Tuesday, 23 May 2017

#செட்டிநாட்டு_சித்திரகுப்த_நாயனார்_பூசை :::


செட்டிநாட்டு பகுதிகளில் ஆச்சிகள் கடைபிடிக்கும் வழிபாட்டு முறைகளில் ஒன்று சித்திரகுப்த நாயனார் பூசை. இந்த பூசையானது முன்பு ஆச்சிமார்கள் மத்தியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வழிபாட்டு முறையான இருந்து வந்துள்ளது. தற்போது இந்த வழிபாட்டு முறையானது நேரம் இன்மை காரணமாக பலரும் கடைபிடிப்பது கிடையாது சிலர் இன்றும் இந்த வழிபாட்டு முறையை கடைப்பிடித்து வருகின்றனர்.




சித்தரகுப்பத நாயனார் பூசையானது சித்திரை மாதத்தில் வரும் சித்திரை நட்சத்திரதமும் முழுநிலவும் கூடும் நாளில் சித்திரகுப்த நாயனாரை நினைந்து பகல்பொழுதில் எதுவும் உண்ணாது நோன்பு இருந்து மாலையில் வழிபடுவர். இந்த நோன்பின் நோக்கம் நமது வாழ்வில் புன்னியங்கள் அதிகம் செய்திடவும் பாவங்கள் செய்யதிடாமல் இருக்கவும் செய்த பாவங்களில் இருந்து விடுபட பாவ புண்ணிய கணக்கு எழுதும் சித்திரகுப்த நாயனாரை தோன்றிய சித்திரை முழுநிலவு நாளில் அவரை நினைத்து வழிபாடானதுகடைபிடிக்கப்படுகின்றது 


.
முன்பு நகரத்தார்கள் திருமணத்தில் பெண்ணுக்கு வைக்கும் சாமான்களில் வெள்ளி மற்றும் வெண்கலத்தில் இந்த வழிபாட்டு பொருட்களான நிறைகுடத்திற்கான கலசம், தேங்காய், மாவிலை , ஏடு எழுத்தாணி , பாவர்னக் கிண்ணம் ( சிறிய 16 கிண்ணங்கள் ) குலையுடன் கூடிய மாங்காய் வெற்றிலை பாக்கு போன்ற பொருட்களையும் செய்து வைப்பர் சற்று வசதிபடைத்தவர்கள் வெள்ளியிலும் வெண்கலத்திலும் ஒருப்செட் செய்து வைப்பர். முன்பு திருமணத்தில் பெண்ணுக்கு வைக்கு வெள்ளிச் சாமான்களில் ஏடு எழுத்தாணி கட்டாயம் இடம்பெற்று இருக்கும்.

இந்த நோன்பானது இரண்டு விதமாக கடைபிடிக்கப்பட்டு வந்தது. அதில் ஒரு விதம் பாவர்னக் கிண்ணத்தில் (16 சிறிய கிண்ணங்கள்) நவதானியங்கள் , பஞ்சு , உப்பு , புளி மிளகாய், தட்டைப்பயறு , அருசி போன்றவற்றை எடுத்து வைத்தும் ( சில இடங்களில் பாவவர்ன கிண்ணத்தை சுலகின் மேல் வைத்து வழிபடுவர் )
மற்றொரு வகை இந்த பாவவர்ன கிண்ணத்த்தில் தானியங்கள் எதுவும் வைக்காது வழிபடுவதும் என்பது ஒருவகையான வழிபாட்டு முறை . தானியங்கள் வைப்பது மட்டுமே மாறுபடும் மற்றபடி இம்முறைகள் எல்லாம் ஒன்றாகவே அமைந்திருக்கும் .




சித்திரகுப்த நாயனார் வழிபாடானது பெரும்பாலும் மாலையில் விளக்கு ஏற்றிவைத்து நடுவிட்டுக் கோலமிட்டு ஒரு மனையிட்டு சித்திரகுப்பதர் உருவம் வரையத் தெரிந்தவர்கள் பச்சரி மாவில் வரைந்து வைத்தும் அல்லது மனைப்பலகையில் ஏடு எழுத்தாணி வைத்து மலர்சரங்கள் கொண்டு அலங்கரித்து உப்பு மற்றும் இனிப்பு கொழுக்கட்டை , பாயசம் ,பொங்கல் , மாவிளக்கு ,நீர்மோர் , பானகம் , வெள்ளரிக்காய் , கொத்தோடு மாங்காய் , குலையுடன் தேங்காய் மற்றும் நுங்கு , முக்கனிகள் , மற்றும் தாம்பூலம் வைத்து இயன்ற பலகாரங்கள் ( தென்குழல் , அதிரசம், சீடை , சீப்புசீடை , பணியாரம் ,வடை பொன்றவை ) செய்து வைத்து சித்திரகுப்த நாயனார் கதையை குடும்பமாய் அமர்ந்து படித்து முடித்தபின் வென்சங்கு முழங்கி நிவேதனம் செய்து தீபாரதனை கண்டபின் அன்றைய இரவு முழு நிலவின் உதயத்தை கண்டு வழிபட்டதுடன் நோன்பானது நினைவு பெரும். அன்றய தினம் வீட்டு உணவில் தட்டைபயறு , எருமைப்பால் அல்லது எருமைத்தயிர் சேர்த்து கொள்வதை ஒரு மரபு . சித்திரகுப்த நாயனார் கதையை அன்றைய தினம் கேட்டாலே புண்ணியம் பாவங்கள் குறையும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

---ஆ.தெக்கூர் . இராம.நா.இராமு

கூட்டமும் அவை எழுப்பிய கேள்வியும்

காரைக்குடியில் கோல்டன் சிங்கார் ஹோட்டலில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 45 பேர் என அறிகிறேன்.







இந்த கூட்டத்தில் பேசிய சிலர்,சொன்ன புள்ளிவிபரம்,32-35 வயதை கடந்த 850 நகரத்தார் பையன்கள் திருமணம் செய்ய பெண் இல்லாமலும்,சுமார் 150 பெண்கள் திருமண வயதை கடந்து திருமணம் ஆகாமல்,முதிர் கண்ணியாக,இருப்பதாக சொல்லியதுடன், இதற்க்கு தீர்வாக,மற்ற இனங்களில் இருந்து பெண் எடுத்து,பெண் இல்லாத குறையை போக்கவேண்டும் என பேசினார்களாம்!

