Sunday 17 August 2014

காவிரிபூம்பட்டின அற்புதத் திருவிழா - பாகம் 1 (6 ஆம் நாள் விழா )



"கதை சொல்ல போறேன் நான் கதை சொல்ல போறேன்
 பட்டினத்து செட்டி மகன் கதை சொல்லபோறேன்
 காரைக்குடி அரு சொன்னகதை
இப்போ ஆத்தங்குடி  முரு சொல்லியதை
 இந்த தெக்கூர்  இராம எழுதுகிறேன் "

நகரத்தாராக பிறந்தவர்கள் கண்டிப்பாக இந்த திருவிழாவை வாழ்வில் ஒரு முறையேனும் கட்டாயம் காண வேண்டும் . வருடத்தில் ஒரு நாளவது வந்து இந்த அற்புதத் திருவிழாவை  காண வேண்டும் .

இது நகரத்தார்கள் நடத்தும் விழா . நகரதர்களுக் உரிய விழா .இது திருவிழா அல்ல அற்புதத்திருவிழா . முன்பு நகரத்தார்கள் சோழ வளநாட்டில் கடற்கரை ஓர பகுதிகளான திருவெண்காடு ,பூம்புகார் , காரைக்கால் , திருக்கடையூர் இது நகரத்தார்கள் வாழ்ந்த  பகுதிகள் . பின் சில அரசியல் மற்றும் இயற்கை சீற்றம் காரணத்தால் பாண்டிய நாட்டின் பகுதியான தற்போது நாம் வசிக்கும் பகுதியில் குடியெறினர்.

ஆடி மாதத்தில் வரும் உத்திராட நட்சத்திரத்தை ஒட்டி பன்னிரண்டு நாட்கள் இந்த விழா நிகழும் . ஆடி உத்திராடம் அன்று குரு பூசை 10அது ஆம் நாள் விழா .நாள் ஒன்றாக பட்டினத்தார் விழா சிறப்பாக நிகழும் பட்டினத்தார் பிறப்பு முதல் முத்தி வரை . இவற்றை காணக் கண்கோடி வேண்டும் .
             இங்கு நான் ஆறாம் திருநாள் நிகழ்வுகளை பற்றி பதிவுடுகின்றனே
பட்டினத்தார் துறவு :-
இது 5 ஆம் நாள் நிகழ்வு .பட்டினத்தார் துறவு பூண்ட விழா நிகழும் .இதன் தொடர்ச்சியாக 6 ஆம் நாள் பல்லவ நாதர் கோயிலில் உள்ள பரிவார தெய்வங்களுக்கும் சந்தக் காப்பு சாற்றப் பட்டது . மாலை  பட்டினத்தார் பிச்சைக்கு ருத்ராட்ச விமானத்தில்  செல்லுதல் அதனை தொடர்ந்து
மாலை குபேரன் வீடு (நகர விடுதியில் ) விளக்கு பூசையும் மிச்ச பொருட்கள் ஏலம்  சிறப்பாக நிகழ்ந்தது . பின் இரவு பட்டினத்தார் தன் அக்கா வீட்டிற்கு முன் பிச்சைக்கு செல்லும் காட்சி . பட்டினத்தார் அக்காவின் வீடு போன்ற அமைப்பு பல்லவ நாதர் கோயில் முன்பு அமைக்கப்படுகிறது  அதற்கு முன்பு ஒரு காய் கனி தோட்டமும் அமைக்கப்படுகிறது . அந்த வீட்டுக்குள் சமைத்த உணவு சாதம் , குழம்பு , கூட்டு ,போரியல் ,அப்பளம் வைக்கப்பட்டிருக்கும்
மற்றும் வாசலில் உள்ள தோட்டத்தில் கொத்தோடு மாங்காய்   காய்த்த நிலையில் ஒரு கிளை , நார்த்தங்காய் காய்த்த நிலையில் ஒரு கிளை , வாழை கன்றுகள் , மாதுளம் செடி காய் கனியுடன் கூடிய  கிளை , கொய்யா செடியின் கிளைகள் காயுடன் , அரளி பூச்செடி ,செம்பருத்தி ,  நந்தியாவட்டை செடிகளின் கிளையை வெட்டி நட்டு வைத்திருந்தனர் . பட்டினத்தார் வீட்டின் மீது அப்பத்தை எரித்தது தீ பற்றியது அந்த வீட்டின் உள்ள பொருட்களை அந்த ஊர் பொதுமக்கள் நீ முந்தி நான் முந்தி என்று சென்று எடுத்து சென்றனர் . அந்த தோட்டத்தில் உள்ள செடி , கொடிகள் , மரக்கிளைகளை வீடுகளுக்கு எடுத்து செல்கின்றனர் . அக்காள் வீட்டு தோட்டத்தில் எடுத்து சென்ற செடி கொடி கிளைகளை அவர்கள் தோட்டம் , விலை நிலங்களில் கொண்டு சென்று வைத்தால் விளைச்சல் அதிகமாக இருக்கும் என்பது நம்பிக்கை .

ஆறாம் நாள் விழாவின்  கதை:

துறவு பூண்ட பட்டினத்தார் வீடு வீடாக சென்று பிச்சை கேட்டு உணவு உண்டு சுற்றிதிரிந்தார் .  ஆயிரம்  கோடி வராகன்களுக்கும்  ஒருலட்சத்தி முப்பத்தி ஐயாயிரம் சவரன் தங்க நகைகளுக்கும் பல கோடி மதிப்புள்ள நவரத்தினங்களுக்கு சொந்தக்காரர் இருந்தவர் . பல கப்பல்களுக்கு சொந்தக்காரர் தனவணிகர் குலத்துக்கு தலைவர் அப்படி பெருமையாக செல்வசெழிப்பாக வாழ்த்த தம்  தம்பி  இப்படி  துறவியாக வீடு வீடாக சென்று பிச்சை கேட்டு வருவதை  ஏற்றுகொள்ள முடியாத மீனாட்சியாகிய  பட்டினத்தாரின் அக்காளும் பட்டினத்தாரின் உறவினர்கள் சூழ்ச்சியால் அவர் பிச்சை கேட்டு வருகையில் அவருக்கும்  பாம்பின் நஞ்சு கலந்த அப்பத்தை பிச்சையாக இடுகின்றனர் . அந்த அப்பத்தை கண்டதும் அவருக்கு அதில் நஞ்சு கலந்துள்ளது தெரிகிறது . பின் கிழே உள்ள பதிகத்தை பாடி முடித்தபின் "தன் வினைச் சுடும்; ஓட்டப்பம் வீட்டைச் சுடும்" அந்த அப்பங்களை தன் அக்காள் வீட்டுக் கூரையின் மீது வீசியவுடன் வீடு தீப்பற்றி எரிந்து விடுகிறது .அதன் பின் பட்டினத்தாரிடம் மன்னிப்பு கேட்கின்றனர் .


    சிற்றம்பலமுஞ்சிவனுமருகிருக்க
    வெற்றம்பலந்தேடிவிட்டோமே - நித்தம்
    பிறந்திடத்தைத்தேடுதேபேதைமடநெஞ்சங்
    கறந்திடத்தைநாடுதேகண்.
    1
    தோடவிழும்பூங்கோதைத்தோகையுனையிப்போது
    தேடினவர்போய்விட்டார்தேறியிரு - நாடிநீ
    யென்னைநினைத்தாலிடுப்பிலுதைப்பேனா
    னுன்னைநினைத்தாலுதை.
    2
    வாசற்படிகடந்துவாராதபிச்சைக்கிங்
    காசைப்படுவதில்லையண்ணலே - யாசைதனைப்
    பட்டிறந்தகாலமெலாம்போதும்பரமேட்டி
    சுட்டிறந்தஞானத்தைச்சொல்.
    3
    நச்சரவம்பூண்டானைநன்றாத்தொழுவதுவு
    மிச்சையிலேதானங்கிருப்பதுவும் - பிச்சைதனை
    வாங்குவதுமுண்பதுவும்வந்துதிருவாயிலிலே
    தூங்குவதுந்தானேசுகம்.
    4
    இருக்குமிடந்தேடியென்பசிக்கேயன்ன
    முருக்கமுடன்கொண்டுவந்தாலுண்பேன் - பெருக்க
    வழைத்தாலும்போகேனரனேயென்றேக
    மிளைத்தாலும்போகேனினி.
பட்டினத்தார் அற்புதத் திருவிழாவின் ஆறாம் நாள் நிகழ்வு இதுவே.
 இந்த அற்புதத் திருவிழாவின் ஆறாம் நாள் விழாவின்  புகைப்படங்கள் சில



ஊருக்குள்  பிச்சைக்கு ருத்ராட்ச விமானத்தில் எழுந்தருளும் பட்டினத்தார்

தன் வீட்டுக்கு  ( நகர  விடுதிக்கு )முன்பு பிச்சைக்கு வந்த பட்டினத்தார் 
பட்டினத்தாரின் அக்கா வீடு மீனாட்சி பவனம் 

வெள்ளித் திருவோடு ஏந்தி பிச்சைக்கு வரும் பட்டினத்தார்
அக்காள் வீட்டின் முன்பு பிச்சைக்கு வந்த பட்டினத்தார்  . கதையை விளக்கும் திரு .ஆத்தங்குடி  முரு அதை கேட்கும் ஆச்சிகள்


கதை கேட்க திரண்டுள்ள ஆச்சிகள் 
மீனாட்சி பவனம் இல்லத்தின் தோட்டமும் முன்புற  தோற்றமும்  






கதை கேட்க திரண்டு உள்ள ஆச்சிகள்
அக்காள் கொடுத்த நஞ்சு கலந்த அப்பம் 

அக்காள் கொடுத்த அப்பத்தை வீசியது தீ பற்றி எரியும் காட்சி 

தீ பற்றி எரியும் காட்சி

அக்கா வீடு எரிந்த பின் தீபம் பார்க்கும் காட்சி 

பட்டினத்தார் 

1 comment: