Monday 4 August 2014

செட்டிநாட்டு நகைகள் ஒருதொகுப்பு

நமது செட்டிநாட்டு பகுதிகளில் நாம் பயன்படுத்து சில நகைகளின் பெயர்களும் அதை பற்றியும் இங்கு நாம் பார்போம் . வைர நகைகளும் தங்க நகைகளும் நமவர்களில் இருபாலரும் அணியகுடியவையே .



முதலில் நம் ஆண்கள் அணியும் நகைகளை பற்றி பார்போம்

அரும்புதடை - மோதிரம்

சங்கிலி

குருமாத்து - கைசங்கிலி

கால்மோதிரம் - ஆண்கள் அணியும் மிஞ்சி ( மெட்டி )

தண்டை - காலில் அணியப்படும் வெள்ளியால் செய்த ஒருவித வளையம்

கௌரி சங்கம் - கௌரி சங்கம் என்பது ஒரு உருத்திராட்ச மாலையாகும். இந்த கௌரிசங்கத்தில் உருத்திராட்சங்களை ஒன்றுடன் ஒன்றாக இணைக்கும் இணைப்புகள், தொங்கட்டான் (பெண்டன்ட்) போன்றவை தங்கத்தில் அமைக்கப்படுகிறது. இந்தத் தொங்கட்டானில் ரிசபாருடர் எனும் ரிசப வாகனத்தில் சிவசக்தி சமேதராக அமர்ந்திருக்கும் வடிவம் பொறிக்கப்பட்டிருக்கும்

நட்சத்திர தோடு - இது சிறு பிள்ளை களுக்கு அணிவிகபடும் நகை ஆகும் . எதில் சில்லர் வைரக் கற்கள் அல்லது வெள்ளை பூகற்கள் பதித்து வைத்திருப்பர் . இது ஆண் / பெண் இரு குழந்தைகளுக்கும் அணியபெரும் நகையாகும்





நமது ஆச்சிகள் பயன்படுத்து / பயன்படுத்திய சில நகைகளின் பெயர்களை அதை பற்றியும் இங்கு பார்போம்.

கழுத்திரு - இது செட்டிநாட்டு அணிகலன்களுள் ஒன்றாகும். நகரத்தார் தாலி என்றும் அழைக்கப்படுகிறது. திருமணம் அல்லது சாந்திக் கல்யாண (சஷ்டியப்த பூர்த்தி) நாளன்று மணமகனால் மணமகளுக்கு அணிவிக்கப்படும் ஒரு வகையான கழுத்து அணிகலன் ஆகும்.

கண்டசரம் - வைரகற்கள் பதிக்கப்பட்ட கழுத்தை ஒட்டி அணிவிக்கப்படும் ஒரு வகையான கழுத்து அணிகலன் .

மங்களச்சரம் - தாலி மற்றும் தாலி சங்கிலி முழுவதும் வைரகற்கள் பதிக்கப்பட்ட ஒரு வகை அணிகலன் .

பூச்சரம் - இது பூ வேலைப்பாடுகலுடன் கூடிய தங்கச்சங்கிலி முழுவதும் வைரகற்கள் பதிக்கப்பட்ட ஒரு வகை அணிகலன் .

முத்து மாலை - இது தங்கச்சங்கிலியில் முழுவதும் உயர்ரக முத்துகலால் கோர்க்கபட்ட மாலை . இது ஒரு வகை கழுத்து அணிகலன் .

பாசிமாலை - இது தங்கச்சங்கிலியில் கருகுமணி என்று அழைக்கப்படும் பாசி மணிகளால் கோர்க்கபட்ட மாலை . இது ஒரு வகை கழுத்து அணிகலன் .

வைரக்காப்பு - இது தங்கத்தால் ஆன வளையலின் வெளிப் பகுதிகளில் வைரக்கற்கள் கொண்டு பதிக்கப்பட்ட ஒரு வகையான கையில் அணியகுடிய அணிகலன் .

நெளிகாப்பு - இது தங்கத்தால் ஆன வளையைல் போன்ற அமைப்பில் நெளி நெளி யாக வளைந்து காணப்படும் . இது சாதாரணமாக வீட்டில் உள்ளபோது அணிந்து கொள்ளப்படும் நகைகளில் ஒன்று .

கல்லுக்காப்பு - இது தங்கத்தால் ஆன வளையைல் போன்ற அமைப்பில் வெளிப்புறத்தில் வண்ணக்கற்கள் பதிகபட்டிருகும் .ஒரு வகையான கையில் அணியகுடிய அணிகலன் . 

( நீலகல்லுக்காப்பு , சிவப்புகல்லுக்காப்பு , பச்சைகல்லுக்காப்பு )

முத்துக்காப்பு - இது தங்கத்தால் ஆன வளையைல் போன்ற அமைப்பில் வெளிப்புறத்தில் உயர்ரக முத்து பதிகபட்டிருகும் .