கேள்வி -1

ஒரு ஹோட்டல்,40-45 பேர் கூடி பேசி எடுக்குற முடிவு,ஒன்பது கோயிலை சேந்த,ஒன்றறை லட்சம் நகரத்தார்களை எப்படி கட்டுப்படுத்தும்? நகரத்தார் மலர் பத்திரிக்கை நடத்தும் இளங்கோ அவர்கள் இந்த கூட்டத்தை ஏற்ப்பாடு செய்து,தன்னுடைய புரட்சிகரமான கருத்துக்களை,ஒட்டு மொத்த சமுதாயத்தின் எதிர்பார்ப்பாக, நகரத்தார்களின் குரலாக்குவது ஏன்?




கேள்வி -2

இது போல கூட்டம் நடத்துவதற்க்கு பதில், திருமண வயதை கடந்த நகரத்தார் ஆண்களையும்,பெண்களையும் ஒரே
இடத்திற்க்கு அழைத்து,செட்டிநாட்டிலோ, சென்னையிலோ,சுயம்வரம் நடத்தினால் தீர்வு கிடைக்கும் அல்லவா?
நம் நகரத்தார் இனத்தை சேர்ந்த கைம் பெண்கள்,விவாகரத்து ஆன பெண்கள், ஆகியோருக்குமறுவாழ்வளித்து, திருமணத்திற்க்கு பெண்கள் இல்லாத குறையை போக்கும் நடவடிக்கையில் ஈடுபடலாம் அல்லவா?

கேள்வி -3

32-35 க்கு மேல்,திருமணமாகாமல் பையன்கள் இருக்க காரணம்...தகுதிக்கு மீறிய எதிர்பார்ப்புகளாடு பையனை பெற்றவர்கள் இருப்பதும்,
பையனுக்கு படிப்பு குறைவாகவும்,
மாத வருமானம் குறைவாகவும்,
பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியவர்களாக இருக்கும் பட்சத்தில்,
பொண்ணை பெற்றவர்கள் மனதில்,
இவன் நம் பெண்ணை வைத்து காப்பாத்தவானா?என்ற ஐய்யத்தினால்
பெண் குடுக்காமல், திருமணங்கள் தள்ளிப்போனவர்களா?
இல்லை எல்லா தகுதியும் இருந்து பெண்கள் கிடைக்காததால் திருமணம் நடக்கவில்லையா? அப்படி என்றால்,
இப்பொழுதும் வருடத்துக்கு பல நூறு திருமணங்கள் செட்டிநாட்டில் நடந்து கொண்டு தானே இருக்கின்றது?


என் மனசுல பட்டது...
பொண்ணு இல்லன்னு, அதுக்கு தீர்வா,
யார் வேண்ணா,யார வேண்ணா கலியாணம் பண்ணிக்கலாம்னு, கூட்டம் போட்டு முடிவெடுத்தா?அது இன அழிப்பை நோக்கிய பாதையே தவிர வேறு என்ன? அப்படிப்பட்ட கலப்பட இனத்துக்கு பெயர் தான் என்னவோ?மொத்தத்தில்,இது போன்ற கூட்டங்களுக்கு செல்லாமல் இருப்பதே சாலச்சிறந்தது!!

--- திரு. @Arun Muthu காரைக்குடி.

விளம்பரமும் அதற்கு எழுந்த சலசலப்பு விமர்சனமும் 1

பேராசிரியர் முத்துராமன் செட்டியார் அவர்கள் -
மதகுபட்டியில் இருந்து விடுத்திருக்கும் அவசர வேண்டுகோள்.
அன்புடையீர் வணக்கம்,
காரைக்குடியில் இன்று (01-05-2017 )நடக்க இருக்கும் கூட்டத்தில் வெளியே பெண் எடுப்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும், அதை முறைப் படுத்த எப்படிக் குழு அமைத்துச் செயல்படலாம் என்ற முடிவு எடுக்க இருப்பதாகத் தெரிகிறது.
முன்னோர்கள் பல நூற்றாண்டுகளாக நம் சமூகத்தை நல்ல ஒழுக்கத்தோடும் பாரம்பரியத்தோடும் கட்டிக் காத்து வந்திருக்கிறார்கள். இன்று திசை மாறிவிடக் கூடாது.
நம் இனத்தில் ஒருசில தவறுகள் நடந்திருக்கலாம்,
ஆனால் அவை நியாயப்படுத்தப்படவில்லை. உதாரணமாக வெளியே பெண் எடுத்தவர்கள் வெளியிலேயே இருந்துவிட்டார்கள்.


உள்ளே கொண்டுவரவில்லை. அதனால் ஜீன்(மரபும் மரபணுவும்) மாறாமல் அதே பாரம்பரியமும் திறமையும் தொடர்கிறது.
நல்ல பெயரும் மதிப்பும் மரியாதையும் இருக்கிறது. உலகில் வேறு எந்த இனத்தையும் ஒப்பிட முடியுமா தெரியவில்லை.
இன்றய கூட்டம், என்னை ஏற்காத இந்த இனத்தைச் #சீரழிக்க__வேண்டும் அல்லது இந்த மதிப்புமிக்க சமூகம் என் கட்டுப்பாட்டில் வர வேண்டும் என்று விரும்புவோர் முயற்சியாக இருக்கலாம்.
மற்றவர்கள் துணை போய்விடக் கூடாது. துணை போனால் கருங்காலிப் பட்டம் வந்துவிடும்.
தாங்கள் கலந்து கொண்டால் கலப்பு வேண்டாம் என்று வலியுறுத்துங்கள்.
செல்வோருக்கும் எடுத்துக் கூறுங்கள். முதலில் தொடர்பில் உள்ள அனைவருக்கும் இதை அனுப்புங்கள்.
உங்களை நம் பெண்களும் பிள்ளைகளும் பெரியோரும் போற்றுவார்கள்.
உங்களால் நிச்சயம் முடியும்.

