Sunday 24 August 2014

கூலிம் நகரத்தார் தண்டபாணி கோயில்

கூலிம் நகரில் வட்டித் தொழில் செய்து வந்த நகரத்தார்கள் செட்டிநாட்டில் உள்ள மகிபாலன்பட்டியை சேர்ந்த நகரத்தார்கள் இங்கு அதிகம் இருந்து தொழில் செய்ததால் இந்த ஊரை மற்றவூர் நகரத்தார்கள் கூலிமை சின்னமகிபா லன்பட்டி என சிறப்பாக சொல்லுவது வழக்கம் .
ஆலயத்தின் தோற்றம் 

முருகன் மற்றும் தெய்வானை திருமணக் காட்சி மேல்புறத்தில்


நீண்ட காலமாக வட்டித்தொழில் செய்து வந்த கூலிம் நகரத்தார்கள் இறையருள் துணை வேண்டி தங்கள் வழிபாடு செய்வதற்காக தனித் தண்டபாணி திருக்கோயிலை கூலிமில் கட்டுமுன்பு ,அண்மையில் உள்ள சுங்குரும்பை அருள்மிகு தண்டாயுதபாணிக்கு ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தன்றுஅறக்கொடை என்ற மகமைஎழுதி அடிக்கடி அங்கு சென்று வந்தனர்.


பின் கூலிமில் நகரத்தார்கள் தங்களது சொந்த தண்டாயுதபாணித் திருகோயில் ஒன்றை கூலிம் , ஜலான் புத்திராவில் ஓர் இடத்தை வங்கி அதில் வெகுதானிய ஆண்டு தை மாதம் வாக்கில் (1939 ) சீனத் தொழிலார்கள் மற்றும் தமிழ் கொத்தனார்களை கொண்டு கோயிலில் கருவறை அர்த்தமண்டபம் , மகாமண்டபம் சுற்றுப் பிரஹாரம் , சுற்றுசுவர் முதலியவற்றை அழகாக நிர்மாணித்தனர் . 16 -4-194௦ நாள் முதலாவது பெருந்திருக்குட நன்னீராட்டு விழாவை சிறப்பாகச் செய்தனர். அதன் மறுநாள் முதல் விநாயகர் மற்றும் தண்டபாணி சுவாமிக்கு உருஏறத் திருஏறும் என்பதற்கு இணங்க ஆகம முறைப்படி 48 நாட்கள் வரை தொடர் நீராட்டும் 1௦௦8 மலர் வழிபாடும் நடைபெற்றன .
மதில்கள் மீது காவல் காக்கும் பூதமும் மயில்களும் 


ஆலய விமானம்
ஆலய விமானம்



அடுத்த 28 ஆண்டுகள் சென்ற பின் 1௦ - 5 - 68ம் நாள் மருந்து சாற்றி இரண்டாவது குடமுழுக்கு செய்தனர் .இங்கு இரண்டுகால பூசை கலையும் மாலையும் நிகழ்கிறது . இங்கு இது தவிவர கந்தசஷ்டி மிக சிறப்பாக ஆறுநாட்கள் கொண்டாப்படுகிறது.இது தவிர திருகார்த்திகை விழாவும் விசு ஆண்டு கார்த்திகை திங்கள் (1941 )முதல் இன்றுவரை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது மேலும் கார்த்திகை திங்களில் வரும் நான்கு சோமவாரங்களிலும் இங்கு சுவாமிக்கும் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.
கோயிலின் சிப்பந்திகளாகப் பண்டாரமும் தோட்டக்காரரும் கோயிலில் அன்றாட பணிபுரிந்து வருகிறார்கள் . இந்த கூலிம் நகரத்தார் கோயிலில் சொத்துக்களையும் கோயிலையும் நான்கு அறக்காவலர்கள் ( டிரஸ்டி ) கொண்ட அமைப்பு பிலவ ஆண்டு கார்த்திகை மாதம் ( 1961 ) முதல் திருகோயிலையும் சொத்துகலையும் பராமரித்து வருகிறார்கள்.
ஆலயத் தோற்றம் 


வேலும் மயிலும்

ஆலயத்தின் உட்புறத் தோற்றம் 



சிங்கபூர் மலேசியாவில் நகரத்தார்கள் கட்டி வழிபட்ட கோயில்களில் இந்த கோயில் 16வது கோயிலாக கட்டப்பட்ட சிறப்புக்குரியது . இது தவிர பழைய இறைதொடர்பை விட்டுவிட்டாமல் சுங்குரும்பை தண்டபாணி கோயிலுக்கு குலிம் நகரத்தார்கள் பொதுவில் ஒரு காணிக்கையாக ரிங்கிட் ஐம்பதத்து ஒன்று மகமையை அந்த ஆலயத்து தண்டாயுதபாணிக்கு கொடுத்துவருகிறார்கள்
சின்ன மைவாலம்பட்டி நகர தண்டாயுதபாணி
ஆலயத்து மணி 


ஆலயத்தின் அழகிய உட்புற தோற்றம் 

ஆலயத்தின் வாயில் 

No comments:

Post a Comment