Monday, 4 August 2014

மாத்தூர் - நகர சிவன்கோவில்

மாத்தூர் கோவில் நகரத்தார்களுக்குச் சொந்தமானது. நமது சமூகத்தாருக்கு ஒன்பது கோவிலாக அமைத்து வாழ்ந்து வருகிறோம். நமது மாத்தூர் கோவிலில்ஒன்பது கோவிலில் ஒன்று தற்சமயம் 8500க்கும் அதிகமான  புள்ளிகளைக் கொண்ட  பெரிய கோவில். நமது கோவில் புள்ளிகள் செட்டிநாட்டில் 57 ஊர்களில், 1. உறையூர் 2. அரும்பாக்கூர் 3.மணலூர் 4. மண்ணூர் 5.கண்ணூர் 6.கருப்பூர் 7. குளத்தூர் ஆகிய 7 பிரிவுகளாக வசித்து வருகிறார்க‌ள்

இந்த‌ கோவில் கொங்க‌ன‌சித்த‌ருட‌ன் தொட‌ர்புடைய‌ கோவில் 1200 ஆண்டுக‌ள் 
இந்த‌ கோவில் கொங்க‌ன‌சித்த‌ருட‌ன் தொட‌ர்புடைய‌ கோவில் 1200 ஆண்டுக‌ள் தொன்மை உடைய‌ ப‌ழ‌மையான‌ கோவிலாகும். இந்த‌ திருக்கோவில் 1850ம் ஆண்டு க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ கோவில் என்று சொல்கிறார்க‌ள். இத‌ற்கு முன் இந்த கோவில் சிறிய‌ கோவிலாக‌ இருந்த‌து. ந‌ம‌து ந‌க‌ர‌த்தார் 1931ம் ஆண்டு வாக‌ன‌ கொட்ட‌கை அமைத்து இருக்கிறார்க‌ள். நகரத்தார் அர‌ண்ம‌னை போன்று த‌ங்கும் விடுதி அமைத்து பின்பு கோவில் திருப்ப‌ணி தொட‌ங்கி இருக்கிறார்க‌ளஇக் கோவிலின் ராச‌ கோபுர‌ம் 5 நிலைக‌ளை உடைய‌து. 20.50மீ உய‌ர‌முடைய‌து.இக் கோவிலின் மேல் த‌ள‌ம் சுமார் 33,000 ச‌துர‌ அடி ப‌ர‌ப்புடைய‌து.சிம்ம‌ பீட‌த்தின் மேல் ந‌ந்தி (மாத்தூரில் ம‌ட்டும் இருப்ப‌து) சிறப்பு அம்ச‌மாகும். மேலும் இக்கோவில் திருச்சுற்றில் தென் திசையில் த‌ல‌ விருட்ச‌மான‌ ம‌கிழ‌ ம‌ர‌த்த‌டியில் ஊர் ம‌க்க‌ளின் பிர‌தான‌ தெய்வ‌மாக‌ விள‌ங்கும் முனீஸ்வ‌ர‌ர் பீட‌ம் சிறப்பான‌ வ‌ழிபாட்டிற்கு ஏதுவாக‌ உள்ள‌து.இந்த கோவில் காரைக்குடி புகைவண்டி நிலையத்தில் இருந்து 7கிமீ தொலைவில் உள்ளது. கோட்டையூரிலிருந்து 5கிமீ தொலைவில் உள்ளது.தொன்மை உடைய‌ ப‌ழ‌மையான‌ கோவிலாகும். 
அம்மையப்பர் 


கும்பாபிஷேக‌ம்:
இர‌ண்டாவ‌து கும்பாபிஷேக‌ம் 02.02.1949, மூன்றாவ‌து கும்பாபிஷேக‌ம் 01.07.1974, நான்காவ‌து கும்பாபிஷேக‌ம் 04.07.1988, 19.08.1988 அம்ம‌ன் கோவில் கும்பாபிஷேக‌ம், ஐந்தாவ‌து கும்பாபிஷேக‌ம் 28.03.2002ல் ந‌டைபெற்றது. தற்போது 2௦15  ஆண்டு தை திங்கள் அடுத்த கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது . தற்போது கும்பாபிஷேக வேலைகள் நிகழ்த்து வருகின்றது .
மாத்தூர் சிவன்கோயில்

தேர்த் திருவிழா:
1. நமது மாத்தூர் கோவிலில் சுவாமி தேர், அம்மன் தேர் இரண்டும் செய்தும், 60 ஆண்டுகளாக திருவிழா நடைபெறாமல் இருந்தது. இரண்டு வாகனங்களும் பழுது பார்த்து 10 நாள் தேர்த் திருவிழா மாசி மாதத்தில் சீறும் சிறப்புமாக நடைபெற்று வருகிறது.

2. உற்சவத்திற்கு உபய தாரர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தங்களாது மேலான நன்கொடைகள் வரவேற்கப்படுகிறது. கீழ்கண்ட முகவரிக்கு நன்கொடைகள் அனுப்பி ஐநூற்று ஈஸ்வரர் பெரிய நாயகி அம்பாள் அருள் பெறுவீர்களாக!!ருக்கோவில் 1850ம் ஆண்டு க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ கோவில் என்று சொல்கிறார்க‌ள். இத‌ற்கு முன் இந்த கோவில் சிறிய‌ கோவிலாக‌ இருந்த‌து. ந‌ம‌து ந‌க‌ர‌த்தார் 1931ம் ஆண்டு வாக‌ன‌ கொட்ட‌கை அமைத்து இருக்கிறார்க‌ள். நகரத்தார் அர‌ண்ம‌னை போன்று த‌ங்கும் விடுதி அமைத்து பின்பு கோவில் திருப்ப‌ணி தொட‌ங்கி இருக்கிறார்க‌ள்.

No comments:

Post a Comment