Sunday, 20 September 2015

சத்குருவின் பேச்சில் எழுந்த கேள்வியும் அதற்கு பதிலும்

கேள்வி : ////////////சத்குரு அவர்கள் தனது உரையின்போது, “சிறிய சமூகமே ஆனாலும் தன் கால்தடங்களை பரவலாக பதித்துள்ள ஒரு சமூகம் நகரத்தார் சமூகம். புதிய தலைமுறைக்கு, புதுவிதமாய் அறிவை வழங்கும் ஒரு பாரம்பரியம் நமக்கு தேவை. பழையதை பற்றிப் பேசுவது பாரம்பரியம் அல்ல, மாறாக புது சாத்தியங்களைத் தேடி அறிவதுதான் பாரம்பரியம்,” என்றார்.////////// எல்லாம் சரி நகரத்தார் சமூகவிழாவில் ஏன் வெளியாட்கள் நகரத்தார் சமூகத்தை சாராதவர்கள் கலந்துகொள்ளவைப்பதன் நோக்கம் என்ன ??? பழமையை மட்டும் யாரும் இங்கு பேசவில்லை அதன் மூலம் முன்னோர்கள் அடிச்சுவட்டில் நடைபயணம் மேற்கொள்ள அது ஒரு அடிக்கோளாக அமையும் பழமையை பேசுவது பாரம்பரியம் இல்லை என்று கூறக்காரணம் என்ன ??
-------------கரு.ராமனாதன் வேள்வணிகன்

பதில் : பாரம்பரியம் என்பதன் பொருளே முன்னோர் காத்த பண்பாட்டினை கடைபிடிப்பது அதனோடு நகரத்தார் ஏற்கத்தக்க புதிய பண்பாடுகள் இணைக்கப்படலாம் அதனை விடுத்து புதியதை கைக்கொள் என்று சொல்வது மரபழிப்பு தூண்டுதலாகும் வஞ்சனையொடு நஞ்சு ஊட்டபட்டிருக்கிறது

இது குழுமச் சாமியார் சத்குரு தவறல்ல அழைத்தவர்கள் தவறு நமது பண்பாடான பிள்ளையார் நோன்பு , படைப்பு,குலதெய்வ வழிபாடு ,கோவில்களில் திருப்பணிகள் , செவ்வாய் பொங்கல் ,மகர்நோம்பு இவற்றை விட்டுவிட்டு இவருடைய இசை என்னும் புதியபண்பாட்டு வெள்ளத்தில் மூழ்கி காணாமல் போகவேண்டுமா அன்மைக்கால பட்டினத்தார் ,பாடுவாரும் தொன்மையான இயற்பகை நாயனார் காரைக்கால் அம்மையாரும் இன்னும் பல நகரத்தார் பெரியோர்களும் சொல்லிச்சென்ற பாரம்பரிய பண்பாடு காத்து கோவலன் கண்ணகி வழிவந்த நம் குலம் சிவ சிந்தையோடு தழைக்கவேண்டும்

இவர் போன்ற செல்வதில் புரளும் தெண்டுல்கர் விளம்பர குழுமசாமியார்களின் பின் செல்லல் நகரத்தார்கு அறிவுடமையாகாது தீங்கு விளையும் எச்சரிக்கை அவசியம்
------------சந்திரசேகன்  v

1 comment:

  1. இந்த ஆண்மீகவாதி ஒரு பக்கத்தில் யானையின் வழித்தடத்தையே மறித்து மண்டபம் கட்டியுள்ளார் 400 ஏக்கரில் என்று கூறுகிறார்கள் இவரைப் போன்றவர்களை அழைப்பது தவறு

    ReplyDelete