அன்றைய அப்பச்சி இன்றைய பாட்டய்யா
அலைகடல் கடந்து வணிகம் செய்து
வட்டியை அனுப்பி குடும்பம் வளர்த்தார்.
தொழில்நுட்ப தொல்லையில்லாத காலம்
கடிதம் வழியே காதலும் செய்தார்
குடும்ப நிர்வாகமும் செய்தார்.
பிள்ளைகளுக்கும் அப்பச்சிக்கும் பலகாத தூரம்
வேலன் மட்டுமே துணை
வேலை மட்டுமே வேதம்.
நேற்றைய அப்பச்சி இன்றைய அய்யா
அநுபவ அறிவை மட்டுமே ஆதாரமாய் கொண்ட குலத்தில்
பட்டறிவும் பட்டயறிவும் இருந்தால் மட்டுமே
குலமும், குடும்பமும் தழைக்கும் என்பதறிந்து
உழைப்பை எல்லாம் கல்வி செல்வமாக்கி
இன்றைய குலத்தின் மேன்மைக்கு
படிப்பறிவை நாடிய தீர்க்க தரிசிகள்.
இன்றைய அப்பாக்கள் நாங்கள்
நாளயைய அப்பாக்கள் நலமாய் வாழ
கணினி வேகத்தில் பறந்து கொண்டிருக்கிறோம்...
- லெ.சக்திகுமார்
No comments:
Post a Comment