Friday, 15 August 2014

சுதந்திர தின வாழ்த்துகள்

என்று தணியும்....?????

1887 ! சிப்பாய் கலவரம் மூலம்......
இந்திய தாய் தன் இதய கருவரையில்
சுதந்திர தாகம் எனுமோர் சூள் கொண்டாள் !

அந்த.....
விடுதலை குழந்தையை பலரின் உதிரம் ஊற்றி 
அவள் வளர்த்தாள்.......
ஆங்கிலேயன் அதை கருவறுக்க விடாமல்
அவள் சிலிர்த்தாள்....!

எனக்கென பிறக்கும் இம்மழலையை
உயிரென காப்பேன்.....
உயரிய கலவியும்.....ஊட்டமான இயற்கை செல்வமும்,
பேணி வளர்க்க நல்மக்களும்...உலகெல்லாம் மெச்சி
பேசி மகிழும் நற்புகழும்
இவனுக்களிப்பேன் என சுதந்திரத்தாய்
எண்ணியே கருவில் சுமந்தாள் !

1947 - ஈரைந்து திங்கள் காதிருக்க முடியாமல்.....
(ஆகஸ்ட்)8 ம் மாதமே பிறந்துவிட்டதால்,
இந்திய தாய் பெற்றெடுத்த விடுதலை குழந்தை
ஊனமுற்றிருக்கிறது.

வாருங்கள் நண்பர்களே ! 
எல்லோரும் கல்வி பெற ஒளி வீசும் கண்ணாய் விளங்குவோம்.
எல்லோரும் செழிப்புற உழைக்கும் கைகளாவோம்.

குறை பிரசவமாய் பிறந்த நம் இந்திய சுதந்திர குழந்தை......
இனியும் நொண்ட கூடாது !

இன்று முதல் உறுதி கொள்வோம்.......
நமக்கென்ன என்று சாக்கு தேடாமல் !

ஜெய் ஹிந்த் !





No comments:

Post a Comment