Saturday 9 August 2014

நகரத்தாரின் அற செயல்கள்



இரு நூறு ஆண்டுகளுக்கு முன்னர்
வணிகம் செய்யும் பொருட்டு
நகரத்தார்கள் ஸ்ரீலங்கா ,பர்மா மலேசியா
சிங்கப்பூர் வியட்நாம் இந்தோனேசியா முதலிய நாடுகளுக்கு
பாய்மர கப்பல் மூலம்
கொள்முதல் கொண்டு
“ செட்டி கப்பலுக்கு செந்துரானே துணை
என கொண்டு
ஈன்ற மனையரசு இல்லத்தாள்
பெற்ற பிள்ளை யாவும் மறந்து ...
அயலகத்தே தொழில் வளர்க்க
சென்று இருக்கிறார்கள்
வட்டி தொழில்தான்
முதன்மையாக இருந்து இருக்கிறது
பின்னர் அரிசி , எஸ்டேட் ரப்பர் தோட்டம்
என பலதரப்பட்ட வணிகம் செய்து இருக்கிறார்கள்
வணிகர் எல்லோருக்கும் உணவுக்கு
விடுதிகளை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

செட்டிநாட்டு சமையற்காரகளை
தருவித்து இருக்கிறார்கள்
சைவர்களாக இருந்தாலும் சிவன் கோயில் எடுக்க
சிவாச்சாரியர்கள் அனுமதிகிடைக்காதால்
தெண்டாயுதபாணிக்கு
நூற்றுஎட்டு கோயில்கள் எடுத்து இருக்கிறார்கள்
Sri Lanka (Ceylon) - 25
Myanmar (Burma) - 59
Malaysia (Malaya) - 20
Singapore (Singapura) - 2
Vietnam - 1
Indonesia -1
தமிழ்நாட்டில் இருந்து மூலவர் உற்சவர்
செய்து கொண்டு போய்
வாகனங்கள் செய்து
அங்கிகள் செய்தது
தேர்கள் செய்து
விழாக்கள் எடுத்து கொண்டாடி இருக்கிறார்கள்
அவர்தம் செயலாற்றலுக்கு தலை வணங்குவோம்

No comments:

Post a Comment