Monday 4 August 2014

துளசி பூசை

ஆ.தெக்கூர் கிழவி ஆச்சி கூறும் துளசி வழிபாடு :

நம் செட்டிநாட்டில் ஆச்சிகள் முன்பு வீட்டின் இரண்டாம் கட்டு , பின்புறம் , முன்புறம் அல்லது தோட்டத்தில் துளசி மாடம் அமைத்து கலையில் குளித்து முழுகி துளசி மாடத்தை சுற்றி முத்துப் போல் கோலமிட்டு விளக்கு வைத்து காலையிலும் மாலையிலும் பூசை செய்து மகிழ்வார்கள் அப்போது இந்த படலை சொல்லி வழிபடுவார்கள் . துளசி மாடத்தில் மாகக்கல்லில் செய்த பிள்ளையார் வைதிர்ருபர்கள் . துளசிக்கு விளக்கேற்றி சுத்தமான நீர் ஊற்றி, பூக்கள் சூட்டி , தூப தீபம் காட்டி துளசிக்கு கிழே குடுக்கப் பட்டுள்ள பாடலை சொல்லி மூன்று முறை வளம் வந்து கிழே விழுந்து நமஸ்காரம் செய்வார்கள் .

நம் நகரத்தார்கள் சைவர்கள் . நம் வீடுகளில் முன்பு துளசி மாடம் கண்டிப்பாக இருக்கும் . எந்த ஒரு இல்லத்தில் துளசி மாடம் அமைத்து பூசிக்படுகிறதோ அங்கு திருமாலும் இலக்குமியும் நித்தியாமாக வாசம்செய்வார்கள் அங்கு செல்வசெழிப்பிற்கும் மகிழ்ச்சிக்கும் குறைவிருக்காது . எந்த இல்லத்தில் துளசி இருக்கிறாளோ அந்த இல்லத்தில் துர்சக்திகள் அண்டாது அதனால் தான் வீட்டின் முற்றத்தில் துளசி வளர்க்கும் மரபு உண்டாகிறது . இல்லத்தில் வசிப்பவர்களுக்கு யமபயம் நீங்கும் . துளசியை வளர்த்து பூஜித்தால் மனம் ,வாக்கு,உடல் ஆகிய மூன்றாலும் செய்த பாவங்கள் தொலையும் .

துளசியை பூஜை செய்வதால் கங்கா ஸ்நானத்திற்கு சமமான பலனை கொடுக்கும்
மூதாதையர்களுக்கு திதி காரியங்களில் துளசி பயன்படுத்துவதாலும் ,துளசிச்செடியின் நிழல் படும் இடங்களில் செய்தாலும் பரிபூரணப் பலன் கிடைகிறது .

எந்த இல்லத்தில் அதிக துளசி செடிகள் உள்ளதோ அங்கு துர்மரணம் துர்சம்பவங்கள் நிகழாது துர்சக்திகள் நுழையாது .
வீட்டில் பூசிக்கப்படும் துளசியை பறிக்கக் கூடாது . இதற்காக தனியே துளசியை வளர்த்து பயன்படுத்தவேண்டும் .
துளசி செடி காற்றை சுத்தபடுத்தி காற்றில் பரவக்கூடிய கிருமிகளை கட்டுபடுத்துகிறது .

இன்று எத்தனை பேர் வீட்டில் துளசி மாடம் அமைத்து வழிபடுகிறார்கள் .நம் இளைய தலைமுறையினர்களுக்கு இந்த பாடல் தெரியும் . வீட்டு என்றால் துளசி மாடமும் விளக்கு மாடமும் கண்டிப்பாக இருக்கவேண்டும் அப்போதுதான் அந்த இல்லம் முழுமை பெரும் . தற்போது இவை இரண்டுமே வீடுகளில் காண்பது கடினம் .

