Tuesday, 23 May 2017

#செட்டிநாட்டு_சித்திரகுப்த_நாயனார்_பூசை :::


செட்டிநாட்டு பகுதிகளில் ஆச்சிகள் கடைபிடிக்கும் வழிபாட்டு முறைகளில் ஒன்று சித்திரகுப்த நாயனார் பூசை. இந்த பூசையானது முன்பு ஆச்சிமார்கள் மத்தியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வழிபாட்டு முறையான இருந்து வந்துள்ளது. தற்போது இந்த வழிபாட்டு முறையானது நேரம் இன்மை காரணமாக பலரும் கடைபிடிப்பது கிடையாது சிலர் இன்றும் இந்த வழிபாட்டு முறையை கடைப்பிடித்து வருகின்றனர்.




சித்தரகுப்பத நாயனார் பூசையானது சித்திரை மாதத்தில் வரும் சித்திரை நட்சத்திரதமும் முழுநிலவும் கூடும் நாளில் சித்திரகுப்த நாயனாரை நினைந்து பகல்பொழுதில் எதுவும் உண்ணாது நோன்பு இருந்து மாலையில் வழிபடுவர். இந்த நோன்பின் நோக்கம் நமது வாழ்வில் புன்னியங்கள் அதிகம் செய்திடவும் பாவங்கள் செய்யதிடாமல் இருக்கவும் செய்த பாவங்களில் இருந்து விடுபட பாவ புண்ணிய கணக்கு எழுதும் சித்திரகுப்த நாயனாரை தோன்றிய சித்திரை முழுநிலவு நாளில் அவரை நினைத்து வழிபாடானதுகடைபிடிக்கப்படுகின்றது 


.
முன்பு நகரத்தார்கள் திருமணத்தில் பெண்ணுக்கு வைக்கும் சாமான்களில் வெள்ளி மற்றும் வெண்கலத்தில் இந்த வழிபாட்டு பொருட்களான நிறைகுடத்திற்கான கலசம், தேங்காய், மாவிலை , ஏடு எழுத்தாணி , பாவர்னக் கிண்ணம் ( சிறிய 16 கிண்ணங்கள் ) குலையுடன் கூடிய மாங்காய் வெற்றிலை பாக்கு போன்ற பொருட்களையும் செய்து வைப்பர் சற்று வசதிபடைத்தவர்கள் வெள்ளியிலும் வெண்கலத்திலும் ஒருப்செட் செய்து வைப்பர். முன்பு திருமணத்தில் பெண்ணுக்கு வைக்கு வெள்ளிச் சாமான்களில் ஏடு எழுத்தாணி கட்டாயம் இடம்பெற்று இருக்கும்.

இந்த நோன்பானது இரண்டு விதமாக கடைபிடிக்கப்பட்டு வந்தது. அதில் ஒரு விதம் பாவர்னக் கிண்ணத்தில் (16 சிறிய கிண்ணங்கள்) நவதானியங்கள் , பஞ்சு , உப்பு , புளி மிளகாய், தட்டைப்பயறு , அருசி போன்றவற்றை எடுத்து வைத்தும் ( சில இடங்களில் பாவவர்ன கிண்ணத்தை சுலகின் மேல் வைத்து வழிபடுவர் )
மற்றொரு வகை இந்த பாவவர்ன கிண்ணத்த்தில் தானியங்கள் எதுவும் வைக்காது வழிபடுவதும் என்பது ஒருவகையான வழிபாட்டு முறை . தானியங்கள் வைப்பது மட்டுமே மாறுபடும் மற்றபடி இம்முறைகள் எல்லாம் ஒன்றாகவே அமைந்திருக்கும் .




சித்திரகுப்த நாயனார் வழிபாடானது பெரும்பாலும் மாலையில் விளக்கு ஏற்றிவைத்து நடுவிட்டுக் கோலமிட்டு ஒரு மனையிட்டு சித்திரகுப்பதர் உருவம் வரையத் தெரிந்தவர்கள் பச்சரி மாவில் வரைந்து வைத்தும் அல்லது மனைப்பலகையில் ஏடு எழுத்தாணி வைத்து மலர்சரங்கள் கொண்டு அலங்கரித்து உப்பு மற்றும் இனிப்பு கொழுக்கட்டை , பாயசம் ,பொங்கல் , மாவிளக்கு ,நீர்மோர் , பானகம் , வெள்ளரிக்காய் , கொத்தோடு மாங்காய் , குலையுடன் தேங்காய் மற்றும் நுங்கு , முக்கனிகள் , மற்றும் தாம்பூலம் வைத்து இயன்ற பலகாரங்கள் ( தென்குழல் , அதிரசம், சீடை , சீப்புசீடை , பணியாரம் ,வடை பொன்றவை ) செய்து வைத்து சித்திரகுப்த நாயனார் கதையை குடும்பமாய் அமர்ந்து படித்து முடித்தபின் வென்சங்கு முழங்கி நிவேதனம் செய்து தீபாரதனை கண்டபின் அன்றைய இரவு முழு நிலவின் உதயத்தை கண்டு வழிபட்டதுடன் நோன்பானது நினைவு பெரும். அன்றய தினம் வீட்டு உணவில் தட்டைபயறு , எருமைப்பால் அல்லது எருமைத்தயிர் சேர்த்து கொள்வதை ஒரு மரபு . சித்திரகுப்த நாயனார் கதையை அன்றைய தினம் கேட்டாலே புண்ணியம் பாவங்கள் குறையும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

---ஆ.தெக்கூர் . இராம.நா.இராமு

1 comment: