Wednesday, 22 July 2015

நகரத்தார்களின்___இன்றைய_நிலையும் அதன் ___உண்மை____நிலைமையும்


#நகரத்தார்கள் பழைய வீழ்ச்சிக்குப் பின் மீண்டும் எழுந்துவிட்டார்கள், வசதியாக உள்ளார்கள். இப்படி நகரத்தார்களில் சிலர், இல்லை, இல்லை பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றாகள். இப்படிப்பட்ட ஒரு பொய்யான மாயையில் அவர்கள் தங்களை தாங்களே சமாதானம் செய்துகொள்கின்றார்கள். ஏன் இப்படி ஒரு உளவியல் சிக்கல் இன்றைய நகரத்தார்களிடம் உள்ளது ???

நகரத்தார்கள் 
காரணம், தங்களின் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையின் உண்மை நிலை உணரும் நிலையிலோ அல்லது உணர்ந்த நிலையிலோ இன்றைய தலைமுறையினர் இல்லை. கூடுதல் காரணம் தங்களின் உண்மை வரலாறு கூட இவர்களுக்குத் தெரியாது. நம் ஐயாக்களின் பழைய வாழ்க்கை பொருள் பொதிந்ததாகவும், வெறும் பொருள் தேடுவது மட்டுமே நோக்கமானதாகவும் இல்லவே இல்லை. அவர்களின் நெடிய பண்பாட்டு மரபு, சிக்கனம், எந்த சூழ் நிலையினையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவம். காலவோட்டத்தில் மாற்றங்களையும் பண்பாட்டின் நுட்பமும், மரபுவழி தமிழர்களுடன் இனைந்து, இயைந்து செல்லும் தன்னுனர்ச்சியும் கொண்டிருந்தார்கள். நமது ஐயாக்கள் செய்த தொழில், சேர்த்த செல்வம் எதிலும் ஒருவரையறையும், அடையாளம் பாதுகாக்கும் உணர்வும் தொட்டுத் தொடர்ந்தது. அது பெயர் வைப்பதிலும் சரி, வீடு கட்டுவதிலும் சரி, தொழில் செய்யும் போதும் - தன்னுடன் யார் உள்ளார்கள், தாம் யாருடன் உள்ளோம் என்று விழிப்பும் இருந்தது இன்றைய தலைமுறை மறந்த ஒன்று. 

எல்லாவற்றிகும் மேல் சுருக்கமாக நான் சொல்ல வருவது :-தரையில் இருந்து #முப்பதாயிரம் அடி உயரத்தில்#வானூர்தியில் ஒய்யாரமாகப் பறந்த ஒருவன்#திடீர் என கீழே வாநூர்த்தியுடன் நொறுங்கி வீழ்ந்த பின் உயிர் தப்பியவுடன்,#வானூர்தியின்______சக்கரங்களை எடுத்து நிமிர்த்தி கைகளால்#உருட்டிக் கொண்டு - நான் மீண்டும் அதே நிலைக்கு வந்துவிட்டதாக #நினைப்பது என்பது எவ்வகையோ .....??? அதுதான் இன்று சில பல இளைஞர்கள் பன்னாட்டு கார்ப்பறேட்டுகளிடம் சில ஆயிரம் டாலர்களில், தங்கள் வாழ்க்கை இனிதே பயணிப்பதாக நினைப்பதும். ஆகவே நமது உண்மை நிலையினையும், இன்றைய நிலையினையும் ஒப்பீட்டு அளவில் கூட நினைக்க முடியாதது. 

காரணம் அன்று நகரத்தார்கள் சிறு வணிகக் கடன் வழங்கும் முறைகளிலும் கூட தங்களுக்கான நியமங்களை வகுத்து, அவர்கள் செல்லும் பட்டி தொட்டிகளிலும் தங்கள் வருவாயில், நீராதாரம் பெருக்கி, உள்ளூர் மக்களின் பாதுகாப்பில் வாழ்ந்தனர். இன்று நமக்கு கொடுக்கப்பட்ட அடிக்குப் பின் தமிழ் நாட்டில் அரசியல் ஆதரவுடன் களமிறங்கிய வடுக மலையாளிகளிடம் நமது தமிழக மக்கள் மனப்புரத்தில் மனசாட்சியினை தொலைத்து, முதூட்டில் முட்டி விழி பிதுங்கி நிற்கும் போது பாதுகாப்பின்றி நிற்கின்றனர். இதுகுறித்த விழிப்புணர்ச்சி என்பது சிறிதும் இல்லாத நிலையில் அரசியல் தலைமை இல்லாத இனமாக ஒட்டுமொத்த தமிழர்களும் இருக்கும் போது, நிலைமை சீர் செய்ய மீண்டும் ஓர்மையுடன் நமது மரபு வழி இனக் குழுக்களுடன் கை கோர்க்க வேண்டும். இது அனைத்து தமிழர்களுக்கும் பொருந்தும். இந்த சிந்தனை மனதில் எழாமல் வடுக நாயர்களும் நகரத்தார்கல்தான், நல்லிகளிடம் நெல்லி எலும்பைத் தேடும் பதர்களும் நகரத்தார்கள்தான் என்று நினைத்தால், சுய அடையாளம் இழந்து மாற்றார் வஞ்சத்தில் கரைந்து நீர்த்துப் போக நேரிடும் என்பதை அனைவரும் மனதில் வைக்க வேண்டும்.

---- நெற்குப்பை காசிவிசுவநாதன். 21-07-2015 .

Monday, 13 July 2015

ஏழகப் பெருவீடு - நகரத்தார் குடிமரபு - வரலாற்றில் பதியப்பட்ட உண்மைகளும் இன்றைய மெய்மைகளும்

ஏழகப் பெருவீடு - நகரத்தார் குடிமரபு - வரலாற்றில் பதியப்பட்ட உண்மைகளும் இன்றைய மெய்மைகளும்

#நகரத்தார்களாகிய நாம் ஒதுங்கிப் போகின்றவர்கள் அல்ல. வரலாறு நம்மை அப்படி எழுதவும் இல்லை. பாண்டிய சகோதரர்களில் இருவருக்கு பிணக்கு ஏற்பட்டபோது, ஒரு சகோதரன் வடநாட்டு மாலிகபூர் உதவி நாடியபோது, நமது நகரத்தார்களின் #ஏழகப்__பெருவீடு கொண்டு, மாலிகபூர் படையினை கடுமையாக எதிர்த்தவர்கள் நாம்.


