளை நிலை நாட்டலாம். இது குறித்து மூதாதையர் படைப்பு வீட்டில் வெளியார் - நகரத்தார் மரபு சாராத யாராவது தலையிட்டால் அவர்கள் குறித்த பயத்தினால் ஒன்பது கோவில் நகரத்தார் நிர்வாகிகளை அணுகும் பயம் உள்ள ஏழை எளிய நகரத்தார்கள் குறித்து, அந்த ஊர் அல்லது, வெளியூர் நகரத்தார்கள் பக்கத்து ஊர் நகரத்தார்கள், ஒன்பது கோயில் நகரத்தார்களுக்கு முறையீடு செய்யலாம்.
மேற்படி அனைத்தும் பற்பல நகரத்தார்கள் சில-பல வட்டகைகளில் அனுபவித்து வரும் மிக நுணுக்கமான / அரட்டல் மிகுந்த நெருக்கடிகள் ஆகும்.

ஊர் கூடித் தேர் இழுக்க வேண்டும். மரபுவழிப் பிள்ளைகளால் மட்டுமே மூதாதையர் படைப்பு நடத்தப்பட வேண்டும். இது தமிழர் மரபு / நாகரிகம் ஆகும்.



வேணும் அருள்மிகு நித்ய கல்யாணி உடனாய கைலாச நாதர் துணை,

மேல வட்டகை மெய்கண்டான்.

No comments:

Post a Comment