Saturday, 31 December 2016

ஆயாவின் ஆத்தா வீட்டு பிள்ளையார்நோன்பு நினைவுகள்



எங்கள் ஆயாவிடம் தன் சிறுவயது பிள்ளையார் நோன்பு அனுபங்களை கேட்ட பொது அவர் குழிபிறையில் தன் ஆத்தா விட்டு அனுபவங்களையும் தன் அம்மான் விராச்சிலை மு.பழ வீட்டின் அனுபவங்களையும் அன்று செய்த வழக்கத்தையும் சொன்னார் அவற்றின் தொகுப்பே இது.

கார்த்திகை தீபத்திருநாளில் இருந்து இருபத்தியொரு நாட்கள் நோன்பு இருந்து அதாதுவது கார்த்திகை மாதம் அமரபக்ஷம் துவங்கி மார்கழி மாதம் பூர்வபக்ஷம் சஷ்டி திதியும் சதயநட்சதிரம் கூடி வரும் நாள் வரை புல்லால் உண்ணாது காலையும் மாலையும் நீராடி மாலையில் விளக்கேற்றி வைத்து புது கொடிவேட்டியில் இருந்து தினம் ஒரு நூல்இழை எடுத்து வைத்து சேகரித்து வருவராம் . அந்த 21நாட்களில் ஒரு நல்ல நாள் பார்த்து விராசிலையில் இருந்து தன் வீட்டிற்கும் தன் ஐயா அல்லது அம்மான் மூணு படி பச்சருசி , வெள்ளம் , பசுநெய் உடன் 21ரூபாய் பணம் இவைகளை வைத்து வண்டிகட்டிக்கொண்டு அல்லது (பிளசரில் )சின்னக்காரில் வந்து கொடுத்துச் செல்வார்களாம். அன்று மதியம் மரக்காய்கறிகள் கொண்டு பிறந்த வீட்டு சீதனம் கொண்டு வந்தவர்களுக்கும் விருந்து படைபார்கலாம். 21ஆம் நாள் காலை அல்லது முதல் நாள் வீடு வாசல் எல்லாம் தூய்மைபடுத்தி .வீட்டு வாயிலில் மங்கலமாய் கோலமிட்டு மாவிலை தோரணம் கட்டி வைத்தும். முதல் நாள் இரவோ அல்லது காலையிலே பலகாரங்கள் செய்ய மாவுக்கும் ஊறவைத்து அவற்றை பக்குவமாய் அரைத்து எடுப்பார்களாம்.அவர்கள் சிறுபிள்ளையாக இருக்கும் பொது வீட்டில் நோன்பன்று சீடை , தேன்குழல் , மவோலம் ,சீப்புசீடை ,சுண்டக்கடலை , வெள்ளைப்பணியாரம்,உளுந்துவடை ,கல்கண்டு வடை , கருப்பட்டி பணியாரம் , சீயம் ,கொழுக்கட்டை ,மாவிளக்கும் , பொரியுருண்டை ,கடலையுருண்டை ,எள்ளுருண்டை இவைகளை செய்து வைப்பார்கலாம். அதிகமாக செய்தாலும் எல்லாம் ஒற்றைப்படை 3,5,7,9என்ற எண்ணிகையில் தனியாக எடுத்து வைப்பார்களாம் .இவ்வளவு பலகாரங்களையும் ஆளுக்கும் ஒருவராக ஒன்றாக கூடி வீட்டில் உள்ள அனைவரும் பகிர்ந்து செய்வார்களாம் . அதுமட்டும் இல்லாது வீட்டில் மண்பானை ஓட்டில் மண்கொட்டி வீட்டிலேயே 5வகை (நெல் ,அவள்,சோளம் ,கம்பு ,எள் )பொரிகளையும் பொரித்து எடுப்பார்கலாம்.சாமிவீட்டின் உள்ளோ அல்லது வளவிலோ பச்சருசி மாவால் நடுவீட்டுக் கோலமிட்டு அதன் மீது பூ ,பழம், பலகாரங்கள் , விளக்கு ,பிள்ளையார் இவைகளை வைத்து தயார் செய்வார்களாம் .



விநாயகருக்கும் அருகில் இருகுச்சியில் ஆவாரம்பூ , கன்னுப்பிள்ளை பூ ,நெல்கதிர் இவைகளை ஒரு செண்டாக கட்டி விநாயகருக்கும் இருபுறமும் வைப்பார்களாம் . இதற்கும் அர்த்தம் விநாயகர் ஆவாரம் பூ காட்டுக்கும் இடையில் இருப்பதாகவும் இப்படி உள்ள உள்ள விநாயகர் வழிபடுதல் நன்மை பயக்கும் .ஆவாரை,கன்னுப்பிபிள்ளைபூ இவைகள் மருத்துவ குணம் கொண்டது .நெற்கதிர்கள் நாம் உண்ணும் உணவு பொருள் இவற்றை விநாயகருக்கும் சார்த்தி வழிபடுவது சிறப்பு ஆவாரைப் பூ 21 இதழ்கள் கொண்டது .அதன் மடல்கள் மேல் நோக்கி உள்ளதால் வாழ்வில் நாம் மேல்நோக்கி செல்ல வேண்டும் என்பதை குறிக்கும் வகையிலும் . இந்த ஆவாரை கொண்டு விநாயகரை அர்சித்து வழிபட்டால் துன்பங்கள் நீங்கு என்பதான்லும் . இந்த செண்டுகள் விநாயகரின் அங்குசம் போன்று இருப்பதால் இதை வைத்து வழிபாடுசெய்கிக்றோம் என்றார் . இந்த பூசையில் வைக்க வெள்ளிப் பிள்ளையார் திருமணத்தின் பொது பெண்வீட்டில் குடுப்பதை வைத்து எடுப்பார்கள் .சிறிது பூ , அருகம்புல் சார்த்தி வழிபடுவார்கலாம். முன்பு பொரி கிண்ணம் திருமணத்தின் பொது பெண்வீட்டார் வெள்ளைப்பித்தாளை ,வெண்கலம் ,வெள்ளி போன்றவைகளில் செய்து வைப்பது வழக்கம் அந்த பொரிகிண்ணத்தில் பொறித்த பொறிகளை விநாயகர் முன்வைபார்க்கலாம்.





மாலைப்பொழுதின் துவக்கத்தில் வீட்டில் பெரியவர்(ஐயா) ஒரு தடுக்கும் போட்டு அதன் மீது அமர்ந்து 21நாட்கள் சேகரித்து வைத்த நூல்இழைகளை எடுத்து திரட்டு பாலுடன் நெய் கலந்து கொண்டு செய்த கலவையில் நூல்இழைகளை மத்தியில் வைத்து பிள்ளையாராக வீட்டில் உள்ளவர் எண்ணிகையை கணக்கில் கொண்டு ஒற்றைபடையில் பிடித்து வைக்கப்படும். பிடித்து வைத்த சிறுபிள்ளையார்களையும் இங்கு பிள்ளையார் முன்பு வைத்து குத்துவிளக்கேற்றி வைத்து உடன் ஒரு பிள்ளையார் விளக்கேற்றி வைத்து தேங்காய் உடைத்து பின் வீட்டில் இருக்கும் பெண்கள் அங்கு அருகில் உள்ள சுவற்றில் தும்பு பிடிப்பார்கலாம். பின் எல்லோறோம் ஒன்றாக சேர்ந்து அமர்ந்து ஔவையார் இயற்றிய விநாயகர் அகவல் , கோளாறு பதிகம் , தங்களுக்கும் தெரிந்த விநாயகர் பாடலை படித்து வழிபடுவர் உப பாடல்களையும் படிப்பதும் உண்டாம். படித்து முடித்து சங்குஊத்தி தீபம் பார்ப்பார்கலாம். பின் வீட்டின் பெரிய ஐயா தலையில் விருமாப்பு கட்டி கொண்டு கிழக்கு அல்லது வடக்கு பார்த்து தடுகின் மீது அமர வீட்டில் பெரியார் முதல் சிறியவர் வரை ஒருவர் பின் ஒருவராக அவர்முன் விழுந்து வங்கி திருநீறு பெற்று தீபம் ஏற்றப்பட்ட இழையை விநாயகரை நினைத்து அணையாமல் அப்படியே வாயில் இட்டுக் கொள்வார்களாம். 



அப்படி வீட்டில் யாரேனும் கருவுற்று இருந்தால் தாய்க்கும் ஒரு இழையும் பிள்ளைக்கும் ஒரு இழையும் கொடுப்பார்களாம் . இழை எடுத்து கொடுக்கும் ஐயா முதலில் ஒரு இழையை எடுத்துகொள்வார் அதன் பெயர் பிள்ளையார் இழை .இப்படி நாம் சுடருடன் இழையை உட்கொளுவதன் தத்துவம் " ஒளி வடிவான இறைவனை நமக்குள்ளே எழுந்தருளச் செய்யும் செயல் " என்பதை நாம் செய்கிறோம் . 


இப்படி எல்லோரும் இழை எடுத்தும் கருபட்டிபணியாரம் , முதலிய நிவேதனப் பொருட்கள் பிரித்து தருவார்களாம். அதில் அந்த மாவிளக்கு ஏற்றி பகுதி கருகிஉள்ளது யாருக்கும் என்று போட்டி போட்டுக்கொள்வார்களாம் . அடுத்த நாள் மாலை வீட்டில் விநாயகர் அருகில் வைத்திருந்த ஆவாரை செண்டுகளை அருகில் உள்ள கோயிலில் உள்ள விநாயகர் முன்பு தட்டி காண்பித்து விட்டு அதை அந்த விநாயகர் கோவிலின் ஓடுக் கூரையின் மீது போட்டுவிட்டு வீடு திரும்புவராம். பிள்ளயார் நோன்புக்கும் பலகாரங்கள் சீடை , கைமுறுக்கு செய்கையில் யார் முதலில் கைமுறுக்கு சுற்றுகிறார்கள் , சீடை உருட்டுகிறார்கள் , யார் வேகமாக அழாகா பூ தொடுகிறார்கள் என்ற போட்டி எல்லாம் பிள்ளைகள் மத்தியில் அவர்கள் வீட்டில் வைத்துக்கொள்வார்களாம் .இப்படி ஆயா தன் சிறுவயது பிள்ளயார் நோன்பு பற்றிய செய்தியை பகிரையில் மிகுந்த உற்சாகத்துடன் பூரிப்புடன் சொல்லிமுடித்தார் .

-.தெக்கூர் கரு.கண.இராம.நா.இராமு

மூதாதையர் வழிபாட்டில் உள்ளே வரும் நந்திகள்

 


 



we had  saw thi sletter pad content came in circulation in facebook . we got feel that something worth  to show this content here . we had typed content also here

மூதாதையர் படைப்பு என்பது, மரபு வழியில் வந்த குழந்தைகள், குடும்பத்தினர்கள் மட்டுமே கலந்துகொள்வது. பிறர் யாரேயாயினும் - நாட்டின் மன்னரே ஆயினும் அனுமதியில்லை. மூதாதையர் படைப்பு வீட்டு உரிமைகள், முறைப்படி மரபு வழி வந்த வாரிசுகள் மட்டுமே முடிவு செய்ய முடியும். அதற்கு கோயில் மாலை வாங்கி வந்த மரபு வழி மணமக்களும், அவர்தம் குழந்தைகளுமே உரிமைகொள்ள முடியும், உரிமையம் உண்டு.


படைப்பு வீடு என்பது அசையாத சொத்து, அதனை உரிமைகொள்ள வாரிசுதாரர் என்பதாக மட்டுமே அடையாளம் காட்டி உரிமை கோர முடியாது. காரணம் மரபுவழி பண்பாட்டு நெறிமுறைகளுக்கும் அதன் உரிமைகளுக்கும் உகந்த சட்ட நியாயம் உண்டு. அது சிறுபான்மை / பெரும்பான்மை என்று விகிதாச்சாரம் பார்ப்பதில்லை. மாறாக தொன்று தொட்ட நெடிய மரபுவழிப் பழக்க வழக்கங்கள் / பண்பாட்டுப் பதிவுகள் ஆகியவற்றிற்கு அந்த அந்த மரபு சார் நெறிகளை பேணிக் காத்திட ஏழையேயாயினும்.....!!!! அவர்களுக்கான சட்டப் பாதுகாப்பு உண்டு. இன்றளவும் உள்ளது.
ஆகவே நானும் மகன்தான் / நானும் மகள்தான் என்று இந்திய அரசியல் சட்டம் / இந்திய அரசியல் சாசனம் என்று பிதற்றி / கைத்தடி வைத்து மிரட்டி வரும், நகரத்தார் மரபு சாராத -- யாரேயாயினும், மன்னரேயாயினும், கோவிலில் கொலு கொண்ட கடவுளேயாயினும், மரபு வழி மூதாதையர் வழிபாட்டில் தலையிட / உரிமைகொண்டாட / பட்டயம் பங்கு வைக்க, பூசனைப் பொருட்களை தொடுவதற்கும் கூட அருகதையோ / உரிமைகளோ அற்றவர்களே. இத்தனை பாதுகாப்பு இருந்தும், பங்காளிகள் பெரும்பான்மையானவர்கள் தங்களின் முப்பாட்டன் / முப்பாட்டி என்ற வகையில் மரபு மீறி நகரத்தார் அல்லாதவர்களை அழைத்து வந்து , வீட்டில் பிறந்தவர்களை ஒதுக்கி -- பூசனை செய்வதோ ?? அல்லது பூசைகள் செய்வதோ ?? எந்த வகையிலும் முறைமையற்றது.

இதனைத் தட்டிக் கேட்க தனியொரு மரபுவழி வாரிசு ஒருவர் இருந்தாலும் மறுப்புத் தெரிவிக்கலாம். அவர்களை ஏனைய பெரும்பான்மை நகரத்தார்கள், வெளியுலகத்திற்கு தெரியாமலே ஒடுக்குவதும் / இணங்க முனைவிப்பதும் மனித உரிமை மீறலும், மரபு வழிப் பண்பாட்டு உரிமை ஒடுக்கலும் ஆகும். இது குறித்து பங்காளிகள் நகரத்தார் அல்லாதவர்களுடன் சரிக்கட்டி செல்லும் எண்ணத்தாலும், உள்ளூர் பங்காளிகள் பணம் / அரசியல் / கைத்தடி / செல்வாக்கு என்பதற்கு பயந்தது ஒதுங்குவதாலும், பாதிக்கப்பட்ட முறையான மரபுவழி வாரிசுகள் தங்கள் உரிமைகளை நிலை நாட்ட ஒன்பது கோயில் நாட்டுக்கோட்டை நகரத்தார் நிர்வாகிகளுக்கும் முறையாக சொல்லி உரிமைகளை நிலை நாட்டலாம். இது குறித்து மூதாதையர் படைப்பு வீட்டில் வெளியார் - நகரத்தார் மரபு சாராத யாராவது தலையிட்டால் அவர்கள் குறித்த பயத்தினால் ஒன்பது கோவில் நகரத்தார் நிர்வாகிகளை அணுகும் பயம் உள்ள ஏழை எளிய நகரத்தார்கள் குறித்து, அந்த ஊர் அல்லது, வெளியூர் நகரத்தார்கள் பக்கத்து ஊர் நகரத்தார்கள், ஒன்பது கோயில் நகரத்தார்களுக்கு முறையீடு செய்யலாம்.
மேற்படி அனைத்தும் பற்பல நகரத்தார்கள் சில-பல வட்டகைகளில் அனுபவித்து வரும் மிக நுணுக்கமான / அரட்டல் மிகுந்த நெருக்கடிகள் ஆகும்.

ஊர் கூடித் தேர் இழுக்க வேண்டும். மரபுவழிப் பிள்ளைகளால் மட்டுமே மூதாதையர் படைப்பு நடத்தப்பட வேண்டும். இது தமிழர் மரபு / நாகரிகம் ஆகும்.



வேணும் அருள்மிகு நித்ய கல்யாணி உடனாய கைலாச நாதர் துணை,

மேல வட்டகை மெய்கண்டான்.

பிள்ளையார் நோன்பு வரலாறு

நகரத்தார்களின் மிக முக்கியமான நோன்பு பிள்ளையார் நோன்பு. இந்த நோன்பு நகரத்தார்களுக்கு மட்டுமே உரித்தான தனித்தன்மை வாய்ந்தது.இதுகுறித்து சொல்லப்படும் வய்மொழிகதைகள் மற்றும்  சில வரலாற்று வய்மொழி கதைகள்.



நோன்பு பற்றிய வாய்மொழி வரலாற்று கதை 1

நகரத்தார்கள் வாணிபத்தின் பொருட்டு கடற்பயணம் மேற்கொள்வர்.
ஒருமுறை சில நகரத்தார்கள் ஒன்று கூடி காவிரிபூம்பட்டினத்தில் இருந்து பயணத்தை மேற்கொண்டனர். அப்பொழுது கார்த்திகை தீபத் திருநாளன்று கடலில் சூறாவளி காற்று ஏற்பட்டு கப்பலின் திசை மாறி நிலப்பரப்பை அடைய முடியாமல் சிக்கித் தவித்தனர். தாங்கள் வணங்கும் மரகத பிள்ளையாரை நினைத்து தங்களைக் காக்கும்படி வேண்டினர்.


அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் நாட்களை கணக்கிடுவதற்காக தங்கள் வேஷ்டிகளில் இருந்து ஒரு நூலை எடுத்து பத்திரப்படுத்தினர் . 21 நாட்கள் கழிந்ததும் அவர்கள் ஒரு தீவின் கரையை அடைந்தனர். அன்று சஷ்டி திதி, சதய நட்சத்திரம் கூடிய சுப தினம். தாங்கள் உணவிற்காக பயணத்தில் கொண்டு வந்த அரிசி மாவு, நெய், வெல்லம், முதலியவற்றை கலந்து பிள்ளையார் போல் பிடித்து வைத்து 21 வேஷ்டி நூல்களையும் சேர்த்து திரி போல் செய்து அந்த மாவு பிள்ளையரில் ஏற்றினர். அத்தீவில் கிடைத்த ஆவாரம் பூவைக் கொண்டு பிள்ளையாருக்கு அர்ச்சித்தனர். அவர்கள் மீண்டு வந்து காவிரி பூம்பட்டினத்தை அடைந்து, தங்கள் சமூகத்தினரிடையே நடந்தவற்றை எல்லாம் விவரித்தனர். தங்கள் மக்களில் பெரும்பாலோரைக் காப்பாற்றிய மரகத பிள்ளையாரை ஒவ்வொரு வருடமும் கார்த்திகை தீபத் திருநாளில் இருந்து 21 ஆம் நாள், சஷ்டியும் சதயமும் கூடும் நாளில் ஆவாரம் பூவும் அரிசி மாவு பிள்ளையாரும் புத்தம் புது வேஷ்டியின் நூலில் செய்யப்பட்ட திரியைக் கொண்டு விளக்காக ஏற்றி தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் காக்குமாறு பிள்ளையாரை வேண்டுகின்றனர். பின்னர் அந்த மாவு பிள்ளையாரை உண்டு மகிழ்வர்.

ஆடவர்களால் முதன்முதலில் துவக்கப்பட்ட இந்த நோன்பு இன்றளவும் வீட்டின் தலைமகன் எடுத்துக் கொடுக்க மற்றவர்கள் இறைவனை வேண்டி அவ்விளக்கினை பெற்று உண்பர். வேலை நிமித்தமாகவோ வேறு காரணத்தாலோ ஆண்கள் வீட்டில் இல்லை என்றாலும் ஒரு வயது ஆண் குழந்தையாக இருந்தாலும் அந்தக் குழந்தையின் கைகளில் இருந்து பெண்கள் விளக்கினை பெற்று கொள்வர்.

நோன்பு பற்றிய வாய்மொழி வரலாற்று கதை 2

நகரத்தார் வணிகர்கள் என்பது எல்லாருக்கும் தெரியும் .
வணிகர்கள் சமணர்களாய் இருந்ததாக வரலாறு சொல்லுகிறது
அக்காலத்திலே சமண மதம் கொள்கைகைகளை வலியுறுத்துகிறதே தவிர சமண மத்தினாக வாழ வேண்டும் என்று சொல்லவில்லை .

சமண மத சடங்குகளில் இன்னமும் சில வற்றை நாம் கடை பிடிக்கிறோம் . உதாரணமாக மங்கள அமங்கள் நிகழ்வுகளில் தென்னை ஓலையினால் ஆனா தோரணத்தயை கட்டுதல் சாத்தப்பன் ,சாதுவன் என்ற பெயர் போன்றவை ஆகும் .






சமணம் குறைந்து சைவம் வளர்ந்த காலத்தேமுதலில் மன்னர்கள் ஏழாம் நூறாண்டுமுதல் சைவர்கள் ஆனார்கள்மன்னர் எவ்வழியோ மக்களும் அவ்வழியே என்பது நம் வழக்கம் .நாமும் சைவர்கள் ஆனோம்
நமது குரு ஆனவர் இருபத்தி ஒரு நாள் விரதம் இருந்தது தான் சைவர் ஆக வேண்டும் என கட்டளையிட்டார்.அவ்வாறு  நாமும் பெரிய கார்த்திகையிலிருந்து  இருபத்தி ஒரு நாள் விரதம் இருந்தது தான் சைவர் ஆனோம்.

இந்த இருபத்தி ஒரு நாளை கணக்கிட இருபத்தி ஒரு நூல் இழைகள் எடுத்து வைத்தோம் பின் இவற்றை ஒன்றிணைத்து திரட்டுபாலின் மத்தியில் வைத்து இழையாக்கி தீபம் ஏற்றி திருவண்ணாமலையானை உள்ளுனர்வதாக /உட்கொள்ளுவதாக கொண்டு இழைகள் எடுத்து கொள்ளுகிறோம்.

சைவத்தின் முதற் கடவுளாகக் ஏழாம் நூறாண்டுமுதல் கருத பெற்ற பிள்ளையார்க்கு நோன்பு இருந்து இழைகள் எடுத்து கொள்ளுகிறோம்.
நோன்பு ஆடம்பரம் இன்றி பெரிய கார்த்திகையிலிருந்து இருபத்தி ஒன்றாம் நாள் சஷ்டியும் சதயமும் கூடும் நாளில் அந்த சமயத்தில் கிடக்கும் எளிய மலர்கள் ஆகிய ஆவாரம் பூ போன்றவற்றை கொண்டு, நெய்யுடன் பிசைந்த மாவிளக்கில்இழை சேர்த்து

எல்லாவகை பொறி , எள்ளுருண்டை கடலை உருண்டை பணியாரம் திரட்டுப்பால் வெகுநாள்கள் கேட்டு போகாதகருப்பட்டி பணியாரம் செய்து படைத்து பிள்ளையாரை போற்றி வழிபடுவது வழக்கம் .இதை இன்றுவரை கைவிடாது நாம் செய்துவருகிறோம் .

நோன்பு பற்றிய வாய்மொழி வரலாற்று கதை 3

காவிரிப்பூம்பட்டினத்தில் நகரத்தார்கள் வசித்து வந்தபொது ஒரு செட்டியாரும் அவர் மகள் தெய்வானையும் வாழ்ந்து வந்தார் .செட்டியாரின் மனைவி சிவலோகப்பதவி அடைந்து விட்டார் .செட்டியார் தன் மகள் தெய்வானைக்கும் திருமணம் பேசத் துவங்கினார்.அவர் மகளுக்கும் சரிவர வரன் அமையவில்லை   அவருக்கும் அதுவொரு வருத்தம் . சுற்றத்தார் அவருக்கும் அறுதல் கூறினர் . தெய்வானைக்கும் வயது கம்மியாகத்தான் உள்ளது. கலங்காதே என்ற ஆறுதல் கூறினார் .உன் மகள் திருமணத்திற்கும் பின் உன்னை பார்த்துகொள்ள ஆள்வேன்டாமா அதானால் நீ ரெண்டாம் திருமணம் செய்துகொள் என்று அறிவுரைகள் கூறினர் .

சில ஆண்டுகள் மீதும் ஓடின அப்போது செட்டியார் வரண்தேடிய போதும் கிடைக்கவில்லை . அவர் காதுக்கும் அரசல்புரசலாக சில செய்திகள் வந்தன செட்டியாருக்கும் ஒரே மகள் வேறுயாரும் இல்லை செட்டியாரும் தனிக்கட்டை சரியாக திருமணத்திற்கு பின் முறைகள் செய்வாரா என்று யோசித்து பெண்ணை திருமணம் செய்துகொள்ள தயங்கினர் என்பதை தெரிந்து கொண்டார் .செட்டியார் தன் மகளிடம் உறவினர்கள் சொல்லியத்தை அழைத்து சொன்னார் அப்போது அவள் தன் வாழ்கையை மனதில் கொண்டும் தன் தந்தையின் இரண்டாம் திருமணத்திற்கு சம்மதம் சொன்னாள்.

செட்டியாருக்கும் திருமணம் ஆனது .புதியதாக வந்த சின்னதாலும் வீட்டில் உள்ளவர்களை நான்றா பார்த்துக்கொண்டாள். ஓர் ஆண்டு சென்றது .பின் தனக்கு ஒரு பிள்ளை பிறக்கவில்லை என்று எண்ணி வருந்தினாள் அதற்கும் காரணம் தெய்வானையென நினைத்து அவளை படாத பாடு படுத்த துவங்கினாள் .பலமுறை அவள் தெய்வானையை கடிந்து கொண்ட போதெல்லாம் செட்டியார் சமாதானம் செய்துவைப்பார். செட்டியார் தன் புதுமனைவியை கடிந்து கொள்ளாமல் பொறுத்துக் கொண்டு இருந்தார் .தன் மகளுக்கும் திருமணம் பேசத்துவங்கினார் இப்பொது தெய்வானையின் சின்னத்தாவிற்கும் பயந்து யாரும் பெண்ணெடுத்துக் கொள்ள தயங்கினர் .
தெய்வானையை எப்படியாவது வீட்டை விட்டு வெளியேற்றிவிட வேண்டும் என்று எண்ணி எல்லா வீட்டு வேலைகளை எல்லாம் செய்யச் சொல்லி துன்புறுத்தினாள்.அவளும் எதுவும் சொல்லாமல் சரியென்று இசைந்து செய்துவந்தாள். அன்று திருக்கார்த்திகையின் முதல் நாள் தெய்வானையின் சின்னதா எண்ணெய் தேய்த்து தலைமுழுக சென்றால். அப்படி அவள் செல்லும் பொது அவள் அணிந்திருந்த வைரத்தொடையும் வைர மோதிரத்தையும் இராண்டான் கட்டில் உள்ள பட்டசாலையில் ஒரு தூணுக்கு அருகில் வைத்துச் சென்றாள்.

அவள் குளித்து விட்டு வந்து பார்த்த பொது அங்கு வைத்திருந்த வைரமோதிரம் காணமல் போனது .அது தெய்வானையின் அம்மாவுடையது .அதை சின்னாத்தாள் அணிந்து கொண்டிருந்தார். இப்பொது இந்த வைரமோதிரம் காணாமல்போனதும் இதை தெய்வானைதான் திருடிவிட்டால் என அவளை திட்டித்தீர்த்தாள்.இதை பொறுக்காமல் அவளும் அலுதுபுலம்பினால் .மறுநாளும் சின்னதா விடவில்லை பெரியனாலும் அதுவுமாக இவர் வாயிலா விழுவது என்று மாலை பூசை முடிந்துதும் அழுதுகொண்டே வீட்டை விட்டு வெளியேறினாள் தெய்வானை .



தான் செய்யாத தவறுக்கா இப்படி துன்பத்தை அனுபவிப்பதை விட உயிரவிட்டுவிடலாம் என்று எண்ணி விட்டை விட்டு வெளியில் வந்தவள் வழியில் மரகதவிநாயகரை கண்டு வழிபட்டு தனது குறைகளை அழுது கொட்டி முறையிட்டால் பின் இங்கு விநாயகர் சன்னதியில் உண்ணா நோன்பிருந்து தன் உயிரை விட முடிவெடுத்தால் .அப்படி அவள் செய்ய முற்படும் பொது தெய்வானையின் தந்தை செய்தி அறிந்து தன் மகளை சமாதானம் செய்து அழைத்து செல்ல முற்பட்டார் .கோயில் குருக்களும் சேர்ந்து சமாதானம் செய்து பார்த்தார் . தெய்வானை தொலைந்த மோதிரம் கிடைக்கும் வரை நன் உண்ணாமல் நோன்பு இருப்பேன் இங்கிருந்து வரமாட்டேன் என்று அழுத்தமாக இருந்தால் . சரி நான் தினமும் விநாயகருக்கும் பூசை வைக்க வரும்போது வீட்டில் இருந்து சிறிது தினையும் தேனும் உடன் நெய்யும் கொண்டுவருகிறேன் அதை மட்டுமாவது உண் என்றார் குருக்கள்.சரியென்று சம்மதித்தால் தெய்வானை .
குருக்கள் தேன் ,திணை ,நெய் கொண்டுவந்து கொடுத்தார் தினமும் பூசைக்கு வரும்போது காலையில் தெய்வானையிடம் தருவார் .தெய்வானை தினமும் விநாயகரின் வேட்டியில் இருந்து தினம் ஒரு நூலாக எடுத்து திரியாக திரித்து விளக்கேற்றிவைத்து குருக்கள் கொடுத்த நெய் ,தினையும் தேனையும் கலந்து விநாயகருக்கும் படைத்தது வழிபட்டு பின் உண்டால் இப்படியே 21நாட்கள் சென்றன அன்று மாலை விநாயகர் சன்னதியில் இருந்து கருப்பு எறும்பு (பிள்ளையார் எறும்பு ) சாரைசாரையாக வெளியில் வந்தன .