பேராசிரியர் முத்துராமன் செட்டியார்,
மதகுபட்டி.
01-05-2017.
 
காரைக்குடி கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கவில்லை
என்பது மகிழ்வை தந்தாலும். பெண் பற்றாக்குறை காரணமாகவே இந்த #நயவஞ்கர்கள் சமூகத்தை திசை திருப்ப பார்க்கிறார்கள்.
நம் இனத்தில் பெண் பிள்ளைகள் பற்றாக்குறை என்பது #ஜோடிக்கப்பட்ட__கதை.
பெண்கள் அதிகம் படிப்பதில் தவறில்லை, ஆனால் அதுவே தலை கனமாக மாறி ஆடம்பர வாழ்க்கையை எதிர் பார்ப்பதும் பெற்றோர் சொல் கேளாமையும் தான் காரணம்.
நிறைய பெண்கள் காதல் திருமணம் செய்து கொண்டதும் இதனால் தான்.
இனி வரும் காலங்களில் தொழில் முனைவோரை ஊக்குவிப்பதற்காக மாநாடுகளை நடத்துவதோடு நிறுத்தி விடாமல், உண்மையிலேயே அவர்களுக்கு உதவவேண்டும்.
மாநாடுகள் வசதி படைத்தவர்களை மட்டுமே ஊக்குவிப்பதாக நான் நினைக்கிறேன்.


உண்மையிலேயே தொழில் செய்யும் நம் இளைஞர்களை ஊக்குவித்து, அதோடு பெண்ணை பெற்றவர்கள் திருமணம் செய்து வைத்தால் நிச்சயம் நம் சமுகம் வளர்ச்சி அடையும் என்பதில் சந்தேகம் இல்லை.

காசி சிதம்பரம் ,
கடியாபட்டி.
01-05-2017.



இன்று (01-05-2017) மாலை காரைக்குடியில் நடைபெற்ற கூட்டத்தில் எந்த ஒரு முடிவும் எடுக்க வில்லை.


நம் இனத்தின் மீது உள்ள உலகலாவிய உயர்ந்த நிலையை நாமும் காப்போம்.
நகரத்தார் பெரு மக்கள் அணைவரும் சிகரத்தார் என்றால் அது மிகையாகாது.
நம் பிள்ளைகளுக்கு நாம், நம் பாரம்பரியத்தை, சமுக ஒழுக்கத்தை அய்யா, ஆயா, அப்பத்தா, ஆத்தா, அயித்தை, வாழ்ந்த வாழ்க்கையை சொல்லிக்கொடுப்போம் .
#சின்ன__புள்ள__தனமா செயல்படும் ஒரு சிலரின் முயற்சிகளை முறியடிக்க
அணைவரும் இனைவோம்
வெல்வோம்.
பேராசிரியர் முத்துராமன் செட்டியார் அவர்களுக்கு நன்றி.

ரவி முருகப்பன்.
அரிமளம்.
01-05-2017.

விளம்பரமும் அதற்கு எழுந்த சலசலப்பு விமர்சனமும்

இந்த விளம்பரம் ஆச்சி வந்தாச்சு என்ற நகரத்தார் சமூகம் சார்ந்த மாதஇதழில் வெளிவந்து உள்ளது. இந்த விளம்பரத்தை அங்கீகரித்து மாத இதழில் வெளியீட்டதன் மூலம் ஆசிரியர் கூறவரும் செய்தி யாது ??
நகரத்தார் மலர் ஆசிரியரின் கருத்தை ஏற்று அதனை ஆதரித்து ஆச்சி வந்தாச்சு என்ற இதழும் தனது பயணத்தை தொடர்கின்றதா ??
இவர்கள் நகரத்தார் சமூகத்தை கலப்புர செய்திட தூண்டுகோலாக யாருக்காக செயல்படுகின்றனர் ??
ஒட்டு மொத்த நகரத்தார் சமூகத்தையும் கலப்புற்ற சமூகமாக மாற்றி யாரும் ஆச்சி ஆகலாம் யாரும் கோவில்மாலை பெறலாம் என்று நிலையினை யாருக்காக உருவாக்க முயல்கிறனர்??
இவற்றையெல்லாம் நகரத்தார்கள் கண்டும் காணாதவாறு ஒதுங்கிச் சென்றால் பண்பாடு பாரம்பரிய மிக்க கட்டுகோப்பான நகரத்தார் சமூகம்,
கலப்படத்தின் உச்சகட்ட கூடாரமாக மாறிவிடும் அபாயம் உள்ளது. கலப்புற்று செல்வதை ஆதரித்து அங்கிகரிப்பது போன்ற செய்திகள் நகரத்தார் மலரை தொடர்ந்து ,

தற்போது ஆச்சி வந்தாச்சு இதழில் விளம்பரமாகவும் வந்துள்ளது.
இதுபோல் முன்னரும் நிகழ்ந்துள்ளது. இன்று நகரத்தார்கள் விழித்துக் கொள்ளாவிட்டால் நமது தனித்துவ அடையாளங்கள் அழித்து ஒழிக்கப்படும் .
அன்று நமது பாட்டி ஆயாக்களும் அப்பதாக்களும் பாங்குடன் பண்பாடு மாறாது கூட்டுகுடும்பமாய் வாழ்ந்தது நமது வளவுகளில் தான் கவுன் அனிந்த சீனச்சிகளும் வெள்ளைக்காரிளும் தரவாட்டு வழியில் வந்த நாயர் , மேனன், நம்பியார் போன்ற வடுகச்சிகளும் மர்வாரி , குஜராத்தி , நாயிடுக்கள் , கன்னடச்சிகள் ஆச்சி என்ற பெயரில் ஒய்யாரமாய் வலம் வருவர். அப்பத்தா ஐயாக்கள் சிக்கனமாய் வாழ்ந்து கட்டிபோட்டு சென்ற வளவு வீடுகள் மற்றும் அதிகாரம் எல்லாம் தனதாக்கிக் கொள்வர்.
இது போன்று கலப்புற்று செல்ல ஆதரிக்கும் நகரத்தார் பத்திரிகைகளை இனியும் நாம் ஆதரிக்க கூடாது.இவற்றை நாம் புறக்கணித்து நமது கண்டனங்களை பதிவு செய்ய வேண்டும் . ஒரு சமூகம் சார்ந்த இதழ்கள் வெளிவரும் பொது அது அந்த சமூகத்தை வளமான பாதையில் கொண்டு செல்வதே அந்த இதழாசிரியரின் தலையாய கடமையாகும்.

---நகரத்தார் வரலாறு



/// இந்த விளம்பரத்தில் உள்ள தகவல்,என்னுடை கவனத்திற்க்கு வராமல், அச்சேறி விட்டது என்று வருத்தப்பட்டதோடு, இனி மேல்,இத்தகைய விளம்பரங்கள் ஆச்சி வந்தாச்சு இதழில் வராது என்று உறுதியாக சொன்னார். //
சரி, இவர் சொல்கின்றபடியே இவரது கடந்த கால நடவடிக்கைகள் இருந்ததா..??

நகரத்தார் மாண்புகளைப் பற்றிய கட்டுரைகளை வெளியிட்டால் அவர்களையும், அச்சடித்த அச்சகத்தையும் மிரட்டும் இரண்டாம்தரத்தினரை நாம் இன்னமும் சகித்துக்கொண்டுதான் இருக்கின்றோம்.
நகரத்தர் அல்லாதவர்களை, முகவரிக்கு கையேட்டில் பதிவு செய்து, புள்ளிகணக்கு காட்டுபவர்களை என்னெவென்று சொல்வது ????
நமது சமூகம் சார்ந்த தரவுகளையும், ஆவணப்படுத்தலையும் செய்வதற்கே பெரும் போராட்டம், மிரட்டல்.


இத்தனை காலமும் நகரத்தார் மலர் செய்யும் அணைத்தையும் வேடிக்கை பார்த்திருந்ததால் இன்று நாயர் / மேனன் வகையினர் உள்ளே உள்ள புல்லுருவிகளை ஊக்குவித்து மண்ணுளிப்பாம்பாகக் குடைந்து வருகின்றனர்.
ஆச்சி வந்தாச்சு ஆசிரியர் ஏதோ மயக்க நிலையில் இருந்து தெளிந்தது போல, என்னையறியாமல் வெளிவந்துவிட்டது என்று சொல்வது எந்த ஊர் சரக்கு என்று நமக்குத் தெரியவில்லை.
சரி, இவரது ஆச்சி வந்தாச்சு பதிப்பில் சில ஆண்டுகள் முன்னர் மேலவட்டகையில் நகரத்தார் அல்லாதவர்கள், நகரத்தார் படைப்பு வீட்டிற்கு பூசை போட்டதை படத்துடன் வெளியிட்டது இவரது சுய நினைவுடன் நடந்ததா ?? அல்லது மாற்றார் கட்டுப்பாட்டில் , அவர்கள் மேலாண்மையில் வெளிவந்ததா..????
ஒன்றரை ஆண்டுகள் முன்னர் நகரத்தார் மலர் சென்னை ஐந்து நட்சத்திர விடுதியில் பொதுப் படைப்பு நடத்துகின்றோம் என்று அறிவித்த போது எத்தனை பேர் இதனை எதிர்த்தார்கள்..?
பொதுப்படைப்பு, படைப்பு என்பதற்கான பொருளாவது அவர் அறிவாரா..?
அதற்கு முடிந்தவரை கண்டனங்கள் எழுந்தவுடன், தனது செயற்பாட்டின் வடிவத்தை மாற்றிக்கொண்டார். ஆனால் அவரது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை.
இன்று ஆச்சி வந்தாச்சு இதழில் // இனி மாலை வர இருப்பவர்களும் // என்று நுணுக்கமாக சதிராடியதும், அதனை இன்று அணைத்து நகரத்தார்களும் பக்கம் பக்கமாக பற்பல யூகங்களை / ஐயங்களை எழுதி இப்படி இருக்குமோ,அல்லது அப்படி இருக்குமோ என்று சிந்தனைகளை சிதறடிக்க வைத்தவர், கோமா நிலையிலோ அல்லது, அறியா நிலையிலோ இல்லை என்பதை நாம் உணரவேண்டும்.
காரணம் இவர்கள் பின்னிவரும் நூல்வேலியினைத் தொடர்ச்சியாகப் பார்த்தால் புரியும்.
பின்னால் இருந்து இயக்கும், ஒரு மாபெரும் மாஃபியா கூட்டம் என்பதை.
இவற்றுக்கு பல ஆண்டுகள் முன்பே திட்டமிட்டு இரண்டு தலைமுறையாக பல்முனை தாக்குதல் நடத்தி, இறுதியாக சிலபல அவசர போலி கூட்டங்களை மலையாள விடுதிகளில் சுழிபோட்டு, இன்னபிற நகரத்தர் அமைப்புகளையும் சிறுகச் சிறுக அணிசேர்த்து, நகரத்தார் சமூகத்தை சங்கரமடமாக மாற்ற முயல்வதும்,
கூடவே தலைமுறை தலைமுறையாக நீர்க்கச் செய்து, இனி மாலை வர இருப்பவர்களின் புள்ளிவிவரங்களைக் கடந்த முப்பது ஆண்டுகளாக சேகரித்தும் வைத்துள்ளனர்.
வெளியே நமக்குள்ள எதிரிகளைவிட, உள்ளே உள்ள உட்பகையினை மிகக் கவனமாகக் கையாளவும் வேண்டும், உணரவும் வேண்டும்.

நன்றி,
நகரத்தார் வரலாறு.
07-05-2017.



#மாசிலாநாதரும்__மாசற்ற__வாழ்வும் :-


நன்றாக ஞாபகம் உள்ளது. 1989 ஆம் ஆண்டு இந்தக் குறிப்பினை எனது தந்தையார் கத்தரித்து வைத்துவிட்டு என்னிடம் திரு.எட்மன்ட்ஸ் அவர்கள் பற்றிய ஞாபகம் உள்ளதா என்கிறார்.