  பண்டு தொட்டு சோழற்குடிக்கும், பாண்டியர் குடிக்கும் படைபலம் கட்டிக்கொடுக்கும் செட்டிமக்கள், என்றும் எதற்கும் பயந்தவர்கள் அல்ல. ஆனால் வடுகர்களை நாம் ஏற்பதுதான் வரலாற்று முரண். வெள்ளையர்களுடன் மாமன்னர் மருதிருவர் போர் தொடுத்த போது #ஒக்கூரில் நடந்த மருதிருவர்-வெள்ளையர் இரண்டு அணிகளும் பொருதும் களம் ஒக்கூர். அங்கே படையினைக் கட்டி அமைத்து பொருளுதவிகளும் செய்தவர்கள், #மருதிருவருக்காய் அரசியல் நிலைபாடு கொண்டிருந்தவர்கள், போரில் தோல்வியடையும் போது #ஒக்கூர் நகரத்தார் வீடுகளும் #பீரங்கிகளுக்கு இரையானதும், நாம் என்றும் பயந்தவர்கள் அல்ல என்பதே.
  நமக்கான இன்றைய பிரச்சினை யாரை நம்புவது ?? எப்படி தமிழர் இனக்குழுக்களில் #ஒர்மைக்கும், #ஒற்றுமைக்கும் முனைப்பெடுத்து அடையாளங்களை மீட்பது ?? என்பதே. ஆனால் வரலாறு தெரியாத நகரத்தார்கள் பலர், வடுகர்களை நத்தி வாழ்ந்தால் போதும் என்பதில் தான் #நமக்கான_பின்னடைவே.


நாம் யாரை இன்று நம்புகின்றோமோ, அவர்களே நம்மைச் சல்லடையாக சலிக்கின்றனர். இதை உணரவில்லை என்றால், மீட்சி இல்லை. #ஏழகப்__பெருவீடு என்பது முடியுடை வேந்தர்களாகிய சோழர்களும், பாண்டியர்களும் வேள் வணிகர்களான நகரத்தார்களுக்கு என்று தனிக் காவற் படை அமைத்துக்கொள்ள அனுமதி கொடுத்தது. பாண்டியர் மண்டலம் வந்தபின்பு பாண்டி நாட்டில் உள்ள வில்அம்பர் எனப்பட்ட வல்லம்பர் தமிழர் இனக்குழுவினர் நமக்கான காவற்படைக்கு தலைமையும் பொறுப்பும் கொண்டிருந்தனர். கடல் கடந்த வணிகத்திற்கும் காவல், வீட்டில், ஊரில் நமது பண்பாட்டு நெறி வழுவாமல் ஊரிலும் காவல்.
 இது நம்முடன் வாழ்ந்த அனைத்து தமிழர் இனக்குழுக்களும் ஒருவொருக்கொருவர் உதவி வாழ்ந்த வரலாறு. வடுகர் வரும்போதும், நமக்கு அண்டி உள்ள தமிழர் மரபுவழி இனக்குழுக்கள் பலர் நம்மக்கு கேடயமாக இருந்தனர். ஆகவேதான் அன்று நமக்கு வடுகர்களால் பண்பாட்டு வாழ்வியலில் பாதகம் இல்லை. நாம் யாரை நம்புகின்றோம், யாருடன் இருக்கின்றோம் என்பது மிக இன்றியமையாத ஒன்று. 
கன்னட-வடுகர் வந்த போது சைவ ஆகமங்கள் வன்மையாக புறக்கணிக்கப்படும்போது, சைவ மடங்கள் பிறந்தன. அதற்கும் நகரத்தார்கள் தொன்றுதொட்டு உதவியும், வளர்ச்சியில் பங்கெடுத்தும் வந்தனர். அயலார் ஆட்சிகாலங்களில் தமிழர் கட்டிடக் கலைக்கு பங்கம் வந்த போதும், உடன் நமது ஐயாக்கள் #தமிழ்ப்_பெருந்தச்சர்களை உடன் அழைத்து, தமிழகத்தில் உள்ள பாளையங்கள் தோறும் பாண்டிய- சோழ மன்னர்களின் கோவில்களை #திருப்பணி செய்வதில் முனைப்பெடுத்தனர். காரணம் #தமிழர்__கலை என்பது #தமிழர்__குடியான#கம்மாளர்ர்களிடம் மரபு வழியாக இருந்தது.
  அந்தக்கலையினை #ஆன்மிகம், #நம்பிக்கை, #மரபு என்ற #கேடயத்தில் அவர்களை தங்களது பாதுகாப்பில் கொண்டுவந்து, #சைவ மடங்களுடன் தொடர்பில் இருந்து, நமக்கான அடையாளம் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதிவரை கொண்டுவந்தனர். 
ஆகவே தான் #மாமன்னர் மருதிருவர் பல #கோவில்களை நகரத்தார் பரிபாலனம் செய்ய #சாசனம் செய்தனர்.இதைச் சகிக்காத வடுகர்கள்தான், நமக்கான பொருளாதாரத்தைக் கட்டம் கட்டி ஒடுக்கினர். நாம் #தவறவிட்டது தமிழர் தலைமை உள்ள அரசியல் களத்தை. அதுவே நமக்கும் முடிவுரை எழுதியது. மேலும்#நகரத்தார் கைகளில் பொருளாதாரம் இருக்கும்வரை ஒட்டுமொத்த தமிழ் இனமும், பண்பாடும் வீழ்ச்சியடையாது என்பதை உணர்ந்தனர். #ஏழகப்__பெருவீடு பாண்டியர் காலம் தொட்டு நகரத்தார்களின் வயிரவன் கோவில் பிரிவினரால் மாலிகபூர் படையுடன் உக்கிரமாய் போரிட்டு, தொல்வியடையுவரை ஒட்டுமொத்த நகரத்தார்களுக்காகவும் பரிபாலனம் செய்யப்பட்டு வந்தது. 
அதன் பின்னர் வடுகர்கள் தனிப்படை அமைக்க உரிமை தரவில்லை. ஆயினும் நகரத்தார்களின் தொன்றுதொட்ட மரபுவழித் தமிழர்களின் ஒற்றுமையே நமக்கு இன்றுவரை நமது அடையாளம் பாதுக்காக்க வழிவகை செய்தது. இந்த உண்மையினை இன்றைய பரிவட்டதாரிகள் பலர் மறந்துவிடுகின்றனர். நகரத்தார் சங்கங்களில் வடுகர்களுக்கு ரத்தினக் கம்பளமும் மாலை மரியாதையும்.
 விளங்கிடும்.......!!!!!!!!!! 