இவற்றை கண்டு குருக்கள் பின் தொடர்ந்தார் .அப்போது அவை தெய்வானையின் வீட்டுக்குள் சென்ற இவற்றை செட்டியாரும் பார்த்து பின் சென்றார் . எறும்புகள் இரண்டாம் கட்டுக்குள் தெய்வானையின் சின்னதா நகைகள் கழற்றி வைத் தூண் அருகே துளையிட்டு உள்ளே சென்ற இதை கண்ட செட்டியார் .அங்கு வேலையாளை விட்டு தோண்டச்சொன்னார் அப்போது அங்கிருந்து சில எலிகள் ஓடின பின் சற்று தொண்டிபார்தல் அங்கு காணாமல் போன மோதிரம் இருந்தது .

இதை கண்ட செட்டியார் , தெய்வானையின் சின்னதா , குருக்கள் மூவரும் அதிசயித்து மெய்மரந்தனர். சின்னதா தான் செய்த தவறை நினைத்து மனம்திருந்தி கண் கலங்கி அழுதால் . பின் வீட்டில் இருந்த மூவரும் கோவிலை நோக்கி சென்றனர் . உடன் இந்த செய்து அங்கிருந்த மக்கள் மத்தியில் பரவி அவர்களும் அந்த பெண்ணை பார்க்க சென்றனர் . தெய்வானையை பார்த்தது அவளுது சின்னதா ஓடி வந்து கட்டிக்கொண்டு அழுதால் தான் செய்த தவறை மன்னிக்கசொல்லி கேட்டால் தெய்வானையை தன் மகளாகா நினைத்து தனக்கு பிள்ளை இல்லை என்ற குறையில் இருந்து விடுப்பது தெய்வானையை சொந்தமகளாகவே நினைத்து வீட்டுக் அழைத்து சென்றால் . இதை கண்ட மக்களும் சாதாரண ஒரு பெண் இப்படி நோன்பிருந்து இதை நாட்கள வழிபட்டு இத்தகைய பலனை பெற்றதை பார்த்து அவர்களும் தங்கள் இல்லங்களில் இந்த நோன்பை அனுசரித்து வழிபட்டனர்.இப்படி அவர்கள் வழிபட அவர்களுக்கும் தாங்கள் எண்ணியது ஈடேறி குடும்ப ஒற்றுமை மேலோங்கியது . தெய்வானை அனுசரித்த அந்த 21 நாட்கள் திருக்கார்த்திகையில் இருந்து 21 அதாவது சஷ்டியும் சதயமும் கூடும் நாளில் தொலைந்த வைரமோதிரம் கிடைத்தது. இதையே இன்று நாம் கொண்டாடும் பிள்ளயார் நோன்பு.


இங்கு சில நாட்கள் முன்பு பிள்ளையார் நோன்பு பற்றி இளையதலை முறைகும் கூறுவோம் என்று எழுதிய பதிவு , 6௦ ஆண்டுகள் முன்பு பிள்ளயார் நோன்பு கொண்டாடிய விதம் பற்றிய பதிவுகள் செய்திருந்தோம் அதன் தொடர்சியாக சிலர் பிள்ளயார் நோன்பு உருவான காரணம் பற்றி வினவினர் . பிள்ளையார் நோன்பு குறித்து கூறப்படுகிற மூன்று விதமான வாய்மொழியாக சொல்லப்படும் வராலாற்று கதைகள் இவையே .

---------------ஆ.தெக்கூர்.இராம.நா.இராமு

Sunday, 11 December 2016

கார்த்திகை புதுமை :


நகரத்தார்கள் அனைவரும் சைவர்கள் . சிவனையும் முருகனையும் இருகண்கள் எனப் போற்றி வழிபடுகிறவர்கள் . அதிரை நட்சத்திரம் சிவனனுக்கு உரிய நட்சத்திரம் என்பதால் சிவனைக் கண்டவுடன் உமையாளையும் காணவேண்டும் என்ற காரணத்தாலும் மார்கழி மாதத்தில் பெண்களுக்கு திருவாதிரை என்ற சடங்கு கொண்டாடப் படுகிறது .




கார்த்திகை நட்சத்திரம் முருகனுக் உரியது .முருகன் தமிழ்க் கடவுள் என்பதாலும் வீரத்தில் சிறந்தவன் என்பதாலும் அவனைப் போற்றி கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் கார்த்திகைப் புதுமை என்னும் விழா நம் நகரத்தார் குலத்துதித்த ஆண்மக்களுக்கு செய்தனர் . 



இளமையிலேயே ஆண்குழந்தைகளுக்கு வீர உணர்வை ஊட்டவும் முருகனைப் போன்ற அழகும் ,வீரமும் உடைய தங்கள் ஆண் மகனை ஊராருக்கு அறிமுகப்படுத்தவும் திருமணத்திற்கு வயது வந்த  ஆண் மகன்  எங்கள் இல்லத்தில் உள்ளான் என்பதை இந்த நிகழ்வு மூலம் அறிமுகபடுத்தப்பட்டதாகவும் கொள்ளலாம் . இப்போது இந்த விழா மிக அரிதாகவே நிகழ்கிறது .இது  தற்போது வழக்கொழிந்துவரும்  ஒரு தொன்மையான நகரத்தாரின்  தனித்துவ வாழ்வியல் சடங்குகள் ஆகும்


 

நகரத்தார்கள் தங்கள் வீட்டில் திருமண வயதில் ஆண்மகன் இருக்கிறான் என்பதை சுற்றத்தாருக்கு தெரிவிக்கும் நிகழ்வே இந்த கர்திகைப் புதுமை . இதை சூப்பிடி அல்லது சூழ்பிடி என்று அழைக்கப்படும்.






கார்த்திகைப் புதுமை நாளன்று தங்கள் இல்லத்தில் வாழைமரம் ஒன்றை நாட்டி அதன்மேல் பெரிய அகல் வைத்து பெரிதாக திரி போட்டு வைத்து வாழைமரத்தின் நடுவில் சதுரமாக இரண்டு அடுக்கு அமைத்து  அதில் அநேக தீபம் ஏற்றி வைத்து அந்த வாழைமரத்தை சுற்றிலும் மாக்கோலம் இட்டுவைப்பர் .



  புதுமையின் நாயகனான ஆண்மகனுக்கு  திருமணம் விழாவுக்கும்  அணியும்  நவகண்டி மாலை மற்றும் திருமார்பை அலங்கரிக்கும் மகரி ( மயில் பதக்கம்  )அணிவித்து வைரக்கடுக்கன்போன்ற அணிமணிகள் சூடி தலைப்பாகை தரித்து
பின் அலங்கரிக்கபட்ட குதிரையின் மீது ஆடவனை ஏற்றி மங்கல வாத்தியங்கள் முழங்க குலம்போல் எண்ணெய் விட்டு ஏற்றாத பெரிய அகல் விளக்குடன் தேங்காய் பழங்கள் முதலியவையுடன் சங்கநாதம் முழங்க பிள்ளையார் ஆலயத்திற்கு அல்லது சிவாலயம் சென்று சங்கநாதம் முழங்க செய்து கொண்டுவந்த பெரிய அகல் விளக்கை ஏற்றச் செய்து ஆண் பிள்ளையின் கையில் கொடுத்துப் பிடிகச்செய்து அதில் தீவட்டியை ஏற்றி மணக்கோலத்தில் உள்ள ஆடவன் கையில் கொடுத்து சொக்கப் பனையை கொளுத்திய பின் அது முழுவதுமாக ஏறிந்து முடிக்கும் தருவாயில் அந்த காட்சியை மணக்கோலம் பூண்ட ஆடவனை  தரிசிக்கசெய்வர்.

அதன்பின் ஆலயத்தில் உள்ள விநாயகரை வழிபட்டு பின் நகர சிவன்கோயில்சென்று பரிவார தெய்வங்களுக்கும் அம்மையப்பனுக்கும் அர்ச்சனை செய்து முன் ஆலயம் வந்தது போல் மேளதாளம் சங்கநாதம் முழங்க மணக் கோலத்தில் உள்ள ஆடவன் குதிரையின் மீது அமரச்செய்து வீடு திரும்புவர். வீடு வந்து அடைந்ததும் ஆலம் கரைத்து  சிலேட்டு விளக்கு பிடித்து திருஷ்டி கழித்து மணக்கோல ஆடவனை உள்ளே அழைத்து சென்று படைகின்றன சாமி வீட்டில் அந்த வீட்டுப் பெண் பிள்ளை விளக்கை ஏற்ற செய்து வழிபடுவர் . பின் கோலம் இட்டு அமைத்த ஒற்றை மனையில்  விழாநாயகனை நிறுத்தி பெண்களாக ஒரு சடங்கு நடத்தி புதுமையை நிறைவு செய்து மரபு .



புதுமை என்பது  ஆணுக்கும் பெண்ணுக்கும்  செய்யும்  ஒரு இன்றியமையாத ஒரு  முக்கியமான  சடங்கு ஆகும் புதுமைகள் செய்த  பின் தான்  திருமணம்  நிகழ்த்தப்படும். புதுமை  என்பது அரைக்கலியாணம்  என்று  சொல்லப்படும்

சிலப்பதிகாரத்தில் கண்டேத்தும் செல்வேள் என்ற தொடரும் மாதரார் தொழுதேத்த வயங்கும் புகழ் கண்ணகி என்ற தொடரும் இடம்பெறுகின்றன. இவற்றுள் நகரத்தார் மேற்கொண்ட கர்திகைப் புதுமை திருவாதிரைப் புதுமை விழாக்களின் குறிப்புகள் அடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது .

------------ஆ.தெக்கூர் கண.இராம.நா.இராமு

Wednesday, 30 November 2016

மண்ணுக்கேற்ற மார்க்சீயம் போல மண்ணுக்கேற்ற மதம் என்பதும் வந்துவிட்டது.


மண்ணுக்கேற்ற மார்க்சீயம் போல மண்ணுக்கேற்ற மதம் என்பதும் வந்துவிட்டது. மதத்தைக் கொண்டு உலகாள வேண்டும் என்ற சிந்தனையே தவறு. அது பண்பாட்டை, மரபினை பிறர் மேல் திணிப்பதாகும்.




அதனை தமிழன் தன் இனத்தின் மீதே திணித்ததில்லை.
ஆனால் நமக்கான மெய்யியல் ஒன்று இயக்க நடையில் தன்மாற்றம்
 பெற்று வருவதையும் நாம் உணர வேண்டும்.
இன்று இருக்கும் ஒரு நிலையினை வைத்து அன்று நடந்தவைகளை யூகிக்கவும் முடியாது.



அதற்கும் மேலாக ஆரியன் எதை நம்மிடம் இருந்து திருடினான்,
எதை பட்டா மாற்றினான் என்பதெல்லாம் தகுந்த வாழ்வியல் நடைமுறைகளில் கண்டறியவேண்டும்.

தமிழர்களின் மெய்யியல் அறம்சார்ந்து உளம்சார்ந்து ஏதோ ஒரு வகையில் நம்முடன் பயணிக்கின்றது.




இன்று நமக்குத் தேவை இன அடையாளம், அதற்கான ஓர்மை, அரசியல் வலிமை, மொழி ஆளுமை ஆகியவைகளே. இவைகளை உறுதி செய்தபின்னர் மெய்யியல் விளக்கம் தேடுவது சாலச் சிறந்தது.

நமது பண்பாட்டில் பலவகையான ஊடக தாக்குதல் நடந்த வண்ணம் இருக்கின்றது. நமது குடும்ப வாழ்வியல் முறைகளை வடுகர்கள் கலசம் கலக்கி குழப்பம் விளைத்து சுக்கு சுக்களாக கட்டுடைக்கின்றனர்.





இவற்றிற்கான பாதுகாப்பை உறுதி செய்வோம். அரசியல் வலிமை பெறுவோம். அனைவரும் அமர்ந்து மெய்யியல்,வாழ்வியல் முறைமைகளை சீர்மை செய்வோம். அதுவரை அரசியல் வலிமையே நமது முதன்மை என்பதை உணருங்கள்.


வேணும் அருள்மிகு பொய்சொல்லா மெய்யர் துணை.
நெற்குப்பை காசி விசுவநாதன்.
" வரலாற்றில் விழிப்பு ; எதிர் காலத்தின் மீட்பு "

Monday, 28 November 2016

#மூதாதையர்__வழிபாடும் -- #தென்புலமும்.



தென் புலத்தார் என்பது தமிழர் வாழ்வியலில் மூதாதையர் அல்லது 

இறந்தோர் என்பதே பொருளாகும். 

 தமிழர் வாழ்வியலும், வாழ்முறையும் நிலம் சார்ந்த ஒன்று. 



அந்த வகையில், ஒவ்வொரு ஊரின் தெற்கேயும் ஈம முறைமைகள் செய்வதற்கான புலம் (இறந்தவர்களுக்கான இடம் ) தெரிவு செய்யப்படும். அதுவே இடுகாடு / சுடு காடு என்பதாகும் . 



தமிழர்களின் ஒவ்வொரு ஊரின் தெற்கு எல்லையிலும் இவை இருக்கும் .
 ( TOWN PLANNING OF TAMILS ) தெற்கு - தென் திசை என்பது ஒரு வாழ்விடத்தின் -- அந்த ஊரின் தென் பகுதியே ஆகும். அங்கே தங்கள் மூதாதையர் உள்ளனர் என்பதும் ஒரு குறியீடு. தென்புலம் என்பதற்கு வேறு பொருள் இருப்பதாகத் தெரியவில்லை. ஐயன் வள்ளுவர் கடவுள் என்று யாரையும் குறிப்பிடவில்லை. தெய்வம் என்பதே அவர் குறிப்பிடும் சொல். தெய்வம் என்பது வணங்கப்படுவது. 