நன்றாக உள்ளதப்பா என்றேன். அதன் உள்ளடக்கத்தைப் படித்தேன். அதற்கும் மேல் சிறிய வயதில் உள்ள ஞாபகங்கள் மட்டுமே மனதில் படமாக ஓடியது.
அவருடன் தரங்கை கோட்டையின் கொத்தளத்தில் (அவர் மூன்று சக்கர வண்டியில் அமர்ந்து கொண்டு, தானே வண்டியினை ஒட்டிக்கொண்டு தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையில் எனது தந்தையாருடன் விவாதித்துக்கொண்டிருப்பார்.



வாங்க ஆவுடையப்பன், பையன விளையாட விடுங்க நாம் பேசிக்கிட்டிருப்போம்.

புல்வெளியில் அதனை ஒட்டிய சீகன் பால்க் ஐயர் வந்திறங்கிய நினைவுத் தூண் அருகிலும் ( அப்போதே மிகவும் சிதைந்துபோயிருந்தது) சுடு மட் செங்கற்களையும், சிப்பிகளையும் எடுத்துக்கொண்டு, இடிந்த கோட்டைச் சுவர் வரை சென்று முடிந்தவரை எனது உயரத்திற்கு, எட்டி எட்டிப் பார்த்து ஆர்ப்பரிக்கும் தரங்கம்பாடி கடற்கரையினை, அதன் வேகத்தை, அந்த அலைக்கடலில் பொங்கு நுரையுடன் கொப்பளிக்கும் வரலாற்றினை புரியாமலேயே புரியாத வயதில் மூச்சுக்கு காற்றின் இறைப்புடன் உள்வாங்கிக்கொண்டிருந்தேன்.



மிதி வண்டியில் இருந்து துள்ளிக் குதித்தவுடன், டாக்டர் எட்மண்டஸ் அவர்களின் கைகளை பற்றி ஐயா வணக்கம் என்று சொன்னவுடன், எனது கடற்கரை பெருவெளிக்கு சென்றுவிடுவேன்.

கூ.. கூ... வென்று ஆர்ப்பரிக்கும் கடல் காற்று, அத்தோடு சேர்ந்து உவர்க்கும் எங்கள் பாட்டன்மார்களின் உப்பும் உடலை வருடும் போதே,
கால்கள் மணலில் பதிந்து, புதைந்து வேகத்தைக் குறைத்தாலும், அந்தக் கொத்தளத்தில் உள்ள வரலாற்றைத் தெரிந்துகொள்ளாமலேயே.... உணர்ந்துகொண்டிருப்பதும் ஒவ்வொரு வாரமும் இயல்பானது.
( டாக்டர் எட்மண்டஸ் அவர் என்ன மருத்துவரா அல்லது பேராசிரியரா என்பதை கூட 1989 ஆம் ஆண்டு தந்தையுடன் உரையாடும் போது கேட்டுக்கொள்ளவில்லை. ஏன் என்றும் தெரியவில்லை.பிழைப்பும் அதனைப் பின் தொடரும் வாழ்க்கையுமே அன்றைய மனநிலையில் இருந்தபோது நான் தவறவிட்டது எத்தனையோ.?)



பிறையாற்றுச் சோழர்களின் தலைநகராகவும் (இன்றைய பொறையாறு) , அவர்களின் முதன்மை இயற்கை துறைமுகமாகவும் (தரங்கம்பாடி), பிந்தைய வந்தேறிகளின் ஆட்சிக்காலம் வரையிலும் தமிழர்களின் கடல்சார் மேலாண்மையில் - காவிரிப்பூம்பட்டினம் (சோழநாடு) / கொற்கை, மருங்கூர்பட்டினம், தொண்டி -( பாண்டிய நாடு) போன்ற கிழக்கு கடற்கரையின் தமிழர் மேலாண்மை சொல்லும் ஒரு அறிய இயற்கை துறைமுகம் சடங்கம்பாடி என்றும் / குலசேகரன்பட்டினம் என்றும் அறியப்படும் தரங்கம்பாடி.






தமிழர்களின் சீன கடல்சார் வணிகம் பன்நெடுங்காலம் (காவிரிப் பூம்பட்டினத்தின் முடிவிற்குப் பின்னரும்) தொடர்ந்திருந்ததை தரங்கம்பாடி/சடங்கம்பாடி/ குலசேகரன்பட்டினம் என்ற ட்ராங்குபார் என்ற இந்த ஊர்.
இதற்கு சான்று சொல்வது அங்கே 20 ஆம் நூற்ராண்டு வரையில் இருந்து அதன் முற்பகுதியில் பாதிக்கும் மேல் கடல் கொண்ட மாசிலா நாதர் என்ற சிவன் கோவிலே.
நான் அன்று விளையாடிக்கொண்டிருக்கும் போது, கிட்டத்தட்ட உண்ணாழி வரை கடல் வந்திருந்தது.



அதற்கும் முந்தைய பகுதிகளான முகப்புமாடம், கொடிமரம், அர்த்தமண்டபம் அனைத்தையும் ஆர்ப்பரிக்கும் கடல் கபளீகரம் செய்திருந்தது.
அந்த மண்டபத்தின் இறுதிப்பகுதி சீனர்களின் கலைப்பாங்கில் வேயப்பட்டதாக இருந்துள்ளதை டேனிஷ் கோட்டையின் மேற்புற கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து வரைந்த ஐரோப்பிய ஓவியன் பதிவு செய்துள்ளதையும் அதன் படிவம் ஒன்று கோபன்ஹேகன் அருங்காட்சியகத்தில் உள்ளதையும் திரு.எட்மன்ட்ஸ் கூறியதாக என் தந்தையார் கூறினார்.
அந்த கத்தரித்த காகிதத்தை எனது ஆவணக் காப்பகத்தில் சேர்த்துக்கொண்டேன்.
ஆனால் அன்று அவருடன் பேசித் தெரிந்துகொள்ள வேண்டிய பலவற்றை தவறவிட்டேன்.

