தற்போது நம் நகரத்தார் குடமுழுக்கு விழாக்களில் மலையாள பகவதிகளில் வாத்தியமான செண்டமேளத்திற்கும் தான் சில இடங்களில் முன்னுரிமை தரப்படுகிறது இது தமிழ்வளர்த்த நகரத்தார் சமூகத்திற்கும் அழகல்ல முன்பு நம் ஆலயகுடமுழுக்கு விழாக்களில் நாதஸ்வரதிற்கும் பிற தமிழர்கலைகளை வளர்க்கும் விதமாக அவைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வந்தன ஆனால் இன்றோ நம் மண்ணுக்கு பொருந்தாத வேற்று மண்ணின் அடையாளங்களை நம் மண்ணில் மாற்றம் என்ற பெயரில் செண்டைமேளம் கும்மாட்டிக்களிகளை நாம் கொண்டுவந்து இறக்கி நம் மண்ணின் அடையாளமாக விளங்கும் நம் பழந்தமிழ் கலைகளை அழிக்கிறோம். இதற்குபதிலாக நாம் ஏன் ஆலயகுடமுழுக்கு விழாக்களில் கயிலாயவாத்தியக்குழுக்களை கொண்டுவந்து ஆதரிக்கக் கூடாது தமிழ் சைவசமையத்வர்களால் வாசிக்கப்படும் இந்த இசையை ஏன் கொண்டுவரக்கூடாது??
கயிலாயவாத்தியம் என்பது “சங்கு, எக்காளம், திருச்சின்னம், பிரம்மதாளம், உடல் ஆகியவை கூட்டு இந்த வாத்தியம் சிவனுக்கு உகந்த வாத்திம். இவற்றை கயிலையில் பூதகணங்கள் இசைத்து சிவனை மகிழ்ச்சிப்படுத்துகின்றதாக நம்பப்படுகிறது. இந்த வாத்தியம் நம் மண்ணின் பழம்பெரும் இசைவாத்தியம் செண்டைமேளத்திற்கு மாறாக இவற்றை நாம் ஏன் நம் மண்ணில் ஒலிக்க்கச்செய்து நம் தமிழரின் இசையைவளர்க்கக்கூடாது ???? சிந்திப்போம் தமிழராய் தமிழரின் அடையலாம் பேணிக்காக்க ஒன்றுபடுவோம்
------------கரு.இராமநாதன் வேள்வணிகன்
No comments:
Post a Comment