பாசிக்காப்பு - இது தங்கத்தால் ஆன வளையைல் போன்ற அமைப்பில் வெளிப்புறத்தில் கருகுமணி என்று அழைக்கப்படும் பாசி பதிகபட்டிருகும் .

வைரத்தோடு - தங்கத்தால் செய்த தோட்டில் முழுவது வைரக்கற்கள் பதிகபட்டிருகும் . 

( இதில் ஏழு கல்லு , பதிமுனு கல்லு பதித்தது என்று கணக்குகள் உள்ளன )

வெள்ளகல்லு தோடு - தங்கத்தால் செய்த தோட்டில் வெள்ளை கற்கள் பதிகபடிருகும் . இது சாதரணமாக வீட்டில் உள்ளபோது அணியப்படும் நகையாகும்

பாசித்தோடு - தங்கத்தால் செய்த தோட்டில் இடையில் கருகுமணி பதிகபட்டிருகும் . இதுவும் சாதரணமாக வீட்டில் உள்ளபோது அணியப்படும் நகையாகும்


முத்துத்தோடு - தங்கத்தால் செய்த தோட்டில் இடையில் உயர்ரக முத்து பதிகபட்டிருகும் .

முத்துமோதிரம் / முத்து அரும்புதடை - தங்கத்தால் ஆன அரும்புதடையில் முத்து பதிக்கபட்டிருகும் .

அரும்புதடை - வைரவேட்டு வரிகள் அல்லது பூ நெளிகள் கொண்டு செய்யபட்டிருக்கும் . இதில் யனை முடி பதிக்க பட்டிருக்கும் . இரண்டு வரி அமைப்புகள் கொண்டிருக்கும் . இது கை விரல்களில் அணியப்படும் ஆபரணம் ஆகும் .

மிஞ்சி - இது வெள்ளியால் செய்த ஆபரணம் ஆகும்
( மெட்டி ). கால் விரல்களில் அணியகுடிய ஒன்று . இதில் ஒரு தனி சிறப்பு என்னவென்றால் நம் ஆச்சிகள் மட்டும் கால் விரல்களில் மூன்று வலயங்கள் அணிதிருபர்கள்

இரட்டவடசங்கிலி - இது இரண்டு சங்கிலிகள் ஒன்றோடு ஒன்று சிறிது இடைவெளி விட்டு பினைகபட்டிருக்கு இதில் தாலியை கோர்த்து அணிவர்

ஒற்றை வட சங்கிலி - இது சாதாரணமான தங்க சங்கில்லியாகும் . எதில் தாலியை கோர்த்து அணிவர்

மாங்கா மாலை - இது தங்கத்தால் செய்யப்பட்ட ஒன்று . இது மங்காய் வடிவில் சிறிதாக இருக்கும் . சங்கிலியின் இடையில் சிறு மாங்காய் வடிவ அமைப்புகள் கொர்கபட்டிருகும்


முற்காலத்தில் நமது ஆச்சிகள் தலையில் குத்தும் கொண்டை உசி , உக்கு , சேலையில் குத்த கூடிய உக்குகள் கூட தங்கத்தில் பயன்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

. நமது வழக்கத்தில் கட்டயமாக பெண் பிள்ளைக்கு திருமணத்தின் பொது கட்டாயமாக வைரைத் தோடும் அதற்கு மாற்று தோடும் தருவர் .அதே போன்று மணமகனுக்கு வைர மோதிரமுன் வழங்குவது கட்டயமாக உள்ளது . இதை நகைகளில் கணக்கு எடுத்தது கொள்ளபடமார்கள்

ஒருநகை என்றால் பெண்ணுக்கு கன்டசரம் மட்டு கொடுப்பார்கள்

இரண்டு நகை என்றால் பெண்ணுக்கு கன்டசரமும் வைரக்காப்பும் தருவார்கள் அல்லது பூச்சரமும் கன்டசரமும் தருவார்கள் ( கன்டசரம், பூச்சரம் , வைரக்காப்பு , மங்களச்சரம் இவைகளில் எதேனும் இரண்டு தருவார்கள் )

வைர நகை 


முன்று நகை என்றால் பெண்ணுக்கு கன்டசரம் ,மங்களச்சரம் வைரக்காப்பும் தருவார்கள் அல்லது (கன்டசரம், பூச்சரம் , வைரக்காப்பு , மங்களச்சரம் இவைகளில் எதேனும் மூன்றை தருவார்கள் )

இந்தியாவில் வைர நகைகள் வாங்கும் வாடிக்கையாளர்களில் 40% செட்டிநாடு பகுதியை சார்ந்தவர்கள் . பொதுவாக 5 சென்ட் வைரங்களை சென்னை, பெங்களூர், கோயம்புத்தூர் போன்ற பல்வேறு பகுதி மக்கள் வாங்குகின்றனர் .ஆனால் செட்டிநாடு பகுதி மக்கள் குறைந்தபட்ச 25 சென்டுகள் வைரைத்தை அணிய பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடதக்கது .

No comments:

Post a Comment