திரு.எட்மன்ட்ஸ் தரங்கம்பாடியில் இருந்து கங்காணிகளின் வாயிலாக பல தொழிலாளர்கள் வெள்ளையர்களால் நங்கூரமிடப்பட்ட நீராவிக்கப்பலில் பலரையும் ஏற்றிச் சென்றதாகவும் அதன் பின்னர் இந்தத்துறைமுகம் பயன்பாட்டிலிருந்து விடுபட்டதையும் கூறியிருந்தார்.
அப்படிச் சென்றவர்களின் ஒரு குடும்பம் தான் தில்லையாடி வள்ளியம்மை.
தில்லையாடி என்று தற்போது அறியப்படும் தில்லையாளி என்று சோழ சாசனங்கள் கூறப்படும் ஊர்தான் அன்னை வள்ளியம்மையின் சொந்த ஊர்.
இதற்கு 1915 ஆம் ஆண்டு வாக்கில் காந்தியடிகளும் பிறையாறு என்ற பொறையாறு வந்து தங்கி அவர்கள் குடும்பத்தை பார்த்துவிட்டுச் சென்றதும் வரலாற்றில் உண்டு.



பொறையாறு என்று தற்போது வழங்கப்படும் பிறையாறு என்ற ஊர் அப்போதைய பிறையாற்றுச் சோழர்களின் தலை நகராகவும் இருந்துள்ளது.
இந்த ஊரின் வழியாகவே காவிரியின் கிளைகளில் ஒன்றான உப்பனாறு என்ற ஆறும் (வடகிழக்கில் பாய்ந்து தரங்கம்பாடியில் கழிமுகமாய் கலக்கும்),
கூடவே காவிரியின் மற்றுமொரு கிளை நதியான நந்தலாறு (பொறையாற்றின் தெற்கு எல்லையாகவும் ) என்ற ஆற்றின் கழிமுகமும் கலக்கும்.
இந்த இடைப்பட்ட பகுதியில் அன்று உப்பனாறு வலஞ்சுழியும் (MEANDER) ஆறு பிறைபோல வந்து வளஞ் சூழ்ந்து வலம் வரும் அழகிய நிலப்பகுதிதான் இந்த சோழர்குடித் தலைநகரும் அதன் சங்ககாலம் தொட்டு வாழ்வாங்கு வாழ்ந்த குலசேகரன்பட்டினமும்.



அன்று தஞ்சை ரகுநாத் நாயுடு, தனது உல்லாச வாழ்க்கைக்காக டேனிஷ் வணிகர்களுக்கு தாரைவார்க்கப்பட்ட ஊர்தான் #தரங்கம்பாடி.
டேனிஷ் கோட்டை கட்டிய பின்னர் (1700 களில் ), தரங்கம்பாடி என்று ஊரும் அதில் உள்ள மக்களும் அதன் இயற்கை துறைமுகமாக இருந்த உப்பனாற்றின் கழிமுகமும் முழுமையாகவே கிட்டங்கி / கோட்டை / கொத்தளம் / தன்னாட்சி நிர்வாகமும் செய்துகொள்ள விட்டுவிட்டான்.
அன்றிலிருந்து அந்த நகருக்கும் கோட்டைக்குமான அரசகுடும்ப வைசிராய், காவற்படை, நிர்வாக ஆளுநர், தன்னாட்சி பெற்ற தனி நீதி மன்றம், சிறைக்கூடம், போர்தளவாடம் / வணிகப்பொருட்களுக்கான கிட்டங்கி என்று ஒரு தனி இறையாண்மை கொண்ட நாட்டினையே உருவாக்கினார்கள்.
இந்த மண் / மக்கள் என்று எல்லாவற்ரையும் தாரைவார்த்த ரகுநாத் நாயுடு தஞ்சையில் உல்லாசபோகம். இவனைத்தான் தமிழ்நாடு திராவிட அரசு கடைசி தமிழ் மன்னனாக (ஒரு தெலுங்கனை) அந்தப் பகுதி வரலாற்றில் பதிந்துள்ளனர்.

வெள்ளையனிடம் உடன் படிக்கை செய்துகொண்ட பின்னர் கோட்டை கொத்தளம் அங்கே மண்ணின் மைந்தர்களான மக்களையும் - தமிழ் கடலாடிகளையும் சேர்த்தே சில லட்சத்திற்கு விற்று முடித்துச் சென்றனர்.
அதன் பின்னரே வெள்ளையர் கொட்டமும் தமிழர்களின் புலம்பெயர் அவலங்களும் நிகழ்ந்தன.
மெல்ல மெல்ல கடல் ஆர்ப்பரித்து கரையினைக் கரைகின்றது. உப்புக்காற்றும் ஆர்பரிப்பும் ஓயவில்லை.

எம்மவர் முன்னர் வாழ்ந்த வரலாற்றின் சுவடுகள் மட்டும் மறைந்து வருகின்றது.
மாசிலாநாதரே.......!!!!
மாசற்ற தமிழர் வாழ்வை என்ன செய்ய நினைத்தீரோ...!!!???


அன்புடன்,
வேணும் அருள்மிகு பொய்சொல்லா மெய்யர் துணை.
நெற்குப்பை காசி விசுவநாதன்.
" வரலாற்றில் விழிப்பு ; எதிர் காலத்தின் மீட்பு "
11-05-2017.

கேள்வி பதில்

#குறிப்பு- :
வடுக மலையாள துணையுடன், சென்னையில் கடைவிரித்த தெலுங்குச் செட்டிகளின் அனுசரணையுடன்,
மயிலாப்பூரில் பல லட்சம் செலவு செய்து மோசடிக் கூட்டங்கள் நடைபெறுவதற்கு முன்னரே அத்தனையும்,அதனை முன்னெடுக்கும் செட்டிநாட்டு பகுதியின்
வாட்சப் நாட்டாமைகளின் பதிவுகளின் சாரத்தையும்,ஏழை எளிய நகரத்தார் மக்களின் உள்ளக்குமுறலையும் துல்லியமாக ஆய்ந்து விளக்கமளிக்கப்பட்ட கட்டுரையின் ஒரு பகுதி.