குறிப்பு :- #சேனையற்கரசி__பெயரும்__பொருளும்  
சேனையற்கரசி -- நகரத்தார் குடும்பங்களில் அண்மைக் காலங்கள் வரை இந்தப் பெயர் பல ஆச்சிமார்களுக்கு இருந்தது. 
இன்று அனன்யா, ஷ்வேத்தா, அபர்ணா (!!??), சுகன்யா, பூஜா(!!??), ரேஷ்மி, சுஷ்மி என்ற பெயர்கள் வந்த பின்னர் காணாமல் போன ஒரு. ஆனால் தமிழ்ப் பெயர்களின் பெயர்கள், பொருளும் அதற்கான காரணங்களும் நிறைந்தவை. 
#ஏழகப்__பெருவீடு என்ற நகரத்தார்களுக்கான #காவற்படையினை நகரத்தகர்களில் வயிரவன் கோவில் பிரிவினர் பரிபாலனம் செய்து வந்தனர்.
 காவற்படை கொண்ட வயிரவன் கோவில் நகரத்தார்களே சேனைக்கு பொறுப்பாளர்கள். ஆகவே சேனையற்கரசி என்ற பெயரை தங்கள் வீட்டில் பிறந்த பெண் குழந்தைகளுக்கு சூட்டி மகிழ்ந்தனர்.
 சேனையற்கரசி என்பதை வீட்டில் அழைப்பவர்கள் சேனச்சி என்றும்#சேனச்சி__ஆச்சி என்றும் அழைப்பது மரபு.
 சேனையற்கரசி என்ற பெயர் கொண்ட வயிரவன் கோவில் பெண்மக்கள், திருமணத்திற்குப் பின்னர் சென்ற இடங்களில், அவர்கள் வழித் தோன்றல்கள் த்ங்கள் பிள்ளைகளுக்கு, அப்பத்தாள் பெயரோ அலல்து ஆயா பெயரோ வைப்பது வழக்கம்.
 அந்த வகையில் வயிரவன் கோவில் வகையில் சூடிய / சூட்டிய சேனையற்கரசி என்ற தமிழரசியின் பெயர் நகரத்தார்கள் வீடெங்கும் நின்று விளக்கம் பெற்றது.
 இன்று அந்தப் பெயரின் பொருளும், அறிந்தார் இல்லை, பெருமையும் உணர்ந்தார் இல்லை. 
வரலாற்றில் பதிந்த சுவடுகள் பல. அந்தச் சுவடுகளில் நின்று நலம்பெற்றவை சில. சேனச்சி ஆச்சிகள் குறைந்து, சுகன்யா, அனன்யா, சுனன்யா, அபர்ணாக்கள் வந்து நிற்கின்றனர். என்ன செய்வது.?? காலம் போடும் புதுக்கோலம், யாரறிவார் ? யார் உணர்வார் ??? 
----- வேணும் அருள்மிகு பொய்சொல்லா மெய்யர் துணை.
 ----- நெற்குப்பை காசிவிசுவநாதன். 13-07-2015.

Friday, 10 July 2015

நகரத்தார் தனி சிறப்புக்களும் அதனால் பெற்ற தொழில் சிறப்புகளும் ..






காடு வெட்டி போட்டு கடிய நிலம் திருத்தி
வீடுகட்டி கொண்டிருக்கும் வேள்வணிகர் வீடுகட்கு
அன்றைக்கு வந்த எங்கள் அம்மா இலக்குமியே
என்றைக்கும் நீங்கதிரு
.. பாடுவார் முத்தப்பர் செட்டியார்


நகரத்தார்கள் இரண்டாயிரம் வருடம் பழமையான தமிழ் குடி மக்கள்
கல் தோன்றி மண் தோன்றா காலத்தில்.. முன் தோன்றிய மூத்த தமிழ் குடிகளில் தலையாய குடியாக இன்று வரை உள்ளது ..

நகரத்தார் மக்கள் தோன்றிய காலம் முதலே இறை வழிபாடு அறிந்து அதை முறையாக செய்ய ஆரம்பித்த காரணத்தால் அம்மக்களிடம் குடும்ப அமைப்பு , செயல் திறன் , கட்டு கோப்பு , ஆளுமை பண்பு , சுய கட்டுப்பாடு , ஒழுக்கம் , நாணயம் போன்றவை பிறப்பிலேய உடன் பிறந்தன ..

நகரத்தார் மேற்கூறிய அனைத்தும் ஒருங்கே அமைய பெற்று ஒரே உருவமாக இருந்த காரணத்தால் அவர்களிடம் மற்றய தமிழ் குடி மக்கள் அதிக மதிப்பும் மரியாதையும் கொண்டு இருந்தனர் .. கால ஓட்டத்தில் மற்ற இனத்தை சார்ந்தும் இடத்தை சார்ந்து இருக்கும் மக்களும் நகரத்தார் இன மக்களால் பயனுர்ரனர் ..

வாழ்வின் முன்னேற்றத்தை தொலை நோக்கு பார்வையுடன் சிந்தனை செய்து அதை செயல் உருவாக்குவதில் நகரத்தார் மக்கள் சிறந்து விளங்கினர் . எந்த ஒரு இடத்திலும் தொழில் அமைப்புக்கள் பாதிக்காத வகையில் உறவுகளை வளர்த்தனர் . உற்றார் உறவினர்கள் வைத்து எதை செய்ய வேண்டும் எதை செய்ய கூடாது என்பதில் மிக கவனமான செயல் அறிவை பெற்றிருந்தனர் . ஆச்சி மார் பங்கு , பங்காளிகள் பங்கு , தொழில் பெரும் இலாபத்தில் செலுத்த வேண்டிய இறை பங்கு என்று பங்குகளை வகை படுத்தி அதை செலுத்தி வந்தனர் .

பங்கு முதலீடுகளின் முன்னோடியாக இருக்கும் நகரத்தார் இன மக்கள் உறவுகள் இன்றி மற்ற மக்களிடம் பெரும் பங்கினை அவர் அவர்க்கென்று தனி ஒரு பெறேடினை உருவாக்கி அதில் அவர்களின் வரவு செலவுகளை முறையே பதிந்து வந்தனர் ..

ஐந்தொகை கணக்கின் சாரம்சமே எளிய பாமர மக்களும் அறியும் வண்ணம் அவர்களின் கணக்கினை உருவாக்குவதே . எந்த ஒரு செயலும் மிக சுலபமாக அதன் பயனை அடுத்தவர்க்கு கொடுத்தால் அதன் உருவாக்கத்தில் மிக அதிகமான உழைப்பு இருப்பது நிதர்சனமான உண்மை அப்படி அனைவருக்கும் புரியும் வண்ணம் எடுத்து காட்டும் வரவு செலவு கணக்குகள் நகரத்தார்கள் மதி நுட்பத்தினையும் உழைப்பையும் உலகுக்கு எடுத்து காட்டுகின்றன .

உணர்ச்சிவசம் என்பது நகரத்தார் அகராதியில் இல்லாத ஒன்றே எதற்காகவும் எந்த சூல்நிளைளும் உணர்ச்சி வச படாது இறை வழிபாட்டில் மூட நம்பிக்கை செயல் பாடுகளுக்கு இடம் இன்றி வழிபடும் முறையை கொண்டு இருந்தனர் . குடும்ப அமைப்பில் ஆன் பிள்ளைகளை தொழிலில் சிறு வயது முதலே பயிற்ச்சி பெற தகுந்த ஏற்பாடுகள் செய்தனர் . கல்வி அறிவு இறை வழிபாடு இரண்டும் ஒன்றாகவே வளர நகரத்தார் மக்கள் தங்கள் பிள்ளைகளை வளர்த்தனர் .

பெரிய இலாபத்திற்கு சில முதலீடு செய்வதும் - சிறிய இலாபத்திற்கு பல முதலீடு செய்வதும் என்று முதலீடுகளில் வகைப்பாடு செய்து முதலீடு செய்தனர் .



