Thursday 21 August 2014

அப்பத்தா தகனம் - காவிரிபூம்பட்டின அற்புதத் திருவிழா - பாகம் 2 (7 ஆம் நாள் விழா )

"கதை சொல்ல போறேன் நான் கதை சொல்ல போறேன்
 பட்டினத்து செட்டி மகன் கதை சொல்லபோறேன்
 காரைக்குடி அரு சொன்னகதை
இப்போ ஆத்தங்குடி  முரு சொல்லியதை
 இங்கு  தெக்கூர்  இராம எழுதுகிறேன் "

இங்கு நான் ஏழாம் திருநாள் நிகழ்வுகளை பற்றி சொல்லுகிறேன் :

பட்டினத்தார் ஊர் ஊராக சுற்றித் திரிந்தார்  பட்டினத்தார் யாரிடமும் பிச்சை கேட்டமாட்டார் . யாரவது தம்மை நாடிவந்து உணவு கொடுத்தால்தான் வாங்கி உண்ணுவார் . இதையே  தன் இயல்பாக கொண்டு காவிரிப்பூம்பட்டினத்தை சுற்றயுள்ள பகுதிகளில் சுற்றித் திரிந்தார் . பட்டினத்தார் கையில் அவரது தாய் ஞானகலை ஆச்சி . சிறிது கல் உப்பு  கொஞ்சம் அருசி இரண்டையும் கலந்து ஒரு சிறு  முடிச்சாகா அவர் கையில் கட்டினர் . இந்த முடிச்சு என்று அவிழ்கிறதோ அன்று நான் உயர் துறந்திடுவேன் அப்போது நீ எங்கு இருந்தாலும் யமக்கு நீ கொல்லி வைக்க வேண்டும் என்று சத்தியம் வாங்கிக்கொள்கிறாள் ஞானகலை ஆச்சி .அதனாலே பட்டினத்தார் பூம்புகார் நகரை சுற்றயுள்ள பகுதிகளில் சுற்றித் திரிந்தார்.

ஏழாம்நாள் விழா சிறப்பு : 

இந்த விழாவின் சிறப்பு என்னவென்றால் பிரிந்த தாயும் மகனும் இந்த விழாவை வந்து கண்ண்டால் கண்ண்டிபாக ஒன்று சேர்வார்கள் . ஒன்றாக இருப்பர்கள் எந்த நிலையிலும் தன் தாய் தந்தையை நில்ல முறையில் கவனித்து கொள்வார்கள்  என்பது நம்பிக்கை . இங்கு பல தாய்மார்கள் பிரிந்த தங்கள் மகனோடு சேர்ந்துள்ளனர் இந்த விழாவில் பங்குபெற்று .

விழா நிகழ்வுகள் :

பட்டினத்தாரது ஆத்தாவிற்கு நம் அப்பத்தா ஞானகலைக்கு  உடல்நிலை சற்று சரியில்லாமல் இருப்பதால் அவள் விருப்பதை நிறைவேற்று வண்ணம் அன்று மாலை   நம் பள்ளத்தூர்  "குறள்சூடி உமையாள்  மெய்யம்மையை " யழைத்து பேச வைத்தார்கள் அந்த மழலையின் அம்மா வடிவாம்பாள்  இப்போது இவள் மீனாட்சி திருக்கல்யாணம் பற்றி சொல்லுவாள் என்றதும் மல மல வென்று அழகாக சொன்னால் பின் கணவன் மனைவி எப்படி இருக்கணும் என்று சொல்லியதை கேட்டதும் அதையும் சபையோர் சிரித்து ரசித்துப் புரையேறும் அளவு அழகாகச் சொன்னாள் அடுத்து செட்டிநாட்டுத் திருமண நிகழ்வுகளைத் தொகுத்துக் கூறுவாள் என்று கூறியதும் பெண் பார்ப்பதிலிருந்து பெண் அழைப்பது வரை அழகாகக் கூறினாள்.   செட்டிநாட்டவர்கள் அணியும் ஆபரணம் அதன் பெயர்களை தொகுத்து வழங்குவாள் மற்றும் உறவு முறைகள் பெயர்கள் என்றதும் அழகாக ஆபரங்கள்  பெயர்கள் உறவு முறைகள் பற்றியும் கூறினாள் பிள்ளையார் நோன்பு , கந்தரப்பம் செய்முறை , தமிழ் வருடங்கள் , திருக்குறள் ஆகியவற்றை மிகவும் அழகாக கூறினாள். 

