Tuesday 23 May 2017

விளம்பரமும் அதற்கு எழுந்த சலசலப்பு விமர்சனமும்

இந்த விளம்பரம் ஆச்சி வந்தாச்சு என்ற நகரத்தார் சமூகம் சார்ந்த மாதஇதழில் வெளிவந்து உள்ளது. இந்த விளம்பரத்தை அங்கீகரித்து மாத இதழில் வெளியீட்டதன் மூலம் ஆசிரியர் கூறவரும் செய்தி யாது ??
நகரத்தார் மலர் ஆசிரியரின் கருத்தை ஏற்று அதனை ஆதரித்து ஆச்சி வந்தாச்சு என்ற இதழும் தனது பயணத்தை தொடர்கின்றதா ??
இவர்கள் நகரத்தார் சமூகத்தை கலப்புர செய்திட தூண்டுகோலாக யாருக்காக செயல்படுகின்றனர் ??
ஒட்டு மொத்த நகரத்தார் சமூகத்தையும் கலப்புற்ற சமூகமாக மாற்றி யாரும் ஆச்சி ஆகலாம் யாரும் கோவில்மாலை பெறலாம் என்று நிலையினை யாருக்காக உருவாக்க முயல்கிறனர்??
இவற்றையெல்லாம் நகரத்தார்கள் கண்டும் காணாதவாறு ஒதுங்கிச் சென்றால் பண்பாடு பாரம்பரிய மிக்க கட்டுகோப்பான நகரத்தார் சமூகம்,
கலப்படத்தின் உச்சகட்ட கூடாரமாக மாறிவிடும் அபாயம் உள்ளது. கலப்புற்று செல்வதை ஆதரித்து அங்கிகரிப்பது போன்ற செய்திகள் நகரத்தார் மலரை தொடர்ந்து ,

தற்போது ஆச்சி வந்தாச்சு இதழில் விளம்பரமாகவும் வந்துள்ளது.
இதுபோல் முன்னரும் நிகழ்ந்துள்ளது. இன்று நகரத்தார்கள் விழித்துக் கொள்ளாவிட்டால் நமது தனித்துவ அடையாளங்கள் அழித்து ஒழிக்கப்படும் .
அன்று நமது பாட்டி ஆயாக்களும் அப்பதாக்களும் பாங்குடன் பண்பாடு மாறாது கூட்டுகுடும்பமாய் வாழ்ந்தது நமது வளவுகளில் தான் கவுன் அனிந்த சீனச்சிகளும் வெள்ளைக்காரிளும் தரவாட்டு வழியில் வந்த நாயர் , மேனன், நம்பியார் போன்ற வடுகச்சிகளும் மர்வாரி , குஜராத்தி , நாயிடுக்கள் , கன்னடச்சிகள் ஆச்சி என்ற பெயரில் ஒய்யாரமாய் வலம் வருவர். அப்பத்தா ஐயாக்கள் சிக்கனமாய் வாழ்ந்து கட்டிபோட்டு சென்ற வளவு வீடுகள் மற்றும் அதிகாரம் எல்லாம் தனதாக்கிக் கொள்வர்.
இது போன்று கலப்புற்று செல்ல ஆதரிக்கும் நகரத்தார் பத்திரிகைகளை இனியும் நாம் ஆதரிக்க கூடாது.இவற்றை நாம் புறக்கணித்து நமது கண்டனங்களை பதிவு செய்ய வேண்டும் . ஒரு சமூகம் சார்ந்த இதழ்கள் வெளிவரும் பொது அது அந்த சமூகத்தை வளமான பாதையில் கொண்டு செல்வதே அந்த இதழாசிரியரின் தலையாய கடமையாகும்.

---நகரத்தார் வரலாறு



/// இந்த விளம்பரத்தில் உள்ள தகவல்,என்னுடை கவனத்திற்க்கு வராமல், அச்சேறி விட்டது என்று வருத்தப்பட்டதோடு, இனி மேல்,இத்தகைய விளம்பரங்கள் ஆச்சி வந்தாச்சு இதழில் வராது என்று உறுதியாக சொன்னார். //
சரி, இவர் சொல்கின்றபடியே இவரது கடந்த கால நடவடிக்கைகள் இருந்ததா..??

நகரத்தார் மாண்புகளைப் பற்றிய கட்டுரைகளை வெளியிட்டால் அவர்களையும், அச்சடித்த அச்சகத்தையும் மிரட்டும் இரண்டாம்தரத்தினரை நாம் இன்னமும் சகித்துக்கொண்டுதான் இருக்கின்றோம்.
நகரத்தர் அல்லாதவர்களை, முகவரிக்கு கையேட்டில் பதிவு செய்து, புள்ளிகணக்கு காட்டுபவர்களை என்னெவென்று சொல்வது ????
நமது சமூகம் சார்ந்த தரவுகளையும், ஆவணப்படுத்தலையும் செய்வதற்கே பெரும் போராட்டம், மிரட்டல்.


இத்தனை காலமும் நகரத்தார் மலர் செய்யும் அணைத்தையும் வேடிக்கை பார்த்திருந்ததால் இன்று நாயர் / மேனன் வகையினர் உள்ளே உள்ள புல்லுருவிகளை ஊக்குவித்து மண்ணுளிப்பாம்பாகக் குடைந்து வருகின்றனர்.
ஆச்சி வந்தாச்சு ஆசிரியர் ஏதோ மயக்க நிலையில் இருந்து தெளிந்தது போல, என்னையறியாமல் வெளிவந்துவிட்டது என்று சொல்வது எந்த ஊர் சரக்கு என்று நமக்குத் தெரியவில்லை.
சரி, இவரது ஆச்சி வந்தாச்சு பதிப்பில் சில ஆண்டுகள் முன்னர் மேலவட்டகையில் நகரத்தார் அல்லாதவர்கள், நகரத்தார் படைப்பு வீட்டிற்கு பூசை போட்டதை படத்துடன் வெளியிட்டது இவரது சுய நினைவுடன் நடந்ததா ?? அல்லது மாற்றார் கட்டுப்பாட்டில் , அவர்கள் மேலாண்மையில் வெளிவந்ததா..????
ஒன்றரை ஆண்டுகள் முன்னர் நகரத்தார் மலர் சென்னை ஐந்து நட்சத்திர விடுதியில் பொதுப் படைப்பு நடத்துகின்றோம் என்று அறிவித்த போது எத்தனை பேர் இதனை எதிர்த்தார்கள்..?
பொதுப்படைப்பு, படைப்பு என்பதற்கான பொருளாவது அவர் அறிவாரா..?
அதற்கு முடிந்தவரை கண்டனங்கள் எழுந்தவுடன், தனது செயற்பாட்டின் வடிவத்தை மாற்றிக்கொண்டார். ஆனால் அவரது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை.
இன்று ஆச்சி வந்தாச்சு இதழில் // இனி மாலை வர இருப்பவர்களும் // என்று நுணுக்கமாக சதிராடியதும், அதனை இன்று அணைத்து நகரத்தார்களும் பக்கம் பக்கமாக பற்பல யூகங்களை / ஐயங்களை எழுதி இப்படி இருக்குமோ,அல்லது அப்படி இருக்குமோ என்று சிந்தனைகளை சிதறடிக்க வைத்தவர், கோமா நிலையிலோ அல்லது, அறியா நிலையிலோ இல்லை என்பதை நாம் உணரவேண்டும்.
காரணம் இவர்கள் பின்னிவரும் நூல்வேலியினைத் தொடர்ச்சியாகப் பார்த்தால் புரியும்.
பின்னால் இருந்து இயக்கும், ஒரு மாபெரும் மாஃபியா கூட்டம் என்பதை.
இவற்றுக்கு பல ஆண்டுகள் முன்பே திட்டமிட்டு இரண்டு தலைமுறையாக பல்முனை தாக்குதல் நடத்தி, இறுதியாக சிலபல அவசர போலி கூட்டங்களை மலையாள விடுதிகளில் சுழிபோட்டு, இன்னபிற நகரத்தர் அமைப்புகளையும் சிறுகச் சிறுக அணிசேர்த்து, நகரத்தார் சமூகத்தை சங்கரமடமாக மாற்ற முயல்வதும்,
கூடவே தலைமுறை தலைமுறையாக நீர்க்கச் செய்து, இனி மாலை வர இருப்பவர்களின் புள்ளிவிவரங்களைக் கடந்த முப்பது ஆண்டுகளாக சேகரித்தும் வைத்துள்ளனர்.
வெளியே நமக்குள்ள எதிரிகளைவிட, உள்ளே உள்ள உட்பகையினை மிகக் கவனமாகக் கையாளவும் வேண்டும், உணரவும் வேண்டும்.

நன்றி,
நகரத்தார் வரலாறு.
07-05-2017.



No comments:

Post a Comment