அதுவே வடமொழி என்று கூறப்படும் பாகத்தில், பாழி , சம்கிரிதம் ஆகியவற்றில் தெய்வம் - தெய்வதா - தேவதா - அதிதேவதா - இஷ்ட தேவதா - தேவா - தேவ் என்பது வரை நீட்சி பெற்றது. இது தவிர இறந்தவர்களுக்கு உடன் செய்யப்படும் கடமைகள் வேறு. இது உடல் அடக்கம், குடும்பத்தினர் ஒன்று கூடல், துயரப் பரிமாற்றம், ஆறுதல் , பண்பாட்டு சடங்குகள் ஆகியவை. 

ஆனால் இறந்தவர்களை நினைத்து ஆண்டுகள் கழித்து செய்யப்படும் திதி முதலிய கிரியையைகள் என்பன தமிழர் வழக்காக இருந்ததில்லை. காரணம் படைப்பு - படையல், மூதாதையர் வழிபாடு ஆகியன வேறு. 

 

புரோகிதரை அழைத்து வந்து இல்லாத ஊருக்கு வழிதேடுவது என்பது வேறு. ஆனால் பலவற்றில் மக்கள் ஈடுபாட்டுடன் பண்பாட்டிலும் நுழைத்துவிட்டனர். இதனை மெதுவாகவே தெளிவிக்க முடியும். அதற்கும் மேலாக சைவ நெறியான சிவஞான போதம் விளக்கவுரை எழுதிய அண்ணல் சிதம்பரனார் திதி கொடுப்பதை எதிர்க்கின்றார். 



அது தேவையற்றது என்றும் திடமாக வாதிடுகின்றார். மக்களின் ஆசை போகும்வரை வேண்டுமானால் ஸ்மார்த்தாவை விடுத்து, ஆதி சைவர்களை வைத்து செய்யலாம் என்ற கருத்தினை முன் வைக்கின்றார். 

27-11-2016 
வேணும் அருள்மிகு பொய்சொல்லா மெய்யர் துணை. 
நெற்குப்பை காசி விசுவநாதன். 
" வரலாற்றில் விழிப்பு ; எதிர் காலத்தின் மீட்பு

Sunday, 27 November 2016

#வங்கித்துறையும் #தமிழர்__ஆளுமையும்.



ஒரு காலத்தில் வங்கித் தொழிலில் பிரிடிஷ் இந்தியாவின் காலத்தில் இருந்து, இந்திரா காங்கிரஸ் எமர்ஜன்சி காலம் வரையிலும் கோலோச்சியவர்கள் தமிழர்களே.

இந்தியர்கள் ஆரம்பித்த வங்கிகளில் அதிகமாக வெளிநாட்டில் கிளைபரப்பிய சாதனை தமிழர்களுக்கு மட்டுமே.
இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, செட்டிநாடு பாங்கிங் கார்ப்பரேஷன், சிலோன் வங்கி, மதுரை வங்கி லிமிடட்ஆகியவை.



 தெற்காசியாவில் கால்பதிக்காத நாடுகள் இல்லை.
பர்மாவில் 1920 களில் சிட்டி சார்ட்டட் பாங்க் எனப்பட்ட இன்றைய சிட்டி பாங்க் ( அமெரிக்கனுடைய அதே வங்கி ) டெல்லி வைசிராயிடம், ஒரு ஒப்புதல் பத்திரத்தையே கொடுத்துவிட்டு தங்கள் வங்கிகளை மூடிச் சென்றனர்.
அதாவது, தமிழ் வணிகர்களான நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் எளிமையான வங்கிப் பரிவர்த்தனை முறைகளும், சிக்கனமான வாடிக்கையாளர் அணுகுமுறையும், அவர்களின் துரித சேவைக்கும் நிகரான வங்கித்துறை சேவையினை எங்களால் கொடுக்க முடியவில்லை என்பதே அந்த சாசனம்.

அதாவது, இரவு பகல் எந்த நேரமும் வங்கியில் பணம் பெறலாம், கொடுக்கலாம் என்ற நிலையினை நகரத்தார்கள் அங்கே ஒழுங்கு முறை செய்திருந்தனர்.

அதற்கும் மேலாக வாடிக்கையாளர்களிடம், எளிய தவணை, அல்லது சேவைக்கான எளிய விலை ஆகியவற்றை நடைமுறையில் கொண்டிருந்தனர். எல்லாவற்றிக்கும் மேலாக வெவ்வேறு சிறு / பெரு நகரத்தார் வங்கிகளில் உள்ள வட்டி விகிதத்தை ஒழுங்கு முறை செய்ய தெரிவு செய்யப்பட்ட நகரத்தார்கள் சங்கத்தில் கூடி வட்டி விகிதத்தை உறுதி செய்வார்கள்.



அதனையே வரைமுறையாகக் கொண்டு அணைத்து வங்கிகளும் நடந்தமையால் அங்கே வட்டி விகிதத்தில் ஏற்ற தாழ்வு அல்லது நெருக்கடி காலங்களில் கடன் நிலுவைக்கான கால அவகாசம் ஆகியவற்றை
நெறிப்படுத்தினர்.

ஆனால் சிட்டி வங்கி 9 டு 5 என்ற அலுவல் நேரம், வட்டி விகிதத்திலும், ஈடு வைக்கும் பொருளிலும் சமநிலை இல்லாமை ஆகியவை கண்டு மக்கள் வரவும் இல்லை. இதனை அடுத்தே அவர்கள் அன்றே கடை கட்டினர்.
மேற்படி ஒழுங்கு முறையே பின்னர் இம்பீரியல் வங்கியும் தனதாக்கிக் கொண்டது.

இன்று தமிழ் நாட்டில் தமிழர்களிடம் ஏதேனும் வங்கிகள் உள்ளனவா ?? ஒன்றே ஒன்று நாடார் சமூக மக்களால் நடத்தப்படும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி மட்டுமே.

காரணம் அவர்களின் ஒற்றுமையும், அந்த சமூகத்தினரின் ஒட்டு வங்கியுமேதான். அந்த அளவில் இன்று தமிழர்கள் வசம் உள்ள ஒற்றை வங்கி அதுமட்டுமே.



மற்றபடி சிறு வங்கிகள் முதல், சிட்பண்ட்ஸ் எனபப்டும் சிறு முதலீட்டு சேமிப்பு முறைகளும் கூட முற்று முழுதாக வடுகர் வசமே.
காரணம் அரசியல் தலைமையும், நிர்வாக எந்திரமும் முற்று முழுதாக வடுகர் வசம்.

முத்தூட் / மனபுரம் போன்ற வடுக நாயர்வகை மலையாளிகள் செழித்து கொழிப்பதற்கு காரணம், இங்கே உள்ள நகரத்தார்கள் சிறு வணிகக் கடன் கொடுத்து வந்த வட்டிக்கடைகள் ஒடுக்கப்பட்டு, அவர்களை அந்த இடத்தில இருந்து அகற்றியதே.

இதனால் சிறு வணிகள் கடன் கொடுத்து வந்த நகரத்தார்கள் அந்த அந்த ஊரில் ஒரு அடகு கடை வைத்து உள்ளூர் மக்களின் ஒத்துழைப்புடன் தங்கள் வருமானம், மற்றும் மீமிகத் தொகையினை குளம் வெட்டுதல், நீர் நிலை பெருக்குதல் என்ற எளிமையான வாழ்க்கை வாழ்ந்தனர்.
அவர்களை 1970 களில் ஒடுக்கியபின்னர் இங்கே மார்வாடிகளும், கடந்த இருப்பது ஆண்டுகளாக மலையாளிகளின் மனபுரம் / முத்தூட் நிறுவனங்கள் உருட்டுக் கட்டை / நாயர் போலீஸ் சகிதமாக கோவணத்தோடு உருவிச் செல்வதை நாம் பார்த்துதான் வருகின்றோம்.

இத்தனைக்கும் ஊடாக , மேற்படி மனபுரம் / முத்தூட் நிறுவனங்களிடம் பொருக்கித் தின்று வரும் மலையாள கம்யூனிஸ்டுகள், தமிழ் நாட்டில் நாட்டுக்கோட்டை செட்டியார்களின் சுரண்டலை ஒழித்துவிட்டோம் பாருங்கள் என்று நம்மிடமே சில்லறை குளுக்குவதையும் கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றோம்.


ஆகவே தமிழர் வசம் மீண்டும் முதலீட்டு நிறுவனங்கள் வரவேண்டும்.
நமக்கு ஊடாக இருந்து நம்மை கட்டுடைப்பவர்கள் யார் என்ற தெளிவுடன் இனி வரும் காலத்தை நாம் எதிர்கொள்ள வேண்டும்.
நன்றி.


அன்புடன்,
வேணும் அருள்மிகு பொய்சொல்லா மெய்யர் துணை.
நெற்குப்பை காசி விசுவநாதன்.
" வரலாற்றில் விழிப்பு ; எதிர் காலத்தின் மீட்பு "

நகரத்தார்களும் வங்கித்தொழிலும்


நகரத்தார்கள் பர்மாவில் இருந்து முடக்கப்பட்டு பின்னர் வெளியேற்றப்பட்டனர்.
இதற்கு பல காரணங்கள் உண்டு.
1. முதலில் தொழிலில் போட்டியிட முடியாத குஜராத்திகளும் - ராஜஸ்தான் மார்வாடிகளும்.


2.அணித்தமாக இருந்த வங்காளிகளை விட தமிழ் வணிகர்களான நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் மக்களிடம் கொண்டிருந்த செல்வாக்கு.
3. சீனர்களும், அமெரிக்க வங்கிகளும் தமிழ் வணிகர்களின் வங்கித்துறையுடன் போட்டியிடாமல் ஒதுங்கி கொண்ட நிலையில் -- பிரித்தானிய அரசிற்கும் நகரத்தார்களுக்கும் ஏற்பட்ட பூசல் (இரண்டாம் உலகப்போர் )

மேற்ப்படி காரணிகளைக் கண்டறிந்து அதற்கு தோதாக விடுதலைபெற்ற பர்மா மன்னருடன், நேரு காங்கிரஸ் கைகோர்த்து செய்யப்பட்ட செயல்வடிவம் கொடுத்து முடிக்கப்பட்டதே நகரத்தார் வெளியேற்றம்.
ஆனால் இன்று நாம் நினைப்பது போல குஜராத்திகளின் வலைப்பின்னல் அப்படியானது அல்ல. குஜராத்திகள் அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் அல்ல. மக்களுக்கு எதிரானவர்கள். ஆகவே தான் மோடி பதவிக்கு வருவதற்கு முன்னரே குஜராத்திகள் வங்கிகள் இந்தியாவை ஆளத்துவங்கி விட்டன.
சுருக்கமாக சொல்லப்போனால் எமர்ஜன்சி காலத்தில் இந்தியாவில் எஞ்சியிருந்த நகரத்தார் வங்கிகளை நாட்டுடைமையாக்கியதும், வங்கிகள் கொண்டு மக்களை சுரண்டுவதற்கும் உள்ள செயல்திட்டம் வெளிப்படும்.
இன்று வங்கிகளை வைத்து நாட்டிற்கு பொருள் ஈட்டுவதை விட வங்கிகளே அதன் உரிமையாளர்களே நாடாள்வது என்ற கருத்தியல் செயல்வடிவம் கொண்டுள்ளதை நாம் உணர வேண்டும்.

27-11-2016.
வேணும் அருள்மிகு பொய்சொல்லா மெய்யர் துணை.
நெற்குப்பை காசி விசுவநாதன்.
" வரலாற்றில் விழிப்பு ; எதிர் காலத்தின் மீட்பு "

Tuesday, 25 October 2016

கலப்பு

தமிழர் இனக்குழுக்களில் ஒருவருக்குள் ஒருவர் திருமணம் செய்துகொள்வதை ஏற்கலாம். ஊக்கப்படுத்தலாம். அது கலப்பு மணம் ஆகாது. காரணம் ஒரே இனம். இனக்குழு மட்டுமே வேறு. 

கலப்பு என்ற சொல்லே இரு வேறு பொருள் / இனம் / ஆகியவற்றின் சேர்மானம் ஆகும். ( ALLOY - a new metal or material ) 



ஆகவே இரு வேறு பொருட்களை சேர்த்தால் அது ஒரு புது வகைதானே தவிர உண்மை இருப்பின் மறு உருவாக்கம் ஆகாது. 

 தமிழர்களிடம் கலப்புறும் வேற்று இனத்தவர்கள் என்றுமே, தங்களின் இனவழி உள்ள மரபுப் பண்பாட்டின் வினையாற்றலை தன்னியல்பாய் கொண்டிருப்பர். 

அதுவல்லாமல் அவர்களின் மரபணு (குறிப்பாக, வடுக மரபணு என்பது என்றுமே அறம் பிறழும் நெறிகளையே தேடும்), அந்த வகையில் என்றுமே நமது மரபு வழிப் பண்புகளை அழுத்தியே நிற்கும். 

இது இயற்கையின் விதி. 

 The Devil will always suppress the Divine.


 ஆகவே வடுக நாயர்களில் பெண் எடுத்தால், தமிழ் ஆண்  மகனுக்குப் பிறந்த பிள்ளைகளை தமிழனாக ஏற்கலாமா ?? என்பதும் 

நாயுடு பெண்ணை அழகாய் இருக்கின்றாள் என்பதற்காக திருமணம் செய்துகொண்டேன் என்று சொல்லும் ஆண்மக்களும் சொல்வதும்... சொல்லவருவதும்.... என்னவென்றால்.....????!!!! 

சைத்தானை திருமணம் செய்துகொண்டேன், எனக்குப் பிறந்த குழந்தையினை தமிழன் என்று சொல்லுங்கள் என்பதாகத்தான் இருக்கும். 

சைத்தானை, சைத்தான் கணக்கில் தான் வைக்க வேண்டும். 

அறம் என்பது வலிமையானது தன்னளவில். அறம் எத்துணை நல்லவைகளைக் கொண்டிருந்தாலும் அது தன்னியல்பில் மிகவும் மென்மையானது, எளிமையானது. 


அது பால் போன்றது. 

அதனுள் சிறு துளி விஷத்தை கலந்துவிட்டு பால்தான் 99.99999999999 % விழுக்காடு உள்ளது என்றாலும், அங்கே அறம் என்பது தன்னிலை திரிந்துவிடும். 

ஆகவே தமிழர்கள், தமிழர்களாய் இருக்க வேண்டும் என்றால் தமிழர் இனக்குழுக்களில் திருமணம் செய்யுங்கள். 

அங்கே தந்தை வழி அடையாளத்தை பிள்ளைக்கு கொடுக்கலாம். 

மாறாக வேற்று நாடு- வேற்று இனம் - வேற்று மொழியில் போய் மேய்ந்தவர்கள் இங்கே கொண்டுவந்து சேர்த்து தமிழன் என்று தலையில் கட்டுவதை நிறுத்துங்கள். 