குறள்சூடி "உமையாள் மெய்யம்மை "
இதை தொடர்ந்து பல்லவனீஸ்வரர் கோயிலில் 
பரத நாட்டியம் ஆடிய கல்லலை சேர்ந்த 11 வயது சிறுமி  செல்வி மீனாட்சி சிறப்பாக நடனமாடினாள்
          

கல்லல் செல்வி மீனாட்சி மற்றும் அவர்  தந்தை திரு சோமு அவர்கள்
மீனாட்சியின் நடனத்தை காண திரண்டுள்ள மக்கள் 


நடனமாடும் மீனாட்சி


இந்த நிகழ்வுகள் நிகழ்ந்து முடியும் போது அப்பத்தாவுக்கு உடல் நிலை மிகவும் மோசமாயிற்று நாட்டு வைத்தியரை அழைத்து வரச்சொல்லி இருந்தார்கள்  அவரும் வந்து நாடி பார்த்து மருந்து கொடுத்தார்  .பின் உடனே அருகில் இருந்தவர்கள் கை பார்த்தார்கள் அப்பத்தாவின் நிலை சரியில்லையென்று . சீமையில் இருந்து டாக்டர் ப்லைனில் வந்திறங்கியவர் இந்த வருடம்  புது இனோவா காரில் வந்து சேர்ந்தார் .அவரும் வைத்தியம் செய்து மருந்து மாத்திரை எழுதி கொடுத்தார்   மேலும் சில பெரியவர்கள் (ஆச்சிகளும் செட்டியார்கள் ) சென்று கை பார்த்தனர் .அப்பத்தாவின் நாடித் துடிப்பு குறைவதுபோல் உள்ளதால் ஊரில் உள்ள பாங்களிகள் தாயபிள்ளைகளுக்கு சொல்ல சொன்னனர் . அது தான் 96 ஊரிலிருந்து தாயபிள்ளைகள் பங்காளிகள் என்று எல்லோரும் கூடிவிட்டனரே .

அப்பத்தாவுக்கு காசியில் இருந்து கங்கை தீர்த்தம் கொண்டுவரப்பட்டு கொடுக்கப்பட்டது .அந்தணரை வரவழைத்து பசுவும் கன்றும் தானமாக வாலுருவி கொடுக்கப்பட்டது .பசுவுக்கு நெற்றி ,கொம்பு , முதுகு , வால் போன்ற பகுதிகளில் மஞ்சள் தடவி குங்குமம் இட்டு மாலை சார்த்தி துண்டு குடுத்து . பசுவும் கன்றும் உண்ண பழம் பச்சருசி , வெல்லம் கொடுக்கப்பட்டது பின் பசு கோமியமும் சாணமும் இட்டவுடன் தீபம் காட்டப்பட்டு தானம் தரப்பட்டது .அப்பத்தாவின் உயிரும் பிரிந்தது . அப்பாதா இந்த மண்ணுலகம் விட்டு சென்றுவிட்டார்கள். 
அடுத்து சிவபுராணம் பாடப்பட்டதும் . அனைவரும் முதல் கொட்டகையில் இருந்து வளவிற்குள் சென்று அமர்ந்தார்கள் . அப்பாதா தவறிய துக்கம் தாங்காமல் ஆண்கள் பெண்கள் என்று வேற்றுமை பாராமல் ஒப்பாரி வைத்து அழுதனர் .பொதுவாக ஒப்பாரி வைத்து பாடுவது பெண்கள் தான் பாடுவார்கள் அனால் இங்கு அண்களும் பாடுவார்கள் என்பது தனிச்சிறப்பு  அப்பத்தாவின் பெருமையை சொல்லியும் வாழ்ந்த வாழ்க்கையை சொல்லியும் ஒப்பாரி வைத்தனர் . சிலர் நகைச்சுவையாகவும் ஒப்பாரி வைத்தி அழுதுபடி பாடினர் .
உறவினர்கள் , தாயபிள்ளைள் ,பங்காளிகள் வந்து கேதம் கேட்டனர் ( ஒப்பனை செய்தனர் )

" வைரநகை மங்கிவிடும் மாதழகு சோதிமின்னும் 
 எங்க அப்பாதா சிரிக்கையிலே 
 பொடிவைரம் மங்கிவிடும் பொன்னழகு சோதிமின்னும்
 மணிவைரம் மங்கிவிடும் மாதழகு சோதி மின்னும்
 சிறுவைரம் மங்கிவிடும் சிட்டஅழகு சோதி மின்னும் 
 தத்துவம் சொல்லும் எங்கப்பதாவுக்கு வயதெழுதலேயே 
 வெள்ளி நடவண்டி கொடுத்து நடைபழக சொல்லித் தந்தியே 
என்ன ஓவியமா வச்சுகிட்டியே கலியாணம் பேசையிலை
 கழுத்துக்கு போருதம்மா கண்டசரமும்  பூட்டி அழகுபாத்தியே
அதுவும் சேந்தது மாதிரியே பூச்சரமும் புட்டுனியே 
 என் கைக்கும் தோதா வைர காப்பு பூட்டினியே
 காதுக்கு  செந்தாமாரி சுத்து வைர தோடும் கொடுத்தியே 
 மூக்குக்கு எடுப்பா பதினோரு கல்லு வச்சு மூக்குத்தி போட்டியே
 இத்தனையும் செஞ்சு யாரு இன்னி அழகு பாப்பா 
 காடு கரை அத்தனையும்  கூட்டுவண்டி கட்டிபோயி வெல்லாம பாத்தியே
 எம் பேரன்  கல்யாணம் பாக்காம போயிட்டியே அப்பத்தார் 
 என்னோட பீமா ரத சாந்திக் மங்களச்சர தாரமுன்னு செஞ்சு தாரமும்சொன்னியே 
 எங்க வீட்டு தங்கரதம் வீதியில போகையில பளுதுபட்டதே 
 எங்க ரதம் வரும் வீத பழுதாக்க காலனுக்கும் வந்துடவாவேணும் 
 என்கப்பதாவ கொண்டுசெல்ல காலனுக்கு எங்கேருந்து மனம் வந்ததோ "


இப்படி ஒப்பாரி பாடல்களை ஒரு 1 மணி நேரம் தெரிந்தவர்கள் வந்து அமர்ந்து பாடினார்கள். அனைவரும் அமர்ந்து கேட்டார்கள் . இவைகளை  தொடரந்து அதிகாலை 3.5௦ மணி அளவில் அப்பத்தாவின் உடல் (பொம்மை ) பாடை கட்டி பல்லவனம் நகரின் முக்கிய வீதிகள் வழிய எடுத்து  சென்று வந்தனர்  அப்படி அப்பாதாவை தங்கள் வீதிகளில் கொண்டு சென்றால் அவர்களுக்கு நன்றாக இருக்குமாம் .அந்த கிராமத்தும் மக்களின் நம்பிக்கை . இந்த விழாவைகாண வெள்ளமென திரண்டு வருகினறனர் . பல்லவன கிராமமக்கள் .

பின் கடைசியாக மோட்ச வீதி வழியாக அப்பத்தாவை  இடுகட்டுக் கொண்டு சென்றனர் . இங்கு மட்டுமே பெண்கள் இடுகாட்டுக்குள் இந்த விழாவிற்கு மட்டுமே அனுமதிக்கப் படுகிறார்கள் என்பது தனிச்சிறப்பு. 