வீட்டின் முன் துளசி செடியை மையத்தில் வைத்தும் அல்லது சற்று தள்ளி வலது பக்கமாகவும் வைத்து வளர்க்கவேண்டும் . இடதுபக்கமாக தள்ளி வைத்து வளர்த்தல் கூடாது . ஒரு காரியத்திற்கு செல்லையில் நம் முன் பசு சுமங்கலி இரட்டை அந்தணர் போன்றவர்களை எதிர்புறம் வந்தால் வலதுபக்கமாக விட்டு செல்லவேண்டும் . துளசியை நம் சுமங்கலியாக மங்களத்தின் உருவாக பாவிபதால் அதை வலது புறமாக வைத்து வழிபடுவது சிறந்தது .

துளசி பூசை 




துளசி ஸ்தோத்திரம் பாடல் :

ஸ்ரீமத் துளசியம்மா திருவே கல்யாணியம்மா
வெள்ளிக் கிழமை தன்னில் விளங்குகின்ற மாதாவே
செவ்வாய்க் கிழமை செழிக்க வந்த செந்திருவே
தாயாரே உந்தன் தாளிணையில் நான் பணிந்தேன்
பச்சைப் பசுமை உள்ள துளஸி நமஸ்தே
பரிமளிக்கும் மூலக் கொழுந்தே நமஸ்தே
அற்பப் பிறப்பைத் தவிர்ப்பாய் நமஸ்தே
அஷ்ட ஐஸ்வர்யம் அளிப்பாய் நமஸ்தே
ஹரியுடைய தேவி அழகீ நமஸ்தே
அடைந்தார்க்கு இன்பம் அளிப்பாய் நமஸ்தே
வனமாலை என்னும் மருவே நமஸ்தே
வைகுண்ட வாசியுடன் மகிழ்வாய் நமஸ்தே
அன்புடனே நல்ல அருந்துளசி கொண்டுவந்து
மண்ணில் மேல்நட்டு மகிழ்ந்து நல்ல நீருற்றி
முற்றத்தில் தான் வளர்த்து முத்துப்போல் கோலமிட்டு
செங்காவிச் சுற்றமிட்டுத் திருவிளக்கும் ஏற்றிவைத்து
பழங்களுடன் தேங்காயும் தாம்பூலம் தட்டில் வைத்து
புஷ்பங்களைச் சொரிந்து பூஜித்த பேர்களுக்கு
என்ன பலனென்று ஹ்ருஷீகேசர்தான் கேட்க
மங்களமான துளசி மகிழ்ந்துரைப்பாள்
மங்களமாய் என்னை வைத்து மகிழ்ந்து உபாஸித்தவர்கள்
தீவினையைப் போக்கிச் சிறந்தபலன் நான் அளிப்பேன்
அரும் பிணியை நீக்கி அஷ்ட ஐஸ்வர்யம் நான் அளிப்பேன்
தரித்திரத்தை நீக்கிச் செல்வத்தை நான் கொடுப்பேன்
புத்திரன் இல்லாதவர்க்குப் புத்திரபாக்கியம் அளிப்பேன்
கன்னிகைகள் பூஜை செய்தால் நல்ல கணவரைக் கூட்டுவிப்பேன்
முழுக்ஷúக்கள் பூஜை செய்யாதல் மோக்ஷபதம் கொடுப்பேன்
கோடீ காராம்பசுவைக் கன்றுடனே கொண்டு வந்து
கொம்புக்குப் பொன்னமைத்துக்குளம்புக்கு வெள்ளிகட்டி
கங்கைக் கரைதனிலே கிரஹண புண்யகாலத்தில்
வாலுருவி அந்தணர்க்கு மகாதானம் செய்த பலன்
நான் அளிப்பேன் சத்யம் என்றுநாயகியுமே சொல்லலுமே
அப்படியேயாக என்று திருமால் அறிக்கையிட்டார்
இப்படியே அன்புடனே ஏற்றித் தொழுதவர்கள்
அற்புதமாய் வாழ்ந்திடுவார் பரதேவி தன்னருளால்.

முன்பெல்லாம் நமது செட்டிநாட்டில் வயதான ஆச்சிகள் தங்களது பேத்திகளுக்கும் வீட்டில் சொல்லிகொடுபர்கள் . இன்று எத்தனை சிறு பிள்ளைகளுக்கு இந்த பாடல் தெரியும் .சற்று சிந்திக்க வேண்டிய ஒரு செய்தி !!!!

No comments:

Post a Comment