அப்படியே தமிழ் நாட்டிலேயே வந்தேறிய சிலருடன் கலந்துவிட்டோம், என்று சொல்லுபவர்கள் வெளிப்படையாக திராவிடம் - திராவிடர் - கலப்பினத்தவர் என்று வகைப்படுத்திக் கொண்டு தள்ளி நில்லுங்கள். 

தந்தை வழி அடையாளம் என்பதெல்லாம் உலகின் பல்வேறு இனங்களில் உள்ள உட்பிரிவுகளில் மட்டுமே நடப்பவை. 

ஆகவே தமிழர்களில் அவர்களுக்குள் உள்ள இனக்குழுக்களில் மட்டுமே திருமணம் செய்து - அல்லது காதலித்து மணம்புரிந்தவர்களின் வாரிசுகள், தமிழர்களாகக் கருதப்படுவர். 

வேற்று இனத்தில் கலப்புற்றால் கலப்பினம்தானேயன்றி தமிழர் ஆகா....!!!! 


அதுபோல யூத இனத்தில் மட்டுமே இதற்கு மாறாக, யூதப்பெண்ணிற்குப் பிறந்த குழந்தைகளை மட்டுமே யூத இன மரபில் யூதர்களாக ஏற்கின்றனர். 
யூத ஆணுக்குப் பிறந்த பிள்ளைகளை அவர்கள் இனத்தில் ஒருபோதும் ஏற்பதில்லை

ஆதலினால் வெளியில் கலந்த கலவைகள் இங்கே உள்ள தமிழர் குடிகளைக் கெடுக்க வேண்டாம். 

உங்களுக்கும் வாழும் உரிமை தருகின்றோம். 

குழப்பம் செய்யும் உரிமை இல்லை. 

வேணும் அருள்மிகு பொய்சொல்லா மெய்யர் துணை. 
நெற்குப்பை காசி விசுவநாதன். 
" வரலாற்றில் விழிப்பு ; எதிர் காலத்தின் மீட்பு "

கலப்பு

தமிழர் இனக்குழுக்களில் ஒருவருக்குள் ஒருவர் திருமணம் செய்துகொள்வதை ஏற்கலாம். ஊக்கப்படுத்தலாம். அது கலப்பு மணம் ஆகாது. காரணம் ஒரே இனம். இனக்குழு மட்டுமே வேறு. 

கலப்பு என்ற சொல்லே இரு வேறு பொருள் / இனம் / ஆகியவற்றின் சேர்மானம் ஆகும். ( ALLOY - a new metal or material ) 



ஆகவே இரு வேறு பொருட்களை சேர்த்தால் அது ஒரு புது வகைதானே தவிர உண்மை இருப்பின் மறு உருவாக்கம் ஆகாது. 

 தமிழர்களிடம் கலப்புறும் வேற்று இனத்தவர்கள் என்றுமே, தங்களின் இனவழி உள்ள மரபுப் பண்பாட்டின் வினையாற்றலை தன்னியல்பாய் கொண்டிருப்பர். 

அதுவல்லாமல் அவர்களின் மரபணு (குறிப்பாக, வடுக மரபணு என்பது என்றுமே அறம் பிறழும் நெறிகளையே தேடும்), அந்த வகையில் என்றுமே நமது மரபு வழிப் பண்புகளை அழுத்தியே நிற்கும். 

இது இயற்கையின் விதி. 

 The Devil will always suppress the Divine.


 ஆகவே வடுக நாயர்களில் பெண் எடுத்தால், தமிழ் ஆண்  மகனுக்குப் பிறந்த பிள்ளைகளை தமிழனாக ஏற்கலாமா ?? என்பதும் 

நாயுடு பெண்ணை அழகாய் இருக்கின்றாள் என்பதற்காக திருமணம் செய்துகொண்டேன் என்று சொல்லும் ஆண்மக்களும் சொல்வதும்... சொல்லவருவதும்.... என்னவென்றால்.....????!!!! 

சைத்தானை திருமணம் செய்துகொண்டேன், எனக்குப் பிறந்த குழந்தையினை தமிழன் என்று சொல்லுங்கள் என்பதாகத்தான் இருக்கும். 

சைத்தானை, சைத்தான் கணக்கில் தான் வைக்க வேண்டும். 

அறம் என்பது வலிமையானது தன்னளவில். அறம் எத்துணை நல்லவைகளைக் கொண்டிருந்தாலும் அது தன்னியல்பில் மிகவும் மென்மையானது, எளிமையானது. 


அது பால் போன்றது. 

அதனுள் சிறு துளி விஷத்தை கலந்துவிட்டு பால்தான் 99.99999999999 % விழுக்காடு உள்ளது என்றாலும், அங்கே அறம் என்பது தன்னிலை திரிந்துவிடும். 

ஆகவே தமிழர்கள், தமிழர்களாய் இருக்க வேண்டும் என்றால் தமிழர் இனக்குழுக்களில் திருமணம் செய்யுங்கள். 

அங்கே தந்தை வழி அடையாளத்தை பிள்ளைக்கு கொடுக்கலாம். 

மாறாக வேற்று நாடு- வேற்று இனம் - வேற்று மொழியில் போய் மேய்ந்தவர்கள் இங்கே கொண்டுவந்து சேர்த்து தமிழன் என்று தலையில் கட்டுவதை நிறுத்துங்கள். 

அப்படியே தமிழ் நாட்டிலேயே வந்தேறிய சிலருடன் கலந்துவிட்டோம், என்று சொல்லுபவர்கள் வெளிப்படையாக திராவிடம் - திராவிடர் - கலப்பினத்தவர் என்று வகைப்படுத்திக் கொண்டு தள்ளி நில்லுங்கள். 

தந்தை வழி அடையாளம் என்பதெல்லாம் உலகின் பல்வேறு இனங்களில் உள்ள உட்பிரிவுகளில் மட்டுமே நடப்பவை. 

ஆகவே தமிழர்களில் அவர்களுக்குள் உள்ள இனக்குழுக்களில் மட்டுமே திருமணம் செய்து - அல்லது காதலித்து மணம்புரிந்தவர்களின் வாரிசுகள், தமிழர்களாகக் கருதப்படுவர். 

வேற்று இனத்தில் கலப்புற்றால் கலப்பினம்தானேயன்றி தமிழர் ஆகா....!!!! 


அதுபோல யூத இனத்தில் மட்டுமே இதற்கு மாறாக, யூதப்பெண்ணிற்குப் பிறந்த குழந்தைகளை மட்டுமே யூத இன மரபில் யூதர்களாக ஏற்கின்றனர். 
யூத ஆணுக்குப் பிறந்த பிள்ளைகளை அவர்கள் இனத்தில் ஒருபோதும் ஏற்பதில்லை

ஆதலினால் வெளியில் கலந்த கலவைகள் இங்கே உள்ள தமிழர் குடிகளைக் கெடுக்க வேண்டாம். 

உங்களுக்கும் வாழும் உரிமை தருகின்றோம். 

குழப்பம் செய்யும் உரிமை இல்லை. 

வேணும் அருள்மிகு பொய்சொல்லா மெய்யர் துணை. 
நெற்குப்பை காசி விசுவநாதன். 
" வரலாற்றில் விழிப்பு ; எதிர் காலத்தின் மீட்பு "

Monday, 10 October 2016

#கேள்வி இரண்டு; #பதில் ஒன்று :- -- #நகரத்தார்__மரபு__வழிப்__பண்பாட்டில் __எதிர்கொள்ளும்__சிக்கல்களும்__ தீர்வுகளும்ஒரு__பார்வை.

#கேள்வி இரண்டு; #பதில் ஒன்று :-
-- #நகரத்தார்__மரபு__வழிப்__பண்பாட்டில்
__எதிர்கொள்ளும்__சிக்கல்களும்__
தீர்வுகளும்ஒரு__பார்வை. 

#ஆக்கம் : --- மேலவட்டகை மெய் கண்டான்.

#கேள்வி :-
1.) ஆண்கள் இல்லாத பெண்கள் மட்டுமல்ல, பெண்கள் இல்லாத ஆண்களும் 60 அல்லது 80 போன்றவை செய்துகொள்கின்றார்கள், ஒற்றுமை இல்லை.
2.) அதுவும் அல்லாமல் வெளியில் வேற்று நாடுகளில், இனத்தில் திருமணம் செய்தவர்கள் படைப்பு வீடுகளை ஆட்டிப்படைக்கின்றனரே...?? தீர்வே இல்லையா ??



#பதில் :- 

ஆண்கள் இல்லாத பெண்கள் மட்டுமல்ல, பெண்கள் இல்லாத ஆண்களும் 60 அல்லது 80 போன்றவை செய்வது தேவையில்லை. மாறாக பிறந்த நாள் கொண்டாடுவதில் தவறு இல்லை.
அது அவரவர் வசதி. இந்த இடத்திலும் ஒட்டுமொத்த சமூகமும் கொண்டிருக்கும் சில நியதிகளை விடாமல் பின்பற்றலாம். அதாவது சிக்கனம் என்பதில் இன்று நமது மரபு மாறிவிட்டது.
அதுவும் இல்லாமல் மற்ற அனைத்து சிக்கல்களும் ஒற்றுமை குறைவின் இரண்டு தலைமுறை இடைவெளி.
இங்கே நாம் சமூக ஒற்றுமை என்பதில் இருந்து, வெகு தொலைவு வந்துவிட்டோம்.
ஆகவே தான் தொழில் முனைவிலும் பின் தங்கி, ஒரு சராசரி வாழ்விற்கு வந்துவிட்ட பின், நமது மரபு வழிப் பெருமைகளை நினைத்துப் பார்க்க கூட முடியாத நிலைக்கு வந்துள்ளோம்.
இரண்டு அல்லது மூன்று தலைமுறைகளில் விட்டுப்போன கட்டுக்கோப்பு, இன்று வெறும் சடங்கு என்ற மேங்கோப்பில் மட்டுமே ஒட்டி நிற்கின்றது.
நாம் யாருடன் இருக்க வேண்டும், நம்முடன் யார் இருக்க வேண்டும் என்ற தெளிவில்லாமல், பணமே முதல் என்று வாழ்வை நகர்த்துவது நகரத்தார் அழகல்ல.
மாறாக மரபு வழிக் கட்டமைப்பில் கட்டி வைத்த வரையறைகள் எல்லாம், மீறாமல் வாழ நினைப்பதுதான் முடிவான முதலாக இருக்கும். அதைத்தான் ஐயாக்களும், அப்பத்தா / ஆயாக்களும் நமக்காக காலம் காலமாய் நெறிப்படுத்தி வாழ்ந்து விட்டுச் சென்றுள்ளனர்.

இன்றோ,

அழகாய் இருக்கின்றாள் என்று, வேற்று மொழி / வேற்று நாடு / வேற்று இனம் என்று சிலர் சென்ற இடத்தில் பிடித்து வந்து, வளவிற்குள் விடுவதானாலும், இந்திய அரசியல் சட்டம் கொடுக்கும் பாதுகாப்பிலும் அப்படிப் பிறந்தவர்கள் எல்லாம், முறையாகப் பிறந்து மரபு வழிப் வந்தவர்களை, எல்லாம் அற்றுப்போனது போல நடுத்தெருவில் நிற்க வைத்துள்ளனர்.
பல ஊர்களில் மரபு வழி வந்த குடும்பப் பெயர் என்பதை எப்படியோ, எங்கிருந்தோ வந்தவர்கள் அரசியல் சட்டம் கொடுக்கும் பாதுகாப்பில் மட்டுமே சூட்டிக்கொள்வது முறையற்றது.
காரணம், முறையாக தமிழ் இனக்கூறுகளில் பிறந்த நகரத்தார் பெண்ணிற்கும் நகரத்தார் ஆணிற்கும் பிறந்தவர்களுக்குத்தான் குடும்பப் பெயர் கொள்ள முடியும். இடையில் இடைச் செறுகளாக வந்தவர்கள் அந்தக் குடும்ப அடையாளத்தை திருடுவதற்கோ, களவு செய்வதற்கோ தார்மீக அருகதையற்றவர்கள் ஆவார்கள்.
மேலும் ஒருவன் செய்த ஒரு தவறுக்காக அதற்கு தொடர்பே இல்லாத ஐயாக்களின் / அப்பத்தா - ஆயாக்களின் குடும்ப மரபு வழிப் பெயரை, செட்டிக்குப் பிறந்த ஒரே காரணத்தால் அடைய முடியாது. அதற்கு கிஞ்சித்தும் உரிமையும் கிடையாது.
பணம் / காவல்துறை / அரசியல் என்ற ஒன்றை மட்டுமே வைத்து, வல்லடியாய் மாற்றார் அடையாளங்களை அடைவது, முடவனின் கைகளைக் கட்டி கத்தியால் குத்தி வெற்றி கண்ட கயமை மட்டுமே.
இன்று நகரத்தார் சமூகத்தில், தமிழர் மரபு சாராத, ஒட்டி வந்த வாரிசுகள், நிறம் / பணம் / செல்வம் / அரசியல் பலம் / காவல் துறை வைத்து, நகரத்தார் பங்காளிகளை மிரட்டி படைப்பு வீட்டைக் கைப்பற்றுவதும், அதனை துப்பாக்கி முனையில் பட்டா மாற்றுவதும், போலி தன்னைத்தானே அசலாக நினைத்துக்கொள்ளும் மடமையைத் தவிர வேறு இல்லை.
கோழைகளாய் இருக்கும் நகரத்தார்களையும் ஏழைகளாய் இருக்கும் பங்காளிகளையும் மிரட்டிப் பணியவைக்கலாம், தலையில் துப்பாக்கி வைத்து சரிக்கட்டலாம் -- மனதில் வைத்துக்கொள்ளுங்கள்....!!!!


 படைப்பு தெய்வங்கள் ஒரு போதும் ஒட்டி வந்த வெட்டி வெடுவாலிகளை ஏற்காது.
பகட்டாக வந்து பட்டா கத்தகிகளை வைத்து மிரட்டி பொங்கல் வைப்பதனால் மட்டுமே படைப்பு தெய்வங்கள் மனமிறங்காது.
தங்களின் உண்மை வாரிசுகளை வதைத்து அடையாளம் மாற்றி ஆட்டிப்படைக்கும் வந்தேறிகளை ஒரு போதும் தெய்வங்கள் ஏற்காது. காலத்தால் பதில் வந்து சேரும். அந்த நிகழ்வுகளை படைப்பு தெய்வங்கள் காற்றாக / ஊற்றாக வந்து, காலத்தால் செய்து முடிப்பார்கள். அதுவரை முறைவழி வந்த குலக்கொடிகள் காத்திருக்கத்தான் வேண்டும். விலைபோகவேண்டாம்.
அதுவும் அல்லாமல்,ஊரில் ஊடுருவிய பிறப்புகள், படைப்பு வீடுகளை மிரட்டிப் பட்டயம் வாங்கினால், அதற்குத் துணைபோகும் பங்காளிகளை சேர்த்து ஊர்ப் பங்காளிகளிடம் முறையிட வேண்டும், அதுவும் அல்லாமல் அந்தக் குறிப்பிட்ட பங்காளிகள் தங்களின் கோவில் பிரிவு காரியாக் காரர்களிடம் பிராது கொடுக்க வேண்டும்.
இதனை தனி ஒரு பங்காளியாகவும் செய்யலாம். பிராது கொடுக்கும்போது, தங்களின் உயிர் - உடமைகளுக்கும், பாதுகாப்பற்ற நிலையினையும், தாங்கள் எந்த ஊர், எந்தக் கோவில்பிரிவு, எந்த கரப்பிரிவு என்பதனையும் விளக்கமாக சொல்லித்தான் பிராது கொடுக்க வேண்டும்.
கோவில் காரியக்காரர்களும், தங்களின் முதலாவதும், தலையாயதுமான கடமையாக, தங்கள் கோவில் பங்காளிகளின் முறையீட்டை சீர்தூக்கி, அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளையும், விசாரணையும் மேற்கொள்ள வேண்டும்.
பல இடங்களில் ஊடுருவிய போலிகள், சிலபலருக்கு கல்லூரி சீட்டு தருகின்றார்கள், அதற்காக சரிக்கட்டலாம் என்றோ, அல்லது மேடையில் பேச்சாளர்கள் புகழ்ந்து பேசுகின்றார்கள், ஆகவே வந்தேறிகளும் செட்டிக்குப் பிறந்தவர்கள் தான் என்றும் நினைப்பது கோவில் முறைமைகளுக்கும், நகரத்தார் கட்டமைப்புகளுக்கும் எதிரானது, தவறானது.
மேடைப் பேச்சாளர்களை சிந்தனையாளர்களாகவோ, தர முத்திரை குத்தும் நியாயஸ்தர்களாகவோ கருதுவது அவலம். மேலும் இவர்களை போன்றவர்களை பணம் படைத்தவர்கள் பணம் கொடுத்து விலைக்கு வாங்கிவிட்டால்..., தமிழில் பேசும் ஒரே திறமையினை வைத்து, பணம் பண்ணுபவர்கள், ஒரு லெட்டர்பேடை எடுத்து பக்கம் பக்கமாக எழுதி இவரும் நகரத்தார் தான் என்று ஏழைகளை ஏமாற்றுவதற்கும், பண முதலைகளை சரிக்கட்டுவதற்கும் துணிந்து விடுவார்கள்.
மற்றபடி, இவர்களைப் போன்றவர்களால் நகரத்தார் கட்டமைப்பிற்கு பாதகம் மட்டுமே வரும். பிரச்சினைகளில் இருந்து மீள முடியாது.


பிரச்சினைக்கு தீர்வு என்ன ??

எல்லோரும் விமர்சிக்கின்றனர், யாரும் தீர்வு சொல்லவில்லை என்று சந்தடியில் நியாயமான கேள்வி எழுப்பும் சில பல நாட்டாமைகள், கூடவே சொல்வது, இளைஞர்கள் எதையும் பொறுமையாகக் கையாள வேண்டும். உணர்ச்சிவசப்படுதல் கூடாது.
நிகழ்ந்த தவற்றிற்கு இப்போது உள்ளவர்கள் எப்படி காரணம் ஆவார்கள் ?? தந்தை செய்த தவற்றுக்கு இன்று உள்ளவர்கள் என்ன செய்வார்கள் ??
மேலும் அவர்கள் வலிமையாக இருப்பதனால் அனுசரித்துப்போகலாமே, அல்லது பிரச்சினையில் மாட்டாமல் கடந்து செல்லலாமே...???

இப்படி நமது சந்ததியில் விஷமிறக்கி இளைஞர்களை, அவர்களின் நியாயமான கேள்விகளை, வெள்ளமாய் வடியவிட்டு, ஒரு சிலருக்கு கிடைக்கும் ஒரு சில கல்லூரி சீட்டுகளுக்கும், ஒரு சில லெட்டர்பேடு மேடைப் பேச்சாளர்களுக்குமாய், ஒட்டு மொத்த சமூகத்தையும் தமிழர் மரபு சாராத துரோகக் கூட்டத்திடம் ஒப்படைப்பது என்பது, சொந்த வீட்டில் கண்ணம் வைப்பதே.
சரி இவர்கள் செய்யும் மடைமாற்றம் என்ன ?? ஒவ்வொரு கேள்விக்காய் விடை காண்போம்.

1. எல்லோரும் விமர்சிக்கின்றனர், யாரும் தீர்வு சொல்லவில்லையே....!!!!

முதலில் பிரச்சினைகளை / நிகழ்வுகளின் அடிப்படையில் விவாதிக்க வேண்டும். ஆனால் இங்கே நாட்டாமை செய்பவர்கள் என்னவோ விவாதிப்பதே இல்லை. மாறாக கேள்வி கேட்ப்பவர்களை முடக்குவதும், பேசவிடாமல் செய்வதுமே முனைப்பாக உள்ளதால், இளைஞர்கள் சொல்வது அவர்களுக்கு வெறும் விமர்சனம் என்று மட்டுமே தெரிகின்றது.
அதுவும் அன்றி விமர்சனம் இல்லாமல் அடுத்த கட்டத்திற்கு நகர முடியாது. விமர்சனங்கள் நாட்டாமைகளுக்குப் பிடிக்காது. இது இயல்பே.


2. தந்தை செய்த தவறுக்கு இன்று உள்ளவர்கள் என்ன செய்வார்கள் ??

அது சரிதான். தந்தை செய்த தவறுக்கு இப்போது உள்ளவர்கள் என்ன செய்வார்கள். ஆனால் குடிவழி முறைமைகள் என்பது எல்லா நாடுகளிலும், எல்லா இனத்திலும்,எல்லா சமூகத்திலும் உள்ள ஒன்றுதான். ஆகவே ஊடுருவிய ஒரே காரணத்தை வைத்தும், அவர்கள் தரும் சிலபல சலுகைகளை வைத்தும் தமிழர்களாய், தமிழ் குடியில் என்றென்றும் மகுடமாய் மதிக்கப்பட்ட நகரத்தார்கள், சம்பந்தமே இல்லாத ஒருவரை ஏற்கலாமா ?? அதற்கு என்ன வகையான நியாயம் உள்ளது ???

3. மேலும் அவர்கள் வலிமையாக இருப்பதனால் அனுசரித்துப்போகலாமே, அல்லது பிரச்சினையில் மாட்டாமல் கடந்து செல்லலாமே...??? 

இங்கேதான் நாட்டாமைகளின் துலாக்கோல் ஒரு பக்கமாய், அதுவும் வெள்ளை நிறம், கொள்ளைப்பணம், அரசியல் சவடால், காவல்துறை மிரட்டல், தூக்கிப்போட்ட பணத்திற்கு எழுதும் லெட்டர் பேடு அறிஞர்கள் சகிதமாய் நியாமற்றதை நியாயப்படுத்தும் வக்கிரம் ஒளிந்துள்ளது. என்ன செய்வது ...?????
பிரச்சினையிலும் மாட்டாமல், மேற்படி முறையற்ற ஊடுருவலை சந்தடியில்லாமல் சபையில் அரங்கேற்றிவிட்டால் அது உண்மையாகிவிடுமா..??? இப்படி கடந்து செல்லும் கயமை உள்ளவர்கள் தான், சமூகத்தின் ஒட்டுமொத்த வீழ்ச்சிக்கும் காரணம். கடந்து செல்லக்கூடாது. எதிர்கொள்ள வேண்டும் என்பதை மனதிற் உறுதியாகக் கொள்ள வேண்டும்.
மேற்படி முறையற்ற சிந்தனைகளுக்கு காரணம் எப்படியோ வாழ்ந்தால் போதும் என்று நினைப்பதும், பணம் இல்லை - இன்று சங்கத்திலோ, அல்லது நகரத்தார் அமைப்புகளிலோ பரிவட்டம் காட்டினால் மேற்படி ஊடுருவல் ஏவலர்கள் ஏதாவது நமக்கும் செய்வார்கள் என்று, கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேல் ஓடியதால்தான் - இன்று புதிது புதிதாய் நகரதர்களுக்கு சேவை செயகின்றேன் பேர்வழி என்று பத்திரத்தில் பதிந்து, கூட்டமைப்பாக வந்து, எல்லோரும் கடந்து செல்லலாம், பிரச்சினைகளை எதிர்கொண்டால் வம்புதான் என்று நயம்புள்ளிகள் நட்டுவாங்கம் செயகின்றனர்.

சரி அப்படியென்றால் எழுதும் உங்களிடமும் தீர்வு இல்லைதானே...????

ஆம், என்னிடமும் தீர்வு இல்லை, காரணம் எல்லாவற்றிற்கும் தீர்வை செய்து, ஆய்ந்து, உணர்ந்து அறிந்து தீர்வு சொன்னவர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளாய் கோவில்பிரிவு, உட்பிரிவு என்று வாழ்ந்து காட்டிய நமது பாட்டன் மார்களே....!!!!! ஆகவே எழுதும் நானும், இன்னும்பல ஏழை எளிய , பரிவட்டம்தரிக்காத உண்மை நகரத்தார்கள் யாரும் தீர்வு சொல்ல வேண்டாம்.
ஏற்கனவே தீர்வு சொல்லி வைத்துள்ளார்கள். இதுகாறும் வாழ்ந்து, உணர்ந்து, பட்டறிந்து பெற்ற அனுபவத்தை நியமங்களாய், சட்டகமாய் சாற்றியுள்ளதை தொடர்ந்தாலே போதும். அதுவே தீர்வாக உள்ளது.

அது என்ன ??

தகப்பன் செய்த தவறுக்கு, பிள்ளையை தண்டிக்கவில்லை, மாறாக குலவழி பெருமைகளை அடைவதற்கு உரிமை இல்லை என்றுதான் சொன்னார்கள். அதனால்தான் ஒருவன் செய்த தவற்றை அவனோடு வைத்துவிட்டு, இருக்கின்ற உண்மை வாரிசுகளுக்கு மட்டுமே படைப்பு, மரபு வழி குலப்பெருமை ஆகியவைகளை கோயில் மாலை என்றும், கோயில் காரியதானத்தில் உள்ளவர்கள் மரபு மீறாமல் வருகின்ற பிராதுகளை ஏற்று, அறம் பிறழாமல் நீதி சொல்வது. ஆகவே புதிதாக சிந்தித்து தீர்க்க வேண்டியது எதுவும் இல்லை. எல்லாம் உள்ளது. மனதில் நேர்மை மட்டுமே வேண்டும்.

சரி, இதற்கு நாம் என்ன செய்ய முடியும் ?? இந்திய அரசியல் சட்டத்தில் பாபிக்கு கொடுக்க வேண்டும் என்று உள்ளதே...???

இந்திய அரசியல் சட்டம் என்பது சொத்து என்ற ஒற்றை சொத்தை மட்டுமே குறிவைக்கும் சொத்தை மட்டும்தான்.
அதாவது, பணத்தையும், வீடு,பொருள் ( அசையும் / அசையா ) மட்டுமே. அப்படியிருக்க, உலகம் முழுக்க எத்தனையோ இனங்களில், பற்பல இனக்கூறுகள் உள்ளன. அதாவது சாதி அல்லது இனக்குழுக்கள் என்று அதனை அறிஞகர்கள் சொல்கின்றனர் ( மேடைப்பேச்சாளர்களோ/ லெட்டர் பேடு அறிஞர்களோ அல்ல ). அவர்களுக்கான அகமண முறைமைகள், சடங்குகள், மரபு வழி பண்பாட்டு உரிமைகளை தடுப்பதற்கோ, கெடுப்பதற்கோ உரிமைகள் கிடையாது என்றும் ஆய்ந்து தெளிந்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், உலக பண்பாட்டு அமைவனம் இதற்கான தெளிவான வரையறைகளும் செய்துள்ளன. இதே நியதிகளை இந்திய அரசியல் சட்டமும் கொண்டுள்ளது. அதன்படி மரபுவழி பண்பாட்டு நிகழ்வுகளில் ஒட்டுமொத்த இனக்குழுகைளை விடுத்து, மாற்று பண்பாட்டுடையவர்கள், கலப்புற்றவர்கள் உரிமை கோரமுடியாது.
காரணம் பண்பாட்டு விழுமியங்கள் அசையும் / அசையா சொத்துக்களோ அல்லது உடமைகளோ அல்ல. இதனை ஏழை எளிய நகரத்தார்களுக்கு, பணம்படைத்த நகரத்தார்கள் எடுத்துச் சொல்ல வேண்டும். அதனை விடுத்து,
ஒரு சில கல்லூரி பொறியியற் பட்டபடிப்புகளுக்காய் ஒட்டுமொத்த சமூகத்தையும் மாற்றானிடம் ஒப்படைப்பது மடமை அல்ல, கயமை.

சரி, கலப்பில் பிறந்த குழந்தைகள் தந்தை வழியில் தானே அடையாளம் காணப்படுவார்கள், அப்படியெனில் தந்தை வழி வந்தவர்களை செட்டிக்குப் பிறந்தால் செட்டி என்று நாம் ஏற்கலாமா ??

முடியாது.

அப்படி தந்தை வழி பிறந்த, தமிழ் இனக்குழுக்களில் மணமுடித்துபிறந்த எத்தனை பேரை நீங்கள் கோயில்மாலை கொண்டு ஏற்றுக்கொண்டீர்கள் ?? அதாவது, மாறிவிட்ட அரசியல் சூழலில், இருக்கின்ற அரசியல் அதிகாரத்திற்குப் பணிந்து இப்படி நயந்து போவது எந்த வகை நியாயம் ?? வெள்ளைத்தோல், கொள்ளைப்பணம் என்பது ஒரு இழிவுதான். பெருமையல்ல.

அப்படிப் பார்த்தாலும் கூட, உங்களால் விடுபட்டவர்களை அழைத்து வந்து மீண்டும் சேர்த்துக்கொள்ள முடியுமா ??? சரி, இன்று சட்டதிட்டங்களை மாற்றிவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா என்ன ??

இல்லை, மாறாக தற்போதைய சூழலில் எங்கள் பிள்ளைகள் உள்ளூரில் உள்ள கருப்பான தமிழச்சிகளை தேடவில்லை, ரெட்டிகளையும் ரொட்டிகளையும், நாயுடுக்களையும், நாயர்களும், சீனர்களையும் கொண்டுவருகின்றார்கள், ஆகவே உள்ளூரில் இந்தியாவில் வேற்று மாநிலத்தவரை முதலில் மெதுவாக நுழையவிட்டால், இனி எல்லாம் சுகமே, என்று சுபம் போட்டுவிடலாம் என்று மனப்பால் குடிப்பதுதான் தவறு.

தந்தை வழியில்தான் குழந்தைகளுக்கு இனக்குழு அடையாளம் என்பது கிடையாது.


இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால், தந்தை வழியில் வந்த ஒரே காரணத்திற்காக குலவழி பெருமைகளையும், அடையாளத்தையும் தாரை வார்க்க முடியாது. அதாவது பட்டனுக்குப் பிறந்தவர்கள் பட்டினத்தார் அடையாளத்தை களவாட முடியாது.

துணை போகும் நாட்டாமைகளை அப்படியே ஏற்கவும் முடியாது.

--- அருள்மிகு நித்ய கல்யாணி உடனாய கைலாச நாதர் துணை.
--- மேலவட்டகை மெய்கண்டான்.
       09-10-2016.

Wednesday, 28 September 2016

கற்புக்கரசி " கண்ணகி " --- நகரத்தார் குலக்கொழுந்தே...!!! [ ஆய்வுக்கட்டுரை ]

கற்புக்கரசி " கண்ணகி " --- நகரத்தார் குலக்கொழுந்தே...!!! 

ஆய்வுக்கட்டுரை


சமீப காலங்களில் தூய தமிழ் இனக்கூறுகளில் ஒன்றான, "நகரத்தார் " அல்லது நாட்டுக்கோட்டை நகரத்தார்களை சிறுமைப்படுத்த அல்லது அவர்களின் சிறப்பியல்புகளில், தாங்களும் பங்குபெற வேண்டும் என்ற உள் நோக்கில் - தங்களையும் தூய தமிழர்கள் எனக் கூறிக்கொள்ளும் ( தமிழை வீட்டில் பேசும் தாய்மொழியாகக் கொண்டிராத / தமிழினம் சாராத ) சிலர் , நகரத்தார்களின் தூய தமிழ் கூறுகளை கேள்விக்குறியாக்கி சிதைக்கும் கேடுள்ளத்துடன் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு முயற்சியே வலைத்தளங்களில், சிலப்பதிகார நாயகியும் , நகரத்தார்கள் குலக்கொழுந்து -  காவல் தெய்வம் -- கண்ணகி நல்லாள் நகரத்தார் சமூகத்தை சார்ந்தவரில்லை எனும் பரப்புரைகள்.

இப்பரப்புரைகளில் அவர்கள் குறிப்பிடுவது ஐயா சிலம்புச் செல்வர் ம.பொ.சி அவர்களின் கட்டுரைகளில் இருந்து ஒரு பகுதியை வெளியிட்டு 

 " நகரத்தார்களை நோக்கி ம.பொ.சி எழுப்பும் வினா " எனும் தலைப்பிட்ட செய்திக்குறிப்பு.

இக்கட்டுரையை ஊடாய்ந்து தகுந்த தரவுகளைக் கொண்டு  " கண்ணகி நல்லாள் -- நகரத்தார் குலக்கொழுந்தே " என நிறுவுவதே எம் நோக்கம். அதுவல்லாது,  ஐயா சிலம்புச் செல்வரை குறைத்து மதிப்பிடுவது அல்ல எம் குறிக்கோள்.

முதற்கண் இக்கட்டுரை எந்த ஆண்டு எழுதப்பெற்றது என அறிய வேண்டும். ஏனெனில் ஆய்வுகள் என்பவை ஒருவரின் / ஆய்வாளரின் காலத்துக்கு காலம் ஆழமாக மாறக்கூடியவை. இக்கட்டுரையை எழுதும் போழ்து,  ஐயா ம.பொ.சி.அவர்கள் நகரத்தார் சமூகத்துடனோ அல்லது சிவகங்கை-புதுக்கோட்டை மாவட்டங்களில் வாழும் ஏனைய தூய தமிழ்ச் சமூகங்களுடனோ அத்துணை அறிமுகம் கொண்டிருக்கவில்லை எனத்  தோன்றுகின்றது.

ஏனெனில் ஐயா ம.பொ.சி அவர்கள் சிவகங்கை மாவட்டத்தில் அவர்களின் "தமிழரசுக்கழகத்தை"  பரப்பிய அக்கட்சியின் முக்கிய பிரமுகரான நகரத்தார் சமூகத்தைச் சார்ந்த காரைக்குடி "முத்து விலாஸ்"  திருமிகு. மா.முத்தையா,  அவர்களின் தங்கை திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திய போது , நகரத்தார் திருமணச் சடங்குகளை, சிலப்பதிகாரத்தில் நடந்த கண்ணகியின் சடங்குகளோடு  ஒப்பிட்டு , கண்ணகி நகரத்தார் குலப்பெண் எனப் பேசியதை அடியவன் சிறியவனாக இருந்த போது கேட்டிருக்கின்றேன்.

 

சரி, கட்டுரைக்கு வருவோம்.

" நகரத்தார்களை நோக்கி ம.பொ.சி எழுப்பும் வினா " வெளியிடப்பட்டுள்ள கட்டுரையின் முதல் பத்தியிலேயே ....

" பூம்புகாரில் வணிக சாதியினர் மிகுந்த செல்வாக்குடன் வாழ்ந்தனர் என்பது சிலப்பதிகாரத்தில் அறியக்கிடைக்கின்றது. அவர்கள் பிற்காலத்தில் கடற்கோளுக்கு அஞ்சி , இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாலைவனப்பிரதேசத்தில் குடியேறியிருக்க கூடும் என்று கருத வேண்டியிருக்கின்றது. அவர்கள் தாங்கள் வாழும் பகுதிக்குச் " செட்டி நாடு " என்று பெயர் வைத்துக்கொண்டுள்ளனர். "நாட்டார்",  "  நகரத்தார்" எனும் சிறப்பு பெயர்களையும் பெற்றுள்ளனர்.

 
இந்த முதல் பத்தியிலேயே சிலம்புச் செல்வர், கண்ணகி ஆத்தாளை நகரத்தாரிலிருந்து பிரிக்க விரும்பும் கேடர்களுக்கு, வேறு எந்த சமூகத்தையே, இடத்தையோ குறிப்பிடாமல், இங்கு குடியேறியிருக்க கூடும் என்று கருதவேண்டியுள்ளது என்று குறிப்பிட்டு அப்பகுதிக்கு " செட்டி நாடு " என்று பெயர் வைத்துக்கொண்டுள்ளனர் என ஐயந்திரிபற கூறுகின்றார். (ஆனால் நாட்டார் என்பது இப்பகுதியில் வாழ்ந்த முக்குலத்தோர் எனப்படும் சமூகப் பிரிவுகளையே குறிக்கும் சொல் என்பது கட்டுரை எழுதிய காலத்தில் ஐயாவிற்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை போலும் )  அடுத்த வரியிலேயே கண்ணகி இந்த நகரத்தார் சமூகத்தில் பிறந்தவள் என்பது ஆராய்ச்சியால் அனுமானிக்கப்படுகின்றது என முடிவும் சொல்கின்றார்.

இதனையடுத்து வருகின்ற வரிகளிலும், இப்படி நகரத்தார் தங்கள் சமூகத்தில் பிறந்த பத்தினி தெய்வத்தை கொண்டாடும் வகையில் நகரத்தார்களிடம் கூறுகள் இல்லையே எனும் ஆதங்கம்தான் தெரிகின்றதே தவிர, கண்ணகி நகரத்தார் இல்லை எனும் கூற்று ஐயாவின் கட்டுரையில் எவ்விடத்திலும் காணப்படவில்லை.

சரி ஐயா  ம.பொ.சியின் ஆதங்கம் சரிதானா ??

கண்ணகி அம்மை நகரத்தார்தான் என்பதை ஐயந்திரிபற சிலப்பதிகாரத்தைக் கொண்டே நிறுவும் தரவுகளை / சான்றுகளைக் காண்போம்.


I . புறச்சான்றுகள்


II . அகச் சான்றுகள்


I . புறச்சான்றுகள் :-

பட்டினப்பாக்கம் எனும் புகார் அந்நாளில் "நகரம்" என்றும் அழைக்கப்பட்டது. நகரத்திலிருந்து தென்பாண்டி நாட்டிற்கு குடியேறியவர்கள் "நகரத்தார்" ஆனார்கள். அதேபோல் அற்றை சோழ  மன்னர் காலத்தில் சிறப்புற வாழ்ந்த வணிகக்  குடிமக்கள் "எட்டி " எனும் சிறப்பு பட்டம், மன்னர்களால் சூட்டப்பட்டு பெருமை எய்தினர். எட்டி எனும் சொல்லே பின்னாளில் செட்டி என மருவி, செட்டியிலிருந்து வடமொழி  சேட்டு என ஆயிற்று. இதனை மொழியியல் அறிஞர்களும் ( Anthropologist ), வரலாற்று ஆய்வாளர்களும் நன்கறிவர்.



நகரமாகிய புகாரிலிருந்து புலம்பெயர்ந்த செட்டி மக்களாகிய நகரத்தார் பெருமக்கள் தென்பாண்டி நாட்டில் முதலில் தங்கி இளைப்பாறிய இடம்  " இளையாற்றங்குடி ". ஆனாலும் முதலில் ஊர் ஆக உருவாக்கி குடியேறிய இடம் " நாட்டரசன் கோட்டை" ஆகும். இவ்வூரை அவர்கள் புகார் நகரின் அமைப்பிலேயே வடிவமைத்தனர். பூம்புகாரின் " சதுக்க பூதம்" அமைந்த அமைப்பை ஒட்டியே சதுக்கம் அமைத்து நாட்டரசன் கோட்டையை வடிவமைத்தனர். இன்றைக்கும் அவ்விடம் நாட்டரசன் கோட்டையில் " சதுக்கம் " என்றே அழைக்கப்படுகின்றது. இவ்வாறு நாட்டரசன் கோட்டையில் குடியேறிய நகரத்தார் பெருமக்கள் , தாங்கள் புலம்பெயர்ந்த ஊரில் தங்களின் குலத்துதித்த பத்தினி தெய்வமாம் கண்ணகிக்கு வனப்புமிகு கோவில் எழுப்பினர். அக்கோவில் நகரத்தார்கள் பயபக்தியுடன் வணங்கும்  " கண்ணாத்தாள்" கோவிலாகும்.

நகரத்தார்கள் தங்கள் தாயை  " ஆத்தாள்" என்றே அழைப்பது வழக்கம்.
( நகரத்தார் குலத்துதித்த ஞானி பட்டினத்தார் எனும் பட்டினத்தடிகள் தனது தாய் மறைந்த பொழுது  " அரிசியோ நான் இடுவேன் ஆத்தாள் தனக்கு
" எனும் அவரது பாடலே பட்டினத்தார் நகரத்தார் குலத்துதித்த பெருமகனார் என்பதை நிறுவும் மறுக்க இயலாத சான்றுகளில் ஒன்றாய் இருக்கின்றது ) அவ்வண்ணமே தங்கள் குலத்துதித்த கற்புத் தெய்வத்தை  " கண்ணகி"  "ஆத்தாள் " என்று அழைத்தனர். கண்ணகி ஆத்தாள் என்பதே நாளடைவில் மருவி கண்ணாத்தாள் ஆகியது.

ஆகவே ஐயா சிலம்புச் செல்வரின் " நகரத்தார் சமூகத்தின் பழக்க வழக்கங்களில் கண்ணகி வழிபாட்டின் அடையாளத்தைக் காணமுடியவில்லை " எனும் கூற்று மேலோட்டமான, ஆதாரமற்ற ஒன்று. இன்றளவும் கண்ணாத்தாள் கோவில், நகரத்தார்களின் தலையாய கோவில் மட்டுமின்றி, அவர்கள் பயபக்தியுடன் வழிபடும் செல்வாக்கு மிக்க தலங்களில் ஒன்றாகும்.

கண்ணகி தெய்வத்தை, அம்மையாகவும், அம்பாளாகவும் (இறைவி) வழிபட்டவர்கள், வழிபடுகின்றவர்கள் நகரத்தார்கள். இக்கட்டுரை வரையும் அடியவனின் தாய்வழிப் பாட்டியின் பெயர் "கண்ணம்மை " (கண்ணகி+அம்மை) , சொந்த சகோதரியின் பெயர் (கண்ணகி+அம்பாள்) கண்ணம்பாள். பெரியத்தாளின் (பெரிய தாயார், தாயின் மூத்த சகோதரி ) மகள் பெயரும் கண்ணம்பாள்.

செட்டி நாட்டிலே "கண்ணாத்தாள்", "கண்ணம்மை", "கண்ணம்பாள் " என்கின்ற பெயர்கள் பரவலாக பெண் குழந்தைகளுக்கு சூட்டப்பட்டுள்ளன / சூட்டப்படுகின்றன.

அற்றைக் காலகட்டத்தில் வணிகக்குழுக்களுக்கு "சாத்து" என்று பெயர். பெரிய வணிகக்குழு அல்லது கூட்டம், "மா சாத்து" என்று அழைக்கப்பட்டுள்ளது.   "மாசாத்து" உடையவர் "மாசாத்துவான்". கோவலனின் தந்தை பெயர் மாசாத்துவான். மாசாத்துவான் என்பதே நாளடைவில் மருவி "சாத்தப்பன்" ஆயிற்று.

அதே போல கப்பல் கொண்டு கடல் வணிகம் செய்வோர் "நாய்க்கன்" என்றும், பெரும் கடல் வணிகம் செய்வோர் "மாநாய்க்கன்" என்றும் அழைக்கப்பட்டனர்.  சிலப்பதிகார நாயகி கண்ணகியின் தந்தை பெயர் "மாநாய்க்கன் ".

 "மாநாய்க்கன் " எனும்பெயர் காலப்போக்கில் " மாணிக்கம் " என மருவியது. இன்றைக்கும் நகரத்தார் சமூகத்தில் மாணிக்கம் - சாத்தப்பன் என்கிற பெயர்கள் ஏராளம், ஏராளம். மிகவும் பொதுப்படையான பெயர்களாகும். (சாத்தப்பன் என்கிற பெயர் வேறு சமூகத்திலே காணப்படுகின்றதா என்பது சந்தேகமே.)