  அப்பத்தாவின்  உடலை எரியூட்டப்பட்ட தயார்செய்து வைதுகொண்டிருன்தனர் .பட்டினத்தார் வருகைகாக காத்திருந்தனர் . அவர் வராததால் சிதைக்கு தீவைக்கமுற்பட்டபோது அந்த இடத்திற்கு பட்டினத்தார் விரைந்து ஓடி வருகிறார் தன் தாயை கண்டபின் எண் அன்னையை காய்ந்த விறகுகொண்டா தீ மூட்டுவது என்று வாழை மட்டைகள் கொண்டு அடுக்கி அதில் கிடத்தி பத்து பதிகங்கள் பாடுகிறார் . அந்த பத்து பதிகங்கள் மிகவும் பிரபலமானவை .
அவர் பாடிய பதிகங்கள் இதோ  

ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி
முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே
அந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்
வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டிய தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டு வேன்
நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை
தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே அந்திபகல்
கையிலே கொண்டென்னைக் காப்பாற்றிய தாய்தனக்கோ
மெய்யிலே தீமூட்டு வேன்
அரிசியோ நானிடுவேன் ஆத்தாள் தனக்கு
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் உருசியுள்ள
தேனே திரவியமே செல்வத் திரவியப்பூ
மானே எனஅழைத்த வாய்க்கு
அள்ளி இடுவது அரிசியோ தாய்தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் மெள்ள
முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்
மகனே எனஅழைத்த வாய்க்கு
முன்னை இட்ட தீ முப்புறத்திலே
பின்னை இட்ட தீ தென்இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்கமூள்கவே
வேகுதே தீயதனில் வெந்து பொடிசாம்பல்
ஆகுதே பாவியேன் ஐயகோ மாகக்
குருவி பறவாமல் கோதாட்டி என்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை
வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்
வந்தாளோ என்னை மறந்தாளோ சந்ததமும்
உன்னையே நோக்கி உகந்து வரம் கிடந்து என்
தன்னையே ஈன்றெடுத்த தாய்
     வீட்டிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்
நேற்றிருந்தாள் இன்றுவெந்து நீறானாள் பால்தெளிக்க
எல்லோரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்
எல்லாம் சிவமயமே யாம்

இவற்றை பாடி முடித்தது பச்சை வாழைமட்டை பற்றி எரிந்தது .எரிந்து முடிந்தது பட்டினத்தாருக் சிவ பெருமான் உமையாளுடன் ரிஷப வாஹனத்தில் மோட்ச வீதியில் ஆலயத்திற் பின்புறம் காட்சி தந்தார் .அவரை கண்டு தொழுத பட்டினத்தாருக்கு சிவபெருமான் ஒரு காட்சியை காட்டினார் .

என்ன காட்சியது ???

அதுதான் நம் ஞானகலை அப்பாதாவை சிவலோகத்திற்கு அழைத்து செல்ல அம்மையும் அப்பரும் ரிஷபத்தில் வந்தனர் . இருவருடன் தன் தாயை கண்ட பட்டினத்தார் மெய் சிலிர்த்து போய்விட்டார் .பின் சிவ பெருமானையும் அம்மையையும் மூன்று முறை சுற்றிவந்து வணங்கித் தொழுதார் . நம் நகரத்தார்களில் யாருக்கும் இத்தகைய பேரு கிடைக்கவில்லை . ஞானகலை அப்பத்தாவிற்கு கிடைத்தது போல் ஈசனே நேரில் தோன்றி மோட்சம் கொடுத்தார் .

