Monday 11 August 2014

குறள் சூடி உமையாள் மெய்யம்மை !!!!!

குழல் இனிது யாழ் இனிது என்பர் தம் மக்கள்
மழலைச் சொல்  கேளாதவர்.

இங்கே குறள் இனிது எனலாம். 5 வயதுப் பெண் குழந்தை ஒரு உபன்யாசகராக, சொற்பொழிவாளராக இருக்க முடியுமா.. அந்த அதிசயத்தைக் காண நேர்ந்தது நம் காவரிப்பூம்பட்டினத்தில் பட்டினத்தார் வீட்டில்  (குபேரன் வீடு ) விழாவுக்காகச் சென்றிருந்தபோது காண நேர்ந்தது .

ஒரு 5 வயதுக் குழந்தை குழந்தைகளோடு குழந்தையாக விளையாடிக் கொண்டிருந்தது. அவளை அறிமுகப்படுத்தி மேடையேற்றியபோது மிக அழகாக மேடைக்கூச்சமில்லாமல் மேடையேறி மைக்கைப் பிடித்துப் பேசினாள்.
வடிவாம்பாள் ஆச்சியுடன் உமையாள்

உமையாள் மெய்யம்மை 

அவளின் அம்மா வடிவாம்பாள்  இப்போது இவள் மீனாட்சி திருக்கல்யாணம் பற்றி சொல்லுவாள் என்றதும் மல மல வென்று அழகாக சொன்னால் பின் கணவன் மனைவி எப்படி இருக்கணும் என்று சொல்லியதை கேட்டதும் அதையும் சபையோர் சிரித்து ரசித்துப் புரையேறும் அளவு அழகாகச் சொன்னாள் அடுத்து செட்டிநாட்டுத் திருமண நிகழ்வுகளைத் தொகுத்துக் கூறுவாள் என்று கூறியதும் பெண் பார்ப்பதிலிருந்து பெண் அழைப்பது வரை அழகாகக் கூறினாள்.   செட்டிநாட்டவர்கள் அணியும் ஆபரணம் அதன் பெயர்களை தொகுத்து வழங்குவாள் மற்றும் உறவு முறைகள் பெயர்கள் என்றதும் அழகாக ஆபரங்கள்  பெயர்கள் உறவு முறைகள் பற்றியும் கூறினாள் .

சொற்பொழிவாற்றும் போது உமையாள்

பிள்ளையார் நோன்பு , கந்தரப்பம் செய்முறை , தமிழ் வருடங்கள் , திருக்குறள் ஆகியவற்றை மிகவும் அழகாக கூறினாள்.

காரைக்குடியில் ஒரு மேடையில் ஒன்றரை வயதில் 150 குறள்களைச் சொன்னபோது குறள்சூடி உமையாள் என்ற விருது வழங்கப்பட்டதாகக் கூறினார்.
தந்தையுடன் உமையாள் மெய்யம்மை


இந்த குழந்தை பல நூறு மேடைகள் ஏறி அழகாக பேசியுள்ளாள்.இந்த பச்சிலம் தளிர் . தற்போது இது மூன்றாம் ஆண்டாக இந்த பாவை வந்து பேசுகிறாள் .பள்ளத்தூரை சேர்ந்த உம்மையாள் மெய்யம்மை காரைக்குடியில் வசித்து வருகிறாள் 

No comments:

Post a Comment