09-10-2016 தேதியில் வெளியிடப்பட்டது.
புகைப்படம் உதவி Valliappan Ramanathan அண்ணன் அவர்கள் தேவகோட்டை.
--- நகரத்தார் வரலாறு.

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

கேள்வி :-
கலப்பில் பிறந்த குழந்தைகள் தந்தை வழியில் தானே அடையாளம் காணப்படுவார்கள், அப்படியெனில் தந்தை வழி வந்தவர்களை செட்டிக்குப் பிறந்தால் செட்டி என்று நாம் ஏற்கலாமா ??


பதில் :-
#முடியாது.



அப்படி தந்தை வழி பிறந்த, தமிழ் இனக்குழுக்களில் மணமுடித்துபிறந்த எத்தனை பேரை நீங்கள் கோயில்மாலை கொண்டு ஏற்றுக்கொண்டீர்கள் ?? அதாவது, மாறிவிட்ட அரசியல் சூழலில், இருக்கின்ற அரசியல் அதிகாரத்திற்குப் பணிந்து இப்படி நயந்து போவது எந்த வகை நியாயம் ?? வெள்ளைத்தோல், கொள்ளைப்பணம் என்பது ஒரு இழிவுதான். பெருமையல்ல.
அப்படிப் பார்த்தாலும் கூட, உங்களால் விடுபட்டவர்களை அழைத்து வந்து மீண்டும் சேர்த்துக்கொள்ள முடியுமா ???
சரி, இன்று சட்டதிட்டங்களை மாற்றிவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா என்ன ??
இல்லை, மாறாக தற்போதைய சூழலில் எங்கள் பிள்ளைகள் உள்ளூரில் உள்ள கருப்பான தமிழச்சிகளை தேடவில்லை, ரெட்டிகளையும் ரொட்டிகளையும், நாயுடுக்களையும், நாயர்களும், சீனர்களையும் கொண்டுவருகின்றார்கள்,
ஆகவே உள்ளூரில் இந்தியாவில் - வேற்று மாநிலத்தவரை முதலில் மெதுவாக நுழையவிட்டால், இனி எல்லாம் சுகமே, என்று சுபம் போட்டுவிடலாம் என்று #மனப்பால் குடிப்பதுதான் தவறு.
தந்தை வழியில்தான் குழந்தைகளுக்கு இனக்குழு அடையாளம் என்பது கிடையாது.
இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால்,
தந்தை வழியில் வந்த ஒரே காரணத்திற்காக குலவழிப் பெருமைகளையும், அடையாளத்தையும் தாரை வார்க்க முடியாது.
அதாவது பட்டனுக்குப் பிறந்தவர்கள் பட்டினத்தார் அடையாளத்தை களவாட முடியாது.
துணை போகும் நாட்டாமைகளை அப்படியே ஏற்கவும் முடியாது.


--- அருள்மிகு நித்ய கல்யாணி உடனாய கைலாச நாதர் துணை.
--- மேலவட்டகை மெய்கண்டான்.
09-10-2016.


இந்த photo வில் இருக்கும் நகரத்தார் ( ஆண்.பெண்.ஆண் பிள்ளை. பெண் பிள்ளைகள் ) முகங்களை பாருங்கள்.. பின் நாளில் நம் வழிதோன்றல்கள் தவறு செய்ய மாட்டார்கள்.என்ற நம்பிக்கையோடும்.. நகரத்தார் சமூகம் ஒற்றுமையோடு கட்டுப்பாட்டோடு இருக்கும் என நம்பிக்கையோடும்..வாழ்ந்து சென்றவர்கள்...காரை செடிகள் மண்டிக்கிடந்த மேட்டை.. காடு திருந்து கழனி செய்து ஊருணி அமைத்து 96 கிராமமாக.. நகரமாக மாற்றி...கடல் கடந்து சென்று சிறுக சிறுக சேமித்து தலைமுறை வாழ மாட மாளிகை கட்டி..சமூக கட்டுப்பாடுகளை வரைமுறைகளை விட்டு சென்ற இவர்களுக்கா நீங்கள் துரோகம் செய் நினைக்கீர்கள்...வேற்று இன கலப்பு திருமணம் கூடாது...  @surya preethi 

Sunday, 21 May 2017

வரலாறு

வரலாற்றைப் படியுங்கள்,
வரலாற்றை விவாதியுங்கள்,
வரலாற்றை ஆய்வு செய்யுங்கள்,
வரலாற்றை பரப்புரை செய்யுங்கள்.
ஒரு துடிப்பான இனம் விழிப்புடன் இருக்கின்றதென்றால்...???
அது வரலாற்றில் இருக்கும் உயிர்ப்பும், துடிப்பும் மட்டுமே சான்று சொல்லும்.
வரலாறு மறந்தால், பண்பாட்டையும், அரசியல் இறையாண்மையினையும் இழக்க நேரிடும்.


நன்றி.
----வேணும் அருள்மிகு பொய்சொல்லா மெய்யர் துணை.
---- நெற்குப்பை காசி விசுவநாதன்.
14-05-2016.

புகைப்படம் உதவி திரு. Valliappan Ramanathan அவர்கள், தேவகோட்டை.

தமிழனிடம் அதிகமாக, சொத்து - பணம் இருந்தால், வடுகர் பெண்டுகள் நுழைந்துவிடுவார்கள்.இது ஒரு வகை குடும்ப முறை விபச்சாரம்.
அதே சமயம் இனக்கூறு அடையாளம், தெளிவின்மை கொண்ட தலைமுறை தங்கள் குடும்ப அடையாளங்களையும்,குடும்ப அமைப்புகளையும் சிதைத்துக்கொண்டனர்.
கோவலன் இழந்தது பொருளும் , உயிரும் மட்டுமல்ல.
கண்ணகியின் வாழ்வும்தான்.
இன்று சிலபல மேற்படியாளர்கள் தமிழினத்தின் அடையாளத்தையே கலப்பாக்கி குட்டையாக்குகின்றனர்.
குடும்பத்தில் தெளிவும் அமைப்பும் இனி வருங்காலங்களில் மிக மிக அவசியம்.