=> தொழிற்சாலைகல்,மலை தோட்டங்கள்,வயல் வெளிகள்,ஏற்றுமதி இறக்குமதி,என்று சில பெரிய இலாபத்திற்கு சில முதலீடுகள் என்றும்

=> விவசாய கடன் கொடுத்தல் , தொழில் செயல் அறிந்து அதற்கு தகுந்த அளவு கடன் கொடுத்தல் , சில்லறை வர்த்தகம் , போன்று சில சிறிய இலபதிர்க்கு பல முதலீடுகள் என்றும்

தொழில்களின் வகை அறிந்து செய்தது அவர்களின் முன்னேற்றத்திற்கு பெரிய காரணமாகும் . கடின உழைப்பின் பயனாய் அடையும் இலாபத்திலும் தங்களுடைய வாழ்க்கையை எளிய முறையில் வாழ்ந்தது அவர்களின் சந்ததியினர் வாழ்வுக்கும் எடுத்துக்காட்டாய் அமைந்தது ..
பொருள் ஈட்டுவதில் எந்த அளவு திறமை கொண்டு இருந்தனரோ அதே அளவு இறை வழிபாட்டிலும் பொது சேவைகளிலும் அதீத ஆர்வம் கொண்டு இருந்தனர் அதன் விளைவே இன்று நாம் காணும் நகர்த்தார்களால் நிர்மாணிக்க பட்ட திருக்கோவில்களும் , பள்ளிக்கூடங்களும்,கல்லூரிகளும்,மருத்துவ மனைகளும்,நகரத்தார் தங்களுடைய பகுதிகளான செட்டிநாட்டு தொன்னூற்றி ஆறு ஊர்கள் மட்டும் இன்றி தாங்கள் தொழில் செய்ய செல்லும் அனைத்து இடங்களிலும் இன்றளவும் பெயர் சொல்லி நிற்பதை காணலாம் ..

நம் இனம் அறிந்து அடையாளம் தெரிந்து அதை வளர்க்கும் விதமாகவே நம் இன நகரத்தார்கள் செயல் பட வேண்டும் என்று எல்லாம் வல்ல அண்ணாமலையானை வேண்டுவோம் ..

..வேள்வணிகர் முத்துக்கருப்பன் செட்டியார்

Thursday, 9 July 2015

பெயர் இடுவோம் :





கொஞ்சுதமிழ் மொழியில் இல்லாத வளமையா இந்த சமஸ்கிரதத்தில் உள்ளது . நம் பிள்ளைக்கும் அழகுமிகு கொஞ்சு தமிழ் பெயர் சூட்டுவோம் அண்மையில் நம் செட்டிநாட்டில் ஒரு திருமணத்திற்கு சென்றபோது அங்கு சிறு பிள்ளைகளின் பெயர்களை கேள்விப்பட்டபொது மிகவும் வருத்தமாகவே உள்ளது. இன்றைய பிள்ளைகள் பெயர்களோ‪#‎ஸ்வஸ்திகா‬ / ‪#‎விஸ்வேஸ்வரன்‬ / ‪#‎ஸ்வஷாகா‬ / ஸ்வப்னா /நகுலேஸ் என்று பிள்ளைகளை அழைத்தனர்.இப்படி சமஸ்கிரத உச்சரிப்பு பெயர்களே அதிகம் வைப்பது சற்றும் அழகாக இல்லை.


தமிழ் வளர்த்த சமூகமானவும் தமிழ் மொழியை கண்ணாக பார்த்த நம் ஐயாக்கள் வழித்தொன்றாலான நாம் நம் சமூகத்த்தில் தமிழ் தாய்க்கு தொண்டு செய்தவர்கள் பலர் உள்ளனர் பாடுவார் முத்தப்பர் / பண்டிதமணி கதிரேசன் செட்டியார் /வியினாகரம் ராமநாதன் செட்டியார் /பழ.முல்லை முத்தையா /அழ.வள்ளியப்பா /பதிப்பாளர் திலகம் வை.கோவிந்தன் / தமிழ் கடல் ராய.சொ /வ.சு.ப மாணிக்கம் /அழகப்பசெட்டியார்/ ச.மெய்யப்பன் / ராஜா சர் அண்ணமலை செட்டியார் /மெ.நா.சித.சிதம்பரம் செட்டியார் /எ.கே செட்டியார் / வீர.லெ.சிந்தயச் செட்டியார் /பாரிநிலைய செல்லப்பன் /திருக்குறளுக்கு தொண்டாற்றிய அறு.அழகப்பன் / கவிஞர் கண்ணதாசன் / சோம.லெ என்று பட்டியல் நீண்டுகொண்டே போகும்

இப்படிப்பட்ட தமிழ் தொண்டு புரிந்த சமூகத்தில் இன்று சமஸ்கிரத மோகத்திலும் நவீனபெயர் இடுமுறை மோகத்திலும் நம் சுய தமிழர் அடையாத்தை நாம் இழக்கிறோம். நம் மரபு வழக்கம் ஐயாவின் பெயரையும் அப்பத்தா/ஆயாளின் பெயரை இடுவதே வழக்கம் கொண்டநாம் உடன் வீட்டில் அழைக்க ஒரு பெயர் சேர்த்து நம்மில் இடும் வழக்கம் உண்டு. ஐயா/அப்பத்தாள் பெயர்கள் அரசு ஆவணங்கள் ஏடுகளில் இடம்பெறும். இந்த இருபெயரும் தமிழ் பெயராகவே இருந்தது. ஆனால் இன்றோ பலர் நாகரிக மோகத்தில் ஐயாவின் பெயரை வைக்க தயங்குகின்றனர்.அப்படி வைத்தாலும் அது அலுவல் பெயராக இல்லை.ஏடுகளில் எழுதப்படாத வகையில் தான் தற்போது உள்ளது. நாம் நம் பிள்ளைகளுக்கு நம் மரபு வழி நம் ஐயாக்கள் /அப்பத்தா/ஆயாளின் பெயர்களை பிள்ளைகளுக்கு சூட்டி அலுவல் பெயராக மீண்டும் வழக்கில் கொள்வோம் . அப்படி இல்லையேல் நல்ல தமிழ் பெயரை எளிய பெயரையாவது சூட்டுவோம். நம் குழந்தைகளுக்கும்‪#‎மங்கை‬ / ‪#‎செல்வி‬ / ‪#‎வள்ளி‬ / ‪#‎அதிரை‬ / ‪#‎அழகன்‬ / ‪#‎நடேசன்‬ / ‪#‎செழியன்‬என்று எளிய அழகு தமிழ் பெயரை அலுவல் பெயராக வைப்போம்.இப்படி தமிழ் பெயரை பிள்ளைகளுக்கு சூட்டுவதும் ஒருவகை தமிழ் மொழி வளர்ப்பு தான்.இன்று தமிழகத்தில் குடியேறிய கலப்பினர்கள் தங்கள் பெயரின் அடையாளத்தை தற்போது தமிழர் போல் தங்கள் பெயர்களை நெடுமாறன் / வந்தியத்தேவன்/ இளங்கோ என்று வைத்து கொள்கின்றனர் ஆனால் நாமோ நமக்கும் நம் தாய்மொழிக்கும் கொள்ளிவைக்கும் வகையில் தமிழ் பெயரை சூடிக்கொள்ளாமல் நவநாகரீகம் என்று கருதி சமஸ்கிரத்த்தில் வாயில் உச்சரிக்க முடியாத பெயர்களை சூடிக்கொண்டு மகிழ்கிறோம் . நமக்கே தெரியாமல் நம் தமிழை அழிக்கிறோம்.இனியாது மொழியில் மீது அக்கறை கொண்டு நம் ஐயாக்கள் வழியில் நடப்போம் பிள்ளைகளும் எளிய கொஞ்சு தமிழ் பெயரை சூட்டுவோம் .அயல் மொழிப்பெயரை வைத்துகொண்டு சுய அடையாளம் இழப்பதையும் தெரியாது களிப்புறுவதில் என்ன வரப்போகிறது. கொஞ்சுதமிழ் மொழியில் பெயர்வைப்போம்.முடிந்தவரை நம் ஐயாக்கள் /அப்பத்தா/ஆயாளின் பெயர்களை பிள்ளைகளுக்கு சூட்டி அலுவல் பெயராக கொள்வோம் . மரபு வழிப்பெயர்கள் வைத்து நம் மரபை காப்போம் .நம் பாரம்பரிய அடையாளம் காப்போம்
------கரு.இராமநாதன் வேள்வணிகன்