மேலே சொன்ன சான்றுகளால், சிலம்புச் செல்வர் அவர்கள், " நகரத்தார்களின் குடும்ப பழக்க வழக்கங்களிலும், ஆண்களுக்கும் பெண்களுக்கும் பெயர் வைப்பதிலேயும் சிலப்பதிகாரத்தின் சாயலைக்கூட காண முடியவில்லை " எனும் அவருடைய அடுத்த கூற்று, கிஞ்சித்தும் அடிப்படையற்ற, சாரமற்ற ஒன்றாகும் என நிறுவப்படுகின்றது.

II . அகச் சான்றுகள் :-


மேலும் சற்று நுண்மான் நுழைபுலத்தோடு சிலப்பதிகாரத்தை ஆழமாக ஆராய்வோம்.

அகச்சான்று  - 1


நகரத்தார் சமூகத்தின் தனிப்பட்ட, இன்றளவும் வேறு எந்த தமிழ் குமுகத்திடமும் காணப்படாத சிறப்பு பண்பாடு, மணமுடித்து இனிய இல்வாழ்வை தொடங்கும் இளம் தம்பதிகளை, அவர்களும் வாழ்வின் இன்பத்துன்பங்களை நுகர்ந்து, எதிர் கொண்டு வேர்விட்டு வளர்ந்து வெற்றி பெற  வேண்டும் என்கிற நோக்கில் " வேறு வைத்தல் " எனும் பழக்கம்.                  ( பெற்றோரிடம் மாற்றுக்  கருத்துக்கொண்டு இன்று தம்பதிகள் போகும் ' தனிக்குடித்தனம்" இதிலிருந்து மாறுபட்டது ). இந்த வேறு வைத்தல் என்பது  பெற்றோர்களும், பிள்ளைகளும் ஒத்த கருத்துடன், பெற்றோர் தங்களுக்கு உள்ள அனைத்து வசதிகளையும் அதே போல் செய்து கொடுத்து , உற்றார், உறவினர்களை அழைத்து அனைவரும் மகிழ்வோடு கொண்டாடி பிள்ளைகளை வேறு வைப்பார்கள்.

 

இவ்வாறு கோவலன் கண்ணகியை அவர்தம் பெற்றோர் வேறு வைக்கும் வைபவம் சிலப்பதிகாரம் - புகார்க்  காண்டம்  மங்கல வாழ்த்துப்பாடல் வரிகள் 84-90 ல், கீழ்கண்ட வாறு விவரிக்கப் படுகின்றது.

"வார் ஒலி கூந்தலைப் பேர் இயல் கிழத்தி        84..
மறப்பு -- யாரும் கேண்மையொடு, அறப்பரி சாரமும்,
விருந்து புறந்தரூஉம் பெருந்தண் வாழ்க்கையும் ,
வேறுபடு திருவின் திருவின் வீறுபெறக் காண
உரிமைச்சுற்றமொடு ஒரு தணி புனற்க,
யாண்டு சில கழிந்தன , இற்பெருங் கிழமையின்
காண்தகு சிறப்பின் கண்ணகி  தனக்கு - என் 
     90.....


மேற்குறிப்பிட்ட ஒன்றே கண்ணகி நகரத்தார் குலக்கொழுந்து என்பதற்கு அசைக்க முடியாத சான்றாகும். ( ஆங்கிலத்தில் சொல்வதானால்  a concrete evidence to prove).

அகச்சான்று  - 2

மேலும் சிலப்பதிகாரத்தைக்கொண்டே கண்ணகி நகரத்தார் குலக்கொழுந்து என்பதற்கான சான்றுகள் சிலவற்றைக் காண்போம்.

நகரத்தார் குமுகத்தில் மணமகன் மணமகளுக்கு அணிவிக்கும் திருமங்கலநாணை "கழுத்துரு" என்று அழைப்பதோடு, அச்சடங்கை இன்றளவும் " திருப்பூட்டு திருமங்கலம்" என்றும் " திருப்பூட்டுதல்" என்றும் குறிப்பிடுகின்றனர். இவ்வாறு குறிப்பிடப்படும் "கழுத்துரு " என்கிற திருமங்கல நாணை நகர்வலமாகக் கொண்டுவரும் பழக்கம் இன்றளவும் நகரத்தார் பெருமக்களிடம் காணப்பெறுகின்றது.  ஆம் பெண் வீடு அமைந்துள்ள ஊரின்கண் உள்ள கோவிலில் அல்லது ஒரே ஊரில் உள்ளவர்களாக இருந்தால் மாப்பிள்ளை வீட்டிலிருந்தும் -- மாப்பிள்ளை வீட்டார் முதல் நாளே பெண் வீட்டார் கொடுத்தனுப்பிய " கழுத்துரு" அல்லது மங்கல  நாணை, நகர்வலமாக "பொன் தட்டில்"  மாப்பிள்ளை வீட்டார் மண மாலையுடன் ஏந்தி நகர்வலமாக வரும் பழக்கம் நகரத்தார்களிடம் மட்டுமே இன்றுவரை கடைபிடிக்கப்படுகின்றது.



அத்துடன் திருமண நிகழ்வில் இன்றளவும்  சங்கொலி எழுப்பி  திருமண அழைப்பு, திருமணச் சடங்குகளை வழுவாது செய்து வரும் சமூகம்  நாட்டுக்கோட்டை நகரத்தார்களே. இன்றளவும் பிறப்பு, திருப்பூட்டுதல் (திருமணம்), இறப்பு எனும் மூன்று பண்பாட்டு நிகழ்வுகள் சம்பந்தப்பட்ட  அனைத்து சடங்குகளிலும் வெண் சங்கு தொட்டுத் தொடர்வது, நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் வாழ்வியல் நிகழ்வுகளில் மட்டுமே.

 
பட்டினத்தார் இதனையே :-


முதற்சங்கு அமுதூட்டும்,  
மொய்குழலார் ஆசை
நடுச்சங்க  நல்விலங்கு  பூட்டும்,

 கடைச்சங்கம் ஆம் போதது ஊதும்,
அம்மட்டோ..? இம்மட்டோ ..? 

நாம் பூமி வாழ்ந்த நலம்.  
---- பட்டினத்தார்

இதனையே சிலம்பில்  புகார்க்  காண்டம்  மங்கல வாழ்த்துப்பாடல் வரிகள் 46 மற்றும் 47 ல், கீழ்கண்ட வாறு விவரிக்கப் படுகின்றது.

"முரசு இயம்பின: முருடு அதிந்தன : முறை எழுந்தன பணிலம் : வெண்குடை
அரசு எழுந்தோர் படி எழுந்தன: அகலுள் மங்கல அணி எழுந்தது...."


------- சிலம்பு. மங்கலவாழ்த்துக் காதை.-- வரிகள் 46/47

மேற்கண்ட ஒன்றும் கண்ணகி நகரத்தார்கள் கண்மணி என்பதற்கு மற்றுமோர் அசைக்கமுடியாத சான்று.


அகச்சான்று  - 3


அடுத்து நகரத்தார் குமுகம், ஏனைய தமிழ் சமூகத்தினரை வேறுபடுத்தாமல், தங்கள் வாழ்வியலுடன் ஒத்திசைந்து அவர்களைப்  பெருமைப்படுத்தி, உதவிகள் செய்து, ஊருடன் ஒத்து வாழ்ந்து உயரும் மரபினர். அவ்வண்ணமே நகரத்தார் வாழ்வியலில் நடக்கும் அனைத்து மங்கள/அமங்கள  நிகழ்வுகளில், துணி வெளுக்கும் குடியினரான சலவைத் தொழில் செய்யும் மக்களையும், அந்நாளில் நல்ல மருத்துவராக இருந்த நாவிதர் குலத்தாரையும் அழைத்து முதல்மரியாதை செய்து, அவர்களை சில சடங்குகளை செய்யச் சொல்லும் மரபாகும்.




அதனை ஒட்டி நகரத்தார் மரபுகளில் இன்றளவும்  அவர்தம் திருமணங்களில் மணமகன் மணமகளுக்கு மங்கல நாண் அணிவிக்கும் (திருப்பூட்டும்) மணவறையின் விதானத்தில், வண்ணார் குலத்தினரைக்கொண்டு அவரிடமிருந்து பெற்ற தூய்மையான ஆடையை இடும் "நித்திலப் பூப்பந்தல்" நிகழ்வாகும்.இதனை வண்ணார் விரிப்பு எனக்குறிப்பிடுவர். இது வேறு தமிழ் சமூகங்களில் இல்லை. இப்பழக்கம் மிகத் தெளிவாக  மங்கல நாண் காதையில் இயம்பப்படுகின்றது. அவ்வரிகள் வருமாறு :

மங்கல நாண் காதை :- வரிகள் -- 47-48.

" மாலை தாழ் சென்னி வயிரமணித் தூண் அகத்து,
நீல விதானத்து நித்திலப்பூம்  பந்தர்க் கீழ்  "
 ------ வரிகள் -- 47-48.

மேற்குறிப்பிட்ட சான்றும் கண்ணகி தெய்வம் நகரத்தார் குலத்துதித்த பத்தினியே என்பதை நிரூபிக்கும் ஒன்றாகும்.

அகச்சான்று  - 4

மேலும் காண்போம், கோவலன்,  கண்ணகி - கவுந்தியடிகளுடன் மதுரை நகர் சென்றடைகின்றான். ஆயர்குலப் பெண்மணி மாதரி கவுந்தியடிகளிடம் இருந்து, கண்ணகி கோவலன் இருவரையும்  ஏற்றுக்கொண்டு பெரிதும் மகிழ்ந்து, மதுரைக்கோட்டையைக் கடந்து, மாதரி இடைக்குல மாதர் பலரும் தன்னுடன் கூடிவர,  கோவலன் கண்ணகியுடன் தன்னுடைய வீட்டிற்கு சென்று சேர்கின்றாள். கோவலன் கண்ணகி இருவருக்கும் ஒரு புது மனையில் இடம் தந்து தன்மகள் ஐயையை கண்ணகிக்கு தோழியாக்கி துணையாக்குகின்றாள். கண்ணகி மாதரியிடம் நன்றி பாராட்டி அவளை மாமி முறையாக்கி,  ஐயையின் துணையுடன்  தன் கணவனுக்கு சோறாக்கி தன் கணவனை உண்பிக்க அழைக்கின்றாள். அது கேட்ட கோவலன், பனையின் வெண்மையான குருத்தோலையில்  தடுக்கு பின்னுவதில் கைதேர்ந்தவள் ஒருத்தி அழகாகப் புனைந்திருந்த, வேலைப்பாடமைந்த தடுக்கின் மேல் அமர்ந்தான். தன் மலர்போன்ற  அங்கையினால், சுட்ட மண் பாத்திரத்தினாலே நீர் சொரிந்து, அவன் பாதங்களைத் துடைத்தாள் கண்ணகி. 




மேற்கண்ட  வர்ணனை மதுரைக் காண்டம்  - கொலைகளக் காதையில் 35 முதல் 39 வரை உள்ள  வரிகளில் இளங்கோவடிகளால் விவரிக்கப்படுகிறது. இன்றுவரை உணவருந்தும் போது  'பழமைபோற்றும் 'நகரத்தார்கள்  பனை  ஓலையில் செய்யப்பட்டு வேலைப்பாடோடு அமைந்த  'தடுக்கு'களில்  அமர்ந்துஉண்ணும்  பழக்கத்தை பின்பற்றி வரும் பெருமக்கள் ஆவர். ஏனைய பிற சமுகத்தினரிடையே உணவருந்த அமரும்போது, ஆசனப்பலகையில் அமரும் பழக்கமே காணப்படுகிறது.

"தாலப் புல்லின் வால்வெண் தோட்டுக்
கைவல் மகடூஉக்  கவின் பெறப் புனைந்த
செய்வினைத் தவிசிற்  செல்வன் இருந்தபின் ,
கடிமலர் அங்கையிற் காதலன் அடிநீர்
சுடுமண் மண்டையின் தொழுதனள் மாற்றி :

                                                                                                                                                              ------ சிலம்பு - மதுரை காண்டம்  - கொலைக்களக் காதையில்,  35 முதல் 39 வரை

பனை ஓலைத்தடுக்கில் அமர்ந்து உணவு உண்ணும் பழக்கம் நகரத்தார்களிடம் தான் செறிந்து காணப்படுகிறது என்பதாலும் கண்ணகி நல்லாள் நகரத்தார் குல நங்கையே என்பது நன்கு  புலப்படும்.

மேலும் இத்துடன்  நகரத்தார்  திருமணம்  குறித்த  ஒரு  காணொளிப்பதிவு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது https://www.youtube.com/watch?v=7A1Gcj1xfaYhttps://www.youtube.com/watch?v=7A1Gcj1xfaY

இதுகாறும் ஊடாயிந்த மேற்கூறிய பல்வேறு சான்றுகளும் தரவுகளும், கற்புத்தெய்வம் கண்ணகி நகரத்தார் குலக்கொழுந்தே என்பதனை உள்ளங்கை நெல்லிக்கனியாய் எவ்வித  சந்தேகத்திற்கும் இடமின்றி தெளிவாக்குகின்றன.

வழிபாடு, பெயர் சாயல் குறித்த  ஐயா  சிலம்பு செல்வரின் ஆதங்கம், ஆதாரமற்ற ஒன்று என்பதனையும், செட்டிநாட்டில் இன்றளவும் கண்ணகி ஆத்தாள்கோவில் உள்ளதையும், மற்றும் ஏனைய நகரத்தார்களின் சிலப்பதிகாரம் பெயர் பழக்கங்கள் ஐயந்திரிபற கண்ணகி நல்லாள் " நகரத்தார்
குலக்கொழுந்ததே" என்பதனை நிலைநிறுத்துகின்றன  என்பதனை தக்க சான்றுகளுடன் நிருபித்துள்ளேன்.

எனவே கண்ணகி   --  நகரத்தார் குலமகளா  ?? எனும் குழப்பவாதிகளின் வினா - பரப்புரை ஒன்று , உள்நோக்கத்துடனோ , அல்லது அறியாமையையின் வெளிப்பாடாகவோ செய்யப்படும்
ஒன்றே.
அஃது ஆராய்ச்சியாளர்கள் ஏற்கத்தக்கதல்ல.


என்றும் அன்புடன்
காரைக்குடி சேவு.க.ராம.நாகப்பன்
முகாம் ---துபாய்.


குறிப்பு :- இக்கட்டுரையின் ஆக்கத்திலும், அதற்கு தகுந்த புகைப்படங்கள் தொகுப்பதிலும்  எனக்கு துணைபுரிந்தது, மேலும் இதனை அழகுற தமிழில், தட்டச்சு செய்து தந்த தம்பிகள், நெற்குப்பை காசிவிசுவநாதன், கருப்பையா இராமநாதன் இருவருக்கும் மனமுவந்த நன்றிகள் உரித்தாகுக.