எதை இழந்தாலும் நமது இனம் / வரலாறு இவற்றை மறந்தால் நமது சந்ததி முழுமைக்கும் கேடுதான்.
கேடுற வாழ்ந்து, இனம் பாழ் பட வாழ்வது துரோகம்.
துரோகத்தை தெரிந்தே செய்வதைத்தான்.....என்னவென்று சொல்வது..?


வேணும் அருள்மிகு பொய்சொல்லா மெய்யர் துணை.
நெற்குப்பை காசி விசுவநாதன்.
08-05-2017.

முகநூல் செய்தி

ஐயா திரு.கம்ப ராமன் சண்முகம் அவர்கள் விடுத்துள்ள செய்தியினை இங்கே பகிர்ந்துகொள்கின்றோம்.
அன்புடையீர் வணக்கம்,
நம் சமுதாய சீர்திருத்தம் பற்றி அவரவர் நோக்கத்திற்கு கூட்டம் மாநாடு நடத்துவதை நாம் அனைவரும் ஒருசேர தடைசெய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
திரு. இளங்கோ போன்றவர்கள் திருமண சேவை என்ற பெயரில் சமூக சேவைகள் நடத்துவதை பாராட்டி வரவேற்கிறேன்,
ஆனால் உணர்வுபூர்வமான பாரம்பரிய கலாச்சார பண்பாட்டுகளுக்கு பங்கம் வரும்படி நம் இனத்தை திசை திருப்பும் செயலை நாம் ஆதரிக்க கூடாது.
இப்படியே அவரவர் தேவைக்கேற்ப பத்திரிகை நடத்துபவர்கள், காரியம் நடத்திக்கொண்டு போனால் நம் சமுதாய கூட்டங்கள் கூட்டும் உரிமைகளையும் நாம் இழந்து விடுவோம்.


கோவிலூர் 96 ஊர்கூட்டம் தான் சட்ட பூர்வமான சம்பிரதாயமான பாரம்பரியமான கூட்டமாகும்.
அதை நாம் இழந்து விடலாகாது.
இன்றைய காரைக்குடி கூட்டம் தேவையில்லாத நமக்குள் குழப்பத்தை விளைவிக்கிற கூட்டமாகும்.
இளங்கோ போன்றவர்கள் இது மாதிரி நடந்து கொண்டது எதிர்பாராதது,
அவசியமற்றது தேவையற்றது
தயை செய்து நம் நகரத்தார் பாரம்பரிய நாகரிகங்களை இழந்து விடவேண்டாம்,
நகரத்தார் சம்பந்தமாக கூடுவதாக இருந்தால் கோவிலுரில் தான் கூட வேண்டும்.
மற்றவை எல்லாம் அவரவர் சுய விருப்பம்.

அன்புடன்,
கம்ப ராமன் சண்முகம்.
01-05-2017.

Saturday, 20 May 2017

அவசரச்செய்தி

அனைவரும் இன்று காரைக்குடியில் 3 மணிக்கு சிங்கார் ஒட்டலில் நடக்கும் கூட்டத்துக்கு சென்று நம் எதிர்ப்பை கடுமையாக தெரிவிக்கவும் கூட்டம் நடத்துவர்களில் நாடகத்தை வெளியில் தெரியப்படுத்துவோம்,
நகரத்தார் சமூகத்தில் திருமணம் செய்யாதவர்களை புள்ளிகளாக சேர்க்க முயற்ச்சிக்க வேண்டாம்,
அந்த முயற்ச்சி தோல்வியில் தான் முடியும்,
23-24 வயதிலேயே திருமணம் பேச ஆரம்பிக்க சொல்லவும்.

அவர்களை புள்ளிகளாக சேர்த்தால் வெளிநாட்டில் இருந்து சிலர் புள்ளியாக சேர்க்க சொல்லி வருவார்கள் மேலும் இனி திருமணம் செய்ய இருக்கும் பிள்ளைகளும் அவரவர் இஷ்டம் போல் திருமணம் செய்யும் கட்டுப்பாடு இல்லத நிலை வரும்,



மேலும் இது நகரத்தார் இனம் அழிக்கும் முயற்ச்சியாக கருதப்படும், இது போல் கூட்டம் நடத்தும் முயற்ச்சியை கைவிட்டால் நன்றாக இருக்கும்.
அவர்களை புள்ளிகளாக சேர்த்தால் பர்மா போன்ற வெளிநாட்டில் இருந்து சிலர் புள்ளியாக சேர்க்க சொல்லி வருவார்கள் மேலும் இனி திருமணம் செய்ய இருக்கும் பிள்ளைகளும் அவரவர் இஷ்டம் போல் திருமணம் செய்யும் கட்டுப்பாடு இல்லத நிலை வரும்,

மேலும் இது நகரத்தார் இனம் அழிக்கும் முயற்ச்சியாக கருதப்படும், இது போல் கூட்டம் நடத்தும் முயற்ச்சியை கைவிட்டால் நன்றாக இருக்கும்.
இந்த நகரத்தார் மலர் மூலம் நடக்கும் இந்த கூட்டத்தில் நகரத்தார் சமூகத்தில் திருமணம் செய்யாதவர்களை மற்றும் வேற்று மதத்தில் செய்ய ஊக்கப்படுத்தி தீர்மானம் நிறைவேற்றி புள்ளிகளாக சேர்க்க முயற்ச்சி நடப்பதாக அறிகிறேன் அந்த முயற்ச்சி தோல்வியில் தான் முடியும்,



இதற்க்கு பின்னால் பாதிக்கபட்ட சில பெரிய இடங்கள் இருப்பதாக கருதுகிறேன், முருகா நல்ல நகரத்தார் சமுகம் பாதுகாக்கபட வேண்டும்.
அவசரம் இதை அனைத்து நகரத்தார் குருப்புகளுக்கும் பகிரவும்

----@Mr.Adaikalavan chidambaram.