Friday, 15 May 2015

ஒடுகாலிகளும் ஊர்வலங்களும்:


காசிவிஸ்வநாதன்  ஆவுடையப்பன் அண்ணன்  அவர்கள்  எழுதிய  முகநூல் கட்டுரையை  இங்கு  பகிர்கிறோம் 

ஒடுகாலிகளும் ஊர்வலங்களும்: ( கட்டுரை நீளமாக இருந்தாலும் மிகவும் சுருக்கமாகவே தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது )

வடுக ஜெயமோகன் என்ற வந்தேறியின் இணையப் பக்கத்தில், நகரத்தார்களைப் பற்றி ஒட்டுமொத்தமாய் தரம் தாழ்த்தி எழுதுவதற்கு, மற்றுமொரு மலையாள உன்னி கிருஷ்ணன் மன்னிக்கவும் சுனீல் கிருஷ்ணன் என்ற இன்னொரு வந்தேறியை வைத்து தனது வக்கிரத்தை தீர்த்துக்கொண்டுள்ளான். இந்தக் கட்டுரையில் நேரடியாகவே வெள்ளைக் கிழவனை வைத்து அவன் சொல்வதாக, தான் இவ்வளவு நாள் தேடிய வக்கிரத்தை நிறைவேற்றிக் கொண்டுள்ளான். அந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் இருந்து காதில் பூ சுற்றுவதற்கு பல்வேறு அறிவுஜீவி தத்துவங்களை அள்ளி வீசி இடை இடையே கொஞ்சம் கொஞ்சமாய் கருவறுப்பது நன்கு அறிய முடிகின்றது. 

அவர்கள் கொடுத்திருக்கும் தலைப்பிலேயே அவர்களின் வெஞ்சினமும் வடுக வக்கிரமும் கொப்பளிப்பது தெரிகின்றது : “ செட்டியரும் பிரிட்டியரும் “ காரைக்குடி என்ற ஊர்ப்பெயரும் சேர்த்ததில், இவர்கள் யாரைக் குறி வைக்கின்றார்கள் என்று தெளிவாகும். நாட்டுக் கோட்டை நகரத்தார் என்று சொல்வதற்கும், அந்த தனித்துவ அடையாளத்தை உச்சரிப்பதற்கும் கூட இந்த வேலி தாண்டிய வெள்ளாடு தயங்குகிறது. 

செட்டியர் – அதிலும் செட்டியார் என்ற விகுதியைக் கத்தரித்து அவமானப்படுத்துகின்றான். தமிழ் நாட்டில் வந்தேறிய ரெட்டிகளையும் கூட தமிழர்கள் ரெட்டியார் என்றுதான் அழைக்கின்றனர். நம் மண்ணில் வந்து நம் தாய் மொழியைப் படித்து நமக்காக கற்பழிப்பு சேவை செய்யும் இவர்களைப் போன்றவர்களை தமிழர் இனம் இன்னமும் அடையாளம் கண்டுகொள்ளவில்லை. மேலும் இவனைப் போனறவர்கள் அதி மேதாவிகள் என்றே தமிழர்கள் நினைக்கின்றார்கள். ஆனால் இவர்களோ அனைத்து வடுகச் சாதிகளையும் ஒன்றிணைத்து தமிழ் மொழியின் இலக்கியங்களையும், ஊடகங்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். நம்மவர்களும் மாற்றானை அடையாளம் காண இயலாமல் தவிக்கின்றனர்.

ஏற்கனவே நாடார் சமுதாயத்தைப் பற்றி ஒரு நாவல் முழுக்க எழுதி தன் வஞ்சத்தை தீர்த்துக் கொண்டான். இப்பொழுது நகரத்தார் சமூகத்தை கருவறுக்க காலம் கனிந்து வந்துள்ளதை அவதானித்து, ஒரே ஒரு கட்டுரையில் கட்டம் கட்டி பழி தீர்த்திருப்பது நகரத்தார்கள் எந்த அளவிற்கு பலமிழந்துள்ளனர் என்பதைக் காட்டுகின்றது.

பொதுவாகவே தமிழ் நாட்டில் எங்கு சென்றாலும் நாட்டுக் கோட்டை நகரத்தார்களுக்கு, என்றும் உள்ள நன் மதிப்பைக் கண்டு கொண்ட மலையாள வடுக உளவடி ஜெயமோகன்,எப்படி யாரை வைத்து இவர்களது மிச்ச சொச்சத்தையும் கணக்கு தீர்க்கலாம் என்று பிணந் திண்ணி போல் காத்திருந்த போது மிகச் சரியாகவே வெள்ளைக் கிழவன் ராய் மாக்சம் கிடைத்தார். சரி என்று ஆரம்பித்த கட்டுரைதான் மேற்படி கட்டுரை. தலைப்பும் அதற்கு முன்னுரையாக நடுவு நிலை குறித்தும் உன்னி கிருஷ்ணன்... மன்னிக்கவும் சுனில் கிருஷ்ணன் ( மலையாள வடுகன் ) தனது சேட்டையை ஆரம்பித்துவிடுகின்றார். பிரித்தானிய ராய் மாக்சம் சென்னையில் வந்திறங்கியவுடன், பர்மாவில் கொள்ளையடித்து கட்டிய கோட்டைகளைப் பார்க்க வேண்டும் என்றதும், இவருக்கும் ஆர்வம் வந்துவிட்டதாம் ?? உண்மையின் இந்த சுனில் நாயர் சில காலம் கானாடுகாத்தானில் வேலை பார்த்த வடுக உளவாளிதான். நம்மவர்களுக்கு யாரை எங்கே வைப்பது என்று புரியாத நிலையில் இருப்பதும் பெரும் கேடு. முன் கூட்டியே திட்டமிட்டபடி கட்டுரை நகர்கின்றது. காரைக்குடி வழியாக செல்லும் போது வள்ளல் அழகப்பர் செய்த சாரிட்டீஸ் என்று பல்கலைக் கழகத்தைக் காட்டினாராம். உடனே மாக்சம் இதுவெல்லாம் பர்மீயர்களைக் கொள்ளையடித்துக் கட்டியது என்றதும், நம்ம சுனில் நாயர் உணமையறிந்து வாய்பிளந்துள்ளார். 