இவற்றை கண்ட உடன் யாரும் கோயிலுக்கு உள்ளும் குபேரன் விட்டுக் உள்ளும் செல்ல முடியாது .காரணம் மயானத்திற்கு சென்று வந்தவுடன் எப்படி செல்ல முடியும் .குளித்து முழுகி புதுஆடை மாற்றியே உள்ளே செல்ல வேண்டும் .விடுதியையும்முழுவதுமாக (5 கட்டுகளையும் ) சுத்தமாக கழுவிவிட்டு விடுகின்றனர் இந்த நிகழ்வின்போது. 

7 ஆம் நாள் விழாவின் புகைப்படமும் இதோ :

முடியாமல் உள்ள அப்பத்தாவை பார்க்க கூடிஉள்ள உறவினர்கள் 
முடியால்உள்ள நம் அப்பத்தா (ஞானகலை) தலைமாட்டில் மகள் மீனாட்சி (பட்டினத்தாரின் அக்கா) கால் மாட்டில் சிவகலை (பட்டினத்தாரின் மனைவி )
அப்பத்தாவிற்கு மருந்து கொடுக்க வரும் வைத்தியர் 
நாட்டு வைத்தியர் (திரு .கலைமாமணி ஆவுடையப்பையா )

புதிய இனோவா காரில் வரும் சீமை டாக்டர் 


அப்பத்தாவை பார்த்து வைத்தியம் செய்த வந்துள்ள சீமை வைத்தியர் 
அப்பத்தாவிற்கு உடல் நிலை தேறிவிடும் என்று சொல்லி மருந்து மாத்திரைகள் கொடுக்கும் விதத்தை சொல்லும் சீமை வைத்தியர்
பசுவுக்கு மஞ்சள் குங்குமம் இடும் காட்சி 

பசு சாணம் இட்டதும் வாலுருவி தானம் கொடுக்கப் போகும் காட்சி 
வாலுருவி பசு தானம் கொடுத்து போது 
அப்பத்தான் இறுதி ஊர்வலம் மோட்ச வீதியை நோக்கி செல்லும் காட்சி 
அப்பத்தாவின் நிலை கவலைக்கிடமாக உள்ளத்தால் காசித் தீர்த்தம் கொடுக்கபட்டது


தாயை காணா ஓடி வந்த பட்டினத்தார் . தாயின் சிதைக்கு  வாழை மட்டையை கொண்டு இறுதி சடங்கு நிகழ்த்து பட்டினத்தார் 
பதிகங்கள் பாடி தாயின் சிதைக்கு தீ மூட்டிய பட்டினத்தார் 

தாய்க்கு இறுதி சடங்குகள் முடித்துவிட்டு வெளியேறிய பட்டினத்தாருக்கு ரிஷப வஹனத்தில் காட்சி கொடுத்தஅம்மையப்பர் 

 ரிஷப வஹனத்தில் காட்சி கொடுத்தஅம்மையப்பரைக் கண்டு தொழும் பட்டினத்தடிகள்

மோட்ச வீதியில் கோபுரத்திற்கு பின் புறம் பட்டினத்தாருக்கு அற்புதக் காட்சியை காட்டியசிவ பெருமான் 


அற்புத காட்சிய கண்ட பட்டினத்தாருக்கும் தீபம் ஆகின்றது 

அற்புதக் காட்சி இதுவே தம் தாய் ஞானகலை ஆச்சிக்கு நேரடி மோட்சம் நல்கிய அம்மையப்பர் 

அம்மையப்பர் ரிஷபத்தில் வந்து நேரடி மோட்சம் அளித்த திருக்காட்சி இது 

மெய்சிலிர்க்க அம்மையப்பரை தொழும் பட்டினத்தடிகள்


அம்மை அப்பரை வளம் வரும் பட்டினத்தார் 

அற்புதத் திருவிழாவின் அற்புத காட்சி 
அம்மை யப்பரை வலம் வந்து தொழுத பட்டினத்தடிகள் தொழும் காட்சி 

அம்மையும் அப்பனும் 

போற்றி  வணங்கத் தக்க நம் அப்பத்தா











 


No comments:

Post a Comment