Sunday 20 September 2015

படைப்பு :




நம் வேள்வணிகர் நகரத்தார் பழக்க வழக்கங்களில் மிகவும் தொன்மையான ஒன்று படைப்பு வழிபாடு. நம் வீட்டில் வாழ்ந்து காலத்தால் இறைவனடி சென்ற நம் வீட்டின் மூதாதையர்களை நினைத்து ஆண்டிற்கு ஒருமுறை அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை என்று, கருப்பட்டிபணியாரம் / பாற்சோறு /சைவ(மரக்காய்கறிகள்) /அசைவம் என்று மூதாதையற்கு பிடித்த வகை உணவுகளை சமைத்து கோடிச்சீலை கோடிவேட்டி மூதாதையர்கள் அணிந்து கொண்ட ஆபரணங்களை வைத்து வழிபடப்படும் வழிபாடு .இந்த வழிபாடு நம் வாழ்வில் நல்லது கெட்டது என்று அனைத்திலும் படைப்பு வழிபாடு என்பதற்கு ஒரு முக்கிய இடம் கொடுக்கப்படும். நம் செட்டிநாட்டுப் பகுதிகளுள் பல பிரபலமான பெரும் படைப்புகள் நிகழ்த்தி வழிபாடுகள் செய்யப்பட்டு வருகின்றனர். அடக்மையாத்தாள் படைப்பு / சோனையன்கோவில் படைப்பு / தெய்வானையாத்தாள் படைப்பு / இராசாத்தாள்படைப்பு / மங்களகாரிபடைப்பு /அக்கினியாத்தாள் படைப்பு என்று பற்பல படைப்பு விழாக்கள் நகரத்தார் ஊர்தோறும் நிகழ்ந்து வழிபாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. இன்றும் இந்த படைப்பு வழிபாடு எந்தவொரு தொய்வின்றி சிறப்பாக பாரம்பரிய முறையில் முடிந்தவரை நிகழ்த்தி வருகின்றோம்.



‪#‎படைப்பு_யாரால்_யாருக்கு_நிகழ்த்தப்படுகிறது_‬???
பெரும்பான்மையான படைப்பு என்பது தமிழ் சமூகத்தின் அங்கமாக விளங்கும் நம் நகரத்தார் வழிதோன்றல்களில் பிறந்து வாழ்ந்து காலத்தால் இறைவனடி சென்ற ஆணையோ பெண்ணையோ நினைத்து வழிபடப்படும் வழிபாடு. இந்த வழிபாட்டை படைப்பு தெய்வத்தின் வழியில் வந்த நகரத்தார் ஆணுக்கும் நகரத்தார் பெண்ணுக்கும் பிறந்த வழித்தோன்றல்கள் இந்த வழிபாட்டை மேற்கொள்வர். இந்த வழிபாடு மூதாதையர் வாழ்ந்த அதே ஊரில் அவர்கள் வாழ்ந்த வீட்டில் நிகழ்த்துவார்கள் படைப்பு வழிபாடு நிகழ்த்தக் காரணம் தங்கள் வாழ்வு சிறக்கவும் குடி தழைக்கவும் நிகழ்த்தப்பெரும் வழிபாடு.
‪#‎இன்றைய_படைப்பு_வீட்டின்_நிலை‬ :
நம் வேள்வணிகர் நகரத்தார்கள் இன்றும் படைப்பு வழிபாட்டை கைவிடாமல் மேற்கொள்கின்றனர். வெகுசிலர் வெள்ளை நிறமோகத்தால் தங்கள் சமூகத்தையும் மறந்து தமிழர் அடையாளம் சாராத நாயர் /நாயிடு /சவுராஷ்டிர வகைகளில் தங்களின் சுய ஆசைக்காகவும் தேவைக்காகவும் தங்கள் அடையாளம் மறந்து வெளியில் சென்று திருமணம் முடித்து வாழ்வு நடத்துபவர்களாக இன்று உள்ளனர். வெளியில் சென்று கட்டிவந்தது / ஓட்டிவந்தவைகள் எல்லாம் எப்படி புள்ளியாக கணக்கில் கொள்ளமுடியும் இதுபோன்றவர்களை முன்பு வீட்டு விழாக்கள் / படைப்பு என்று எதற்கும் அழைக்கமாட்டார்கள் அப்படியே அழைத்தாலும் அவர்களும் விழாவில் கலந்துகொள்ள தயங்குவர் ஆனால் தற்போது நகரத்தார்கள் இதுபோன்ற கலப்புகளை இரத்தின கம்பளம் விரித்து தங்கள் வீட்டின் திருமணம் விழாக்கள் முற்றோதல்கள் போன்றவற்றில் நடுவளவும் வரை கொண்டுவந்து வைத்து அழகுபார்கின்ற சம்பவங்கள் ஆங்காங்கே நிகழ்கின்றது .அது அவரவர் தனிப்பட்ட விருப்பம் .இதனை தொடர்ந்து இதுபோன்ற நாயர் நம்பூதரி வகை/ நாயிடு ரெட்டி சௌராஷ்டிர கன்னட கலப்புகளை தற்போது படைப்பு வீட்டின் உள்ளே அனுமதித்து இந்த வகை பெண்பிள்ளைகளையும் நிறத்தின் மோகத்தாலும் தன் சுயதேவைக்காக வெளியில் ஆண்மகனை தேடிச்சென்ற பெண்பிள்ளைகளும் படைப்புக்கு பாணியார மாவு இடிக்கவும் / பணியாரம் ஊத்தவதும் / படைப்பு தெய்வத்திற்கு சமயல் வேலை செய்யவும் சில இடங்களில் அதிகாரத்தில் உள்ள நகரத்தார்கள் அனுமதிக்கின்றனர் இதன் நோக்கம் என்ன ??? ஆக நிறத்திற்காக வெளியில் சென்று தமிழர் அடையாளம் சாராத கூட்டத்தில் வெளியில் திருமணம் முடித்து தன் சமூகத்தின் வரைமுறைகளை கட்டுடைத்து வெளியேறிய கூட்டத்தை புள்ளியாக்கும் முயற்சியாக இது நிகழ்கிறதா ??? அதோடு ஒரு மரபுசார் தெய்வத்திற்கும் அந்த மரபுசார் வழியில் வந்த ஆணோ பெண்ணோ அந்த பூசையில் ஒன்றிணைந்து படைப்பு வேலைகளை செய்யும் போது அந்த படைப்பு படைப்பதன் நோக்கம் நிறைவேறும். இப்படி வெளியில்இருந்து இழுத்து வந்ததைகளை படிதாண்டி ஓடியவைகள் ஒட்டிவந்தவைகளை படைப்பு வழிபாட்டில் அனுமதித்து இந்த கூட்டத்துடன் கைகோர்த்து படைப்பு படைப்பதன் மூலம் நாம் படைக்கும் படைப்பின் நோக்கமே அங்கு மறைந்து (பயனற்று ) போகிறது. ஏன் இதுபோன்ற செயலை ஆதரிக்கும் நகரத்தார்களுக்கு இவைகள் ஏன் உரைக்கவில்லை ??? இதுபோன்ற செயல்கள் மூலம் தன் சமூகத்தின் பண்பாட்டு அடையாளங்களை தங்கள் சுயதேவைக்காக சிதைத்து கட்டுடைக்கும் தடிக்கோல் கூடத்திற்கும் நம் படைப்பு தெய்வங்கள் இதுபோன்ற துர்சிந்தனைகளை மாற்றி நற்சிந்தனைகளை விதைக்கச் செய்யட்டும். இதுபோன்ற செயல்கள் எல்லாம் படைப்பு வீட்டிலும் தற்போது நிகழ்வது இல்லை பெரும்பான்மையான இடங்களில் மிகுந்த கவனத்துடன் பக்தியுடன் இனச் சிந்தனையுடன் நடத்துகின்றனர். ஆனால் ஒரு சில இடங்கலில் இதுபோன்ற வெடுவாளிக் கூட்டத்தை உள்ளே விட்டு பண்பாட்டை சிதைக்கும் செயல்கள் தலைதூக்கியுள்ளது. இவற்றை நாம் இன்று கண்டுகொண்டு கிள்ளியெறியா விட்டால் இந்தப் புல்லுருவிகள் எல்லா இடத்திலும் பரவி முளைக்கும் என்பதை நினைவில் கொள்வோம். நம் வீட்டு படைப்யு தெய்வத்தின் அருளால் இவைகளை கிள்ளியெறிவோம்.
வேணும்
‪#‎பெரியகருப்பர்_துணை‬
-----------கரு.இராமநாதன் வேள்வணிகன்

1 comment:

  1. கண்டிப்பாக நடக்க விடக்கூடாது

    ReplyDelete