குறிப்பு 1: வள்ளல் அழகப்பரின் பெரும்பான்மையான வணிகமும் முதலீடும் இந்தியாவிலும், மலயாவிலும்தான். அவர் அதிகம் சம்பாதித்தது நூற்பாலைகள், குடகு தேயிலைத் தோட்டம், தானே உருவாக்கிய ஜூப்பிட்டர் ஏர்வேஸ் என்ற பயணிகள் விமான போக்குவரத்து நிறுவனம், மேலும் பிரித்தானிய பங்குச் சந்தையில் மார்வாடிகளுக்கும், குஜராத்திகளுக்கும், வெள்ளையருக்கும் சிம்ம சொப்பனமாய் இருந்து கொடி கட்டிப் பறந்தவர், அதிலேயே பெரும் பணமும் இழந்தவர். ( இந்த ஜூப்பிட்டர் ஏர்வேஸ் நிறுவனம் வெள்ளையனுக்காக அவனுக்கு இரண்டாம் உலகப்போரில் இலவசமாக ஊழியம் செய்தது) இது அந்த பிரிட்டி மாக்சம் ராய்க்கு தெரியாது. ஆனால் நம்ம சுனில் நாயருக்குத் தெரியும். வடுக உளவாளிகள் உண்மை மறைப்பதும், அதனை சுவடு தெரியாமல் அழிப்பது என்பதற்குமே அவதரித்தவர்கள்.) அப்படியிருக்க வெள்ளை பிரிட்டி வள்ளல் அழகப்பர் கொள்ளையடித்ததை அங்கு உள்ள மக்கள் தம் வாய்மொழியாகவே சொல்வது என்பது வஞ்சகம் நிறைந்த உணமையான பச்சைப் பொய். சரி, கானாடுகாத்தானில் செட்டிநாட்டரசர் அரண்மனை சில ஆண்டுகளாய் திறப்பதில்லை என்று உச்சுக் கொட்டும் வடுக உளவாளி, சந்தடி சாக்கில் அப்படியே இது போன்று பல வீடுகள் பராமரிப்பதில்லை என்பதினை குடும்பப் பிரச்சினை என்று வெள்ளையனிடம் பூசி மொழுகும் உத்தமம் உள்ளதே......!!!! அயோக்கியர்களுக்கு உண்மை சொல்வதற்கு நாக்கு மடிவதில்லை போலும். வீடுகள் பராமரிக்க முடியாத உண்மை நிலை நகரத்தார் வாழ்வை முடக்கிய திராவிட-வடுக-சனாதன கூட்டுக் கொள்ளையர்தானே ?? சொல்வதற்கு வலிக்கின்றதே ?? மேலும் தான் வேலை பார்த்த செட்டி நாடு மேன்சன் என்ற நட்சத்திர விடுதியில் சாப்பாடு ஒன்று இந்திய உருபாய் 750 என்றதும் வெள்ளைக்கார துரைக்கு மயக்கம் வந்த நிலை கண்டு கரிசனம் கொண்ட சுனில் நாயர் வடித்த நீலிக் கண்ணீர் செட்டி நாட்டில் பெருக்கெடுத்துள்ளது. அத்துடன் இப்படி இவர்கள் ( நகரத்தார்கள் அடித்த கொள்ளையினைக் கண்டு பர்மா வல்லரசு ஒரே நாளில் பணத்தை அச்சடித்து போன்டியாக்கினார்கள் என்ற அறிய வரலாற்றைச் சொன்ன போது பல காலம் அங்கேயே தங்கி உளவடித்த சுனில் நாயர் ஆச்சரியப்பட்டுள்ளார். 
குறிப்பு 2 : இதில் வேடிக்கை என்னவென்றால், பர்மா மட்டுமல்லாமல், இலங்கை, மலேயா என்று மாமா நேரு செய்த களவாணித்தனம் அதிகம். இவனைத்தான் மனிதருள் மாணிக்கம் என்று நெக்குருகும் பலர், மாமா நேரு காலத்திலேயே தமிழர்களின் புலம்பெயர் கட்டமைப்பை உடைக்க முன்வடிவம் செய்யப்பட்ட செயல் திட்டத்தை அமல்படுத்த ஒவ்வொன்றாய் நடந்தேறியது. இந்த மாமா தனது நாட்டின் முதலீட்டாளர்களை விரட்டுவதற்கும் துணை போய்விட்டு, அந்த பர்மா அரசிற்கு சுமார் அன்றைய தேதியில் 49 கோடி ரூபாய் நட்ட ஈடும் கொடுத்தான். இது போல ஒரு வஞ்சகம் எங்காவது நடந்ததுண்டா ?? தமிழன் துரத்தப்படுவதற்கு தன் வாழ்நாள் முழுவது வேலை செய்தான். சீனத்திடம் வாங்கிக் கட்டிக் கொண்டதும் இல்லாமல் பறி கொடுத்ததும் அதிகம். நிற்க.



பர்மா கொள்ளை : இப்படி பொத்தம் பொதுவாக எழுதுவது எப்படி.?? எதற்கு ??

வெள்ளையர் 1800 களில் தொடக்கத்தில் பர்மா முழுமையும் கட்டுப்பாட்டில் கொண்டுவந்த பின்பு காடுகளும் மலைகளும் நிறைந்த ஒரு நிலத்தை சீர்திருத்தி முறையான ஆட்சிக்கும், வருவாய்க்கும் வகை செய்ய தமிழகத்தின் நகரத்தார் சமுதாயத்தை சிறு முதலீட்டில் அனுமதித்தனர். காரணம், மக்களுடன் நேரிடையாக வெள்ளையரின் தொடர்பு போதாமையும், முல்லை நிலங்களை விளையும் ுமருத க்குவம் தமிழர்களுக்கு மிகவும் எளிமையான செயல் என்பதால்.நகரத்தார்கள் பண முதலீட்டிற்கு சென்ற போது ( 1826 தொடக்கம் ) வெளளளை மற்றும் அமெரிக்க வங்கிகள் நுழையவில்லை. பிறகாலத்தில் மார்வாடிகள், குஜராத்திகள், கூடவே அமெரிக்காவின் சிட்டி சார்ட்டட் வங்கி ( அட நம்ம சிட்டி வாங்கித்தாங்க ) எல்லோருக்கும் வெள்ளையன் வாய்ப்புக் கொடுத்தான்.விளைவு என்ன தெரியுமா ?? நகரத்தார்களின் வங்கிப் பரிவர்த்தனையும் வட்டி விகிதமும் மிகக் குறைவாகவும், எளிமையான ஈட்டுப் பொருளும், பல நேரங்களில் முகம் பார்த்து கடன் கொடுத்து உதவிய அறிய முனைப்பும் கண்டு பர்மியர்கள் நகரத்தார் வங்கிகளுக்கே வந்தனர். சிட்டி சார்ட்டட் வங்கி இழுத்து மூடப்பட்டது. அவர்கள் நகரத்தார்கள் போல சிக்கனமாகவும், குறைந்த வட்டியிலும், இரவு பகல் என்று பாராமல் எந்த நேரத்திலும் பணம் கொடுக்கல் / வாங்கல் செய்வது போல் எங்களால் முடியவில்லை என்று ஒதுங்கிவிட்டனர். மார்வாடிகளும், குஜராத்திகளும் தாக்குப் பிடிக்க முடியாமல் கடையைக் கட்டினார்கள் மனதில் வஞ்சத்துடன். இதற்கும், நகரத்தார்களின் வெற்றிக்கும் காரணம் நகரத்தார்களின் கட்டுக் கோப்பான, ஒற்றுமையான, நேர்மையான பணப் பரிவர்த்தனையும், தஞ்சை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து நகரத்தார்களுடன் அணி அணியாக தமிழர்கள் கப்பலேறி பர்மா காடுகளை பண்படுத்தி நெல் விதைத்து தெற்காசியாவின் நேர்கலஞ்சியமாகவும், பர்மாவிற்கு ஒரு புதிய விவசாயப் பண்பாட்டையும் அமைத்ததானால் மேற்படிகள் தாக்குப் பிடிக்க முடியவில்லை என்றும், நகரத்தார்கள் ஆண்டிற்கு மூன்று நாட்கள் மட்டுமே தனகளது வங்கிகளை அடிப்பார்கள் என்றும், அதற்கும் ஏரகத்து முருகனுக்கு தைப் பூசம் என்ற தமிழர் திருவிழாவிற்கு நகரத்தார் பெருமக்கள் அனைத்து தமிழர்களுடனும் முருகன் வழிபாட்டிற்கு சென்றுவிடுவார்கள். இந்த நாட்களைத் தவிர, பர்மியர்கள் எந்த நாளில் எந்த நேரத்தில் வாங்கிய கடனைத் திருப்பித் தரவந்தாலும் இரவு பத்து மணி என்றாலும் அன்றைய தேதிக்கு, அந்த மணித் துளி வரை வட்டிச் சிட்டை போட்டு கணக்குப் பார்த்து கடனை நேர் செய்யும் பழக்கம் உலகில் நகரத்தார்கள் மட்டுமே என்பது இதனை ஆய்வு செய்த திரு.சியன் ட்ருனல் ( Mr.Sean Trunel, Anthropologist and Archeologist ) என்ற வெள்ளை நிறம் கொண்ட, ஆனால் மாக்சம் ராய் போல வெள்ளையர் அல்லாத ஆய்வாளர் பல்வேறு சான்றுகளுடன் இதே கானாடுகாத்தான், தேவகோட்டை,காரைக்குடி, அதுபோலவே பர்மாவில் ரெண்கூன்,அரிக்கன்,மாந்தலை போன்ற நகரங்களில் சென்று கள ஆய்வு செய்து எழுதியுள்ளார். 
உண்மை இப்படி இருக்க வேலிதாண்டி வந்த வெள்ளாடு வடுக ஜெயமோகன் தனக்கு ஆதரவான, நகரத்தார் மீது வன்மம் கொண்ட இயல்பான வெள்ளையனைத் தேடிப்போகும் அவசியமென்ன ?? தமிழனின் உணமைகளை அழித்தொழிக்க அவதாரமெடுத்த கயமைதானே ?? மேலும், வடுகக் களவானிகளின் கட்டுரை வெளிவந்தவுடன், ஒரு நகரத்தார் தக்க சான்றுகளுடன், ஜெயமோகன் பதிவிற்கு சென்று பதிவிட்டவுடன் அதற்கு பதில் அளிக்காமல் உடனே பதிவு நீக்கம் செய்தது திருடனுக்கு தேள் கொட்டிய நிகவுதானே.?? 

அதைவிடக் கொடுமை, கருத்துப் பதிவு செய்தவர் அந்த ஆதார நூல் இருந்த இணையத்தையும் சேர்த்தே பதிவிட்டுள்ளார். அந்தப்பதிவு கனடாவுடன் வடுக வேதாளம் அந்த வலைத்தளம் நடத்தும் வெளிநாட்டினரிடமே தொடர்பு கொண்டு அங்கு அது இல்லாமல் அளித்துமுடித்தும் விட்டார். இப்போது ஏற்கனவே பதிவிறக்கம் செய்தவர்களிடம் மட்டுமே அது உள்ளது. ஆக வடுகர்களே நம்மை அருகிருந்து அழித்து வருபவர்கள் என்பதனை இன்னமும் நகரத்தார்களும், தமிழர்களும் உணராமல் இருப்பது நம் ஒட்டுமொத்த இனத்திற்கும் ஆபத்து. 

தமிழர் இனக்குழுக்களில் பல சமுதாயங்கள் விழிப்படைந்து வருகின்றன. ஆனால் நகரத்தார்கள் இன்னமும் வேடிக்கை பார்ப்பவர்களாக இருந்தால் வரலாறு மன்னித்துவிடும், வடுகர்கள் உங்களை விடமாட்டார்கள். வரலாற்று மோசடியும், திருகுதாளமும் நிறைந்தவர்கள் கடந்த 1923 ஆம் ஆண்டிலிருந்தே நகரத்தர்களை கட்டம் கட்டமாக செதில் செதிலாக செக்குடைத்து வந்துள்ளனர் என்பதை வரலாறு சொல்கின்றது. இன்று தமிழ் இனம் முழுமையும் பரவிவிட்டது. சிறுபான்மை இனக் குழுவாக இருந்தாலும் தமிழர் இனத்தின் முதுகெலும்பாகவும், தமிழர் பண்பாடு, அறம் சார்ந்த நெறிகளை வழுவாது காப்பாற்றி வந்தவர்களை வடுகர்கள் செய்கின்ற சூதறியாமல் வீழ்த்திவிட்டனர். இன்று சுய நலம் பெருக்கெடுத்து தன்னைச் சுற்றி நடப்பதறியாமல் இந்த இனக்குழு இருப்பது வரலாற்றுப் பிழை. இன்னமும் காலம் கடந்துவிடவில்லை. தமிழர் ஓர்மைக்கு நகரத்தார்களின் பங்கு மிக அவசியமானது. இன்றளவும் எங்கு சென்றாலும் நகரத்தார்கள் மீது ஒட்டுமொத்த தமிழ் இனமும் மரியாதை கொண்டுள்ளது. அந்த வாய்ப்பினையும் வடுக ஜெயமோகன் போன்றவர்கள் கட்டம் கட்டுகின்றனர். ஏன் ?? பொருளாதாரத்தை இழந்த பின்பும் தமிழ் நெறியினைப் பேண வேண்டும் என்ற எண்ணத்துடன் கடந்த 1948 ஆம் ஆண்டிற்குப் பின்னும் பல நற்செயல்கள் செய்தனர். அதனையும் கூட பொறுக்க முடியாமல் தான் இன்று, ஐயா வள்ளல் அழகப்பா மீதும் சேறு வாரி அடிக்க ஆரம்பித்துள்ளனர். காரணம் ?? மழுங்கிப் போன சமூகமாய், உணர்வற்ற நிலையிலும் அன்றாட வாழ்வியல் தேடலுக்கு வந்து விட்டதனால் இருக்கின்ற வரலாற்றுப் பெருமையினை சிதைப்பதும் அவர்களுக்கு தலையாய கடமையாக உள்ளது. ஆகவே அவர்கள் தூங்கவில்லை, நாம் மயக்கத்தில் இருக்கின்றோம். விழிப்போமா ???

மேலும் வடுக ஓடுகாலிகள், ஆங்கிலேயர்களைத் தேடிப்போவதற்கும், அந்த ஆங்கில எழுத்தாளர்கள் இவர்களைத் தேடி வருவதற்கும் நீண்ட நுண் அரசியல் தொடர்பு உள்ளது. இந்த வலைப் பின்னல் தமிழ் இனத்தைக் கருவறுக்க கடந்த 1923 ஆம் ஆண்டு முதல் விரிக்கப்பட்ட வலை. அந்த வலையின் பிடி இப்பொழுது இருகுவதன் கரணம் முடிச்சு போட்ட இடத்திலேயே, முடிக்க உள்ள சூதுதான். அதாவது தமிழ் இனம் மீது தொடுக்கப்பட்ட முதல் தாக்குதல் நகரத்தார் மீது, அதுவே முடிவாகவும் இருக்கட்டும் என்ற செயல் திட்டம்தான். இதனை இன்னமும் நகரத்தார்கள் உணராமல் இருப்பது அவர்களின் நிலைப்பாடு, வடுகர்களுக்கு சாதகமாகவே முடியும். ஐயா ராமசாமி செட்டியார் அவர்களுக்கு இடர் வந்த பொது கைகட்டி வேடிக்கை பார்த்தவர்கள், இன்று ஒட்டு மொத்த நகரத்தார்களையும் கொள்ளையர் என்று சொல்லும் போதும், வள்ளல் அழகப்பையாவையும் எள்ளி நகையாடி ஆவணப்படுத்திய போதும், சிணுங்காமல் இருக்கும் நிலை கண்டு அதிர்ச்சியே மிஞ்சுகின்றது. முல்லிவாய்க்காலுக்குப் பின் தமிழ் இனம் சலனமுற்று துயில் கலைகின்றது. இந்த நேரத்தில் நகரத்தார்களும் தங்களின் நிலை உணர்ந்து ஒர்மைப்பட வேண்டும். வள்ளல் அழகப்பையாவை தொட்டு சீண்டியது தமிழர் அனைவருக்குமே வடுக மோகன் விடுத்துள்ள எச்சரிக்கையே. இதனை உணராமல் இருப்பது நல்லதல்ல. 

இதே போல் மற்றொரு ஐரோப்பியரான Maxwell Fernando - மாக்ஸ்வெல் பெர்னாண்டோ என்பவரும் இலங்கையில் நகரத்தார்களின் வங்கி முதலீடும், இலங்கை பொருளாதார் வளர்ச்சிக்கு நகரத்தார்கள் பங்கு, தோட்டத்தொழிலாளர்களின் பங்கும் வெள்ளை அரசாங்கத்திற்கு பெரும் ஆதரவாய் இருந்ததையும், என்ன என்ன வட்டி விகிதங்களில் நகரத்தார்கள் பணம் கொடுக்கல் / வாங்கல் செய்தார்கள், வட்டி விகிதம் எந்த எந்த அளவில் ஈட்டுப் பொருள் தகுந்து மாருபடுகினர்த்து என்றும், 1926 ஆம் ஆண்டுகளில் உலகப் பொருளாதார மந்தம் { Recession } உருவான போது இலங்கை, பர்மாவில் நகரத்தார்கள் செய்த முதலீடும், அந்த நிலுவைத் தொகை காரணமாக ஈட்டு நிலங்கள் அவர்கள் கைக்கு வந்தமையும் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார். மேலும், நகரத்தார்கள் போல் பொறுமையுடன் நிதானித்து, வங்கித் துறை நடத்தவும், சிக்கனமாய் இருக்கவும் ஐரோப்பிய முதலாளிகளால் முடியாது என்பதனையும், தெட்டத் தெளிவாகவே எழுதியுள்ளார். இதே நிலையினை பர்மாவிலும் நகரத்தார்களின் முதலீட்டில் தேங்கிய நிலையில் வேறு நேத நிதி நிறுவனங்களும் இவர்களைப் போல் அப்போது நடந்த உலகப் பொருளாதார மந்தத்தில் { Recession } தாக்குப் பிடித்திருக்காது என்றே ஆதாரங்களுடன் திரு. சியன் ட்ருனல் ( Mr.Sean Trunel, Anthropologist and Archeologist ) எழுதியுள்ளார். இத்தனை உண்மை ஆதாரங்கள் இருந்தும் இந்த ஓடுகாலிகள் ஊர் மேய்ந்து கூட்டி வந்தது யாரை ?? எதற்கு ?? ஏன் ??

ஓடுகாலிகளின் ஊர்வலங்கள் தொடரும் நாம் மௌனமாய் இருந்தால் என்பதை மட்டும் முதலில் நகரத்தார்கள் நினைவில் கொள்ளவேண்டும். நகரத்தார்களுக்கு ஆதரவாய் ஒட்டுமொத்த தமிழர் இனமும் காத்திருக்கின்றது. நமது சிறு வணிகக் கடன் கொடுக்கும் வட்டிக் கடை என்ற வங்கிகள் தமிழர் பொருளாதாரத்தின் அடிநாதமாய் இருந்தது. அதுவே தமிழகம் தாண்டி தெற்காசியா முழுமையும் தமிழர்களின் புலம்பெயர் கட்டமைப்பாக விரிந்தது. இந்தியாவிலேயே தமிழர்களான நகரத்தார்கள் துவங்கிய வங்கிகள்தான் வெளிநாடுகள் பலவற்றில் கிளைபரப்பி சர்வதேச வங்கிகளாய் விரிந்து நின்றது. இந்த வரலாற்று உண்மை போருக்க முடியாமல்தான் இந்திரா நமது வங்கிகளை நாட்டுடைமையாக்க அனைத்து வங்கிகள் என்ற பெயரில் நாடகம் நடத்தி நம்மால் துவங்கப்பட்ட இந்தியன் வங்கி ( Indian Bank ) , இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (Indian Overseas Bank ), இரண்டையும் நம்மிடமிருந்து கைய்யகப்படுத்தி அரசுடமையாக்கப்பட்டது. காரணம் தமிழன் கைகளில் பணம் இருந்தால் அது நல்ல காரியங்களுக்குத்தானே பயன்படும் ?? 

இன்னமும் நம்மைச் சுற்றி நடப்பதை அறியாமல் இருந்தால் வரலாறும் கூட மன்னித்துவிடும் வடுகர்கள் விடமாட்டார்கள் என்பது இன்று வேலிதாண்டிய வெள்ளாடு, மலைநாட்டிற்கு வந்தேறி, பிறகு வேலிதாண்டி தமிழகம் வந்து ஆக்கிரமித்த வடுக ஓடுகாலிகள் இன்று ஊர்வலமாய் சென்று நம்மை நம் இனத்தவரிடமே பொய்ப் பிரச்சாரம் செய்வதன் வாயிலாக உணரப்படும் உண்மை.
---- நன்றி. நெற்குப்பை காசிவிசுவநாதன்.